Monetize Your Website or Blog

Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Friday, 26 August 2016

கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் தவிர்ப்போம்: கண்களைக் காக்கும் 10 கட்டளைகள்

'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' என்பது நாள்தோறும் அதிகரித்து வரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தினமும் 6-8 மணி நேரத்துக்கு மேல் கம்ப்யூட்டர், டேப்லெட், மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு கண்களில் ஏற்படும் பிரச்னைகளை 'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' என்கிறோம். பார்வைக்குறைபாடு, கண்களில் நீர்வடிதல், அரிப்பு, எரிச்சல் உட்பட பல்வேறு பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன.


1.போதுமான வெளிச்சம் இருக்கட்டும்
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அறையில் போதுமான வெளிச்சம் இருப்பது அவசியம். இருட்டான, வெளிச்சம் அற்ற அறையிலோ அதிக வெளிச்சமான அறையிலோ கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வேண்டாம். கம்ப்யூட்டர் திரைக்குப் பக்கவாட்டில் இருந்து வெளிச்சம் வரும்படியாக இருப்பது நல்லது. தலைக்கு நேர் மேலே இருந்து வெளிச்சம் விழும்படியாக அமர்வதை இயன்றவரை தவிர்க்க வேண்டும். அளவான வெளிச்சம் உள்ள ஃப்ளோரோசன்ட், எல்.இ.டி பல்புகளைப் பயன்படுத்தலாம்.


2.கிளாரைத் தவிர்க்கவும்
கம்ப்யூட்டர் திரையில் கிளார் விழுவதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். கம்ப்யூட்டர் திரைக்குப் பின்புறம் ஜன்னல், கதவு, லைட் இருந்தால், அதிக வெளிச்சம் காரணமாகத் திரையில் கிளார் அடிக்கும். இப்படி கிளார் அடிக்கும் மானிட்டரைத் தொடர்ந்து பார்க்கும்போது, கண்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும், கண்ணாடி பயன்படுத்துபவர்கள்​`ஆன்டிரிஃப்ளெக்டிவ்​'​ கண்ணாடிகள் அணிவது கிளாரைத் தடுக்க உதவும்.
3.எல்.சி.டி/எல்.இ.டி மானிட்டரைப் பயன்படுத்துங்கள்
பழைய சி.ஆர்.டி (கேத்தோட் ரே ட்யூப்) மானிட்டர்களில் பெரும்பாலும் ஆன்டிரிஃப்ளெக்டிவ் கோட்டிங் இருக்காது. இதனாலும் கண்கள் பாதிக்கப்படலாம். எனவே, எல்.சி.டி/ எல்.இ.டி மானிட்டர்களைப் பயன்படுத்துங்கள். ரெசல்யூஷன் அதிகமாக உள்ள மானிட்டர்களைப் பயன்படுத்துவது கண்களுக்கு நல்லது. ரெசல்யூஷன் என்பது `டாட்பிட்ச்’ எனப்படும் ஒளிப்புள்ளிகளின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக, குறைவான ஒளிப்புள்ளிகள் துல்லியமான உருவங்களை உருவாக்குகின்றன. டிஸ்ப்ளேவில் 0.28 மி.மீட்டருக்குக் குறைவான ஒளிப்புள்ளிகள் இருப்பது நல்லது.
4.கான்டாக்ட் லென்ஸ்
கான்டாக்ட் லென்ஸ் உபயோகிப்பவர்கள், தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பார்க்கும்போது மற்றவர்களைவிட கண் எரிச்சல் போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட நான்கு மடங்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். சாதரண கான்டாக்ட் லென்ஸ்களைவிட சிலிக்கான் ஹைட்ரோஜெல் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது ஓரளவு நல்ல பலனைத் தரும்.
5.டிஸ்ப்ளே செட்டிங்ஸ்
டிஸ்ப்ளே செட்டிங்ஸை சீராக்குவது ஓரளவுக்கு நல்ல பலனைத் தரும். மானிட்டரின் பிரைட்னெஸ் எப்போதும் உங்களைச் சுற்றி உள்ள சூழலின் வெளிச்சம் எவ்வளவு உள்ளதோ அதே அளவு இருக்கட்டும். கண்களை உறுத்தாத, கண்களைச் சுருக்கிப் பார்க்கச் செய்யாத இயல்பான வெளிச்சமே நல்லது.
​'​டெக்ஸ்ட் சைஸ்​'​ எப்போதும் கான்ட்ராஸ்ட்டுக்கு இயல்பாக இருக்கட்டும். குறிப்பாக, நீளமான டாக்குமென்ட் ஃபைல்களில் வேலை செய்யும்போதும் படிக்கும்போதும் வெள்ளைப் பின்புறத்தில் கறுப்பு எழுத்துக்களாக இருப்பது நல்லது.​ படிக்கும்போது எழுத்துக்களை பெரிய அளவில் வைத்து படித்துவிட்டு, பிறகு நார்மலான அளவுக்கு மாற்றிக்கொள்ளலாம்.​
`கலர் டெம்ப்பரேச்சர்’ என்று ஒரு ஆப்ஷன் உண்டு. இது, கணிப்பொறித் திரையில் இருந்து வெளிப்படும்  ஒளிக்கற்றைகளின் அளவைக் குறிக்கும். நீல வண்ண வெளிச்சம் என்பது குறைந்த அலை நீளம் உடையது. எனவே, கண்களை அதிகம் சிரமப்படுத்தும். சிவப்பு, ஆரஞ்சு போன்றவற்றின் அலை நீளம் அதிகம் என்பதால், அவை ஓரளவு குறைவாகவே கண்களைப் பாதிக்கும். கலர் டெம்ப்பரேச்சரைக் குறைப்பதன் மூலம், நீள அலைக்கற்றைகளைக் குறைத்து, கண்களைப் பாதுகாக்கலாம்.
6.கண்களைச் சிமிட்டுங்கள்
பொதுவாக, கண்களைச் சிமிட்டும் பழக்கம் என்பது, கண்களை உலர்வின்றி ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். கணிப்பொறியைப் பயன்படுத்தும்போது கண் சிமிட்டுவது பாதிக்கப்படுகிறது. மேலும், சில சிமிட்டல்கள் முழுமையற்றதாக அரைச் சிமிட்டல்களாகிவிடுகின்றன. கண்களில் உள்ள நீர் இதனால் வேகமாக ஆவியாகிறது. உலர்ந்த கண் பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசித்து, 'செயற்கை கண்ணீர்த் துளிகளை' விட்டுக்கொள்ளலாம். கண் சிவப்பை நீக்குவதற்காகத் தரப்படும் கண் சொட்டு மருந்துடன் இதனைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். கண் சொட்டு மருந்துகளில் கண் சிவப்பை நீக்குவதற்காக ரத்தநாளங்களைச் சுருக்கும் வேதிப்பொருட்கள் இருக்கும். இவை, கண் உலர்தலையோ அரிப்பையோ போக்கும் என்று சொல்வதற்கு இல்லை. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்குப் பிறகும் 10 முறை கண்களைச் சிமிட்டலாம்.
7.கண் பயிற்சிகள்
தொடர்ந்து உலர்வான கண்களோடு கணிப்பொறியை வெறிப்பது,​ கண்களுக்கும் நரம்புகளுக்கும் சோர்வைத் தரும். இதைப் போக்க 20:20:20 என்று ஓர் எளிய பயிற்சி உள்ளது. அதாவது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை (அது பச்சை வண்ணத்தில் இருப்பது நல்லது) 20 விநாடிகள் இமைக்காமல் பார்க்க வேண்டும். இப்படிச் செய்வதால் தூரப்பார்வை, கிட்டப்பார்வை தொந்தரவுகள் ஏற்படாது.​ கம்ப்யூட்டர் அருகில், இண்டோர் செடிகளை வளர்ப்பதன் மூலம், செடியின் பச்சை நிறம் கண்களுக்கு சற்று ஓய்வை தரும்.​


8.கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்
கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம், கழுத்துவலி, தோள்பட்டை வலி போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்க, தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு இடையே போதுமான ஓய்வு கொடுங்கள். நாள் முழுதும் அமர்ந்து வேலை செய்துகொண்டிராமல், குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து ஒரு நடைவிடுங்கள். கை, கால், கழுத்தை ஸ்ட்ரெச் செய்யுங்கள், கண்களைச் மேலும், கீழும், இடது வலதுபுறங்களில் வட்டமாகவும் சுழற்றிப் பயிற்சி கொடுங்கள்.
9.வேலைச் சூழலை கண்களுக்கு ஏற்ப ​மாற்றுங்கள்
அச்சடிக்கப்பட்ட காகிதத்தையோ புத்தகத்தையோ பார்த்து டைப் செய்யும்போது, கணிப்பொறித் திரையையும் காகிதத்தையும் மாறி மாறி பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்படுகின்றன. இதைத் தவிர்க்க புத்தகத்தையோ தாளையோ மானிட்டரின் அருகில் ஒரு ஸ்டாண்டு வைத்து அதில் பொருத்தலாம். அதேபோல, அந்தத் தாளின் மீது போதுமான வெளிச்சம் இருப்பதும் முக்கியம். கணிப்பொறித் திரை கண் மட்டத்திலிருந்து 40 டிகிரி சாய்வாக இருப்பது நல்லது. கண்களுக்கும் கணிப்பொறி திரைக்கும் இடையே அரைமீட்டர் இடைவெளியாவது இருப்பது நன்று. எர்கோனாமிக் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிவது உடலின் போஸ்ச்சரைப் பாதுகாக்கும். கழுத்துவலி, கைவலி, முதுகுவலி, இடுப்புவலி என உடல்வலிகளில் இருந்து காக்கும்.


10.கண் பரிசோதனை
வருடத்துக்கு ஒருமுறை கண் மருத்துவரைச் சந்தித்து கண்களைப் பரிசோதியுங்கள். கம்ப்யூட்டரை நீங்கள் பயன்படுத்தும் விதம், நேரம் போன்ற தகவல்களை அவரிடம் தெரிவியுங்கள்.

5.77 நிமிடத்தில் 9 ஒலிம்பிக் தங்கம்

சென்னை வார் மெமோரியலில் இருந்து கலங்கரை விளக்கம் வரையிலான மூன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடினால் என்ன வாங்கலாம். நம்மால் மூச்சு மட்டுமே வாங்க முடியும். ஆனால் உசேன் போல்ட் 9 தங்கப் பதக்கங்களை வாங்கியுள்ளார். 2004,2008,2012,2016 ஆகிய நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் உசேன் போல்ட் மொத்தம் ஓடியதே மூன்றரை கிலோமீட்டர்தான்.
 இந்த மூன்றரை கிலோ மீட்டரை ஓட போல்ட் எடுத்துக் கொண்ட நேரம் 5.77 நிமிடங்கள் மட்டுமே. கூகுளில் தேடுங்கள், பஸ்ஸில் செல்லவே 13 நிமிடங்கள் ஆகுமாம்.



 2004 ஒலிம்பிக்கின், 200 மீட்டர் போட்டியில் தோல்வியுடன் தொடங்கிய போல்ட், இலக்கை அடைய எடுத்துக் கொண்ட நேரம் 21.05 வினாடிகள். ஆனால் அவர் கொடுத்த டீ என்ட்ரியை டேபிளில் பாருங்கள்.

 அனைத்து பந்தயங்களிலும் போல்ட் தன் முழு திறனை செலுத்தி இருந்தால் இந்த நேரம் இன்னும் குறைந்திருக்கும். ஆனால் போல்ட் ஒரு வின்னிங் பேட்டர்னை பின்பற்றுகிறார்.
 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 200 மீட்டர் போட்டியில் போல்ட்டின் டைமிங்கை எடுத்துக் கொள்வோம். முதல் தகுதிச் சுற்றில் இலக்கை 20.64 விநாடிகளில் கடக்கிறார். காலிறுதியில் 20.29 வினாடிகளில் கடக்கிறார். அரையிறுதியில் 20.09 வினாடிகளில் கடக்கிறார். இறுதிச் சுற்றில் 19.30 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கத்தை தட்டிச் சென்றார். முதல் சுற்றுக்கும் இறுதி சுற்றுக்கு 1.34 வினாடிகள் வித்தியாசம். இதே வின்னிங் பேட்டர்னை ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும், ஒவ்வொரு போட்டியிலும் பார்க்கலாம். ஒவ்வொரு சுற்றுக்கும் இடையிலான இடைவேளை குறைவு. எனவே முதல் சுற்றிலேயே முழு சக்தியையும்  வெளிப்படுத்தினால், குறுகிய நேரத்தில் அடுத்த சுற்றுக்கு தேவையான முழு எனர்ஜியை மீட்டெடுப்பது சிரமம். ரியோவில் 4*100 மீட்டர் போட்டியில் தங்கம் குறைந்த வேகத்தில் ஓடியதற்கு, அரையிறுதிக்கும் காலிறுதிக்குமான இடைவேளை குறைவே காரணம் என்றார்.

100 Meters 200 Meters 4*100 Meters
OlympicRoundsTiming OlympicRoundsTiming OlympicRoundstiming
2008Round One10.2 2004Round one21.05 2008Final8.98
2008Quater Finals9.92 2008Round one20.64 2012Final8.7
2008Semi Finals9.85 2008Quater Finals20.29 2016Final8.97
2008Finals9.69 2008Semi Finals20.09    
2012Round One10.09 2008Finals19.3    
2012Semi Finals9.87 2012Round one20.39    
2012Finals9.63 2012Semi Finals20.18    
2016Round One10.07 2012Finals19.32    
2016semi Finals9.86 2016Round one20.28    
2016Finals9.81 2016semi Finals19.78    
    2016Finals19.78    



போல்ட் ஓடியது 5.77 நிமிடங்கள் தான் என்றாலும், அதற்குள் 12 ஆண்டுகளின் உழைப்பு இருக்கிறது.


பச்சமுத்துவை விசாரித்தால் மதனை பிடித்துவிடலாம்..! - போத்ராவின் பகீர்!

மதன் ஓடிவிட்டாரா, ஒளித்து வைக்கப்பட்டு இருக்கிறாரா என்பது குறித்து பச்சமுத்துவிடம் விசாரணை செய்தால் உண்மை நிலவரம் தெரியும் என்று  ஃபைனான்ஷியர் போத்ரா கூறினார்.


ஏழாண்டுகளுக்கு முன்னாள் நடிகை ரோஜாவுக்கு பணம் கொடுத்து வழக்கு தொடுத்தவர் ஃபைனான்ஷியர் போத்ரா. அடுத்து இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு படம் தயாரிக்க பணம் கொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பச்சமுத்து பலகோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாக பகீர் புகார் கொடுத்துள்ள ஃபைனான்ஷியர் போத்ராவிடம் பேசினோம், ''நான் 25 ஆண்டுகளுக்கு முன்பே  பச்சமுத்துவுக்கு ஒரு லட்சம் பணம் கொடுத்தேன். மாதம் இருபதாயிரம் வீதம் ஐந்து மாதம் பணம் கட்டினார். அப்போது செக் மோசடி பிரச்னை வந்தபோது அவரது ஆடிட்டரை மாட்டிவிட, ஆடிட்டர் ஆறுமாசம் சிறைவாசம் அனுபவித்தார். அன்று ஆடிட்டர், இன்று மதன். எய்த பச்சமுத்துவை விட்டுவிட்டு, அம்பு மதனை போலீஸ் தேடி வருகிறது.
வேந்தர் ஃபிலிம்ஸ் மதனை காவல்துறை மாதக்கணக்கில் தேடி வருகிறது, இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மையில் மதன் வெறும் கருவிதான். அவரை முழுக்க முழுக்க இயக்கியது பச்சமுத்துதான். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு மதனை எனக்கு அறிமுகம் செய்தார் பச்சைமுத்து. 'மதன் என் மகன் போன்றவர். வேந்தர்டிவி, வேந்தர் ஃபிலிம்ஸ் இரண்டும் வெவ்வேறு அல்ல. மதன் ஒழுக்கமானவர். நேர்மையானவர்' என்று என்னிடம் மதனுக்கு சர்டிஃபிகேட் கொடுத்தார். பச்சமுத்து முன்னிலையிலேயே, வேந்தர் ஃபிலிம்ஸ் தயாரித்து வரும் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்துக்கு ஆறுகோடி ரூபாய் பணம் கொடுத்தேன். இதுவரை திருப்பித் தரவில்லை.


நான் மதனிடம் கொடுத்த பணத்தை அவர் பச்சமுத்துவிடம் கொடுத்து விட்டார். நான் பச்சமுத்துவிடம் போன் செய்து பணம் கேட்டேன். 'ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அமைக்கும்  அமராவதி நகரத்தில் ஒரு காலேஜ் கட்டப்போகிறேன். அதற்கு உங்கள் பணத்தை செலவு செய்துவிட்டேன். இப்போதைக்கு தர இயலாது' என்று சொல்லி விட்டார். அதன்பின் அவர் மீது பணம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். கடந்த 3 நாட்களாக வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி அடியாட்களை வைத்து கொலைமிரட்டல் விடுத்து வருகிறார்.
மதன் முழுக்க முழுக்க பச்சமுத்துவின் ஆள். இப்போது மதன் எங்கே இருக்கிறார் என்கிற உண்மை பச்சமுத்துவுக்கு மட்டுமே தெரியும். மதன் ஓடிவிட்டாரா, பச்சமுத்துவால் ஒளித்து வைக்கப்பட்டு இருக்கிறாரா அல்லது தலைமறைவாக இருக்கிறாரா, மாதக்கணக்கில் மதனை தேடிவரும் போலீஸ், ஒருமுறை பச்சமுத்துவிடம் விசாரணை செய்தால் மதன் ஒளிந்திருக்கும் உண்மை நிலவரம் புரியும். மதன் கிடைக்காவிட்டால், ஐந்து வருஷம் ஆகியும் ஆறு கோடி பணம் கொடுத்த எனக்கு என்ன பதில். பச்சமுத்துவின் கல்லூரியில் கோடிக்கணக்கில் பணம் கட்டியிருக்கும் 104 மாணவர்களின் கதி என்ன?" என்று பச்சமுத்து மீது பகீர் புகார் பட்டியல்களை அடுக்குகிறார்.
போத்ராவின் புகாருக்கு பச்சமுத்து பதில் அளித்தால்தான் உண்மை வெளியே தெரியவரும்.



இந்தியா ஏழாவது பணக்கார நாடு! எப்படி தெரியுமா..?

மீபத்திய நாடுகளின் சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டது. அதில், இந்தியா 5,600 பில்லியன் டாலருடன் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா 48,900 பில்லியன் டாலருடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது, மூன்றாவது இடங்களில் சீனாவும், ஜப்பானும் உள்ளன. கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலியை முந்தி இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.


டாப் 10 பணக்கார நாடுகள்!

1. அமெரிக்கா  (48,900 பில்லியன் டாலர்) 2. சீனா (17,400 பில்லியன் டாலர்) 3. ஜப்பான் (15,100 பில்லியன் டாலர்) 4. இங்கிலாந்து (9,200 பில்லியன் டாலர்), 5. ஜெர்மனி (9,100 பில்லியன் டாலர்) 6. பிரான்ஸ் (6,600 பில்லியன் டாலர்) 7. இந்தியா (5,600 பில்லியன் டாலர்) 8. கனடா (4,700 பில்லியன் டாலர்) 9. ஆஸ்திரேலியா (4,500 பில்லியன் டாலர்) 10. இத்தாலி (4,400 பில்லியன் டாலர்).

எப்படி என்கிறீர்களா?
இந்தச் சொத்துக் கணக்கானது, அசையாத சொத்துக்கள், இருப்புப் பணம், பங்குகள் என அனைத்தையும் உள்ளடக்கித்தான் கணக்கிடப்பட்டு உள்ளது. மொத்தத் தொகையில் இருந்து கடன் மதிப்பு கழிக்கப்பட்ட பிறகு வரும் மதிப்புகள்தான் இவை. அது சரி, ஏழாவது இடத்தை இந்தியா எப்படிப் பிடித்தது? ஒரே காரணம், மனிதவளம்.
இந்தியாவின் மனிதவளம்தான் இந்த வளர்ச்சிக்கான மூலதனம். நகரமயமாதலும் உலகமயமாதலும் புதுப்புது தொழில்களைச் செய்வதற்கான கதவுகளை இந்தியாவுக்குத் திறந்துவிட்டன. வெளிநாட்டினர் இங்கு எளிதில் தொழில் செய்வதற்கான சூழல்களை அரசு ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் முதலீடுகள் குவிந்தன. அதுவரை விவசாயத்தில்தான் 70 சதவிகித வேலை வாய்ப்புகள் இருந்தன. ஆனால், மெல்ல அது சேவைத் துறைக்கு மாறியது.
புதிதாய் முளைத்த துறைகள்!

குறைந்த ஊதியத்தில் அதிக அளவிலான பணியாளர்கள் கிடைத்ததால் இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கும் தொழில்நுட்பமும், சேவையும் கொண்டு செல்லப்பட்டன. மனிதவளத்தை மட்டுமல்லாமல் மின்சாரம், தண்ணீர், கனிமங்கள் என அனைத்து வளங்களையும் கார்ப்பரேட்கள் முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கின. இதனால் இந்தியத் தொழில் துறை வேகமாக வளர்ந்தது... இந்திய மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்தது. அதே நேரத்தில், நுகர்வுத் தன்மையும் அதிகரித்தது. மக்களின் வாழ்க்கை முறை வெகுவாக மாறத் தொடங்கின. செல்போன், மல்டி ஃப்ளெக்ஸ், ஆன்லைன் ஷாப்பிங் என இந்தியாவே டிஜிட்டல் மயமானது. இதனால் அனைத்துத் தொழில்களிலும் இ-காமர்ஸ் என்ற இணைய வணிகம் அதிகரித்தது. மிக இளம் வயதிலேயே ஏராளமானோர் பணக்காரர்களாக விஸ்வரூபம் எடுத்தார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக இளம் வயதிலேயே தொழில்நுட்பத்தை மட்டுமேவைத்து பில்லியனர் ஆனவர்களில் ஓலா நிறுவனத்தின் நிறுவனர்கள் அங்கித் பாட்டி, பாவிஷ் அகர்வால், ஸ்னாப்டீல் நிறுவனர் குனால் பால் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்கள் பின்னி மற்றும் சச்சின் பன்சால் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் வயது 28 - 32-க்குள்தான். அம்பானிகளும், பியானிகளும் ஆண்டாண்டுகளாய் சேர்த்த பணத்தை, ஐந்தே ஆண்டுகளில் இவர்களால் சேர்க்க முடிந்ததுதான் தொழில்நுட்ப வளர்ச்சியின் சக்திக்குச் சான்று.
இந்தியாவில் மில்லியனர்களின் எண்ணிக்கை!

2011 - 62,000
2012 - 81,000
2013 - 1,00,900
2014 - 1,17,000
2015 - 1,37,100

இங்கு எல்லோரும் பணக்காரர்களா?

இந்தியா ஏழாவது பணக்கார நாடு என்ற இடத்தைப் பிடித்துள்ளது. மொத்த சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் 375 லட்சம் கோடி. இந்தியாவில் 2015 கணக்கெடுப்பின்படி 1,37,100 மில்லியனர்கள் இருக்கிறார்கள். இவர்களில் டாப் 10 இடங்களைப் பிடித்துள்ள பணக்காரர்கள் மட்டுமே 8.5 லட்சம் கோடிக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். எனில், மிச்சமுள்ள 1,37,090 மில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு என்னவாக இருக்கும்? 130 கோடி பேரில் இவர்கள் தவிர, மிச்சமுள்ள நபர்களின் மொத்த சொத்து மதிப்பு என்னவாக இருக்கும்?


புள்ளிவிவரங்களின்படி 130 கோடி பேர் கொண்ட இந்த நாட்டில் 1.6 கோடி பேர் மட்டுமே வருடத்துக்கு ரூ.17 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டுகிறார்கள். 16 கோடி பேர் வருடத்துக்கு 3 லட்சத்துக்கும் மேல் வருவாய் பார்க்கும் மிடில் க்ளாஸ் மக்கள். 36 கோடி பேர் வருடத்துக்கு 1.5 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்கள். 70 கோடி பேர் 1.5 லட்சத்துக்கும் குறைவாக வருவாய் ஈட்டுபவர்கள். மீதமுள்ள 5 கோடி பேர் கணக்கிலேயே எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்கள்.
காணி நிலம் வேண்டும்!

கிரெடிட் சூயிஸி சொத்து அறிக்கை 2014-ன்படி இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் 1 சதவிகிதத்தினர், 49 சதவிகித இந்திய நிலத்துக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். 9 சதவிகிதத்தினர், 25 சதவிகித நிலத்தையும், 40 சதவிகிதத்தினர், 21.5 சதவிகித நிலத்தையும் பகிர்ந்துகொண்டிருக்கும் நிலையில், கிட்டத்தட்ட 50 சதவிகிதம் இந்திய மக்கள் வெறும் 4.5 சதவிகித நிலங்களுக்கு மட்டுமே சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். இப்படித்தான் இந்தியாவில் சொத்துக்களின் பரவல், பணப்புழக்கத்தின் அளவு இருக்கிறது. இந்தியாவின் 80 சதவிகிதச் சொத்துக்கள் 20 சதவிகித மக்களிடம் இருக்கிறது. மிச்சமுள்ள 20 சதவிகிதச் சொத்துக்களைத்தான் 80 சதவிகித மக்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.
உணவின்றி உயிர் போகிறது!

மொத்த மதிப்பீட்டில் இந்தியா வளர்ந்து இருப்பது வெளிநாட்டினரிடம் பெருமையடித்துக்கொள்ள பயன்படலாம். ஆனால், உள்நாட்டில் நிலை என்ன? நேஷ்னல் சர்வே புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில், நகரங்களில் சராசரியாக ஒருநாளைக்கு ஒருவர் செய்யும் செலவு ரூ.88, கிராமங்களில் ரூ.48. இன்றைய விலைவாசியில் இந்தத் தொகையில் ஆரோக்கியமான உணவுகளை உண்ண முடியுமா? இந்தியாவில் மொத்த உயிரிழப்புகளில் 53 சதவிகிதம் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் நடக்கும் உயிரிழப்புகள் ஆகும்.
ஆரோக்கியமான ஊட்டச்சத்துமிக்க உணவு இல்லாததால் எந்த நோய் எதிர்ப்புத் திறனும் இன்றி நோய்வாய்ப்பட்டு உயிரிழப்புகள் நடக்கின்றன. இவற்றில் 70 சதவிகிதத்துக்கும் மேலான உயிரிழப்புகள் 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள். மொத்தத்தில், ‘இந்தியா உலக அரங்கில் அனைத்து வசதிகளையும் கொண்ட ஏழாவது அழகான பங்களா’ என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. ஆனால், வீட்டுக்குள் இருப்பவர்கள்தான் பட்டினியில் கிடக்கிறார்கள். அது வெளியே நின்று வேடிக்கைப் பார்ப்பவர்களுக்குத் தெரியுமா என்ன?
இங்கு என்ன வளம் இல்லை, ஆனால் ஏன் இந்த நிலை?

வளங்களின் அடிப்படையில் ஒப்பிடும்போது இந்தியாவும், சீனாவும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால், சீனாவால் மட்டும் எப்படி உலகில் இரண்டாவது பணக்கார நாடு என்ற இடத்தைப் பிடிக்க முடிந்தது. கடந்த 5 ஆண்டுகளில் மற்ற நாடுகளைக் காட்டிலும் மிக வேகமாக சீனா வளர்ந்துள்ளது. அதற்குக் காரணம், சீனா தனக்கென தனி வியாபாரக் கொள்கைகளை வகுத்தது. எந்தவொரு நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கும் போட்டியாகத் தனது நாட்டிலேயே பொருட்களை உற்பத்தி செய்தது. உலகில் உள்ள மேல்தட்டு மக்களுக்கான சந்தையை அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் பிடித்த நிலையில், நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களுக்கான சந்தையைச் சீனா பிடித்தது. வால்யூம் அடிப்படையிலான ஓட்டத்தில் சீனா மற்ற நாடுகளைக் காட்டிலும் நீண்ட இடைவெளியில் ஓடி வென்றது.


சீனப் பொருட்கள் இல்லாத நாடுகளே இல்லை. ஆனால், இந்தியாவில் இல்லாத நாடுகளின் பொருட்களே இல்லை. இந்தியா வெளிநாட்டினரின் கூடாரம். பிராண்டுகள் என்று நாம் மயங்கும் அனைத்தும் வெளிநாட்டு இறக்குமதிகள். இந்தியா இறக்குமதி செய்யும் நாடாக இருப்பதே நம்முடைய வளர்ச்சிக் குறைவாக இருக்கக் காரணம். மேலும் இங்கு ஈட்டப்படும் பெரும்பாலான வருவாய் வெளிநாட்டு முதலீடுகளால் வருபவை என்பதால், அவை இங்கே தங்குவதில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் ஊதியம் மட்டும்தான் மிச்சம்.

ஆனால், வெளிநாட்டினரை நுழையவிடாமல் இருந்திருந்தால், நமது அரசியல்வாதிகளால் நமக்கு இந்த வளர்ச்சிகூடக் கிடைத்திருக்காதோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது?


Thursday, 25 August 2016

இத்தாலி நிலநடுக்கம்... பலி எண்ணிக்கை 247 ஆக உயர்ந்தது!

இத்தாலியில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 247 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியின் மத்தியப் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பெருகியா நகரில் இருந்து சுமார் 76 கிலோ மீட்டர் தென் கிழக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்தது.


இந்த நிலநடுக்கத்தின் காரணமாக 73 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, பீதி அடைந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளுக்குள் செல்ல பயந்து கொண்டு இன்னமும் வீதிகளில் முகாம்கள் அமைத்து தங்கி உள்ளனர்.
இந்நிலையில், நிலநடுக்கத்திற்கு 247 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 300-க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாலும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தற்போது மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அம்ரியா, மார்சே, லாஸியோ ஆகிய பகுதிகள், கடந்த 2009-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவை. அந்த நிலநடுக்கத்தில் 300 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.




உங்கள் குழந்தைக்கான உரிமையை வீட்டில் கொடுக்கிறீர்களா?

குழந்தைகளுக்கான உரிமைகள் என்றதுமே பள்ளிக்கூடத்தில்,பொதுஇடத்தில் என்றுதான் யோசனை வரும்ஆனால் குழந்தைகளுக்கன உரிமைகள் அது கருவாக அம்மாவின் வயிற்றுக்குள் இருக்கும்போதிருந்தே தொடங்கிவிடுகிறது.  அவைப் பற்றிதோழமை குழந்தைகள் உரிமைகளுக்கான அமைப்பின் இயக்குநர் அ.தேவநேயன் கூறுகிறார்.

1. கர்ப்பத்தில் இருப்பது ஆண் குழந்தையாபெண் குழந்தையாமாற்றுத் திறனாளியா எனப் பார்த்து இனம் கண்டறிந்து கருக்கலைப்பு செய்துவிடாமல் காப்பது.

2. கர்ப்பக் காலத்தில் தாய்க்கு சரிவிகித உணவு

தேவையான தடுப்பூசிகள்
,மனதைப் பாதிக்காத சூழல் ஆகியவையும் அவசியம்.

3. குழந்தைப் பிறந்ததும் தாய்ப்பால் தரப்படுவதும் குறிப்பாக சீம் பால் கொடுக்கப்பதும் குழந்தையின் அடிப்படை உரிமை.

4. குழந்தைப் பிறந்த குறிப்பிட்ட தினங்களில் பிறப்புச் சான்றிதழ் பெறுவது மிக முக்கியமானதுதவறும்போது எதிர்காலத்தில் அதன்பொருட்டு ஏராளமான சிக்கல்களை குழந்தை எதிர்கொள்ளவேண்டிருக்கும்.

5. குழந்தையின் ஆரம்ப கால பராமரிப்பு கவனத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும்தேவையான எடையுடன் தடுப்பூசிசத்தான உணவுகள் தரப்பட வேண்டும்.

6. குழந்தை பிறந்த 1000 நாட்களுக்குள்வழக்கமான உடல் திறனோடு இருக்கிறதா அல்லது ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்பதை இனம் கண்டு அதற்கு தகுந்த மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

7. குழந்தையைப் பராமரிப்பு மையத்தில் விடுவோர்குழந்தையின் பாதுகாப்பு குறித்து நூறு சதவிகிதம் திருப்தி அடைந்தால் மட்டுமே அங்கு குழந்தையை விட வேண்டும்.


8. குழந்தைகள் வீட்டில் தங்கள் கருத்துகளை அச்சமற்று பகிர்ந்துகொள்ள்ளும் சூழலும் கல்விஉடைத் தேர்வு உள்ளிட்டவற்றில் குழந்தையின் கருத்துகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

9. ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறன் இருக்கும்அதை இனம் கண்டு அங்கீகரிப்பதும் மற்றவரோடு ஒப்பிட்டு குறை சொல்லவும் கூடாது.

10. சிறு குறைகள் இருக்கும் (பேசும்போது திக்குவது போன்ற)குழந்தைகளைஎந்தச் சூழலிலும் புறக்கணிக்காமல் வளர்ப்பதும் அவர்களுக்கான வாய்ப்புகளைத் தவிர்த்துவிடாமல் ஊக்கப்படுத்தவும் வேண்டும்.

11. குழந்தைகளில் ஆண்பெண்மாற்றுத்திறனாளி எனப் பேதம் பார்க்காமல் சமத்துவத்துடன் நடத்தப்பட வேண்டும்அவர்களின் விருப்பங்களை நிராகரிக்கவோ புண் படுத்தவோ கூடாது.

12. குழந்தைகளின் முகத் தோற்றம்பழகும் இயல்பு ஆகியவற்றை வைத்து திட்டவோகுறைக்கூறவோ கூடாது.

(குரங்கு சேட்டையெல்லாம் செய்யறான் என்பதுபோல)

13. பெற்றோர்களே குழந்தைகளின் ரோல் மாடல் என்பதால் அவர்களின் முன் தகாத சொற்கள் பேசுவதுசண்டைப் போடுவது என்பதை தவிர்த்து குடும்பத்தில் ஜனநாயகத் தன்மை நிலவுவதை குழந்தைகள் உணரும் விதத்தில் குடும்பச் சூழலை உருவாக்கி தர வேண்டும்.

சின்ன விஷயங்களும் குழந்தைகளின் மனதில் பெரும் மாற்றங்களைத் தந்துவிடும்அந்த மாற்றம் நல்லதுகெட்டது என இரண்டு வகைகளிலும் அமைந்துவிடும்மேலே உள்ளவற்றை அவர்களின் உரிமைகள் என்பதாக நினைக்காமல் பெற்றோரின் கடமையாக நினைத்தாலே எந்தச் சிக்கலும் வராது.


Wednesday, 24 August 2016

எனக்கான விலையை இன்பாக்ஸில் சொல்லாதீர்கள்!- நெட்டிசன்களை தலை குனியவைத்த இளம்பெண்

பெண்ணை 14 வினாடிகள் உற்றுப்பார்ப்பது தொடர்பாக கேரள காவல்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு கேரள இளம் பெண் எழுத்தாளர் ஒருவர் தனது முகநுாலில் கருத்து தெரிவித்திருந்தார். நெட்டிசன்கள் இதற்கு மோசமான எதிர்வினையாற்ற, அதற்கு இந்த இளம்பெண் அளித்த துணிச்சலான பதில் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.


கொச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன் மாணவர்கள் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கேரள கலால் வரித்துறை ஆணையர், ரிஷிராஜ் சிங் பங்கேற்றார். நிகழ்ச்சியில் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது  வருத்தம் அளிப்பதாக கருத்து தெரிவித்த அவர், 'பெண்கள் பாதுகாக்கப்பட  வேண்டியவர்கள். ஒரு பெண்ணை வெறும் 14 விநாடிகள் ஒருவர் முறைத்துப் பார்த்தாலோ அல்லது உற்று நோக்கினாலோ அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறது. இப்படி ஒரு சட்டம் இருப்பதே நாட்டில் பலருக்கும் தெரியவில்லை. ஒருவர் தரக்குறைவாக பேசினாலோ அல்லது தகாத முறையில் நடந்தாலோ பெண்கள் பொறுத்துக் கொள்ளக் கூடாது. சம்பந்தப்பட்ட நபர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க பெண்கள் சரியான சட்ட நுணுக்கங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்'' என பேசினார்.

இது கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதும் சலசலப்பை உண்டுபண்ணியது. இந்த கருத்துக்கு ஆண்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. நெட்டிசன்கள்  ரிஷிராஜ் சிங்கின் கருத்துக்கு மீம்ஸ், அனல் தெறிக்கும் கண்டனம் என தங்கள் எதிர்ப்பை பல வழிகளிலும் தெரிவித்தனர்.
''ஒரு பெண்ணை 13 விநாடிகள் மட்டும் பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொள்கிறோம். பின்னர்  மீண்டும் 13 விநாடிகள் பார்க்கிறோம்.  அப்போ சட்டம் என்ன சொல்லுது' எனவும், 'ஆண்கள் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்திருந்தால் எப்படி கண்டுபிடிக்க முடியும்'' என்றும் அவரிடம் கேள்வி கேட்டுள்ளனர். ''அடுத்த முறை ஒரு பெண்ணிடம் பேசும்போது டைமர் வைத்துக் கொண்டு பேசுகிறேன். இல்லையென்றால், எனக்கு சிக்கல்கள் வரும்'' என இன்னொரு நெட்டிசன் ரிஷிராஜ் சிங்கை கலாய்த்தார். இப்படி கலால் வரித்துறை ஆணையரின் பேச்சு கேரளாவில் விவாதப் பொருளானதோடு அந்த வாரத்தில் வைரலானது.

இதனிடையே இந்த கருத்து தொடர்பாக கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த வனஜா வாசுதேவ் என்ற இளம் பெண் எழுத்தாளர், தனது முகநூலில் ஒரு கருத்தை பதிவு செய்தார்.

‘’ஆணும் பெண்ணும் எதிர்பாலினத்தவரை உற்றுப்பார்ப்பது சகஜமான ஒன்றே.. நான்கூட அழகால் கவரப்பட்டு ஆண்களை பார்த்து ரசித்திருக்கேன். ஒரு ஆண் ஒரு பெண்ணை உற்றுப்பார்ப்பது ஒன்றும் துன்புறுத்தலோ அல்லது வேறு எதுவோ அல்ல. உண்மையில் அப்படி ஒரு பார்வை பெண்களுக்கு தங்கள் மீது தன்னம்பிக்கையையே ஏற்படுத்தும்.’’ - இதுதான் அந்த பதிவின் சுருக்கம்.

கொஞ்ச நேரத்தில் கலாச்சார துாதுவர்களாக பல ஆண்கள் வனஜாவின் பதிவுக்கு எதிர்வினையாற்றத் துவங்கினார்கள். சீறிவந்தன கண்டனக்கணைகள். அந்த பதிவிற்கு வந்த கமெண்ட்கள் மட்டுமே 1100. அதில் வனஜாவை கொச்சையாக விமர்சித்துவந்த கமெண்ட்கள் பாதிக்கும்மேல்.

''நீயும் ஒரு பெண்ணா, கலாச்சாரத்தை சீரழிக்கிற ************என்ன? ' என மவுஸ் கூசும்படியான வார்த்தைகளால் அவரை அர்ச்சிக்க துவங்கினர். பலர் அவரது இன்பாக்ஸில் அவரது விலை என்னவென்று அருவருப்பான கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

எழுத்தாளர் என்பதால் இந்த பதிவுகளுக்கு அவர் ஆத்திரப்படாமல் நிதானமாகவே விரிவான பதிலை அவர்களுக்கு தந்தார் வனஜா தன் முகநுாலில்.



''5 வயதில் தந்தையை இழந்த என்னையும் என் சகோதரனையும் தாய் வறுமையுடன் போராடி காப்பாற்றினார். நாங்கள் பசியோடு கழித்த நாட்கள் ஏராளம்… காரணங்களின்றி பகலில் என் தாய் என்னை அடிப்பார். பின் இரவில் தலையை கோதிவிட்டு கண்ணீர் சிந்துவதும் வாடிக்கை. இளம் வயதில் கணவனை இழந்த அவரை வாட்டி வதைத்த தனிமையின் கொடுமையே அது என்று பின்னர் புரிய வந்தது. உறவினர்கள் நண்பர்கள் வட்டாரம் அந்த ஏழைத்தாயின் நடத்தையை கொச்சையான வார்த்தைகளால் பேசியது. இரத்த உறவினர்களும் கூட. பண்பான என் தாயாரின் நடத்தையை பற்றியும் கூச்சமே இல்லாமல் பல கதைகள் கட்டிவிட்டனர்.

அப்படிப்பட்ட சூழலிலே உழன்றுதான் பாலிடெக்னிக் முடித்தேன். கேரளாவில் பல நிறுவனங்களில் பணிபுரிந்தேன். கூடவே முதுநிலை பட்டப்படிப்பும் சிரமத்துடன் முடித்தேன்....கலாச்சாரத்தை நான் சீரழித்துவிட்டதாகக் கூறி என் அந்தரங்கத்தை கொச்சைப்படுத்தும் நீங்கள், என்னை *********கண்ணியம் பற்றியும் ஏன் பாடம் எடுக்கக்கூடாது.?

ஆம், நான் ஆண்களை ரசித்துப் பார்க்கிறேன். ஆனால் ஒரு ஆணை நான் பார்ப்பதாலேயே அவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் ஒதுங்கி அவர்களுக்கு ஒத்துழைக்கத் தயாராகிவிடுவேன் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளாதீர்கள்...வறுமையோடு போராடி குடும்பத்தை காப்பாற்றிய ஒரு விதவைத்தாயின் மகளான எனக்கு உங்கள் வசவுகள் எள்ளளவும் காயப்படுத்தாது. இந்த பதிவை பார்த்து என் பெண்மைக்கு நீங்களே ஒரு விலை நிர்ணயம் செய்ய உங்களுக்கு தைரியம் உள்ளதா? அப்படியே உங்களுக்கு தைரியம் இருந்தால் அதை வெளிப்படையாக கமெண்ட்டில் போடுங்கள். இன்பாக்சுக்குள் வந்து சொல்லாதீர்கள்…''

வனஜாவின் இந்த தெளிவான உருக்கமான பதில் அவரை காயப்படுத்தியவர்களை சிந்திக்கவைத்திருக்கிறது. அதன் எதிரொலியாக பலர் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளனர். அதேசமயம் சிலர் வசவுகளை தொடர்ந்தபடி உள்ளனர்.

வனஜாவின் இந்த பதிவு முகநுாலில் பதிவிடப்பட்ட அன்றே 2300 முறை பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  அதுமட்டுமின்றி தன்னை ஒழுக்கக்கேடான பெண்ணாக சித்திரித்தவர்களை கண்ணியமாக அதே நேரத்தில் சாட்டையடியான பதிலால் சிந்திக்கவைத்த வனஜாவின் பதிவை கேரளாவின் முன்னணி நடிகர்கள், பிரமுகர்களும் ஷேர் செய்து வைரலாக்கிக்கொண்டிருக்கின்றனர்.



Tuesday, 23 August 2016

கிரண்பேடியுடன் பிரச்னையா..?!’ புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விளக்கம்!



 கவர்னருடனான உறவு சுமூகமாகவே இருக்கின்றது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் எங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


நேற்று(21.08.2014) காலை ஜிப்மர் கல்லூரியின் மாரத்தான் போட்டி பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட கவர்னர் கிரண்பேடி, ”புதுச்சேரியில் நான் மேற்கொண்டுள்ள தூய்மைப் பணிக்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு தருவதில்லை. நான்கு வாரத்திற்குள் நான் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் புதுச்சேரியை விட்டு திரும்ப சென்றுவிடுவேன்”என்று ஆவேசமாக பேசியது புதுச்சேரி அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் முதல் அமைச்சர் நாராயணசாமியிடம் கவர்னரின் பேச்சு குறித்து கேட்டபோது, “கவர்னருடனான உறவு சுமூகமாக இருக்கின்றது. மேலும் அவர் அமைச்சர்கள் ஒத்துழைக்கவில்லை என்று கூறவில்லை. எங்களுக்குள் சிறு பிரச்னைகள், வேறுபாடுகள் எழுந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்வோம்.
புதுச்சேரி தூய்மையான நகரமாக இருக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. வளமான புதுச்சேரி உருவாகத்தான் அவர் பாடுபடுகிறார். நாங்கள் முன்னேற்றமடைந்த புதுச்சேரி உருவாகப்  பாடுபடுகிறோம். புதுச்சேரிக்கு தேவையான திட்டங்கள் அனைத்தும் நிறைவேற இருதரப்பினரும் இணைந்து செயல்படுவோம்.
அமைச்சரவைக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள், திட்டங்கள், துறைகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு குறித்து விவாதித்துள்ளோம்.


வருகின்ற வரும் 24-ம் தேதி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்றையதினம் காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையாற்றுவார். பின்னர் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், முதல்வர் பதிலுரைக்கு பின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும். திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசு வெளிப்படையான நிர்வாகத்தை தந்து வருகிறது. தொழில்வளர்ச்சி, உள்கட்டமைப்பு வசதி, வேலையில்லா திண்டாடத்தை போக்குவது,  புதிய தொழிற்சாலைகள், தரமான சுகாதாரம், கல்வி போன்றவை கிடைக்க பாடுபடுகிறோம்.
முந்தைய ஆட்சியில் நடந்த தவறுகளை கடந்த இரண்டரை மாத காலத்தில் ஒரளவு சரி செய்திருக்கிறோம். 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கும், சுற்றுலா ஊக்குவிப்பு போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
புதுச்சேரி வளர்ச்சி பெறுகின்ற மாநிலமாகவும் சட்டம் ஒழுங்கு சீராகவும், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் கணிணி சம்மந்தமான தொழிற்சாலைகள்,வேலைவாய்ப்பை உருவாக்க, என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்ற உள்ளோம். பேரவை கூட்டத் தொடரில் எம்.எல்.ஏக்கள் எழுப்பும் எந்த பிரச்னைக்கும் பதில் கூற தயாராக உள்ளோம்.


பட்ஜெட் கூட்டத்தொடர் சம்மந்தமாக துணைநிலை ஆளுநரை சந்தித்து பேசினோம்.  எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் ரங்கசாமி  தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு  காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

கிரண்பேடியுடன் பிரச்னையா..?!’ புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விளக்கம்!



 கவர்னருடனான உறவு சுமூகமாகவே இருக்கின்றது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் எங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


நேற்று(21.08.2014) காலை ஜிப்மர் கல்லூரியின் மாரத்தான் போட்டி பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட கவர்னர் கிரண்பேடி, ”புதுச்சேரியில் நான் மேற்கொண்டுள்ள தூய்மைப் பணிக்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு தருவதில்லை. நான்கு வாரத்திற்குள் நான் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் புதுச்சேரியை விட்டு திரும்ப சென்றுவிடுவேன்”என்று ஆவேசமாக பேசியது புதுச்சேரி அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் முதல் அமைச்சர் நாராயணசாமியிடம் கவர்னரின் பேச்சு குறித்து கேட்டபோது, “கவர்னருடனான உறவு சுமூகமாக இருக்கின்றது. மேலும் அவர் அமைச்சர்கள் ஒத்துழைக்கவில்லை என்று கூறவில்லை. எங்களுக்குள் சிறு பிரச்னைகள், வேறுபாடுகள் எழுந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்வோம்.
புதுச்சேரி தூய்மையான நகரமாக இருக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. வளமான புதுச்சேரி உருவாகத்தான் அவர் பாடுபடுகிறார். நாங்கள் முன்னேற்றமடைந்த புதுச்சேரி உருவாகப்  பாடுபடுகிறோம். புதுச்சேரிக்கு தேவையான திட்டங்கள் அனைத்தும் நிறைவேற இருதரப்பினரும் இணைந்து செயல்படுவோம்.
அமைச்சரவைக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள், திட்டங்கள், துறைகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு குறித்து விவாதித்துள்ளோம்.


வருகின்ற வரும் 24-ம் தேதி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்றையதினம் காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையாற்றுவார். பின்னர் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், முதல்வர் பதிலுரைக்கு பின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும். திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசு வெளிப்படையான நிர்வாகத்தை தந்து வருகிறது. தொழில்வளர்ச்சி, உள்கட்டமைப்பு வசதி, வேலையில்லா திண்டாடத்தை போக்குவது,  புதிய தொழிற்சாலைகள், தரமான சுகாதாரம், கல்வி போன்றவை கிடைக்க பாடுபடுகிறோம்.
முந்தைய ஆட்சியில் நடந்த தவறுகளை கடந்த இரண்டரை மாத காலத்தில் ஒரளவு சரி செய்திருக்கிறோம். 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கும், சுற்றுலா ஊக்குவிப்பு போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
புதுச்சேரி வளர்ச்சி பெறுகின்ற மாநிலமாகவும் சட்டம் ஒழுங்கு சீராகவும், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் கணிணி சம்மந்தமான தொழிற்சாலைகள்,வேலைவாய்ப்பை உருவாக்க, என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்ற உள்ளோம். பேரவை கூட்டத் தொடரில் எம்.எல்.ஏக்கள் எழுப்பும் எந்த பிரச்னைக்கும் பதில் கூற தயாராக உள்ளோம்.


பட்ஜெட் கூட்டத்தொடர் சம்மந்தமாக துணைநிலை ஆளுநரை சந்தித்து பேசினோம்.  எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் ரங்கசாமி  தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு  காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

பொண்டாட்டிடா’ டப்ஸ்மாஷ் பெண்ணைச் சந்தித்த ரஜினி!




'கபாலிடா..."  என்று 'கபாலி' டீஸரில்  ரஜினி பேசிய வசனத்தை உலகம் முழுக்க 3-கோடி மக்கள் பார்த்து ரசித்தனர். டப்ஸ்மாஷிலும்  வைரலடித்தது அந்த வசனம். பலரும் தங்கள் மேனேஜருக்கு, பாஸுக்கு, நண்பனுக்கு, எதிரிக்கு என்று டப்ஸ்மாஷ் கிளப்ப, தமிழில் ஒரு பெண்   'பொண்டாட்டிடா..'  என்று பேசி நெட்டில் பரவவிட்ட ஒரு டப்ஸ்மாஷ் டரியல் வைரலானது. தன் பார்வைக்கு வந்த அந்த வீடியோவை  ரஜினியும் பார்த்து ரசித்தார். அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய உடனே அந்த  பெண்ணை சந்திக்க ஆசைப்பட்டார். சோ விரும்பியதின் பேரில்  'கபாலி'  ப்ரிவ்யூ காட்சியில் கலந்து கொண்ட ரஜினியை, உடல்நிலையைக் காரணம் காட்டி மருத்துவர்கள் கடிந்து கொண்டனர்.  ஆகவே வெளியுலக சந்திப்பை தவிர்த்து வந்தார் ரஜினி.
நேற்று  'கபாலிடா' டயலாக் பேசிய அந்தப் பெண்ணை  நேரில் பார்க்க ஆசைப்பட்டார், ரஜினி. அதன்படி  திடீரென  அந்த பெண்ணுக்கு ரஜினி வீட்டிலிருந்து போன் வர, எதிர்முனையில் இருந்த பெண்ணுக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை. ரஜினியே லைனில் வந்து  நேரில் பார்க்க விரும்புவதாகச் சொல்ல ஆனந்தத்தில் திக்குமுக்காடி விட்டார்.  அதன்படி  சென்னை சேமியர்ஸ் சாலையில் இருக்கும்  தனுஷ் வீட்டில்  அந்த பெண்மணி ரஜினியை சந்தித்தார்.  ரஜினியை சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்ள லட்சம்பேர் போட்டி போட்டுக் கொண்டிருக்க ரஜினி ஆர்வமாக அந்த பெண்ணுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்
'கபாலிடா...' டயலாக்கை மாற்றி 'பொண்டாட்டிடா...' என்று பேசும் எண்ணம் எப்படி வந்தது.. இந்த டயலாக்கைக் கேட்டுவிட்டு உங்கள்  உறவினர், நண்பர்கள் என்ன சொன்னார்கள் என்று ஆர்வமாக கேட்டார், ரஜினி.  வைரல் வீடியோ டயலாக்கில் கணவர்கள் சமூகத்தை  கண்டபடி சகட்டுமேனிக்கு வெளுத்துக்கட்டிய அந்த பெண்மணி வெட்கத்தோடு தலைகுனிந்து ரஜினிக்கு பதில் சொன்னதை  பார்த்து ரஜினிமகள் ஐஸ்வர்யா ரசித்தார்.