Monetize Your Website or Blog

Wednesday, 6 April 2016

உப்புத் தண்ணீரிலும் உயர்வான வெள்ளாமை....!

வகை வகையாகப் பட்டியலிடும் வல்லுநர்
"எனக்கு 10 ஏக்கர் நிலம் இருக்குஆத்துத் தண்ணிக்கு வாய்ப்பு இல்லாததால ரெண்டு கிணறுவெட்டினேன்ரெண்டுலயுமே உப்புத் தண்ணிதான்அதனால எந்தப் பயிருமே வளர மாட்டேங்குது.நிலத்தைச் சும்மா போட்டு வைக்க மனசில்லாமஅப்பப்ப எதையாவது விதைக்கிறேன்சோகம்தான்விளைச் சலா கிடைக்குதுஇதுக்கு ஏதாவது ஒரு தீர்வு கிடைச்சா நல்லாயிருக் கும்..."

-கண்ணீர் வடிக்காத குறையாக இப்படி நமக்குக் கடிதம் எழுதியிருந்தார் திருச்சி மாவட்டம்முசிறிதாலூகாதாத்தையங்கார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ்.

"இவருக்கு ஆலோசனை வழங்க வரமுடியுமா...?" என்று நாம் கேட்டதுமே...
"எப்பப் போகணும்னு சொல்லுங்க?" என்று ஆர்வமாகிவிட்டார் ஏங்கல்ஸ் ராஜாதமிழகம் முழுக்கவலம் வந்துபல இடங்களில் இயற்கை வேளாண் பண்ணைகளை அமைத்துக் கொடுத் திருக்கும் இவர்,சுனாமி பாதித்த தமிழகக் கடலோர கிராமங்களில் உப்புநீரால் பாதிக்கப்பட்ட நிலங் களை வளப்படுத்தும்வேலைகளில் பங்காற்றியிருக்கிறார்குஜராத் மாநிலம்பரோடாவிலிருக்கும் ராமச்சந்திராமிஷனுக்குச் சொந்தமான ஏக்கர் கணக்கான நிலங்களை வளப்படுத்திவிவசாயத்தைமேம்படுத்தியதிலும் இவருக்கு பங்கு உண்டுதற்போதுதிருச்சி மாநகராட்சியின் திடக்கழிவுகளைஉரமாகப் பயன்படுத்தி காய்கறி உற்பத்தி செய்யும் பணியினை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார்.

ஏங்கல்ஸ் ராஜாவை அழைத்துக் கொண்டு தாத்தையங்கார் பேட்டை போய் இறங்கிய நம்மைமகன்குமார் சகிதமாக வரவேற்ற செல்வராஜ்தன்னுடைய நிலத்துக்கு அழைத்துச் சென்றார்ஆங்காங்கேவெடிப்புகள்... மேற்புறங்களில் பரவலாக உப்புப் படிவுகள்... கருகிக் கிடக்கும் நெற் பயிர்கள்... என்றுபார்ப்பதற்கே படுபரிதாபமாக இருந்தது அவருடைய நிலம்.

"கடலைகுச்சிக் கிழங்குநெல்லுனு விதவிதமா போட்டு பார்த்துட்டேன்எதுவுமே சரியா விளையமாட்டேங்குதுஇந்தத் தடவை 5 ஏக்கர்ல மட்டும் நெல்லு போட்டேன்எதுவுமே தேறுற மாதிரி தெரியல.ஒவ்வொரு முறையும் இதே நிலமைதான்ஆனாலும்தொடர்ந்து முயற்சி செய்துகிட்டே இருக்கேன்.சில சமயம்மனசு வெறுத்துப் போயி வெறும் தரிசா போட்டுடறேன்என்று நொந்து போனவராகச்சொன்னார் செல்வராஜ்.

பேருதவி செய்யும் பெருநெல்லி!


உடனே, "பெருநெல்லி மரங்களை வெட்டிஅதன் தோலை சீவிவிட்டுமரத்தைத் துண்டு துண்டாக்கிகிணற்றில் போட்டால் உப்புத் தன்மை குறையத் தொடங்கிவிடும்வெட்டிவேரையும் பயன்படுத்தலாம்.தண்ணீரின் தன்மையை மாற்றும் குணம் அதற்கும் உண்டு.

பள்ளமான பகுதிகளில் குட்டைகளை வெட்டி மழைத் தண்ணீரை தேக்கி வைப்பதன் மூலமும் கிணற்றுநீரின் உப்புத் தன்மை மாறிவிடும்குட்டையில் தேங்கி நிற்கும் மழைநீர்கசிந்து கிணற்றுக்குள்ஊடுருவி இந்த வேலையைச் செய்யும்இரண்டு கிணறுகள் இருப்பதால்இரண்டு குட்டைகள்வெட்டலாம்மூன்று ஆண்டுகளில் தண்ணீரின் தன்மையில் மாற்றம் தெரியும்அதிகளவில்குட்டைகள் அமைத்தால் ஓரிரு பருவ மழையிலேயே மாற்றத்தைக் காணமுடியும்அதாவது,ஒவ்வொரு ஏக்கருக்கும்தலா 33 சென்ட் பரப்பு கொண்டபத்துக் குட்டைகள் அமைத் தால்ஒரேயருபருவ மழையிலேயே மாற்றத்தைக் காணலாம்குட்டைகளை கிணறுகளுக்கு அருகில்தான் அமைக்கவேண்டும் என்று அவசியமில்லைஉங்கள் நிலத்தில் பள்ளமான பகுதி எங்கு உள்ளதோஅங்குஅமைத்தாலே போது மானதுஆனால்கிணறு இருக்கும் பகுதியை விட மிகஅதிக அளவுக்குப்பள்ளமான பகுதியாக இருந்துவிடக் கூடாதுஅப்படியிருந்தால் நாம் எதிர் பார்க்கும் பலன் கிடைக்ககொஞ்ச நாட்களாகும்என்று கடகடவென தீர்வு களைச் சொல்ல ஆரம்பித்த ஏங்கல்ஸ் ராஜா,குட்டைகள் அமைப்பதற்கான இடங்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துவிட்டு தொடர்ந்தார்.

"ஒவ்வொரு குட்டையும் 10 அடி ஆழத்தில் சுமார் 30 சென்ட் பரப்பில் இருக்கவேண்டும்உட்புறஓரத்திலும்வெளிப்புறத்திலும் வெட்டிவேர் வளர்க்க வேண்டும்கிணற்றுக்கும்குட்டைக்கும்இடையில் நீர்வரத்துப் பகுதியில் பெரு நெல்லி மரங்களை வளர்க்கலாம்குட்டையிலிருந்து ஊடுருவும்மழைநீர்பெருநெல்லியின் வேர்களைக் கடந்து சென்றுகிணற்றுக்குள் கலந்தால்தண்ணீர் சுவையாகமாறும்என்று அவர் சொல்லச் சொல்லஅனைத்தையும் கவனத்தோடு குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார் செல்வராஜின் மகன் குமார்செல்வராஜின் முகத்தில் நம்பிக்கை ஒளியோடு,கேள்விக்குறியும் தென்பட்டது!


உப்பு நீரை ஒதுக்க உருப்படியான யோசனைகள்!
"கிணற்றில் உள்ள தண்ணீரின்உப்புத் தன்மை மாறும் வரை காத்திருக்க வேண்டுமா..." - இதைஅவருடைய முகக்குறிப்பாலேயே உணர்ந்து கொண்டவராகப் பேசிய ஏங்கல்ஸ் ராஜா, "அப்படியெல்லாம் காத்திருக்கத் தேவை யில்லைநான் சொன்ன மற்ற யோசனைகளை உடனடியாகநடைமுறைப்படுத்தினால் கண்டிப்பாகமிக விரைவில் மாற்றம் வந்துவிடும்அதாவதுமுதற்கட்டமாகபெருநெல்லி மரங்களை வெட்டிப் போட்டாலே போதும்ஆனால்அதுவரையிலும்கூடகாத்திருக்காமல்இப்போது இருக்கும் நீரை வைத்தே நெல் விவசாயத்தைச் சிறப்பாக செய்ய முடியும்.கிணற்றில் கீழே போகப் போகத்தான் உப்புத் தன்மை அதிகமாக இருக்கும்குறிப்பாகமழைக்காலங்களில் மேல்மட்டத்தில் நன்னீராகவே இருக்கும்இதைச் சிக்கனமாக பயன்படுத்தினால்விவசாயத்தைச் செழிப்பாகச் செய்யமுடியும்.


கோடையில்நெல் விவசாயம் செய்ய வேண்டாம்மழைக்காலங்களில் மட்டும் செய்யுங்கள்.தெளிப்புநீர்ப் பாசனம் அமைத்துக் கொண்டால்தண்ணீரைச் சிக்கனப்படுத்த முடியும்ஒற்றை நாற்றுமுறையில் நெல் சாகுபடி செய்தால் மிகக் குறைந்த அளவு தண்ணீர்தான் தேவைப்படும்மழைக்காலம்துவங்கும்போதுநீண்டகால நெல் ரகங்களையும்அதன் பிறகுபூங்கார் போன்ற மிக குறுகிய கால நெல்ரகங்களையும் சாகுபடி செய்யுங்கள்பொதுவாகவே பூங்காருக்கு மிகக்குறைந்த அளவு தண்ணீரேபோதும்.
நெல் சாகுபடிக்குப் பிறகுபயறு வகைகளைச் சாகுபடி செய்யலாம்ஒப்பீட்டளவில் நெல்லுக்குத்தேவைப்படும் தண்ணீரைவிடகுறைவான தண்ணீர்தான் இதற்குத் தேவைப்படும்ஆண்டு தோறும்இரண்டு முறை தொடர்ச்சியாக நெல்அதையடுத்து ஒரு தடவை பயறு வகைகளையும் சாகுபடிசெய்தால் சிறப்பான மகசூல் பார்க்கலாம்என்று வல்லுநரின் வாயிலிருந்து வந்து விழுந்தவார்த்தைகள் செல்வராஜின் விழிகளை விரியவைத்தன ஆச்சர்யத்தால்!

கடும் வெயில் பொசுக்கியபோதும் தன்னுடைய ஆலோசனைகளை உற்சாகம் குறையாமல் அடுக்கிக்கொண்டே வயல் முழுக்க வலம் வந்தார் வல்லுநர்ஆவல் பொங்க அவரைப் பின் தொடர்ந்தார்செல்வராஜ்.

மண் ரொம்ப மோசமாக இருக்கிறதே!
"தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கண்டாகிவிட்டதுஅடுத்தது... மண்ரொம்ப மோசமாக இருக்கிறது.மணலே இல்லாத கருப்பு களிமண்அங்ககப் பொருட்களும் இல்லைஉயிர்க் காற்றும் இல்லை.உடனடியாக மண்ணை வளப்படுத்த வேண்டும்என்று கவலையோடு குறிப்பிட்ட ஏங்கல்ஸ் ராஜா,அதற்கான குறிப்புகளைக் கூற ஆரம்பித்தார்.

"இரண்டு சால் உழவு ஓட்டிபல தானிய விதைப்புச் செய்து மடக்கி உழவு செய்யவேண்டும்.தக்கைப்பூண்டு -5 கிலோ (மண்ணில் உள்ள உப்புத் தன்மையைக் குறைப்பதற்காக), கொளுஞ்சி-5 கிலோ,சணப்பு- 2 கிலோமணிலா அகத்தி- 2 கிலோகடுகுகொத்தமல்லிவெந்தயம்சீரகம்உளுந்துபாசிப்பயறுதட்டைப் பயறுநரிப் பயறு (இது தரையை ஒட்டி வளரும்நீராவி ஏற்படாமல் தண்ணீரைப்பாதுகாக்கும்பசும் போர்வை போல் படர்ந்து உயிர்மூடாக்காகப் பயன் தரும்), கொள்ளுதுவரைஎள்ளு,நிலக்கடலைசூரியகாந்திகொட்டைமுத்து இதெல்லாம் சேர்த்து மொத்தமாக 6 கிலோ என்றுஎல்லாவற்றின் விதைகளையும் ஒன்றாகக் கலந்து ஒரு ஏக்கரில் விதைக்க வேண்டும்.

தண்ணீர் 100 லிட்டர் எடுத்துக்கொண்டுஅதில் அமுதக் கரைசல் 10 லிட்டர் சேர்த்து இரண்டு தடவைதெளிக்க வேண்டும்தண்ணீர் பாய்ச்சும்போது 100 லிட்டர் அமுதக் கரைசலை இரண்டு தடவைகலந்துவிடவேண்டும். 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யாவை கலந்து ஒரு முறை தெளிக்கவேண்டும்நன்கு செழிப்பாக வளர்ந்துபூ பூத்ததும் 45-ம் நாள் மடக்கி உழவு செய்யவேண்டும்மீண்டும்இதேபோல்பல தானிய விதைப்புச் செய்து பூ பூக்கும் முன்பே 30-ம் நாள் மடக்கி உழவு செய்யவேண்டும்மூன்றாவது முறையாக மீண்டும் பல தானிய விதைப்புச் செய்து 20-ம் நாளில் மடக்கி உழவுசெய்யவேண்டும்இப்படிச் செய்தால்மண்ணில் நுண்ணியிரிகள் பெருகுவதோடுஅங்ககச் சத்துக்களும் அதிகரிக்கும்காற்றோட்டம் ஏற்படும்மண்ணில் உள்ள உப்புத் தன்மையும் நீங்கும்இதன்பிறகுநெல் சாகுபடி செய்தால் சிறப்பாக வரும்.


உப்புத் தண்ணீர் பகுதியில் உப்பு உரங்கள் உதவாது!
நடவுக்குப் பிறகு 10 நாள் இடைவெளியில், 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து 3முறை தெளிக்கவேண்டும்வாரம் ஒரு முறை 100 லிட்டர் அமுதக் கரைசலை தண்ணீ ரோடு பாய்ச்சவேண்டும்இதுதண்ணீரில் உள்ள உப்புத் தன்மையின் பாதிப்பிலிருந்து பயிர்களைக் காப்பாற்றும்.பொதுவாகவே ரசாயன உரங்களை யும்பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தவிர்ப்பது நல்லதுஅதிலும்உப்புத் தன்மையுள்ள பகுதியில்அவற்றையெல்லாம் பயன்படுத்தவே கூடாதுஇயற்கைவிவசாயத்தின் மூலமாக மட்டுமே இதுமாதிரியான தண்ணீர் உள்ள பகுதிகளில் வெற்றிகரமாகவிவசாயத்தைச் செய்ய முடியும்என்று அழுத்தம் கொடுத்த வல்லுநர்தொடர்ந்தார்.

"நெல் வயலைச் சுற்றி கிளரிசீடியா வளர்க்க வேண்டும்மூன்று மாதத்திலேயே அதிக அளவில்இலைகள் கிடைக்கும்நெல் வயலில் உள்ள வெற்றிடத்தில்கிளரிசீடியா இலைகளைப் போட்டு,காலால் அழுத்திவிட்டால் நீர் ஆவியாதல் தடுக்கப்பட்டு மண்ணின் ஈரம் பாதுகாக்கப்படும்தண்ணீர்தேவையும் குறையும்இதனால் கிணற்றில் நீர்மட்டம் குறையாமலிருக்கும்அடி ஆழத்தில் உள்ளஉப்புத் தண்ணீரை பயன்படுத்த வேண்டிய அவசியமும் ஏற்படாமலிருக்கும்ஒவ்வொரு அறுவடைக்குப்பிறகும்கிளரிசீடியா இலைகளை மண்ணில் போட்டு உழவு செய்யலாம்நடவுக்கு ஒரு வாரம் முன்பும்இந்த இலைகளை மண்ணில் போட்டு மிதிக்கலாம்இதையெல்லாம் நடைமுறைப்படுத்தினாலேநெல்விவசாயம் சிறப்பாக செய்ய முடியும்பயறு சாகுபடியும் வெற்றி அடையும்.

உதவாத தண்ணீருக்கு உருப்படியான யோசனைகள்!
இப்போது இருக்கும் தண்ணீரை மாற்றுவதற்கான வேலைகளை செய்ய உங்களுக்கு மனமில்லைஎன்றால்இருக்கின்ற நீரைப் பயன்படுத்தி உப்புத் தண்ணீரிலும் வளரக்கூடிய அதிக விற்பனைவாய்ப்புள்ள பலன் தரும் மரங்களையும் வளர்க்க முடியும்ஒரு ஏக்கரில் சப்போட்டா-20, சாத்துக்குடி-10,முந்திரி-5, மா-10, பெரு நெல்லி-10, மாதுளை-5, அகத்தி-500, கறிவேப்பிலை-250, கிளிரிசீடியா-1000 என்றஎண்ணிக்கையில் மரங்கள் வளர்க்கலாம்பெருங்குடை மரங்கள் எனப்படும் சப்போட்டாமா,சாத்துக்குடிமுந்திரி போன்றவைகளை 35 அடி இடைவெளிவிட்டு மாற்றி மாற்றி நடவு செய்யவேண்டும்சிறுகுடை மரங்கள் எனப்படும் நெல்லிமாதுளைஅகத்திகறிவேப்பிலைகிளரிசீடியாபோன்றவைகளுக்கு 4 அடி இடைவெளிவிட வேண்டும்.

இந்த மரங்களை நடுவதற்கு முன்பே தெளிப்புநீர்ப் பாசனம் அமைத்துவிட வேண்டும்ஒரு அடிசுற்றளவுஇரண்டு அடி ஆழம் கொண்ட குழிகளை அமைத்துதோட்டத்தில் கிடைக்கும் காய்ந்தகுச்சிகளைப் போட வேண்டும்அதன் மீது இலை-தழைகளைப் போட்டுகுழி நிரம்பும் அளவுக்கு அமுதக்கரைசல் ஊற்ற வேண்டும்வாரம் ஒரு முறை இப்படி ஊற்றவேண்டும்ஒரு மாதத்துக்குப் பிறகு மரக்கன்றுகளை நடலாம்அதன் பிறகுஒவ்வொரு மரக் கன்றையும் சுற்றி 50 கிராம் அளவுக்கு பல தானியவிதைப்புச் செய்துஅதன் மீது மூடாக்குப் போட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை மரக் கன்றின்இலைகள் மீது பஞ்சகவ்யாவும்வேர்ப்பகுதியில் உள்ள மூடாக்கின் மீது அமுதக் கரைசலையும்தெளிக்க வேண்டும்இதனால் மரங்களில் சிறப்பான வளர்ச்சியைக் காணமுடியும்அதிக வருவாயும்பார்க்க முடியும்.


கிளிரிசீடியாஅகத்தி போன்றவற்றை வளர்ப் பதால் ஆடுமாடுகளுக்குத் தீவனம் கிடைக்கும்.மூடாக்குப் போடுவதற்கு அதிகளவில் இலைகளும் கிடைக்கும்மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும் முடியும்காலப்போக்கில் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் பெருகிமண்வளம் மேம்படும்.மரங்களுக்குதெளிப்புநீர்ப் பாசனம் மூலம்வாரம் ஒருமுறை தண்ணீர் கொடுக்கலாம்இந்தமுறைகளைக் கடைபிடித்தால்உப்புத் தன்மையுள்ள தண்ணீராக இருந்தாலும் மரங்கள் நன்கு வளரும்"எனச் சொன்னார் ஏங்கல்ஸ் ராஜா.

"ரொம்ப நன்றிதண்ணியை மொத்தமா மாத்தறதுக்கான வழிமுறைஉடனடியா மாத்தறதுக் கானவழிமுறைஇதைத் தவிரஇப்ப இருக்கற தண்ணியை வெச்சே விவசாயத்தைத் தொடர்றதுக் கானவழிமுறைனு பிரிச்சிப் பிரிச்சி நல்லாவே சொல்லியிருக்கீங்கஇது எல்லாமே எனக்குச் சாத்தியமானவிஷயம்தான்ரொம்பவே நம்பிக்கை வந்துடுச்சிஎன மகிழ்ச்சியோடு செல்வராஜ் சொல்ல...
"இன்னொரு யோசனையும் சொல்றேன்.. கேட்டுக்குங்க.." என இன்னொரு வழிமுறையை யும் சொல்லிஅசத்தினார் ஏங்கல்ஸ் ராஜா.

முத்தான 33 சென்ட் யோசனை!
"ஒவ்வொரு ஏக்கரிலும்தலா 33 சென்ட் பரப்பில் குட்டை அமைக்க வேண்டும்குட்டை வெட்டியமண்ணைக் கொண்டுஇன்னொரு 33 சென்டில் பரப்பிமேடாக்க வேண்டும்மீதமுள்ள 34 சென்ட்நிலத்தில் நெல் மற்றும் பயறு வகை சாகுபடிகளைச் செய்து கொள்ளலாம்மழைக் காலங்களில்குட்டையில் மீன் வளர்த்து லாபம் பார்க்கலாம்மேடாக்கப்பட்ட 33 சென்ட் பகுதி யைச் சுற்றி, 50 அடிஇடைவெளியில் சப்போட்டாமுந்திரிமாசாத்துக்குடி போன்ற பெருங்குடை மரங்களை மாற்றி மாற்றிநடவுசெய்து வளர்க் கலாம்பெருங்குடை மரங்களுக்கிடையே 25 அடி இடைவெளியில் நெல்லி,மாதுளைவாழைபப்பாளி போன்ற சிறுகுடை மரங்களை வளர்க் கலாம்பெருங்குடை மரங்களுக்கும்சிறுகுடை மரங்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் குமிழ்மகோகனி போன்ற வன மரங்களைவளர்க்கலாம்.

இதன் உள்ளே உள்ள நிலத்தில் பதினாறரை சென்ட் பரப்பில் கால்நடை மற்றும் அவற்றுக்குத்தேவையான தீவனங்களை வளர்க்கலாம்ஒரு மாடுஇரண்டு ஆடுஐந்து கோழிகளும் வளர்க்கலாம்.இவைகளுக்குத் தேவையான கோ-4, அசோலாசோளம்கிளிரிசீடியாஅகத்திசூபாபுல் போன்றகால்நடைத் தீவனங்களையும் வளர்த்துக் கொள்ளலாம்.
மீதமுள்ள பதினாறரை சென்ட் பரப்பில் மேட்டுப்பாத்தி அமைத்து காய்கறி சாகுபடி செய்யலாம். 4 அடிஅகலம்முக்கால் அடி உயரத்துக்கு இலைதழைகளைப் பரப்பிமூடாக்கு அமைத்துஅதன் மீது அமுதக்கரைசலை தெளித்து பாத்திகள் அமைக்க வேண்டும்எல்லா பாத்திகளையும் சுற்றி பீர்க்கன்புடலை,பாகல்அவரை போன்ற கொடி வகை காய்கறிகளையும்ஒவ்வொரு பாத்தியையும் சுற்றிலும் பீட்ரூட்,முள்ளங்கிகேரட் போன்றவற்றையும்... தக்காளிகொத்தவரைமிளகாய் போன்ற குத்துச்செடிகாய்கறிகளையும் சாகுபடி செய்யலாம்குத்துச்செடி காய்கறிகளின் உள்ளேநடுப்பகுதியில் பூண்டு,இஞ்சிவெங்காயம்கீரை சாகுபடி செய்யலாம்மேட்டுப்பாத்தி முறையில் இவைகள் அனைத்துமேசிறப்பாக வளரும்காய்கறிகளைப் பறிப்பதற்கும் ஆட்கள் சென்று வரவும்ஒவ்வொரு பாத்தியும் 25 அடிநீளம் இருக்கவேண்டும்ஒவ்வொரு பாத்திக்கும் இடையில் இரண்டு அடி இடைவெளி இருக்கவேண்டும்இவைகளுக்கும் தெளிப்பு நீர்ப்பாசன முறையைப் பயன்படுத்தலாம்இல்லை யென்றால்பூவாளி மூலம் தண்ணீர் ஊற்றலாம்குறைவான தண்ணீர்தான் தேவைப்படும்.

பஞ்சகவ்யாஅமுதக் கரைசல்மீன் அமிலம்வானமுதம் என சொல்லப்படும் திரவநுண்ணூட்டங்களையும்இயற்கை பூச்சிவிரட்டி களையும் பயன்படுத்தி இயற்கை முறையில்இதேமண்ணில் வெற்றிகரமாக காய்கறி சாகுபடி செய்யலாம்என வல்லுநர் சொன்னதும்,

"இங்க விற்பனை வாய்ப்பு நல்லாவே இருக்குவிவசாய வேலைகளுக்கு ஆட்களும் தாராளமாகிடைக்கறாங்கஎன்கிட்ட உள்ள பத்து ஏக்கரையும் மூணு விதமா பிரிச்சிமூணு வழிமுறை களையுமேநடைமுறைப்படுத்துவேன்இல்லைனாஏதாவது ஒரு முறையை பத்து ஏக்கர்லயும் பயன்படுத்துவேன்ரொம்பவே நம்பிக்கை வந்துடுச்சுஇவ்வளவு நேரம் இங்கேயே இருந்துஇவ்வளவுவிஷயங்களையும் சொல்லிக் கொடுத்து உதவி பண்ணியிருக்கீங்க.." என நெகிழ்ச்சியோடுவிடைகொடுத்தார் செல்வராஜ்.

பிறை வடிவ வார்ப்பு 
மழைத் தண்ணீர் நிலத்தை விட்டு வெளியேறாமல் தடுக்கவும், எல்லா பகுதியிலும் மழை நீரை மண்ணுக்குள் நிலை நிறுத்தவும் ஆங்காங்கே பிறை வடிவ வரப்புகள் அமைக்கப்பட வேண்டும்.  வரப்புகள் ஒரு அடி உயரத்தில் இருக்க வேண்டும். இவை தண்ணீரைத் தாங்கி நிற்கும்.

                                                                                           தொடர்புக்கு : ஏங்கல்ஸ் ராஜா  - 94421 - 21473

                                                                                                                                   குரு - 94438 - 45643



No comments:

Post a Comment