Monetize Your Website or Blog

Showing posts with label சிறுதானியங்கள். Show all posts
Showing posts with label சிறுதானியங்கள். Show all posts

Tuesday, 23 August 2016

2016-ம் ஆண்டிற்கான டாய்லெட் டிசைன்களில் இதுதான் டாப்!

நாள் முழுக்க உழைத்திவிட்டு, வீட்டிற்குள் வந்தாலும் முதலில் நாம் நுழையும் இடம் பாத்ரூம்தான். அதிலும் வாஷ்ஃபேஷன் தான் நாம் தேடிச்செல்லும் இடம். அப்படிப்பட்ட இடத்தை அழகாகவும், தூய்மையாகவும், வித்தியாசமாகவும் வைத்துக் கொள்வதன்  மூலமாக வீட்டிற்குள் நுழைந்ததும்,அது  உங்கள்  MOOD -ஐ மாற்றும். 


இன்று பலரும் தங்களுடைய வீட்டை அலங்கரிக்கும்போது அதிக கவனத்துடனும் கலைநயத்துடனும் இருக்க வேண்டும் என நினைப்பது, முதலில் பெட்ரூம், அடுத்து ரெஸ்ட் ரூம்(பாத்ரூம்) தான். சுவர் டிசைன் முதல் கலர் மற்றும் அங்கு இருக்கும் டைல்ஸ் என பல ரசனைகளை இன்றைய இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள். தங்களுடைய கற்பனைத் திறனை வைத்து புது புது டிசைன்களை தங்களுக்கென செய்து கொள்கிறார்கள். எல்லாமே OUT OF THE BOX-தான். மார்க்கெட்டும் அதைப் பொருத்து மாறிவருகிறது. ஸ்டீம் ஷவர், ஷவர் பேனல், டைல்ஸ், வாஷ் பேஷன், பாத் டப் என 2016 -ல் ஐந்து வகையான  MOST WANTED டிசைன்களை பார்ப்போம்,


Sultry designs in washbasin வித்தியாசமான டிசைன்களில், விதவிதமான கலர்களிலும் இந்த  வகையான வாஷ் பேசின்கள் கிடைக்கும். என்னதான் டிசைன்களில் வெரைட்டி காண்பித்தாலும் வெண்மை நிறம் தான் அழகுக்  கூட்டும். அதிலும், பிளன்டேட் பைப்புடன் கூடிய வாஷ்பேஷன்களுக்கு எப்போதும் மவுசு அதிகம். சான்டல் கலர், அடர்த்தி பிரவுன் கலர் மற்றும் பல டஸ்கி கலர்களும்  பலருடைய சாய்ஸாக இருக்கிறது.
டாய்லெட்களில் வொய்ட் கலர் எப்போதும் கவனத்தை ஈர்க்கும். மேலும், வாஷ்பேஷன்களில் UV  லைட்கள் பயன்படுத்தும் போது நம்முடைய டென்ஷன் மூட் குறைகிறது. LED remote கண்ட்ரோல் கொடுக்கப்பட்டிருக்கும் பாத்ரூம் டிசைன்கள் பெரும்பாலும் டெம்பரேச்சர் போன்றவைகளைச் சரியாக வைத்திருக்க உதவுகிறது.




Wednesday, 22 June 2016

ராஜன் எக்ஸிட்: அரசுக்கு சாதகமான ஆர்.பி.ஐ கவர்னரை தேடுகிறதா மோடி அரசு?




ஆர்.பி.ஐ கவர்னர் பதவி,  இந்திய ரூபாய் நோட்டுகளில் கையொப்பமிடும் அளவுக்கு மிக உயர்ந்த பதவி. இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு இப்பதவியில் இருப்பவருக்கு உண்டு.
இதனை சிறப்பாக செய்து வரும் ஆர்.பி.ஐ கவர்னர் ரகுராம் ராஜனின் பதவிக் காலம் வருகிற செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் நிலையில்,  தனக்கு பதவி நீட்டிப்பு வேண்டாம் என்றும், மீண்டும் அப்பதவியில்  தொடரப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே பி.ஜே.பி தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, ரகுராம் ராஜன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து  சர்ச்சையை கிளப்பி வந்தார்.  சுவாமி முன்வைக்கும் குற்றச்சாட்டு என்ன? ரகுராம் ராஜன் தனது பதவி காலத்தில் என்ன செய்துள்ளார்? அவரது விலகல் முடிவுக்கு காரணம் என்ன? அடுத்த ஆர்.பி.ஐ கவர்னராக வர யாருக்கெல்லாம் வாய்ப்புள்ளது என்பதை பார்ப்போம்...

சுவாமி vs ராஜன்:


 சுப்ரமணியன் சுவாமி,  ரகுராம் ராஜன் மீது குற்றச்சாட்டுகளை  முன்வைத்து ஒரு கடிதத்தை பிரதமருக்கு எழுதினார். அதில், " ரகுராம் ராஜன் வட்டி விகிதத்தை உயர்த்தியதன் மூலம் சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு தீங்கு இழைத்துள்ளார். இதன் காரணமாக அவை அழிவதுடன், பல ஆயிரக்கணக்கான திறன் குறைந்த தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்படும். ரகசியமான, பிரச்னைகளுக்கு உரிய நிதி சம்பந்தப்பட்ட தகவல்களை, அவர் தனது சிகாகோ பல்கலைக்கழக இ-மெயில் முகவரி மூலம் பாதுகாப்பற்ற வகையில், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நபர்களுக்கு அனுப்பி வருகிறார்" என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். அதன்பிறகும் அவ்வப்போது பல குற்றச்சாட்டுக்களை கூறி,  ரகுராம் ராஜன் மீதான எதிர்ப்பலைகளை உருவாக்கினார் சுவாமி. அது மட்டுமின்றி வருகிற டிசம்பரில், ரகுராம் ராஜன் பற்றிய சர்ச்சை வெடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

என்ன செய்தார் ரகுராம் ராஜன் ?



ரகுராம் ராஜன் பதவியேற்றது செப்டம்பர் 4, 2013. அவர் பதவியேற்ற காலத்திலிருந்து இந்தியாவின் பணவீக்கம், மற்ற ஆர்.பி.ஐ கவர்னர்கள் காலத்தில் இல்லாத அளவுக்கு மிகச்சிறந்த நிலையை அடைந்தது. அதேபோல் வட்டிவிகிதத்தையும்  குறைந்த அளவிலேயே தொடர்ந்து வருகிறார். இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டுள்ளது. இதுவரை இருந்த ஆர்.பி.ஐ கவர்னர்களின் செயல்பாடுகளிலேயே ரகுராம் ராஜனின் செயல்பாடுதான் சிற‌ந்தது என்பதை இந்த புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.


ஆர்.பி.ஐ கவர்னர்பணவீக்கம் (%)வட்டி விகிதம் (%)ஜி.டி.பி (%)
எஸ். வெங்கடராமன் (1990-92)12.716.53.9
சி.ரெங்கராஜன் (1992-97)6.615.36.5
பிமல் ஜலான் (1997-03)4.712.55.7
வொய்.வி.ரெட்டி(2003-08)5.912.48.5
டி.சுப்பாராவ்(2008-13)7.310.26.9
ரகுராம் ராஜன்(2013-இதுவரை)1.99.97.1


பதவியில் நீடிக்க மறுப்பது ஏன்? 
அரசியல் காரணங்களால் ரகுராம் ராஜன் இரண்டாவது முறையாக  பதவியில் நீடிக்க விரும்பவில்லை எனக் கூறப்பட்டாலும், 'மோடிக்கு ரகுராம் ராஜன் போன்ற அறிவாளிகளை வைத்திருக்க பிடிக்காது'  என ராகுல்காந்தியும், 'பல ஊழல்களை மறைக்க ராஜனை கழற்றிவிடுகிற‌து பி.ஜே.பி'  என காங்கிரஸ் கட்சியும் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு சுவாமி தரப்பில், ' ராஜன் காங்கிரஸின் ஏஜென்ட். அவர் தொழில் முனைவோரை ஊக்குவிக்கவில்லை'  என பதில் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில்,  " எனக்கு இரண்டாவது முறையாக  ஆர்பிஐ கவர்னராக நீடிக்கும் எண்ணம் இல்லை. இதுநாள் வரையில் மிகவும் சரிந்து கிடந்த  இந்திய பொருளாதாரத்தை மேல் நோக்கிய வளர்ச்சிக்கு கொண்டு சென்றது மகிழ்ச்சியளிக்கிறது" என்ற செய்தியோடு தன்னை மையமாக வைத்து நடக்கும் இந்த மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ரகுராம் ராஜன்.



அடுத்த ஆர்.பி.ஐ கவர்னர் யார்?
இதனையடுத்து ரகுராம் ராஜன் இடத்தை பூர்த்தி செய்யும் அடுத்த நபர் யார்? என்ற கேள்வி எல்லோரது மனதிலும் எழுந்துள்ளது. 

உர்ஜித் படேல்

தற்போது ஆர்.பி.ஐ-யின் துணை கவர்னராக இருக்கும் இவர், பணவீக்க  குறைப்பு நடவடிக்கைகளில் நிபுணத்துவமிக்கவர். ஐ.எம்.எஃப் மற்றும் போஸ்டன் குழுமங்களில் பணியாற்றியுள்ளார். மோடியின் மதிப்புமிக்க நபர்களில் ஒருவர்.

அருந்ததி பட்டாச்சார்யா:
இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் தலைமைப் பதவியை ஏற்ற முதல் பெண் இவர்தான். பாரத  ஸ்டேட் வங்கியை நிர்வகிக்கும் இவர், ஆர்.பி.ஐ கவர்னர் பதவிக்கு பரிந்துரைக்கப்படுபவர்களில் முதன்மையானவர். எஸ்பிஐ-யின் ஐ.டி வளர்ச்சிகளில் இவரது பங்கு அளப்பரியது.

அரவிந்த் பனகரியா:


நிதித்துறை படிப்பில் டாக்டர் பட்டம் பெற்றவர்.  திட்டக்குழுவை மாற்றியமைத்து 'நிதி ஆயோக்' என்ற அமைப்பை ஆரம்பித்தபோது மோடியின் டாப் சாய்ஸ் இவர்தான். நிதி ஆயோக் தலைவரான இவர், ஆர்.பி.ஐ-யை  நிர்வகிக்கும் பட்டியலில் முன்னிற்கிறார்.

அர்விந்த் சுப்ரமணியன்:

தலைமை பொருளாதார ஆலோசகராக இருக்கும் இவர், மோடி பதவியேற்ற பிறகு இப்பதவிக்கு வந்தார். ராஜனை போலவே ஐ.எம்.எஃப் பில் முக்கிய பொறுப்புகளை வகித்த அரவிந்த் சுப்ரமணியன். ராஜனை போன்ற திறமையான நிர்வாகி. அருந்ததி பட்டாச்சார்யாவுக்கு பிறகு இவருக்குதான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூற‌ப்படுகிறது.


இது தவிர முன்னாள் ஆர்பிஐ துணை கவர்னரான ராகேஷ் மோகன், சுபிர் கோக் ரன், முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான அசோக் லாஹ்ரி, தேசிய பங்குச் சந்தையின் தலைவரான அசோக் சாவ்லா, பொருளாதார அறிஞரான விஜய் கேல்கர், பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலாளர் சக்திகாந்த தாஸ் ஆகியோரது பெயர்களும் பரிந்துரைக்கப்படுகின்றன.
டாப் லிஸ்டில் இருக்கும் அனைவருமே மோடி அரசால் விரும்பப்படும் நபர்கள். அவர்களது வருகையையே அரசு பெரிதும் விரும்புகிறது என்றும் கூற‌ப்படுகிறது. 'ராஜன் இடத்தை பூர்த்தி செய்வது கடினம்.  அரசின் ஆணைக்கு இணங்காமல் வளர்ச்சிக்கு எது தேவையோ அதனை செய்யும் விடாப்பிடியான ரகுராம் ராஜனின் செயல்களை அவருக்கு பின் வரும் இவர்கள் செய்வார்களா?'  என்ற கேள்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தான் விரும்பும் காரியங்களை சாதிப்பதற்காக மோடி அரசு, ரகுராம் ராஜனை கழற்றிவிடுகிறது என்றும் குற்றம்சாட்டுபவர்கள்,  அடுத்த  ஆர்.பி.ஐ கவர்னர், பி.ஜே.பி விசுவாசியாக இருக்க வேண்டும் என்பதே மோடி அரசின் திட்டம் என்கின்றனர்.

அடுத்த ஆர்.பி.ஐ கவர்னராக வரக்கூடிய நபர் அரசின் நல்ல விஷயங்களை ஆதரித்தும், அதேசமயம் அரசின் தவறான கோரிக்கைகளை நிராகரித்தும்,  தொழிற்துறை மற்றும் மக்களை கருத்தில் கொண்டும் தன் பணியை தொடர்ந்தால் இந்தியா, பொருளாதார ரீதியான வளர்ச்சியை அடையும்.




Tuesday, 14 June 2016

ராகியும் அதன் நண்பர்களும்...

ச்சைப் பசேலென்ற வயல்வெளி ஓரமாக ராகி நடந்து வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த வழியே நெல்லும் கோதுமையும் எதிரே வந்தன. ராகியை கண்ட நெல், 'அடேய், நீயெல்லாம் இன்னும் ஊரில் தான் இருக்கிறாயா? என்று சொல்லி ஏளனமாய்ச் சிரித்தது.

பொறுமையுடன் கடக்க முயலும் ராகிக்கு வழிவிடாமல் கேலியை இன்னும் தொடர்ந்தது நெல். "உன்னையெல்லாம் ஊர்ல ஒரு பய மதிக்கறது இல்ல, சுத்த வேஸ்ட்டுடா நீ" என்றது நெல்.  அதுவரை பொறுமை காத்த ராகி நெல்லைப் பார்த்து புன்னகைத்தபடியே சொன்னது, "இந்த ஊருக்கு நீயெல்லாம் வர்றதுக்கு முன்னாடியே வந்தவன் நான்".

"இருந்து என்ன பிரயோஜனம்? இதோ இவனைப் (கோதுமையைக் காட்டி) போல வலிமையா இருக்கியா .. இல்லை என்னைப் போல டேஸ்டான தானியமா இருக்கியா..சொல்லு என்றது.

"ஹலோ, உனக்கு என்னைப் பத்தி சரியா தெரியல ப்ரோ! அதான் இப்டியெல்லாம் பேசற... சொல்றேன் கேட்டுக்கோ... உங்க எல்லாரையும் விட என்கிட்டதான் அதிக புரோட்டின் சத்துக்கள் இருக்கு. அதுவும் இல்லாம மிக அதிக மினரல் சத்தும் எனக்குள்ளதான் இருக்கு.." 
கோதுமை அதிர்ச்சியாகி, "அட... அப்பறம்..." என ராகி சொல்வதை கேட்கத் தயாரானது


"நான் வலிமையா  இல்லாம இருக்கலாம் ப்ரோ, ஆனா என்னை சாப்பிட்டதால்தான் உங்க தாத்தா, பாட்டி எல்லாம் இன்னும் எனர்ஜிடிக்கா இருக்காங்க புரிஞ்சுக்க. என்னை சாப்டறவங்களுக்கு சர்க்கரை நோய் வராது. அதுமட்டும் இல்லாம.. நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கிற தன்மை என்கிட்டதான் அதிகமா இருக்கு. 

இப்போது கோதுமை ராகியின் பக்கம் வந்து நின்றது.. தன் பேச்சை ராகி தொடர்ந்தது. “என்னை தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். கெட்ட கொழுப்பு சேராம இருக்கறதால இதய நோய்கள் வராமலும் நான் தடுக்கறேன்”

"அதெல்லாம் சரி, இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, யாருக்கும் உன் டேஸ்ட் பிடிக்கலதானே” என தளர்ந்த குரலில் கேட்டது நெல்.

இப்போது, ராகிக்கு ஆதரவான குரல் கோதுமையிடமிருந்து வந்தது


"இல்ல மாம்ஸ்... நீ நினைக்கறது தப்பு. நிறைய குழந்தைகளுக்கு ராகில செஞ்ச 'லட்டு', 'குக்கி'கள் அப்பறம் 'ராகி பக்கோடா'லாம் ரொம்ப பிடிக்கும். அதுவுமில்லாம ராகியினால் உருவாக்கப்படும் Cereal வகை உணவு, உடலுக்கு ஆரோக்கியமானதுங்கூட. குட்டீஸ்கள் மட்டுமில்லாம வீட்ல இருக்கற பெரியவங்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கு இந்த Cereal. அதுமட்டுமில்லாம உன்னை, என்னை போல அதிக கவனம் எடுத்துக்கவேண்டிய  பயிர் இல்ல இவன்."

நெல் சோர்ந்துபோனது, ராகி மற்றும் கோதுமையின் பதில்களால். ராகியின் குணங்களைப் புரிந்துகொண்டது. “அப்ப இவன் சைல்டண்டா இருந்து சாதிக்கறவன்னு சொல்லு!”  என்று கூறியபடி ராகிக்கு பெரிய சல்யூட் ஒன்றை அடித்தது.  இப்போது ராகி முன்னே வர... நட்புடன் அதன் இரண்டு பக்கங்களிலும் நெல், கோதுமை தோளில் கை போட்டபடி நண்பர்களாக  தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்தன அந்த பாதையில்.  




Thursday, 26 May 2016

நிறைவான வருமானம் தரும் நிலக்கடலை! 50 சென்ட் நிலத்தில், ஒரு ஏக்கர் விளைச்சல்!

*ஆடிப் பட்டம் சிறந்தது. 

*மணல் கலந்த செம்மண், வண்டல் மண்,

*மணல் கலந்த வண்டல் மண் ஆகிய நிலங்களுக்கு ஏற்றது. 

*வறட்சியைத் தாங்கி வளரும்.

*அதிக நோய் எதிர்ப்புத்திறன் கொண்டது.

ண்ணெய் எடுப்பதற்காகவும், உணவுப் பண்டமாகவும் நிலக்கடலை அதிகம் பயன்படுகிறது. இதற்கான சந்தை வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால்தான் இறவையிலும், மானாவாரியிலும் அதிகளவில் பயிரிடுகிறார்கள். தென்மாவட்டங்களில் இறவையை விட மானாவாரியில்தான் அதிக பரப்பில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. இந்நிலையில் வறட்சியைத் தாங்கி வளரும் புதிய நிலக்கடலை ரகத்தை வெளியிட்டுள்ளது பாபா அணு ஆராய்ச்சி நிலையம். 

ஒரு ஏக்கர் பரப்பில் ஒட்டு ரகம் தரும் மகசூலை 50 சென்ட் நிலத்தில் இந்த ரகம் தருகிறது என்கிறார், விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூர் தாலூகா, வத்திராயிருப்பில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, டபிள்யூ. புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சுகேந்திரன். 


கடந்த ஆண்டு ஆடிப்பட்டத்தில் விதைத்து அறுவடை செய்திருந்த கடலை  வயலில், சில தப்புச் செடிகள் வளர்ந்திருந்தன. அவற்றிலிருந்து கடலைகளைப் பறித்தபடி நம்மிடம் பேசிய சுகேந்திரன்,
‘‘இதுதான் என்னோட பூர்வீக கிராமம். பாரம்பர்யமாவே விவசாயக் குடும்பம்தான். வழக்கமா நெல், பருத்தி, தென்னை விவசாயம் செய்வோம். காலேஜ்ல படிக்கும்போது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில கலந்துகிட்டேன். அதனால, காலேஜில டி.சியைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. அந்த நேரத்துல போலீஸ் வேலைக்கு ஆள் எடுத்தாங்க. நானும் அதுல கலந்துகிட்டு செலக்ட் ஆகிட்டேன். ஆனா, அந்த வேலை அப்பாவுக்குப் பிடிக்கலை. ‘போலீஸ் வேலையெல்லாம் வேண்டாம், ஒழுங்கா விவசாயத்தைப் பாரு...’னு சொல்லிட்டாரு. அப்பா பேச்சைத் தட்ட முடியாம, விவசாயத்துல இறங்கிட்டேன். 

அப்பா காலத்துல சாணம் போட்டு செய்யுற இயற்கை முறை விவசாயம்தான் நடந்துச்சு. பசுமைப் புரட்சிக்குப் பிறகுதான் எங்க நிலத்துலயும் ரசாயனத்தைக் கொட்டி மண்ணைப் பாழாக்கினோம். 

2003-ம் வருஷத்துக்குப் பிறகுதான் இயற்கை விவசாயம், நஞ்சில்லா விவசாயம்ங்கிற வார்த்தையையே கேள்விப்பட்டேன். நம்மாழ்வார் ஐயாவின் கருத்துக்களையும், அவர் வலியுறுத்திய இயற்கை விவசாயத்தைப் பற்றியும் தினசரிகளில் படிச்சேன். தொடர்ந்து, ‘பசுமை விகடன்’ இதழ் வெளிவரவும், இயற்கை விவசாயம் பற்றிய தெளிவான புரிதல் கிடைச்சது. 

‘ரசாயனம் உரம் போட்ட இடத்துல ஒரு மண்புழுவைக்கூடப் பார்க்க முடியாது’னு ஒரு கட்டுரையில் நம்மாழ்வார் அய்யா சொல்லியிருப்பார். என் தோட்டத்துலயும் மண்புழுவை நான் பார்த்ததே இல்லை. அப்போதான் அவர் சொன்னதை உணர்ந்தேன். அதுல இருந்து இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். இயற்கை விவசாயத்துக்கு மாறி பத்து வருசம் ஆகுது’’ என்று முன்கதை சொன்னவர், தனது இயற்கை விவசாய அனுபவங்களைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.
வழக்கத்தை விட கூடுதல் மகசூல்!

‘‘அப்பாவோட மறைவுக்குப் பிறகு அண்ணன் தம்பிகளுக்கு பாகம் பிரிச்சது போக எனக்கு ஆறு ஏக்கர் நிலம் கிடைச்சுது. அதுல, ரெண்டு ஏக்கர் நிலத்துல லக்னோ-49 ரக கொய்யாவை நட்டு இருக்கேன். அதுக்கு ரெண்டு வயசாகுது. மீதமுள்ள நாலு ஏக்கர் மானாவாரி நிலம். இதுல மொச்சை, உளுந்து, தட்டாம்பயறு (தட்டைப்பயறு)னு சீசனுக்கு ஏத்தமாதிரி போடுவேன். ஆனா, எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது. அதனால இப்போ நாலு வருசமா நிலக்கடலையை சாகுபடி செய்றேன். 

இது, மணல் கலந்த செம்மண் நிலம். ரெண்டு வருசத்துக்கு முன்னால ஒரு ஆங்கில செய்தித்தாள்ல, மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ‘டி.ஜி-37-ஏ’ ரக நிலக்கடலை வறட்சியைத் தாங்கி வளர்றதோட, அதிகமான மகசூலையும் தரும். மானாவாரி நிலத்துக்கு மிகவும் ஏற்ற ரகம். திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் சோதனைக்காக நடவு செய்யப்பட்டுள்ளதுனு ஒரு செய்தியைப் படிச்சேன். உடனே காந்திகிராம பல்கலைக்கழகத்துக்குப் போயி பத்து கிலோ விதைக்கடலை வாங்கிட்டு வந்து, பத்து சென்ட் நிலத்துல மானாவாரியாக விதைச்சேன். 110 கிலோ வரை மகசூல் கிடைச்சுது. அந்தக் கடலையை விதைக்காக சேமிச்சுவச்சு ஆடிப்பட்டத்துல விதைச்சேன். வழக்கமான ஒட்டு ரகத்தை விட கூடுதல் மகசூல் கிடைச்சது. மூணு ஏக்கர் இடத்துல ஒட்டு ரக கடலையும், 50 சென்ட் நிலத்துல அணு ஆராய்ச்சி மையத்தின் கடலையும் போட்டு அறுவடை செய்திருக்கேன்’’ என்று சிரித்துக்கொண்டே சொன்ன சுகேந்திரன், வருமானம் பற்றி சொல்லத் தொடங்கினார்.
ஒரு ஏக்கர் மகசூல் அரை ஏக்கரில் கிடைக்கும்!

‘‘ஒரு ஏக்கர் பரப்புல ஒட்டு ரக நிலக்கடலை சாகுபடி செஞ்சதுல 1,150 கிலோ கிடைச்சுது, ஆனா, அணு ஆராய்ச்சி மைய கடலை 50 சென்ட் பரப்புலயே 1,100 கிலோ மகசூல் கிடைச்சுது. ரெண்டு ரக கடலைக்குமே ஒரே விலைதான். கிலோ 30 ரூபாய்னு வியாபாரிகிட்டயே விற்பனை செய்திட்டேன். பருப்பா உடைச்சு வித்தா கூடுதலா லாபம் கிடைச்சிருக்கும். கிடைச்சது போதும்னு கடலையாவே வித்துட்டேன். கடலைச்செடிகளை நிலத்தில் அப்படியே காய விட்டு அடுத்த முறை விதைக்கும் போது அடியுரமாக மடக்கி உழுறதுக்காக போட்டிருக்கேன்.
ஒரு ஏக்கர், ஒட்டு ரக கடலை மூலமா 34,500 ரூபாய் வருமானம் கிடைச்சுது. இதுல செலவு போக, 14,900 ரூபாய் லாபமா கிடைச்சுது. அணு ஆராய்ச்சி மைய ரகத்துல, 50 சென்ட்ல 33,000 ரூபாய் வருமானமா கிடைச்சுது. இதுல செலவு போக 24,450 ரூபாய் லாபமா கிடைச்சுது. தண்ணீர் செலவே இல்லாம மானாவாரியா வெறும் 50 சென்ட் இடத்துல இது, நல்ல லாபம்தான்’’என்றவர் சந்தோஷத்தில் கை நிறைய கடலைகளை அள்ளிக் காட்டினார்.     


தொடர்புக்கு,
சுகேந்திரன்,
செல்போன்: 99940-65759.
இப்படித்தான் செய்யணும் சாகுபடி!

50 சென்ட் நிலத்தில் அணு ஆராய்ச்சி மைய ரகமான ‘டி.ஜி.37-ஏ‘ ரக நிலக்கடலையை மானாவாரியில் சாகுபடி செய்யும்விதம் குறித்து சுகேந்திரன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் பாடமாக இங்கே...

ஆடிப்பட்டம் ஏற்றது..! 

சித்திரை மாதம் கோடை உழவு செய்ய வேண்டும். அக்னி நட்சத்திர வெயிலில் உழவு செய்தால், மண்ணில் உள்ள பூச்சிகள், புழுக்கள், கூடுகள் வெயிலில் பட்டு சுருண்டு சாகும். உழவு செய்த பிறகு, ஆறு நாள் இடைவெளி விட்டு மீண்டும் உழவு செய்ய வேண்டும். இதேபோல, 6 நாள் இடைவெளியில் மொத்தம் நான்கு முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, ஆனி மாதம் ஒரு ஏக்கர் நிலத்துக்கு நான்கு டிராக்டர் மட்கிய குப்பையை சிதறி விட்டு ஓர் உழவு ஓட்டவேண்டும். அப்போதுதான் மண் பொலபொலப்பாக இருக்கும். அப்படி இருந்தால்தான் முளைப்புத் திறன் அதிகரிக்கும். ஆடி மாத தொடக்கத்தில் ஒரு மழை பெய்ததும் புல், களைகள் முளைத்து நிற்கும். களையை அழிப்பதற்காக, ஆடி மாதக் கடைசியில் ஓர் உழவு உழுதுவிட்டு, மீண்டும் ஒரு மழை பெய்ததும் ஒரு சால் ஓட்டி சாலில் விதைக் கடலையைப் போட வேண்டும். 50 சென்ட் நிலத்துக்கு 25 கிலோ (அணு ஆராய்ச்சி மைய ரகம்) விதைக் கடலை தேவைப்படும். ஆடி மாதக் கடைசியில் வெயில் தாக்கம் குறைவாக இருக்கும் என்பதால், முளைப்புத்திறன் நன்றாக இருக்கும். 

இரண்டு முறை களையெடுப்பு..! 

விதைத்த 8 முதல் 10 ம் நாளில் முளைப்பு தெரியும். 25 மற்றும் 35 ம் நாட்களில் களையெடுக்க வேண்டும். முதல் களை எடுக்கும் போது லேசாக மணலைச் சுரண்டி களை எடுக்க வேண்டும். இரண்டாவது களை எடுக்கும் போது நிலத்தை சற்று ஆழமாகக் கொத்தி மண்ணை பொலபொலப்பாக்கி வைக்க வேண்டும். 35 முதல் 40 நாளில் பூ பூத்து விடும். 40-ம் நாள், ஏற்கெனவே களை எடுக்கும் போது பொலபொலப்பாக்கி வைத்திருக்கும் மண்ணை செடியோடு அணைத்து விட வேண்டும். மண் அணைத்த பகுதியில்தான் கடலைச்செடி வேர்பிடித்து மண்ணில் இறங்கி வளரும்.
இரண்டு முறை இ.எம்..! 
மண் அணைத்தவுடன் 10 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி இ.எம் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். அதேபோல, 55-ம் நாளும் இ.எம் தெளிக்க வேண்டும். இயற்கை முறை விவசாயத்தில் நோய்த்தாக்குதல் ஏற்பட வாய்ப்பு குறைவு. இதைத் தவிர வேறெந்த பராமரிப்பும் செய்யத் தேவையில்லை. 100 முதல் 105 நாட்களுக்கு மேல்மட்ட இலைகளில் கரும்புள்ளி மற்றும் மஞ்சள் நிறம் தென்படும். அந்த நேரத்தில் சில செடிகளைப் பறித்து கடலைக் காய்களை உரித்தால், ஓட்டின் உட்புறம் பழுப்பு கலந்த கறுப்பு நிறத்தில் இருந்தால், அறுவடைக்கு தயார் ஆகிவிட்டது எனத் தெரிந்துகொள்ளலாம். 110 முதல் 120 நாட்களுக்குள் அறுவடை செய்யலாம்.’’

திரட்சியான காய்கள்!

‘டி.ஜி.-37-ஏ‘ ரக கடலைச்செடியின் வேர் மற்றும் தண்டு மிக தடிமனாகவும், நீளமாகவும் உள்ளது. தடிமனான தண்டுகளில் நீரைத் தேக்கி வைத்து வறட்சியைத் தாங்கி வளர்கிறது. இதன் அடிப்பரப்பில் கடலைகளும் திரட்சியாக கொத்தாக முளைத்துள்ளன. குறைவான மழைநீரில் நல்ல மகசூலை இந்த ரகம் தந்துள்ளதோடு அதிக நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொண்டதாக இருக்கிறது என்பது சுகேந்திரனின் அனுபவம்.
‘‘விதை நிலக்கடலை விற்பனைக்கு’’

பாபா அணு ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள டி.ஜி.,37  நிலக்கடலை ரகத்தை  தமிழ்நாட்டில் அறிமுகம் செய்த திண்டுக்கல் காந்திகிராம வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியதாவது, 

‘‘நீர் பற்றாக்குறையால் பணப்பயிராக இருந்த நிலக்கடலை நஷ்டபயிராக மாறியுள்ளது. புதிய ரகத்துக்கு நீர் தேவை குறைவு. மற்ற ரகங்களை போல், புதிய ரகத்தையும் 105 நாட்களில் அறுவடை செய்யலாம். நிலக்கடலை திரட்சியாக இருக்கும். எண்ணெய் தன்மை அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் ஆடி மற்றும் கார்த்திகைப் பட்டங்களில் சாகுபடி செய்யலாம். இதன் விதைகளை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்தோம். இப்போது விலைக்கு விற்பனை செய்கிறோம்’’ என்றார்.

தொடர்புக்கு, செல்போன்:  94425-42915.
“பாதிப்பு இல்லை!”

‘கதிரியக்க முறையில் உருவாக்கப்படும் விதைகளில் ஏதேனும் ஆபத்து உண்டா?’ என்று திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். வைத்தியநாதனிடம் கேட்டோம், அதற்கு “கதிரியக்க முறையில் உருவாக்கப்பட்ட ரகத்தால் பாதிப்பு ஏதும் இல்லை. விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல் கிடைக்க வேண்டுமென்பதற்காக  பாபா அணு ஆராய்ச்சி மையம் கதிரியக்க முறையில் சில வீரிய ஒட்டு ரகங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. 

எண்ணெய் வித்துக்களான நிலக்கடலையிலும் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையுடையது என தமிழ்நாட்டில் பரவலாக விவசாயிகள் இதைப் பயிரிடுகின்றனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கோ-6 மானாவாரி நிலத்துக்கும், கோ-7 மானாவாரி இறவையிலும் வரும். அதேபோல திண்டிவனம் TMV-6 மற்றும் 7 ஆகியவை மானாவாரிக்கும் இறவைக்கும் வரும். விருத்தாச்சலம் VRI-7 மானாவாரிக்கும், விருத்தாச்சலம்-6  மற்றும்  விருத்தாச்சலம்-8 மானாவாரி, இறவைக்கும் வரும். விருத்தாச்சலம்-8 வீரிய ஒட்டு ரக நிலக்கடலை. இந்த ரகம்தான் புதிதாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விருத்தாச்சலம்-8 ரகமும் வறட்சியைத் தாங்கி வளர்ந்து நல்ல மகசூலைத் தரக்கூடியது. 

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தபட்ட ரகங்கள் அனைத்தும் ஆடி, கார்த்திகை ஆகிய இரண்டு பட்டத்துக்கும் வரும். வேளாண் பல்கலைக்கழகத்தால் அறிமுகத் செய்த தேர்வு செய்யப்பட்ட ரகங்கள், கலப்பு செய்து உருவாக்கப்பட்ட ரகங்கள். இவற்றின் விளைச்சலோடு கதிரியக்க முறையில் உருவாக்கப்பட்ட ரகங்களின் விளைச்சலையும் ஒப்பிடக்கூடாது’ என்றார். 

தொடர்புக்கு, வைத்தியநாதன், செல்போன்: 94424-72103.
மருத்துவ பயன்கள்!

நிலக்கடலை, வேர்க்கடலை, கடலை, மணிலாகொட்டை (மல்லாட்டை ), மல்லாங்கொட்டை, கடலைக்காய் என இதற்கு பல பெயர்கள் உண்டு. பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புத்துளை நோய் வராது. தினமும் 30 கிராம் அளவுக்கு நிலக்கடலை சாப்பிட்டு வந்தால், பித்தப்பைக் கல் உருவாவதைத் தடுக்கலாம். 

நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இருப்பதால், இதய வால்வுகளைப் பாதுகாத்து இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. பெண்களின் இயல்பான ‘ஹார்மோன்‘ வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு ஏற்படுவதுடன், மார்பகக்கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பாதாம், பிஸ்தா, முந்திரியை விடவும் நிலக்கடலையில்தான் சத்துக்கள் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.    ஆனால், நிலக்கடலையை ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடக்கூடாது.


கடலை சாகுபடியில் கவனிக்க வேண்டியவை!

உலக அளவில் இந்தியா எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், நிலக்கடலை உற்பத்தியில் முதல் இடத்திலும் உள்ளது.    நிலக்கடலைக்கு ஊடுபயிராக தட்டைப்பயறு, கம்பு, உளுந்து, துவரை, சூரியகாந்தி ஏற்றது. இதனால் நோய்த்தாக்குதல் குறைவதுடன் உபரி வருமானமும் பெறலாம். அறுவடை நேரத்தில் தண்ணீர் தெளித்தால், கடலைச் செடியைப் பறிக்க சுலபமாக இருக்கும். மண்ணில் ஈரப்பதம் இருந்தால், தண்ணீர் தேவையில்லை. 

பறித்த செடிகளைக் குவியலாகப் போட்டு வைக்கக் கூடாது. ஈரமாக இருக்கும்போது செடி வளரத் தொடங்கும். அறுவடை செய்த கடலைக் காய்களை 4 முதல் 5 நாட்கள் வெயிலில் காய வைத்துத் தான் சேமித்து வைக்க வேண்டும். கடலை மீது ஈரப்பதம் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

இறவை சாகுபடியை விட மானாவாரி சாகுபடியில் அடியுரம் கூடுதலாகப் போட்டால்தான் வறட்சியைத் தாங்கி வளரும். செம்மண் நிலத்தைப் பொறுத்தவரையில் மண் இறுக்கம்தான் கடலையின் மகசூலைப் பாதிக்கிறது. எனவே, மண் இறுக்கம் போக்க, ஆழமான உழவு மற்றும் குறுக்கு உழவு அவசியம். மானாவாரியைப் பொறுத்தவரை மழை தாமதமாக பெய்தால்கூட கவலையில்லை. முளைத்து, பூத்த பிறகு மழை கிடைத்தால் போதும். காய்ச்சலுக்குப் பிறகான தண்ணீர் பாய்ச்சலும் நல்ல மகசூலைத் தரும்.




Wednesday, 18 May 2016

உணவே மருந்து; மருந்தே உணவு

ணவே மருந்து; மருந்தே உணவு’ என்பது, நமது நீண்ட நெடிய உணவுக் கலாசாரத்தின் சாரம். ஆனால் இன்று, 'உணவே நஞ்சு; நஞ்சே உணவு’ என்ற கொடும் காலத்துக்குள் வந்துசேர்ந்திருக்கிறோம். காய்கறிகள், தானியங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என ஒவ்வொன்றிலும் உள்ள நச்சுப்பொருட்களைப் பட்டியலிட்டால், ஒருவேளை உணவைக்கூட நாம் நிம்மதியாக உண்ண முடியாது. இவை எல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாத கேடுகள் என்றால், நாம் தெரிந்தே உணவில் செய்யும் தவறுகளும் அநேகம். அவற்றில் முக்கியமானது, உப்பும் சர்க்கரையும். சுவை நரம்புகளைச் சுண்டி இழுத்து மயக்கிடும் இந்த இரண்டும், உடலுக்கு அவசியமானவைதான். ஆனால், அது ஓர் அளவுக்குள் இருக்க வேண்டும். 


நம் உடலில் உள்ள செல்கள் திறனுடன் செயல்பட, சர்க்கரைச் சத்தும் உப்பில் உள்ள சோடியம் சத்தும் அவசியமானவை. ரத்தத்தில் தேவையான அளவு சோடியம் இருக்க வேண்டும். ரத்தத்தில் கலந்துள்ள நுண்தாதுக்களை செல்களுக்குள் எடுத்துச்செல்ல சோடியம் உதவுகிறது. இது காய்கறி, பழங்கள், கீரை, அரிசி, பருப்பு என அனைத்து உணவுகளிலும் இருக்கிறது; உப்பில் அதிகமாகவே இருக்கிறது.
அதேசமயம் ரத்தத்தில் சோடியத்தின் அளவு அதிகமானால், செல்களில் உள்ள நீர்ப்பொருளை வெளியே தள்ளி, நீரை ரத்தத்தில் கலக்கச்செய்கிறது. இதனால் ரத்தத்தின் அடர்த்தி அதிகமாகிறது. இது இதயத்துக்கு அலர்ச்சியை உருவாக்கி, மாரடைப்பை ஏற்படுத்துகிறது. இன்னொரு பக்கம், இதயத்தில் இருந்து தொலைவில் உள்ள கால்களுக்கு, ரத்தம் செல்லும் நேரம் அதிகமாகிறது. இதனால் பிராணவாயு பற்றாக்குறை ஏற்பட்டு, கால் மரத்துப்போகிறது. சிறுநீரகப் பாதிப்புகள், தசையின் நீண்டு சுருங்கும் தன்மை குறைந்து தசைப்பிடிப்பு ஏற்படுவது, தோல் வியாதிகள், நரம்புச் செயல்பாடுகள் பாதிப்பு போன்ற பல பிரச்னைகள் வரக்கூடும்.
உணவில், உப்பின் அவசியம் குறைவானதுதான். ஆனாலும் சுவைக்காக நாம் சிறுகச் சிறுகச் சேர்க்கும் உப்பு அதிகமாகி, ஒருகட்டத்தில் அது நோய்களைக் கொண்டுவருகிறது. அதேபோல 'அயோடின் உப்பு’ என தனியே விளம்பரப்படுத்தி விற்கிறார்கள். உண்மையில் நாம் அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களிலேயே அயோடின் கலந்து இருக்கிறது. அதை உப்புடன் சேர்த்துதான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. தைராய்டு பிரச்னைக்கு, அயோடின் சத்து குறைபாடு என்பதும் ஒரு காரணம். இதற்கு, உப்பு மட்டுமே காரணம் அல்ல; மன அழுத்தம், இரவுத் தூக்கம் இல்லாதது, சீரற்ற உணவுப்பழக்கம், சிறுநீரகக் கோளாறு, முறையற்ற மாதவிலக்கு போன்றவையும் முக்கியக் காரணங்கள்.
பொதுவாக நாம் உணவில் சேர்க்கும் கடல் உப்பு, கடல் நீரை ஆவியாக்கி அதில் இருந்து எடுக்கப்படுகிறது. இதில் சோடியம் குளோரைடு மற்றும் இயற்கையான நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்தே இருக்கின்றன. இன்னொன்று, பாறை உப்பு. இது உப்புப் பாறையை வெட்டி எடுப்பதன் மூலம் கிடைக்கிறது. இது மஞ்சள், ரோஸ், வெள்ளை ஆகிய நிறங்களில் கிடைக்கும். பொதுவாக, உப்பை தண்ணீரில் கரைத்து, மேற்பகுதியில் தெளிவாக உள்ள நீரை மட்டும் சமையலுக்குப் பயன்படுத்துவது நல்லது. குழந்தைப் பருவத்தில் இருந்தே உணவுப் பொருட்களில் குறைந்த அளவு உப்புக்குப் பழக்கலாம். வளர்ந்த சிறுவர்களாக இருந்தால், உப்பின் அளவைச் சிறுகச்சிறுகக் குறைக்கலாம். கிழங்குகளைச் சுட்டு உண்ணும்போது உப்பு தேவை இல்லை. காரணம், அவற்றில் இயற்கையாகவே உப்பு உள்ளது.
சர்க்கரையின் கதையும் இதேபோன்றுதான். சர்க்கரை நோயாளிகள் வீட்டுக்கு வீடு நிறைந்திருக்கும் காலம் இது. இவர்களைக் குறிவைத்தே வெவ்வேறு பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. இனிப்புச் சுவைக்காகச் சேர்க்கப்படும் சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி ஆகியவற்றில் மட்டும்தான் சர்க்கரை இருக்கிறது என்று இல்லை. பழங்கள், உலர் பழங்கள், காய்கறிகள், கிழங்கு வகைகள், தேன், பன்னீர் போன்றவற்றிலும் இனிப்பு கலந்திருக்கிறது. இவை அனைத்தும், இயற்கையாக உள்ள சர்க்கரைப் பொருளை நம் உடலுக்குத் தந்து ஆற்றலை அளிக்கக்கூடியவை. இந்த வகை இனிப்பு, மூளையின் செயல்பாட்டைச் சீராக்குகிறது; பிராணவாயு கிடைக்கச் செய்கிறது; மன இறுக்கத்தையும் உடல் சோர்வையும் போக்குகிறது.
ஆனால், நாம் பெரும்பாலும் வீடுகளில் பயன்படுத்தும் வெள்ளைச் சர்க்கரை, கரும்பில் இருந்து சாறு பிழிந்து, குளோரின் மூலம் பிளீச் செய்யப்பட்டு, 60-70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சூடாக்கி பாஸ்பாரிக் அமிலம் சேர்த்து அழுக்கு நீக்கப்படுகிறது. மீண்டும் 102 டிகிரி செல்சியஸுக்கு வெப்பம் உயர்த்தப்பட்டு, பாலி எலெக்ட்ரோரைட் கலந்து சுத்தப்படுத்தப்படுகிறது. அதுபோக சல்பர் டை ஆக்ஸைடு, சோடியம் பை சல்பேட் போன்ற வேதி உப்புகள் சேர்க்கப்பட்டு வெள்ளை ஆக்கப்படுகிறது. இந்த ரசாயனங்கள் அனைத்தும் உடலுக்குக் கேடு விளைவிப்பவை. குறிப்பாக ஜீரணக் கோளாறு, பசி எடுக்காமை, சத்து குறைபாடு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. இன்சுலின் வீரியம் குறைகிறது. நுரையீரல் கோளாறு, முடக்குவாதம் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. இதற்கு மாற்றாக வேதிப்பொருட்கள் கலக்காத நாட்டுச் சர்க்கரை, வெல்லம், அச்சு வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவற்றைப் பயன்படுத்தலாம். சுத்தமான தேனைப் பயன்படுத்துவதும் நல்லதே. தேனில் கலப்படத்தைக் கண்டறிய பல வழிகள் இருந்தாலும், நாவால் சுவைக்கும்போது அடிநாக்கில் தென்படும் சிறு துவர்ப்புச் சுவை, நல்ல தேனுக்கான அடையாளம்.


புளியைச் சுட்டும், உப்பை வறுத்தும், இனிப்பை ஒதுக்கியும் வாழ்வதுதான் ஆரோக்கியம் என, சித்தர் பாடல்கள் சொல்கின்றன. நாம் இனிப்புச் சாப்பிட வேண்டும் எனத் தோன்றுவது, நம் உடலில் நுண்ணூட்டப் பற்றாக்குறையை உணர்த்துகிறது. இனிப்பின் மூலம் அதை இலகுவாகப் பெற முடியும். இந்த இனிப்பு, இயற்கையானதாக அல்லாமல் வேதிப்பொருள் கலந்திருந்தால், அந்த இனிப்பை ஜீரணிக்க உடலில் உள்ள சத்துக்கள் வீணாகின்றன. சந்தையில் கிடைக்கும் கான்சிரப், லிக்விட் குளூக்கோஸ் போன்ற இனிப்பூட்டிகளில் அதிக அளவு மாவுச்சத்தும், வேதி உப்புகளும் கலந்திருக்கின்றன. ஸ்டிவியா (ஷிtமீஸ்வீணீ) எனப்படும் இனிப்புத் துளசி, வெள்ளைச் சர்க்கரையைக் காட்டிலும் 200 மடங்கு இனிப்புச் சுவை கெண்டது; பக்கவிளைவுகள் இல்லாதது. பொடியாக்கிப் பயன்படுத்தலாம். பராகுவே நாட்டை தாயகமாகக்கொண்ட இந்தச் செடி, தற்போது உலகின் பல நாடுகளில் பயிரிடப்படுக்கிறது. இதன் 50 கிராம் பொடி, 1 கிலோ சர்க்கரை இனிப்புக்குச் சமம்.
நம் வாழ்க்கைமுறை மாறிவிட்டது. யாருக்கும் நேரம் இல்லாமல் பரபரவென ஓடிக்கொண்டிருக்கிறோம். நல்ல உணவு, மகிழ்ச்சியான வாழ்க்கை இதற்காகத்தான் வேலை என்ற எண்ணமே நம் மனங்களில் இருந்து அகன்றுவிட்டது. உழைப்பு, வேலை, பணம், அதற்கான ஓட்டம் என மனம் நிறைய வேறு எண்ணங்கள் நிறைந்திருக்கும் நிலையில், உடல் எனும் உயிர் இயந்திரத்தை நாம் மறந்தேபோனோம். அதற்குக் கொடுக்கவேண்டிய முன்னுரிமையைத் தர நாம் தவறிவிட்டோம். அதனால்தான் இன்று இத்தனை வியாதிகள்.
இப்போதேனும் விழித்தெழுந்து, நம் உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்ள வேண்டும். நோய்நொடி இல்லாமல் வாழ்வது ஒன்றும் ராக்கெட் விடுவதைப்போல, விண்வெளிக்குச் செல்வதைப்போல கடினமான செயல் அல்ல. சில எளிய வாழ்க்கைமுறை மாற்றங்கள்தான் அதற்கான அடிப்படை. அந்த அடிப்படைக்கும் அடிப்படையாக இருப்பது உணவு. நாம் உண்ணும் ஒவ்வொரு கவளம் உணவையும் சத்துக்கள் நிறைந்ததாக, இயற்கைக்கு இசைவானதாக, நல்ல சோறாக உண்போம். நீண்ட நெடிய ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா!

இஞ்சி  தேன் பக்குவம்
தேவையான பொருட்கள்:
இஞ்சிச் சாறு - 2 பங்கு
தேன் - 2 பங்கு
கருமிளகு - 8
செய்முறை: நாட்டு இஞ்சியை, தோல் நீக்கி நறுக்கி, இடித்துப் பிழிந்து சாறு எடுக்கவும். கெட்டியான தேனை, தேவையான அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். மிளகை நீரில் போட்டால் மூழ்கும். எட்டு மிளகை எடுத்து, பசு மோரில்
24 மணி நேரம் ஊறவைத்து உலர்த்தி, பெரும் துகள்களாக நுணுக்கிக்கொள்ளவும்.
இஞ்சிச் சாற்றை, அதன் அடியில் படிந்திருக்கும் சுண்ணாம்புச்சத்துடன் தேன் கலந்து மிதமான தீயில் காய்ச்சவும். கலவை, தேன் பதத்துக்கு வரும் வரை கிளறிக்கொண்டே காய்ச்சவும். பதத்துக்கு வந்ததும், மிளகைச் சேர்த்து குளிரவிடவும். இதை, காற்றும் வெளிச்சமும் படாத ஜாடியில் பத்திரப்படுத்தவும்.
பயன்பாடு: வாந்தி, குமட்டல், பித்தத்தினால் வரும் கடும் தலைவலி, சூட்டினால் வரும் அஜீரணம், பசியின்மை, நாக்கில் சுவையின்மை போன்றவை குணமாகும். நன்கு சுவைத்து மென்று சாப்பிட வேண்டும்.
குதிரைவாலி உப்பு உருண்டை
தேவையான பொருட்கள்:
குதிரைவாலி அரிசி மாவு - 1 குவளை
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு, உளுந்து,
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
தேங்காய் (நறுக்கியது) - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை: சூடான எண்ணெயில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றைத் தாளித்து, தேங்காயைச் சேர்த்து வறுக்கவும். அதனுடன் குதிரைவாலி அரிசி மாவையும் சேர்த்து சூடாகும் வரை வறுக்கவும். மாவுடன் உப்பு கலந்த நீரைத் தெளித்து, பிசைந்து, உருட்டி ஆவியில் வேகவிட்டு விருப்பமான துவையலுடன் சாப்பிடலாம்!
பல தானிய அடை
தேவையான பொருட்கள்:
காராமணி (முளை கட்டியது)      - 1/2 குவளை
கறுப்பு உளுந்து (முளை கட்டியது) - 1/2 குவளை
பச்சைப் பயறு (முளை கட்டியது)  - 1/2 குவளை
தினை, வரகு, குதிரைவாலி,
பனிவரகு, சோளம், கம்பு, சாமை  - 2 குவளை
எண்ணெய்       - தேவைக்கு ஏற்ப
இஞ்சித் துருவல்       - 3 மே.கரண்டி
கொத்தமல்லித் தழை (நறுக்கியது) - ஒரு கைப்பிடி
தேங்காய்த் துருவல்       - 1/2 குவளை
காய்ந்த மிளகாய்       - 2
சீரகம்       - 2 தே.கரண்டி
மிளகு       - 2 தே.கரண்டி
உப்பு       - தேவைக்கு ஏற்ப
செய்முறை: காராமணி, உளுந்து, பச்சைப் பயறு ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும். தானியங்களை ஐந்து மணி நேரம் ஊறவைத்து, மிளகாய், சீரகம், மிளகு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். தவிரவும் இஞ்சி, தேங்காய், உப்பு, கொத்தமல்லி தழை ஆகியவற்றையும் கரகரப்பாக அரைத்து, மாவுடன் கலந்துகொள்ளவும். பிறகு, சூடான தோசைக்கல்லில் அடையாகத் தட்டி எண்ணெய்விட்டு வேகவிடவும். பொன்னிற அடைக்கு, நிலக்கடலைத் துவையல் நல்ல சுவைக் கூட்டணி!
தினை  எள்ளு மாவு
தேவையான பொருட்கள்:
தினை மாவு - 1 குவளை
எள் - 2 குவளை
கருப்பட்டித் தூள் - 2 குவளை


உப்பு - 2 சிட்டிகை
செய்முறை: எள்ளைக் கழுவி, கல் நீக்கி, வெயிலில் காயவைக்கவும். காய்ந்த எள்ளை, பொன்னிறமாக வறுத்து, கைகளால் தேய்த்து முறத்தால் புடைக்கவும். தினை மாவில் உப்பு சேர்த்து, நீர்விட்டுப் பிசைந்து கொழுக்கட்டையாக அவிக்கவும். எள்ளை உரலில் இடித்துப் பொடிக்கவும். பிறகு, அதனுடன் சூடான கொழுக்கட்டை மற்றும் கருப்பட்டித் தூள் சேர்த்து இடிக்கவும். மூன்றும் நன்கு கலந்து திரண்டு வரும்வரை இடிக்கவும் (மிக்ஸியிலும் அரைக்கலாம்). சுவையான, சத்து மிகுந்த உணவு இது!

Tuesday, 19 April 2016

மானாவாரியில் பனிவரகு...ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் சிறப்பான மகசூல்!

*வயது 75 நாட்கள்

*மானாவாரி நிலத்துக்கு ஏற்றது

*கோடையில் உழவு

*மார்கழியில் விதைப்பு

மானாவாரியாக விளைவிக்கப்படும் சிறுதானியங்களில் பனிவரகுக்கு முக்கிய இடமுண்டு. குளிர்காலங்களில் அதிகாலையில் பெய்யும் பனியிலேயே இது வளர்ந்து விடும். அதனால்தான், இதற்கு பனிவரகு என்று பெயர். இந்தப் பயிரை ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்திருக்கிறார், திருப்பூர் மாவட்டம், பெதப்பம்பட்டி அடுத்துள்ள கொங்கல்நகரம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் எஸ்.சின்னச்சாமி.


தொழுவத்தில் கட்டியிருந்த நாட்டு மாட்டுக்கு தீவனம் வைத்துக்கொண்டிருந்த சின்னச்சாமியைச் சந்தித்தோம். “இந்த ஊர்தான் பூர்விகம். இங்க மொத்தம் 12 ஏக்கர் நிலம் இருக்கு. தென்னை, வாழை, மா, நெல்னு சாகுபடி பண்றேன். எல்லாமே ரசாயன விவசாயம்தான். இயற்கை விவசாயத்துக்கு மாறணும்னு ஆசை இருந்தாலும்... வேலைக்குப் போய்க்கிட்டே விவசாயம் பார்த்துக்கிட்டு இருந்ததால் அதுக்கான சூழல் அமையலை. ஆனாலும், பசுமை விகடனைத் தொடர்ந்து படிச்சு, அதுல வர்ற இயற்கை விவசாயம் குறித்த  விஷயங்களை எழுதி வெச்சுக்குவேன். இப்ப, பணி ஓய்வு கிடைச்சிட்டதால இயற்கை விவசாயத்துல இறங்கிட்டேன். 

மொத வேலையா ஒரு  நாட்டு மாட்டை வாங்கினேன். இப்போதான் ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம், அமுதக்கரைசல்னு தயார் செய்துகிட்டு இருக்கேன்” என்ற சின்னச்சாமி தொடர்ந்தார்.
அரை ஏக்கரில் ஆரம்பம்!

“சோதனை அடிப்படையில அரை ஏக்கர்ல மட்டும் முழு இயற்கை விவசாய முறையில பனிவரகு சாகுபடி செய்திருக்கேன். இது மானாவாரி நிலம். இதுவரை இந்த நிலத்துல கையளவு கூட ரசாயன உரம் போட்டதில்லை. அதனாலதான் இந்த நிலத்தைத் தேர்வு செய்தேன். 

வழக்கமா மானாவாரி வெள்ளாமைன்னா, ஆடி மாசத்துல விதைப்பாங்க. ஆவணி மாசத்துல பெய்ற தூறல்ல பயிர் முளைக்கும். புரட்டாசி மாசம் களையெடுத்தா ஐப்பசி மழையில நல்லா வளர்ந்து வரும். தை மாசம் அறுவடைக்கு வந்துடும். ஆனா, இந்தப் பகுதியில கரிசல் மண் அதிகமா இருக்குறதால அடைமழை காலத்துல விவசாயம் செய்ய முடியாது. மழை நேரத்துல மண் புதைகுழி மாதிரி ஆயிடும். அதனால, மார்கழிப் பட்டத்துல பனிக்கடலை, பனி மல்லி, பனிவரகுனு மட்டும்தான் சாகுபடி செய்ய முடியும். இந்தப் பயிர்களுக்கு தண்ணீர் தேவைப்படாது. அதிகாலையில பெய்ற பனியிலேயே வளந்துடும். நான் சாகுபடி செய்ற பனிவரகு சிறுதானிய வகைப் பயிர். இதோட வயசு 75 நாள்தான். ஆனா, இறவையில பண்ணும்போதுதான் சரியான நாள்ல அறுவடைக்கு வரும். மானாவாரியா சாகுபடி செய்யும்போது 85 நாள் ஆயிடும். முன்னாடி இந்தப் பகுதியில அதிகமா பனிவரகு சாகுபடி நடக்கும். இப்போ அருகிப்போச்சு. நானே தேடிப்பிடிச்சுதான் விதைச்சிருக்கேன்.
விதை 4 கிலோ... விளைச்சல் 400 கிலோ!

ஒரு கிலோ 65 ரூபாய்னு 4 கிலோ விதை வாங்கிட்டு வந்து மார்கழி மாசம் ரெண்டாம் வாரத்துல விதைச்சேன். பொதுவா, பனிவரகு சாகுபடிக்கு கோடையில ஒரு உழவு போடணும். அடுத்து மார்கழி மாசம் தொழுவுரம் போட்டு ஒரு உழவு ஓட்டி விதைச்சு விட்டா போதும். தேவைப்பட்டா களையெடுக்கணும். அவ்வளவுதான்... தானா முளைச்சு வந்துடும். 

நான், கூடுதலா ஜீவாமிர்தம் மட்டும் கொடுத்தேன். அதனால விளைச்சல் அதிகமா கிடைச்சிருக்கு. வழக்கமா மானாவாரி சாகுபடியில் அரை ஏக்கர் நிலத்துல 250 கிலோ அளவுதான் மகசூல் கிடைக்கும். நான், 400 கிலோ அறுவடை செய்தேன். மொத்தம் 5 ஆயிரம் ரூபாய் செலவு செய்திருக்கேன். இப்போதைக்கு ஒரு கிலோ 40 ரூபாய்னு விற்பனையாகுது. நான், வீட்டு உபயோகத்துக்கு 200 கிலோ வெச்சுக்கிட்டு 200 கிலோவை மட்டும் விற்பனை செய்யலாம்னு இருக்கேன்” என்ற சின்னச்சாமி நிறைவாக, 

“சோதனை அடிப்படையில செய்து பார்த்ததுல நல்ல பலன் கிடைச்சிருக்கு. அடுத்து 12 ஏக்கர் நிலத்தையும் படிப்படியா ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு மாத்திடுவேன். அதில்லாம இந்தப் பகுதியில அழிஞ்சு போயிருக்கிற பனிவரகு சாகுபடியையும் மீட்டு எடுக்கப் போறேன். இன்னும் ரெண்டு வருஷத்துக்குள்ள குறைஞ்சது நூறு ஏக்கர்லயாவது பனிவரகு சாகுபடியைச் செழிக்க வெச்சிடுவேன்” என்றார் நம்பிக்கையுடன்.

இப்படித்தான் பனிவரகு சாகுபடி!

பனி வரகு, அனைத்து மண்ணிலும் வளரும். சாகுபடி நிலத்தை, புழுதி பறக்க மூன்று முறை கோடை உழவு செய்ய வேண்டும். கார்த்திகைப் பட்டத்தில் கிடைக்கும் மழையில் மண் ஈரத்தன்மையோடு இருக்கும். தொடர்ந்து மீண்டும் ஒரு முறை உழவு செய்து மண்ணைப் புரட்டிப் போட வேண்டும். அரை ஏக்கர் நிலத்துக்கு 4 கிலோ விதையை விதைத்து உழவு செய்ய வேண்டும்.வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. தேவையைப் பொறுத்து ஒரு களை எடுக்கலாம். மார்கழிப் பனியில் நன்றாக வளர்ந்து வந்து விடும்.

பெரும்பாலும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இருக்காது. இறவையில பனி வரகு சாகுபடி செய்யும் போது, இரண்டு அல்லது மூன்று முறை பாசனம் செய்யலாம். ஒவ்வொரு பாசனத்தின் போதும், 100 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும். கதிர் முற்றியதும் கதிரை மட்டும் அறுத்து களத்தில் கொட்டி காய வைத்து, குச்சியை வைத்து தட்டி, வரகை தனியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.
நெல்லுக்கு சொட்டுநீர்! 

தக்காளி, கத்திரி, மிளகாய் என்று 3 ஏக்கர் அளவில் காய்கறி சாகுபடியை சொட்டுநீர்ப் பாசனத்தில் மேற்கொண்டு வருகிறார், சின்னச்சாமி. காய்கறி அறுவடை முடிந்ததும் காய்ந்த செடிகளை அப்புறப்படுத்தி விட்டு, அந்த மேட்டுப்பாத்திகளில் நெல் விதைத்து சொட்டுநீர்ப் பாசனம் மூலமே விளைச்சல் எடுத்துள்ளார்.
இது குறித்துப் பேசிய சின்னச்சாமி, “தாராபுரம் பக்கத்துல கோவிந்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்தசாரதிங்கிறவர், தன்னோட வயல்ல சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சு நெல் விவசாயம் செஞ்சுக்கிட்டு வர்றார்னு தகவல் தெரிஞ்சுது. அவரோட வயலைப்போய் பார்த்து விவரம் தெரிஞ்சுக்கிட்டு வந்தேன். ஆறு, குளம், அணைப்பாசனம் கிடைக்கிறவங்கதான் நெல்லை விதைக்க முடியும்ங்கிறதை சொட்டுநீர்க் கருவிகள் வந்து மாத்திடுச்சு. என்னைப்போல கிணத்துப் பாசன விவசாயிங்களும் நெல் விதைக்கலாம்னு நிரூபணமாச்சு. விஞ்ஞானிகளும், முன்னோடி விவசாயிகளும், வேளாண் கல்லூரியில படிக்கிறவங்களும், டி.வி காரங்களும் வந்து பார்த்து பாராட்டிட்டுப் போறாங்க. 75 அடி நீள குழாயில் 45 சென்டி மீட்டருக்கு ஒரு துவாரம், 4 அடிக்கு 4 அடி அளவுல மேட்டுப்பாத்தி, அதுல அரை அடிக்கு ஒண்ணு வீதம் நேரடி நெல் விதைப்பு.

இந்த முறையில நெல்லுக்கு, வரப்பு, வாய்க்கால் எதுவும் தேவையில்லை. ஒரு நாளைக்கு ஒரு ஏக்கர் நெல்லுக்கு ஒரு மணிநேரம் மட்டும் பாசனம் செஞ்சா போதும். வழக்கமான நெல்லுக்கு பாயுற தண்ணியைக் கணக்குப் பண்ணினா  3 மடங்கு தண்ணீர் மிச்சமாகும். வழக்கமான முறையில ஏக்கருக்கு 30 கிலோ விதைநெல் தேவைப்படும். ஆனா, சொட்டுநீர்ப் பாசன நேரடி நெல் விதைப்புக்கு 2 கிலோ விதைநெல்லே போதுமானது.

இந்த போகம் முழுக்க முழுக்க ரசாயனத்துலதான் நெல் விவசாயம் செஞ்சிருந்தேன். கோ-51 ரகம், 110 நாள் வயசுல, ஏக்கருக்கு 3 ஆயிரத்து 180 கிலோ மகசூல் எடுத்திருக்கேன். இது மகிழ்ச்சிதான். இருந்தாலும், இயற்கை முறையில செய்யலையேனு ஒரு சிறு வருத்தம் மனசில இருக்கு. அடுத்த போக நெல் சாகுபடியை முழுக்க முழுக்க ஜீரோ பட்ஜெட்ல செய்யப்போறேன்” என்றார்.



தொடர்புக்கு,
எஸ்.சின்னச்சாமி,
செல்போன்: 99651-65963.

Monday, 21 March 2016

தங்கம் வென்ற 'தெருவோரத் தங்கம்'...! -பிரேசிலை அதிர வைத்த சென்னை சிறுமி

பிரேசிலில் நடந்த தெருவோரக் குழந்தைகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கம் உள்பட நான்கு பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஹெப்சிபா. ' இந்த வெற்றியை என்னைப் போன்ற தெருவொரக் குழந்தைகளுக்கு சமர்ப்பிக்கிறேன்' என்கிறார் உற்சாகத்தோடு. 

'ஸ்ட்ரீட் சைல்டு யுனைடெட்' என்ற லண்டனைச் சேர்ந்த நிறுவனம், பிரேசிலில் தெருவோரக் குழந்தைகளுக்கான மினி ஒலிம்பிக் போட்டியை நடத்தியது. உலகில் முதல்முதலாக நடத்தப்படும் இந்தப் போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், அர்ஜன்டினா, எகிப்து, மொசாம்பிக், பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த தெருவோரக் குழந்தைகள் பங்கேற்றனர். கடந்த 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடந்த ஸ்ட்ரீட் ஒலிம்பிக் போட்டியில்தான் ஹெப்சிபா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.



 
பிரேசில் போட்டிக்குச் செல்லும் கடைசி நிமிடம் வரையில் பாஸ்போர்ட் கிடைக்காமல் தவித்து வந்தார் ஹெப்சிபா. காரணம். தெளிவான முகவரி இல்லாததுதான். சென்னை, ரிப்பன் பில்டிங் பின்புறம் உள்ள அல்லிகுளத்தின் தெருவோர குடிசையில் நீண்டகாலம் இவரது குடும்பம் வசித்து வந்தது. இதன்பிறகு, ஆக்ரமிப்புகளை அப்புறப்படுத்துகிறோம் என்ற பெயரில், வீடற்ற விடுதியில் தங்கியிருந்தார் ஹெப்சிபா. இவரது தந்தை உடல்நலமில்லாமல் இறந்துவிட்டார். இவருடன் பிறந்தது நான்கு பெண்கள். இவர் கடைக்குட்டி. அம்மா ஆராயி பூ வியாபாரம் செய்து வருகிறார். பிரேசில் ஒலிம்பிக் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க மெடல், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலம், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலம் என நான்கு பதக்கங்களை அள்ளியிருக்கிறார் அல்லிகுளம் ஹெப்சிபா. 

அவரிடம் பேசினேன். " மொதல்ல எனக்கு பிரேசில் போக வாய்ப்பு கிடைக்குமான்னு சந்தேகமா இருந்துச்சு. அங்க போறதுக்கு பணமும் இல்லை. கருணாலயா அமைப்புக்காரங்கதான் உதவி செய்தாங்க. இப்ப டவுட்டன் கவர்மெண்ட் ஸ்கூல்ல பிளஸ் 1 படிச்சிட்டு இருக்கேன். பிரேசிலில் தெருவோரக் குழந்தைகளுக்கு போட்டி நடக்குதுன்னு எங்களைக் கூட்டிட்டுப் போறதுக்காக டெஸ்ட் மேட்ச் நடத்துனாங்க. அதுல நான் முதல் ஆளா வந்தேன். ஸ்கூல்ல நடக்கற போட்டிகள்ல பரிசு வாங்கியிருக்கேன். ஆனா, சர்வதேச அளவுல கலந்துக்குவோம்னு நினைக்கல. சென்னையில இருக்கும்போது காலை சாப்பாடுகிங்கறதே கிடையாது. அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு பூ விக்கறதால அவங்ககிட்ட எதுவும் கேக்க முடியாது. போட்டிக்குத் தயாராகும்போது முட்டை, சுண்டல்னு நிறைய கொடுத்தாங்க. அதனால நல்லா ஓட முடிஞ்சது. ஜெயிச்சா வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொன்னாங்க. எப்பவும் போலத்தான் ஓடினேன். நாலு பதக்கம் வாங்குவேன்னு நினைச்சு கூடப் பார்க்கலை சார்..." என்றார் கண்களில் உற்சாகத்தோடு.

இதேபோல், சிறுவயதிலேயே பெற்றோரின்  செயல்பாட்டால், வீட்டை விட்டு ஓடிவந்த தர்மபுரி, சுங்கரஹள்ளி பகுதியைச் சேர்ந்த அசோக் குண்டு எறிதலில் வெண்கலப்  பதக்கம் வாங்கியிருக்கிறார். " எங்க அப்பா பேர் சின்னத்தம்பி. எலக்ட்ரீசியனா இருந்தார். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் முழுநேர வேலையே சண்டை போடறதுதான். ஒருநாள் ஸ்கூலை விட்டு வீட்டுக்கு வந்தப்பே, ரெண்டு பேரும் இல்லை. சண்டை போட்டுட்டு ஊரைவிட்டு ஓடிப் போயிட்டாங்கன்னு சொன்னாங்க. சொந்தக்காரங்க கண்டுக்காததால, தர்மபுரி ரயில்வே ஸ்டேசன்ல நின்ன ரயில்ல ஏறிப் படுத்துட்டேன். சென்னைக்கு வந்ததும் எங்க போறதுன்னு தெரியாம அழுதுட்டு இருந்தேன். கருணாலயா தொண்டு நிறுவனத்துக்காரங்கதான் இப்ப வரைக்கும் சோறு போட்டு வளர்த்துட்டு இருக்காங்க. 2014-ம் வருஷம் தெருவோரக் குழந்தைகளுக்கான ஃபுட் பால் போட்டி பிரேசில்ல நடந்துச்சு. அந்தப் போட்டியில நேர்மை ஆட்டத்திற்கான பரிசை எனக்குக் கொடுத்தாங்க. இந்தமுறை குண்டு எறிதல் போட்டியில வெண்கலம் வாங்கியிருக்கேன். இது பத்தாது. அடுத்தமுறை இன்னும் நிறைய பதக்கங்களை வாங்கனும்" என்றார் நம்பிக்கையோடு. இவர்களைப் போல, ஃபாரெக்ஸ் ரோடு உஷா, சூளை சிலம்பரசன், பீச் ஸ்டேசன் சினேகா என மொத்தம் ஐந்து பேர் பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்றனர். மற்ற மூவருக்கும் பங்கேற்பு சான்றிதழை வழங்கியுள்ளது போட்டியை நடத்தும் நிறுவனம். 


பதக்கக் குவியலுக்குப் பின்னால் இருந்தவர் பால் சுந்தர் சிங். கருணாலயா என்ற அமைப்பின் நிர்வாகியாக இருக்கிறார். அவரிடம் பேசினேன். " ஐந்து சிறுவர்களுக்கும் பயணச் செலவாக தலா ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் ஆனது. நாங்கள் சிரமப்படுவதைப் பார்த்ததும் நான்கு பேருக்கான கட்டணச் செலவை ஒலிம்பிக் போட்டியை நடத்தும் லண்டன் அமைப்பே ஏற்றுக் கொண்டது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தப் போட்டியில் பங்கேற்பதே நமக்கான வெற்றிதான். ஏனென்றால், போதிய அளவில் பயிற்சியை மேற்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தச் சிறுவர்களுக்கு நேரு ஸ்டேடியத்தில் பயிற்சியெடுக்க அனுமதி கிடைத்தது மிக முக்கியமான விஷயம். ஹெப்சிபாவுக்கு பாஸ்போர்ட் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதை அறிந்து, வால்டர் தேவாரம் உதவினார். எல்லாவற்றையும் தாண்டி ஐந்து பதக்கங்களோடு சென்னை திரும்புவோம் என கனவிலும் நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. இந்தப் போட்டியில் அர்ஜண்டினா, எகிப்து, மொசாம்பிக், பாகிஸ்தான் உள்பட பல நாடுகளோடு போட்டி போட்டுக் கொண்டு நமது சிறுவர்கள் சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சாலையோரக் குழந்தைகள் வசிக்கின்றனர். அவர்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் தெருவோர ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. விரைவில் பதக்கங்களோடு சென்னை வருகிறோம்" என தம்ஸ்-அப் காட்டினார் பால் சுந்தர் சிங். 

வாருங்கள் தெருவோரத் தங்கங்களே....! 



Thursday, 17 March 2016

பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் இயற்கை உணவகங்கள்!

சென்னை வாசிகள் தங்கள் விருப்பமானவர்களோடு பொழுதை கழிக்க வேண்டுமானல் முதலில் தேர்ந்தெடுப்பது மெரினா கடற்கரையைதான். காலை வேளையில் உடற் பயிற்சி செய்பவர்கள், நடை பயிற்சி செய்பவர்கள்,  விளையாடுபவர்கள் என பலரின் ஆரோக்கியத்திலும் மெரினாவுக்கு பங்கு உண்டு.

மெரினாவில் நம் பாரம்பர்ய உணவுகளை விற்கும் உணவகத்தை தொடங்கி, அதன் செயல்பாட்டை இரட்டிப்பாக ஆக்கியுள்ளார் ‘தாய் வழி உணவகம்’ மகாலிங்கம்.
காலை வேளையில் விவேகானந்தர் மண்டபம் எதிர்புறம் உள்ள இவரது உணவகத்தில் சந்தித்தோம்.
பொதுவாக கடற்கரையில் எல்லாரும் பஜ்ஜி கடை, பாஸ்ட் ஃபுட் என ஆரம்பிக்கும் போது நீங்கள் இது போல் இயற்கை உணவகத்தை ஆரம்பிக்க என்ன காரணம்? என்ற கேள்வியோடு பேச துவங்கினோம், 

“நானும் இதே போல் செட்டிநாடு மற்றும் ஃபாஸ்ட் புட் எல்லாம்தான் முதல் விற்பனை செய்து கொண்டு இருந்தேன். பின்பு ஆன்மிகம் மேல் ஈடுபாடு அதிகமானது. அதற்கு பிறகும் இதே போல் ஆரோக்கியமற்ற உணவை விக்கிறதுக்கு மனசு வரல. அதான் நானும் என் நண்பர்களும் சேர்ந்து இந்த உணவகத்தை தொடங்கினோம்.  ஆரம்ப்த்தில முதியவர்கள் மட்டும்தான் சாப்பிட வந்தாங்க. மத்தவங்க எல்லாரும் கேலியாக பாத்துட்டு, கலாய்ச்சுட்டு சிரிச்சுட்டு போனங்க. இதே பீச்ல கடை வெச்சு இருக்குற மத்தவங்க எல்லாம் அச்சுறுத்த கூட செஞ்சாங்க. இருந்தாலும் நாங்க எங்க கொள்கையில இருந்து கீழ இறங்க கூடாதுனு கண்டிப்பாக இருந்தோம். அதுக்கு இப்போ நல்ல பலன் கிடைச்சுருக்கு” என பேசிக் கொண்ட இருக்கும்பொழுது கடையில் கூட்டம் அதிகரிக்க,  ‘ஒரு நிமிஷம்’ என சொல்லி விட்டு நகர்ந்தார்.
வேட்டி கட்டிய முதியவர்கள் முதல் ‘ஷார்ட்ஸ்’ அணிந்து இருக்கும் இளசுகள் வரை ரசித்து புசித்துக் கொண்டு இருந்தனர்.

நாமும் அவர் கொடுத்த பருத்தி பாலை பருகிய படி பேச்சை தொடர செய்தோம்.
“இந்த கடை ஆரம்பிச்சு இரண்டு வருஷம் ஆச்சு. முன்ன விட இது போன்ற இயற்கை உணவுகளோட முக்கியத்துவம் மக்களுக்கு தெரிஞ்சு இருக்கு. சுத்தியுள்ள எல்லாம் விஷமா மாறிட்டு வரும் இந்த வேளையில், இதுபோல் இயற்கை உணவுகள் கொஞ்சமாவது அதன் நஞ்சு தன்மையை குறைக்கும்னு மக்கள் நம்புறாங்க. அதேபோல் நாங்க பயன்படுத்துற எல்லா மூல பொருட்களும் இயற்கை முறையில் அறுவடை செய்யறதுதான். குதிரை வாலி, தூதுவளை சூப், பருத்தி பால், தேனில் ஊறப்போட்ட அத்திப்பழம், நெல்லிக்காய், மண தக்காளி என கிட்டதட்ட 20-க்கும் மேற்பட்ட உணவுகளை இரவு 2 மணி முதலே தயார் செய்து காலை 5 மணிக்கு எல்லாம் எடுத்துட்டு வந்துருவோம். காலை வேளைதான் இந்த உணவுகளை எல்லாம் உண்ண சரியான நேரம். அதே சமயம் விளையாடுறவங்களுக்கு தெம்பு சேர்க்கும் வகையில் இருக்கும்” என்ற படி மீண்டும் வியாபாரத்தை கவனிக்க கிளம்பினார்.
வியாபாரத்தையும் தாண்டி,  இந்த உணவுகளை சமைக்க குறிப்புகள் கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்புகளுடன் மூல பொருட்களையும் சேர்த்து தருகிறார். இதற்கு கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக தற்போது  சென்னையின் மேலும் சில இடங்களில் இத்தகைய கடைகளை தொடங்கி உள்ளார் மகாலிங்கம்.
இவரைப்போன்றே மேலும் பலரும் மக்கள் அதிகமாக கூடும்  பூங்காக்கள், நடைபயிற்சி மைதானங்கள் போன்றவற்றில் இத்தகைய இயற்கை உணவகங்களை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
தொலைந்த நம் பாரம்பர்யத்தை மீட்டு எடுக்க, இதுபோன்ற கடைகள் ஏராளமாக முளைக்க வேண்டும்.