Monetize Your Website or Blog

Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, 26 August 2016

ப்ளீஸ் ஹெல்ப்!' நில நடுக்க மணிப்பூரிலிருந்து இசையமைப்பாளர் ஜிப்ரான்


சென்னை 2 சிங்கப்பூர் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஜிப்ரான். படத்தின் தலைப்பிற்கு ஏற்றவாறு படத்தில் இருக்கும் ஆறு பாடல்களையும் காரில் பயணித்தவாறே வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள்.அதன்படி சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் இருக்கும் வங்காளதேசம், மியான்மர்,தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் காரில் பயணித்தவாறு பாடல்களை வெளியிட இருக்கிறார்கள்.



ஆகஸ்டு மாதம் ஆரம்பித்த பயணத்தில், தற்போது மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஜிப்ரான் குழு இருக்கிறது. கடந்த 23-ம் தேதி மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வுகள் தொடர்ந்து அங்கு இருப்பதால், மணிப்பூரில் சிக்கிக் கொண்டுள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

அது பற்றி ஜிப்ரான் தனது ஃபேஸ்புக் தளத்தில் வீதியில் நடந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது "மணிப்பூரில் நாங்கள் சிக்கிக்கொண்டோம்.மியான்மர் செல்வதற்கு நாங்கள் மோரே பார்டரை கடக்க வேண்டியுள்ளது.சில முறை அங்கு செல்ல முயன்ற போது, எங்களது பெர்மிட்டை ரத்து செய்துவிட்டதாக அறிவித்து இருக்கிறார்கள்.அங்கே நிகழ்ந்த நிலநடுக்கத்தில் , நிலச்சரிவுகள் ஏற்பட்டு இருக்கிறது.ஒவ்வொரு நாட்டிற்கும் காரில் செல்ல, கார்னெட் என்னும் பெர்மிட் அவசியம்.எங்களிடம் அந்த பெர்மிட் இருந்தாலும், மியான்மர் அரசு அதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்கள். சென்னைக்கு திரும்பி விடுங்கள் என பலர் அழைப்பு விடுக்கிறார்கள். ஆனால், அடுத்த பாடலான 'போகாதே'வை எப்படியும் வெளியிடும் திட்டத்தில் இருக்கிறோம். எவ்வளவு முயன்றாலும் செப்டம்பர் 2-ம் தேதி தான் மியான்மருக்குள் நுழைய அனுமதி கிடைக்கும் என்கிறார்கள். ஆனால், எங்களது விசா செப்டம்பர் 5-ம் தேதியுடன் முடிவடைகிறது. இன்னும் 3 நாட்களில் 1800 கிலோமீட்டர்களை நாங்கள் கடக்க வேண்டும். பல இடங்களில் உதவிகள் கேட்டு வருகிறோம். நாகாலாந்து பழங்குடியினருக்கும் , மியான்மர் ராணுவத்தினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.அதனால் , மோரே பார்டர் வழியாக மீண்டும் பயணிக்க முயற்சிக்காதீர்கள் என சொல்கிறார்கள்.ஒவ்வொரு நாட்டிற்குள்ளும், எங்கள் கார் நுழையும் போதும் பாடல் வெளியாகும் என உறுதியளித்துவிட்டோம். அதனால், இதை தொடரப் போகிறோம்.இங்குள்ள சூழ்நிலை மோசமானதாக இருக்கிறது.ஆனால், உதவிகள் கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார்




ரஜினி, கமலுக்கிடையே விஜயகாந்த் வல்லரசானது எப்படி?

விஜயகாந்திற்கு இன்று 65-வது பிறந்தநாள். சினிமா, அரசியல் என தனி மனிதனாக அவரது அசுர வளர்ச்சி எல்லோருக்கும் ஆச்சர்யமூட்டும் ஒன்று. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நாராயணனாகப் பிறந்த இவரை வீட்டில் எல்லாரும் விஜயராஜ் என்றே அழைத்துவந்தனர். சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு தனது அப்பாவின் அரிசி ஆலை நிர்வாகத்தைக் கவனித்து வந்தார். 'இனிக்கும் இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் 1978-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான இவருக்கு, அப்படத்தின் இயக்குநர் எம்.ஏ.காஜா வைத்த பெயர்தான் விஜயகாந்த்.


1980-ல் வெளியான 'தூரத்து இடி முழக்கம்' திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் விஜயகாந்த். ஆனால் ஓர் அதிரடி நாயகனாக விஜயகாந்த் அறியப்பட்டது 1981-ல் வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் இருந்துதான். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் முதல் படமான இது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி கண்டது. இதன் இந்திப் பதிப்பில் ரஜினிகாந்தும், தெலுங்குப் பதிப்பில் சிரஞ்சீவியும் நடித்தனர். விஜயகாந்த்-எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணி இணைந்து அதே ஆண்டில் 'சாதிக்கொரு நீதி', 'நெஞ்சிலே துணிவிருந்தால்', 'நீதி பிழைத்தது' என மூன்று திரைப்படங்களை வெளியிட்டது. ரஜினிகாந்திற்கு ஒரு எஸ்.பி.முத்துராமன் என்பதுபோல், விஜயகாந்திற்கு ஒரு எஸ்.ஏ.சந்திரசேகர் என்று சொல்லலாம். இவரது இயக்கத்தில் மட்டும் விஜயகாந்த் 17 படங்களில் நடித்திருக்கிறார். இதே போல் 'சிவப்பு மல்லி' தந்த வெற்றியால் ராம நாராயணன் இயக்கத்திலும் இவர் 17 படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் கதாநாயகனாக நடித்து 1984-ல் மொத்தம் 18 படங்களும், 1985-ல் 17 படங்களும் வெளியாகின. இன்றுவரை இது அசைக்க முடியாத சாதனையாக உள்ளது. தொடர்ந்து புரட்சிகரமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவந்ததால் 1985-ம் ஆண்டு முதல் அவருடைய ரசிகர்களால் 'புரட்சிக்கலைஞர்' என அழைக்கப்பட்டார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர் பின்நாட்களில் தமிழைத் தவிர வேறு எந்த மொழித் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. இத்தனைக்கும் இவரது படங்கள் சில தெலுங்கில் டப்பாகி ஆந்திர தேசத்தில் கணிசமான வெற்றியைப் பெற்றிருந்தன. அங்கிருந்து வாய்ப்புகள் வந்தபோதும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
ரஜினி-கமல் போட்டிக்கு நடுவே தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி வெற்றி கண்டவர் விஜயகாந்த். 'பி' மற்றும் 'சி' சென்டர்களில் விஜயகாந்த் படம் என்றாலே அது ஆக்ஷன் படமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. இவரது சண்டைக் காட்சிகளுக்கு ரசிகர்கள் பெருகியதாலோ என்னவோ... அதன்பின்பு பல திரைப்படங்களிலும் சண்டைக்காட்சிகளில்தான் விஜயகாந்தின் அறிமுகமே இருக்கும். சுவரில் கால்களை ஊன்றி எம்பிக்குதித்து எதிரிகளை தனது கால்களால் பந்தாடுவது இவரது ட்ரேட் மார்க்காகவே இருந்தது. கிராமங்களின் ஊர்த் திருவிழாக்களில் ரஜினி-கமல் படங்களைத் திரையிட பெரிய சண்டையே நடக்கும். அந்த நேரத்தில் விஜயகாந்த் திரைப்படம் எதாவது ஒன்றைத் திரையிட்டு கிராமத்தின் மொத்தக் கூட்டத்தையும் சண்டையின்றி உட்கார வைப்பது ஒரு ட்ரிக்காகவே பயன்பட்டு வந்தது. கிராமப்புறங்களில் 'ஜ' உச்சரிப்பு சரியாக வராததால் இன்றளவும் பலருக்கு அவர் விசயகாந்த் தான்.
புதுமுக இயக்குநர்கள் பலருக்கு வாய்ப்பளித்தது மட்டுமின்றி, திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரையும் இயக்குநராக அறிமுகப்படுத்திய பெருமையும் விஜயகாந்தையே சேரும். ஆபாவானன் - ஆர்.அரவிந்தராஜ் கூட்டணியில் 'ஊமை விழிகள்', 'உழவன் மகன்' போன்ற திரைப்படங்களும், ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் 'புலன் விசாரணை', 'கேப்டன் பிரபாகரன்' போன்ற வெற்றிப்படங்களை அளித்தவர் விஜயகாந்த். ஒருகாலத்தில் திரைப்படக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் நேராகக் கதை சொல்லும் இடமாக விஜயகாந்தின் அலுவலகம்தான் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்காமல் ஆக்ஷன் ஹீரோ ஆக முடியாது என்பது கோலிவுட்டில் எழுதப்படாத விதி. அந்த வகையில் போலீஸ், ராணுவம் என யூனிஃபார்ம் அணிந்து நியாயத்திற்காகப் போராடும் கதாபாத்திரத்தில் அதிகம் நடித்தவர் விஜயகாந்த் தான். இன்றும் போலீஸ் வேடமென்றால் தமிழ் ரசிகர்களின் மனதில் முதலில் வந்து நிற்பது விஜயகாந்தாகத்தான் இருக்கும். தனது 100-வது படமான 'கேப்டன் பிரபாகரன்' மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் 'கேப்டன்' ஆக ப்ரோமோசன் கிடைத்தது. ரஜினியின் 100-வது படமான 'ராகவேந்திரா', கமலின் 100-வது திரைப்படமான 'ராஜபார்வை' போன்ற திரைப்படங்கள் அனைத்தும் தோல்வி கண்டிருந்த நிலையில், அந்தக் காலகட்டத்தில் நடித்த நடிகர்களில் 100-வது படம் வெற்றிப்படமாக அமைந்ததும் இவருக்குத்தான். 'ஊமை விழிகள்', 'புலன் விசாரணை', 'செந்தூரப் பூவே', 'சத்ரியன்' போன்ற படங்களில், தனது நிஜ வயதைவிட அதிகமான வயதுடைய கதாபாத்திரங்களில் நடித்தார்.


க்ளைமாக்ஸ் காட்சியில் சூப்பர் ஹீரோ சாவதையெல்லாம் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றிருந்த காலகட்டத்திலேயே 'செந்தூரப் பூவே', 'வைதேகி காத்திருந்தாள்', 'ரமணா' மற்றும் பல திரைப்படங்களில் அப்படி நடித்து அந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிந்தார்.
நடிகர் சங்கத் தலைவர்:
சூப்பர்ஸ்டார், உலகநாயகன் உட்பட திரைப்படத் துறையினர் இன்றும் விஜயகாந்தை 'விஜி' என்றுதான் அழைப்பார்கள்.  1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை அவர் நடிகர் சங்கத் தலைவராகப் பதவி வகித்தார். அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அப்போது கடனில் இருந்த நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தது இவரின் நிர்வாகத் திறமைக்கு மிகப்பெரிய உதாரணம்.
அரசியல் அவதாரம்:
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என்று பெயர் சூட்டியவர் விஜயகாந்த். 2000-ம் ஆண்டில் தனது ரசிகர் மன்றத்திற்கென கொடியை அறிமுகப்படுத்தி பல படங்களில் அதைப் பயன்படுத்தவும் செய்தார். அரசியலுக்கு வருவேன் என சொன்னதோடு நிக்காமல் 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். தனது ரசிகர்மன்றக் கொடியையே கட்சிக் கொடியாகவும் அறிவித்தார். அடுத்து வந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தனி ஆளாகத் தன் கட்சியின் சார்பாக சட்டமன்றம் சென்றார். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 சட்டமன்றத் தொகுதிகளை வென்றது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக கம்பீரமாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் விஜயகாந்த்.
சினிமா, அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற்ற விஜயகாந்த் தனது முன்கோபத்தாலும், உள்ளதை உள்ளபடிப் பேசிவிடுவதாலும் இழந்தவை அதிகம். இதையெல்லாம் விட இன்று 'மீம்ஸ்' விஜயகாந்தாய் சித்தரிக்கப்படுவது காலத்தின் சோகமான நீட்சி.


ஆனாலும் அழுத்தமாகச் சொல்வோம்... பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன்! 


விஜயகாந்துக்கு கேக் ஊட்டிய வைகோ..! கலகலத்த பிறந்தநாள்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, விஜயகாந்துக்கு, வைகோ, திருமாவளவன் ஆகியோர் கேக் ஊட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்று 65வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் தேமுதிக நிர்வாகிகள் அன்னதானம், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், மக்கள் நலக்கூட்டணி தலைவர்களான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் இன்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்றார். பின்னர் விஜயகாந்துக்கு அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சால்வைகள் அணிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, திறந்தவெளியில் கட்சி வளாகத்தில் வைகோ, திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் முன்னிலையில் விஜயகாந்த் கேக் வெட்டினார். அப்போது, விஜயகாந்துக்கு வைகோ, திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் கேக் ஊட்டினர். பதிலுக்கு விஜயகாந்தும் அவர்களுக்கும் கேக் ஊட்டினார். மேலும், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷுக்கு திருமாவளவன் கேக் ஊட்டினார். பதிலுக்கு அவரும் கேக் ஊட்டினார்.


விஜயகாந்துக்கு மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் நேரில் வந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்ததால் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகம் கலகலப்புடன் காணப்பட்டது.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் நலக்கூட்டியக்கம் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் என்றும்,
மாவட்ட வாரியாக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகிறது என்றும் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்து தேமுதிகதான் முடிவு செய்ய வேண்டும். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு தமிழக முதல்வர் வர வேண்டும் என்றார்.



பச்சமுத்துவை விசாரித்தால் மதனை பிடித்துவிடலாம்..! - போத்ராவின் பகீர்!

மதன் ஓடிவிட்டாரா, ஒளித்து வைக்கப்பட்டு இருக்கிறாரா என்பது குறித்து பச்சமுத்துவிடம் விசாரணை செய்தால் உண்மை நிலவரம் தெரியும் என்று  ஃபைனான்ஷியர் போத்ரா கூறினார்.


ஏழாண்டுகளுக்கு முன்னாள் நடிகை ரோஜாவுக்கு பணம் கொடுத்து வழக்கு தொடுத்தவர் ஃபைனான்ஷியர் போத்ரா. அடுத்து இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு படம் தயாரிக்க பணம் கொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பச்சமுத்து பலகோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாக பகீர் புகார் கொடுத்துள்ள ஃபைனான்ஷியர் போத்ராவிடம் பேசினோம், ''நான் 25 ஆண்டுகளுக்கு முன்பே  பச்சமுத்துவுக்கு ஒரு லட்சம் பணம் கொடுத்தேன். மாதம் இருபதாயிரம் வீதம் ஐந்து மாதம் பணம் கட்டினார். அப்போது செக் மோசடி பிரச்னை வந்தபோது அவரது ஆடிட்டரை மாட்டிவிட, ஆடிட்டர் ஆறுமாசம் சிறைவாசம் அனுபவித்தார். அன்று ஆடிட்டர், இன்று மதன். எய்த பச்சமுத்துவை விட்டுவிட்டு, அம்பு மதனை போலீஸ் தேடி வருகிறது.
வேந்தர் ஃபிலிம்ஸ் மதனை காவல்துறை மாதக்கணக்கில் தேடி வருகிறது, இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மையில் மதன் வெறும் கருவிதான். அவரை முழுக்க முழுக்க இயக்கியது பச்சமுத்துதான். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு மதனை எனக்கு அறிமுகம் செய்தார் பச்சைமுத்து. 'மதன் என் மகன் போன்றவர். வேந்தர்டிவி, வேந்தர் ஃபிலிம்ஸ் இரண்டும் வெவ்வேறு அல்ல. மதன் ஒழுக்கமானவர். நேர்மையானவர்' என்று என்னிடம் மதனுக்கு சர்டிஃபிகேட் கொடுத்தார். பச்சமுத்து முன்னிலையிலேயே, வேந்தர் ஃபிலிம்ஸ் தயாரித்து வரும் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்துக்கு ஆறுகோடி ரூபாய் பணம் கொடுத்தேன். இதுவரை திருப்பித் தரவில்லை.


நான் மதனிடம் கொடுத்த பணத்தை அவர் பச்சமுத்துவிடம் கொடுத்து விட்டார். நான் பச்சமுத்துவிடம் போன் செய்து பணம் கேட்டேன். 'ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அமைக்கும்  அமராவதி நகரத்தில் ஒரு காலேஜ் கட்டப்போகிறேன். அதற்கு உங்கள் பணத்தை செலவு செய்துவிட்டேன். இப்போதைக்கு தர இயலாது' என்று சொல்லி விட்டார். அதன்பின் அவர் மீது பணம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். கடந்த 3 நாட்களாக வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி அடியாட்களை வைத்து கொலைமிரட்டல் விடுத்து வருகிறார்.
மதன் முழுக்க முழுக்க பச்சமுத்துவின் ஆள். இப்போது மதன் எங்கே இருக்கிறார் என்கிற உண்மை பச்சமுத்துவுக்கு மட்டுமே தெரியும். மதன் ஓடிவிட்டாரா, பச்சமுத்துவால் ஒளித்து வைக்கப்பட்டு இருக்கிறாரா அல்லது தலைமறைவாக இருக்கிறாரா, மாதக்கணக்கில் மதனை தேடிவரும் போலீஸ், ஒருமுறை பச்சமுத்துவிடம் விசாரணை செய்தால் மதன் ஒளிந்திருக்கும் உண்மை நிலவரம் புரியும். மதன் கிடைக்காவிட்டால், ஐந்து வருஷம் ஆகியும் ஆறு கோடி பணம் கொடுத்த எனக்கு என்ன பதில். பச்சமுத்துவின் கல்லூரியில் கோடிக்கணக்கில் பணம் கட்டியிருக்கும் 104 மாணவர்களின் கதி என்ன?" என்று பச்சமுத்து மீது பகீர் புகார் பட்டியல்களை அடுக்குகிறார்.
போத்ராவின் புகாருக்கு பச்சமுத்து பதில் அளித்தால்தான் உண்மை வெளியே தெரியவரும்.



கிருஷ்ணனும் என்னுடைய முப்பாட்டன்தான்...!' - சீமான்

சென்னை முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ' நம் இனத்தின் முப்பாட்டன் என்று கிருஷ்ணனைக் குறிப்பிடுகிறார் சீமான். அப்படியானால் முருகனைக் கைவிட்டுவிட்டாரா?' என சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன. 
' ஆயர் குலத் தலைவனே போற்றி; எங்கள் மூதாதை மாயோன் பெரும் புகழ் போற்றி' என கிருஷ்ணர் படத்துடன் சீமான் இருக்கும் சுவரொட்டிகளால்தான், இவ்வளவு விவாதமும். ' முல்லை நிலத்தையும் குறிஞ்சி நிலத்தையும் இணைத்து சுவரொட்டி அச்சடிப்பது சீமானால் மட்டும்தான் முடியும்' என சிலர் பதிவுகளுக்கு, நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் பதில் கொடுத்து வருகின்றனர். சீமானிடம் பேசினோம். 


கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து சொல்வதன் மூலம் எதை நிறுவ விரும்புகிறீர்கள்? 
"கிருஷ்ணருக்கு என்ன வாழ்த்துச் சொல்வது? அவரும் நம்முடைய மூதாதையர்தான். கண்ணன் என்ற பெயரே கிருஷ்ணராக மருவிவிட்டது. குறிஞ்சி நிலத் தலைவனாக முருகன் போற்றப்படுவது போல, முல்லை நிலத் தலைவனாக கண்ணன் போற்றப்படுகிறார். ' மாயோன் மேய காடுறை உலகு' என்று தொல்காப்பியம் போற்றுகிறது. மருத நிலத் தலைவனாக இந்திரனும் நெய்தல் நிலத் தலைவனாக வருணனும் பாலை நிலத் தலைவியாக கொற்றவையும் போற்றப்படுகிறார்கள். ஐந்து நிலங்களில் பரவி வாழ்ந்த மக்கள் நாம். குறிஞ்சி நிலத் தலைவனைப் போற்றுவது போலத்தான், முல்லை நிலத் தலைவனையும் போற்றுகிறோம்.
மால் என்றால் கருப்பு. அது மரியாதைக்காக திருமால் என்று அழைக்கப்படுகிறது. பெரிய கருப்பன் என்று நாம் சொல்வதை அவர்கள் பெருமாள் என்கிறார்கள். முல்லை நில மக்கள் ஆடு, மாடு வளர்ப்போடு வேளாண்மையை முக்கியத் தொழிலாகக் கொண்டவர்கள். மழைதான் அவர்களுக்கு அடிப்படையாக இருந்தது. எனவே, கருப்பு மேகத்தை மாயோன் என்று அழைத்தார்கள். இதில் கருப்பு என்பது கண்ணன் என்று மாறிவிட்டது. கண்ணன் என்ற பெயரே காலப் போக்கில் கிருஷ்ணராக மாறியது. 
ஆரிய பிராமணர்கள் இங்கு வரும்போது அவர்களுக்கு என எந்தக் கடவுளுமே இல்லை. இந்த நிலத்தில் இருந்துதான் அவர்களுக்கான கடவுள்களை எடுத்துக் கொண்டார்கள். விருமாண்டி படத்தைப் பற்றி தனியார் தொலைக்காட்சியில் பேசிய கமல்ஹாசன், ' தமிழ்க் கடவுள்கள் ஆரியமயமாக்கப்பட்டுவிட்டார்கள்' என்கிறார். அதுதான் உண்மை. சிவன் கைலாய நாதர் ஆனதும் கொற்றவை பார்வதி ஆனதும் முருகன் சிவனுக்கு மகன் ஆனதும் இப்படித்தான். 'மாயோன் பெருவிழா' என்ற பெயரில் செஞ்சியில் கடந்த ஆண்டு விழா நடத்தினோம். பண்பாட்டை மீட்கும் போராட்டங்களை முன்னெடுக்கும்போது, இந்தப் பாதையில்தான் பயணித்துத் தீர வேண்டியிருக்கிறது. தொல்குடி சமூகம் வணங்கிய தலைவனுக்கு நாங்கள் விழாவாகக் கொண்டாடுகிறோம். வழிவழியாக போற்றப்பட்டு வந்த ஒரு மரபைக் கொண்டாடாமல் இருந்தால்தான் தவறு. கிருஷ்ணர் என்று சமஸ்கிருதமாகப் பேசாமல், மாயோன் என்று தமிழில் சொல்லுங்கள். மாயாண்டி என்ற பெயர் மாயோன் என்ற வார்த்தையில் இருந்துதான் வருகிறது. நானும் மாயாண்டி குடும்பத்து மகன்தான். 






நம்முடைய முன்னோர்கள் முழுமையாக ஆய்வு செய்துவிட்டுத்தான் இதைக் குறிப்பிடுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சாதி சமூகத்திற்கானவர் அல்ல மாயோன். அப்படித்தான் நம்முடைய தொல்குடிகளால் போற்றப்பட்டு வந்திருக்கிறார். கிருஷ்ண ஜெயந்தியாக பார்க்காமல் மாயோனாகப் பார்க்கிறோம். திருமுருகப் பெருவிழா நடத்துவது போலவே, மாயோன் பெருவிழாவை நடத்தி வருகிறோம். இதன்பின்னர், இந்திரன் பெருவிழா, கொற்றவையைக் கொண்டாடுவோம் என வரிசையாக நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். கொற்றவையும் நம்முடைய பாட்டிதான். பாட்டி கொற்றவையையும் வேலுநாச்சியாரையும் மறந்துவிட்டு ஜான்சிராணியைப் பிடித்துக் கொண்டு சுற்றுகிறார்கள்.
திலகரைப் படித்துவிட்டு வ.உ.சியை மறந்துவிட்டோம். பண்பாட்டுத் தளத்திலும் தமிழனை மீட்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ' தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளிக்கப்பட வேண்டும்' என்று நான் சொன்னபோது, ' திருமலை நாயக்கரும் அதேநாளில்தான் பிறந்தார்' என்றார் ஜெயலலிதா. ' சரி... கொண்டாடிவிட்டுப் போங்கள்' என்று சொல்லிவிட்டோம். முருகன் நம் முப்பாட்டன் என்று நான் சொன்னபோது கேலி செய்தார்கள். அதுவே, ' கொஞ்சம் தேநீர் நிறைய வானம்' கவிதைத் தொகுதியில் முருகனை முப்பாட்டனாகச் சொல்கிறார் வைரமுத்து. அவரை யாரும் கேலி செய்யவில்லையே? எல்லாவற்றையும் வேண்டாம் என்று விட்டுவிட்டால் நான் யார் என்பதே தெரியாமல் போய்விடும். வேரை இழந்த மரமும் வரலாற்றை மறந்த இனமும் வாழாது என்பதுதான் எதார்த்தமான உண்மை" எனச் சீற்றத்தோடு முடித்தார் சீமான்.  



Thursday, 25 August 2016

'தர்மதுரை'யில் ராதிகாவை அவமானப்படுத்தவில்லை... சீனு ராமசாமி விளக்கம்!

மீபத்தில் ராதிகா நடித்த 'தர்மதுரை' திரைப்படத்தைப் பார்த்த சரத்குமார் கோபமானார். 'தமிழ் சினிமாவின் சீனியர் நடிகையான ராதிகாவுக்கு டைட்டில் கார்டில் உரிய மரியாதை தராமல் அவமானப்படுத்தி விட்டனர் 'என்று கொந்தளித்து இருக்கிறார், சரத்குமார். 'தர்மதுரை' படத்தின் இயக்குநரான சீனு ராமசாமியிடம் சரத்குமார் கோபம் குறித்து விளக்கம் கேட்டோம். 


''ராதிகா மேடத்தை நான் எந்தளவுக்கு மதிக்கிறேன் என்பதை 'தர்மதுரை' படத்தில் அவர் நடித்திருக்கும் கதாபாத்திரத்தை பார்த்தாலே புரியும். இந்தப்படம் அந்தம்மாவின் மரியாதையில் மணிமகுடம் சூட்டும். ராதிகா மேடத்தோடு பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய கனவு.
'தென்மேற்கு பருவக்காற்று' படத்துக்கு கதை எழுதிவிட்டு அம்மா கேரக்டரில் மேடம் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ராதிகா மேடத்தின் ராடன்டிவி ஆபீஸுக்கு ஒரு வருஷம் அலையாய் அலைந்தேன்.  அவரை என்னால்  பார்க்கமுடியாமலே போய்விட்டது.  அதன்பின் 'தென்மேற்கு பருவக்காற்று' ரிலீஸாகி சரண்யாவுக்கு தேசீயவிருது கிடைத்தது. அப்போது ஒருமுறை ராதிகா மேடத்தை சந்தித்தேன். 'மேடம் சரண்யா நடிச்ச கேரக்டர்ல நீங்க நடிக்க வேண்டியது. உங்களைத்தேடி ராடன்டிவி ஆபீஸுக்கு வந்தேன் பார்க்க முடியலை' என்கிற தகவலை சொன்னேன். 
'தர்மதுரை' படத்துக்காக 25-நாட்கள் அவுட்டோர் ஷுட்டிங்கில் மேடம் கலந்து கொண்டார். அப்போது ஐந்து நாட்கள் மட்டுமே அவர்கள் நடிக்கும்காட்சிகளை படமாக்கினேன்.  அதன்பின் சென்னைக்கு அனுப்பி விடுவேன். அப்புறம் இடைவெளிவிட்டு ஐந்து ஐந்து நாட்களாகத்தன் படம்பிடித்தேன். ஏனென்றால் அவர்கள் ஒரு  இல்லத்து அரசி ராடன்டிவி தயாரிப்பு நிறுவனத்தின் தலைவி என்கிற நிலைகளை எல்லாம் உணர்ந்துதான் அவர்களுக்கு உரிய மாரியாதையை படப்பிடிப்பில் கொடுத்தேன்.


என்னுடைய உதவி டைரக்டர்களிடம் சீனியர் நடிகரான ராஜேஷ் பெயருடன் ராதிகா மேடத்தின் பெயரை போடச் சொன்னேன்.  தனித்து டைட்டில் கார்ட்யில் போட்டு இருக்க வேண்டும் என்பது சரத்சாரின் விருப்பம் முன்பே சொல்லி இருந்தால் செய்து இருப்போம்.  நானே ராதிகா மேடத்துக்கு ' இது இப்போ பேச வேண்டிய விஷயமே கிடையாது. ஏதோ கவனக்குறைவால் நடந்துவிட்ட ஒன்று. சரத்சார் இப்படி கருத்து தெரிவித்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று மெசேஜ் அனுப்பினேன்" என்று  தனது தரப்பைச் சொன்னார்.

Wednesday, 24 August 2016

போட்டி அ.தி.மு.க..! மதுரை எம்.ஜி.ஆர். ரவுசு

திமுகவில் என்ன நடக்கிறது...கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில், பழுத்த அனுபவசாலி கருணாநிதியையே பெருமூச்சுவிடவைப்பவர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா...ஆனால் அதெல்லாம் நேற்றுவரை. அவரால் அடையாளம் காணப்பட்ட ஒரு பெண் எம்.பி, நாடாளுமன்றத்தில் நடுமையத்தில் நின்று அவருக்கு எதிராக கோலை சுழற்றுகிறார். பரபரப்பான இந்த  அரசியல் படத்தின் இடைவேளை விடுவதற்கு முன்பே அடுத்த பரபரப்பு கிளம்பியுள்ளது.



எம்.ஜி.ஆர் அபிமானிகளை ஜெயலலிதா புறக்கணிப்பதாகக் கூறி அதிமுகவுக்கு எதிராக புதிய கட்சி ஒன்றை துவக்கியிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த அரசியல் புள்ளி ஒருவர். எம்.ஜி.ஆர் போன்ற தோற்றம் கொண்டவரான சக்ரவர்த்தி, எம்.ஜி.ஆர் அபிமானிகளுக்கு நன்கு அறிமுகமானவர். சக்ரவர்த்தி திருமகன் என்ற எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்பில், தானே கதாநாயகனாக நடித்து திரைப்படம் வெளியிட்டிருக்கிறார். மற்றுமொரு படத்தின் தயாரிப்பு பணியில் இருக்கிறார். இந்த இடைவேளையில்தான் புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கடந்த 6 ம்தேதி அழைப்பிதழ் போட்டு புதிய கட்சியை மதுரையில் துவக்கியிருக்கிறார்.

போட்டி சட்டமன்றத்தை நடத்தியதற்கே திமுக எம்.எல்.ஏக்கள் படாதபாடு பட்டுவரும் நிலையில் கட்சிக்குள் இருந்தபடியே போட்டி கட்சியை துவக்கியிருக்கும் சக்ரவர்த்தியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். சிரீயஷாகவே பதிலளிக்கிறார் மனிதர்.

கட்சியை துவக்கவேண்டிய நிர்பந்தம் ஏன் உங்களுக்கு...

எம்.ஜி.ஆர் அதிமுகவை துவக்கியபோது பட்ட கஸ்டங்கள், அவமானங்கள், இழந்த உயிர்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. அதிமுக என்ற கட்சியின் அடித்தளமே ரசிகர்கள்தான். அத்தனை கஸ்டங்களுக்கு இடையில் உருவான  கட்சி, இன்று முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் சொத்தாக மாறிவிட்டது. ஜெயலலிதாவை தெரிந்திருப்பவர்களைவிட , மன்னார்குடியைச் சேர்ந்த அந்த குடும்பத்து மனிதர்களை தெரிந்திருந்தால் மட்டுமே கட்சியில் மதிப்பும் பொறுப்பும் என்றாகிவிட்டது.

மதுரையில் அந்த கட்சியினர் சாதி அரசியலைதான் நடத்திவருகின்றனர். எம்.ஜி.ஆர் எந்த நோக்கத்திற்காக இந்த கட்சியை உருவாக்கினாரோ அந்த நோக்கம் சிதைக்கப்பட்டுவிட்டது. எம்.ஜி.ஆர் அபிமானிகள் முற்றாக புறக்கணிக்கப்படுகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். இதுவரை எனக்கு ஒரு வட்டச்செயலாளர் பொறுப்பைக் கூட அதிமுக வழங்கவில்லை. இதுதான் எம்.ஜி.ஆர் அபிமானிகளுக்கு கட்சியில் உள்ள மரியாதை. அதனால்தான் என்னைப்போன்றவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் கட்சியை துவக்கினேன்.

அப்படியானால் கட்சியில் பொறுப்பு வழங்கப்படாத  தனிப்பட்ட காரணத்தினால்தான் கட்சி துவக்கியிருக்கிறீர்களா...

தவறு... என்னை ஒரு உதாரணத்திற்காக சொன்னேன். என்னைப்போல் லட்சக்கணக்கான பேர் புறக்கணிக்கப்பட்டு, பெயருக்கு அந்த கட்சியில் அவமானங்களை சந்தித்துக்கொண்டு தொடர்கிறார்கள். எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தேர்தலுக்காக கருவேப்பிலை போல் பயன்படுத்தப்பட்டு பின்னர் துாக்கியெறியப்படுகிறார்கள். இதுதொடர்ந்ததே கட்சி துவக்க காரணம்.

இத்தனை வருடம் கட்சியில் இருந்தும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்பது நம்புகிற மாதிரி இல்லையே, என்ன காரணம்...

நான் எம்.ஜி.ஆர் உருவத்தில் இருப்பதுதான். பலர் செயற்கையாக எம்.ஜி.ஆர் போல் வேடமிட்டு தோற்றம் அளிப்பார்கள். எனக்கு இயல்பாகவே அந்த தோற்றம் உண்டு. இதனால் பொது இடங்களிலும் கட்சிப் பொதுக் கூட்டங்களிலும் எம்.ஜி.ஆர் அபிமானிகள் என்னை சூழந்துகொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்வர். இது உள்ளுர் தலைவர்களுக்கு ஒருவித எரிச்சலையும் பொறாமையையும் ஏற்படுத்திவிட்டது. இந்த 30 வருடங்களில் மதுரையில் பல பொதுக்கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். எந்த எதிர்பார்ப்புகளுமின்றி கட்சிக்காக உழைத்திருக்கிறேன். ஆனால் எம்.ஜி.ஆர் போல் தோற்றமளிப்பதால் பொறுப்புகளை வழங்கினால் எங்கே இவன் வளர்ந்துவிடுவானோ என திட்டமிட்டு என்னை புறக்கணிக்கின்றனர்.

சக்ரவர்த்தி திருமகன் என்ற பெயரில் நான் எடுத்தை படத்தை ட்ரெய்லருக்காக கட்சியின் தொலைக்காட்சிக்கு கொடுத்தேன். இன்று வரை அது ஒளிபரப்பாகவில்லை. வேறு ஒருவர் மூலம் காரணம் கேட்டபோது அவர் முகம் எம்.ஜி.ஆர் போல இருப்பதால் நிறுத்திவைக்கச் சொல்லியிருப்பதாக சொல்லியிருக்கின்றனர். இதுதான் எம்.ஜி.ஆரை பின்பற்றிவந்த எங்களைப்போன்றவர்களின் நிலை. எம்.ஜி.ஆர் புகழை குறைப்பதுதான் அதிமுக மற்றும் அதன் பொதுச்செயலாளரின் நோக்கம்.
எம்.ஜி.ஆர் அபிமானிகள் புறக்கணிக்கப்படுவதைவிட எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி அவரது புகழை மறைப்பதுதான் எங்களை பெரும் வேதனைக்குள்ளாக்குகிறது.
எந்த திட்டத்தை துவக்கினாலும் அதற்கு அம்மா பெயர்தான். உப்பாக இருந்தாலும் தண்ணீர் பாட்டிலானாலும் தன்னுடைய பெயரையே சூட்டிக்கொள்கிறார். எம்.ஜி.ஆர் தன்னை வளர்த்த அண்ணாவுக்கே பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுத்தார். ஜெயலலிதா அப்படி செய்யவில்லை. எம்.ஜி.ஆர் பெயரை இருட்டடிப்பு செய்கிறார்.

எம்.ஜி.ஆருக்கு நிரந்தரமான புகழை தந்திருப்பது சத்துணவுத் திட்டம். அந்த திட்டத்தினால் எம்.ஜி.ஆருக்கு கிடைக்கும் புகழை இருட்டடிப்பு செய்வதற்காக இன்றைய அரசு சத்தமில்லாமல் ஒருவேலையை செய்துவருகிறது. அந்த துறையில் பல திட்டங்களுக்கு பணம் ஒதுக்கப்படுவதில்லை. அல்லது ஒதுக்கப்பட்ட நிதியை இதுவரை தராமல் இழுத்தடிப்பு செய்துவருகிறார்கள். இதனால் திட்டம் பாழாகி, அதை தமது பெயரில் வேறு ஒரு திட்டமாக மாற்றுவதே ஜெயலலிதாவின் நோக்கம். இப்படி எதிர்காலத்தில் எம்.ஜி.ஆர் என்ற மாமனிதரை மக்கள் மறந்துவிடவேண்டும் என நினைக்கிறார் அவர். இந்த நிலையில் எம்.ஜி.ஆர் அபிமானிகள் எப்படி இந்த கட்சியில் தொடர முடியும். எம்.ஜி.ஆர் வளர்த்தெடுத்த கட்சி எம்.ஜி.ஆர் அபிமானிகளுக்கானதாகவேண்டும். கட்சி துவங்க காரணம் இதுதான்.


அதிமுகவுக்கு அடித்தளம் எம்.ஜி.ஆர் ரசிகர்களாக இருக்கலாம்...அதற்காக அவர்களுக்கே முக்கியத்துவம் தந்துகொண்டிருக்கமுடியுமா...

எங்கள் கோரிக்கை, எம்.ஜி.ஆரை புறக்கணிக்காதீர் என்பதுதான். கட்சிக்காக கஷ்டப்பட்ட தலைவர் பெயரில் எந்த திட்டங்களும் இல்லை. கூட்டங்களில் எம்.ஜி.ஆர் பற்றி பேசப்படுவதில்லை. பேனர்களில் எம்.ஜி.ஆர் படம் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர் பெயர் சொன்னாலே ஏதோ மாற்றுக்கட்சிக்காரனை பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள். வெளிப்படையாக சொல்கிறேன். இன்னும் சில ஆண்டுகளில் அதிமுக சாதிக்கட்சியாக முழுமையாக மாறிவிடும். ஜெயலலிதாவிற்குப்பின் எம்.ஜி.ஆர் வளர்த்தெடுத்த கட்சியை அனுபவிக்கப்போகிறவர்கள் யார்...இதற்காகத்தான் இத்தனை கஸ்டங்களை அனுபவித்தாரா எம்.ஜி.ஆர்...

புதிய கட்சிக்கு வரவேற்பு எப்படி.. 

நல்ல வரவேற்பு. மதுரையில் நடந்த கட்சித் துவக்கிவிழாவுக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் திரண்டுவந்தனர். அதுவே கட்சியின் முதல் வெற்றி. அவர்களிடம் பேசியதில் அவர்களும் அதே மனக்குறையை பகிர்ந்துகொண்டனர். தொடர்ந்து தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக சில தினங்களுக்கு முன் முக்கிய பிரமுகர் ஒருவரிடமிருந்தும் அழைப்பு வந்தது. ஆச்சர்யமடைந்தேன். என் தைரியத்தை பாராட்டிய அவர், “எங்களால் இனி பல விஷயங்களை செயல்படுத்தமுடியாது. வெளிப்படையாக எதிர்க்கிற தைரியமும் இல்லை. ஆனால் என் ஆதரவு உண்டு” என வாழ்த்து தெரிவித்தார். கட்சியில் அவருக்கு சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதால் அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை.
கருணாநிதிக்கு எதிராக நெடுஞ்செழியனும், எம்.ஜி.ஆருக்கு எதிராக எஸ்.டி சோமசுந்தரமும் கட்சி துவங்கி காணாமல் போன கடந்த கால வரலாறுகள் உண்டே...மக்கள் பலம் கொண்ட ஒரு தலைவரை எதிர்த்து கட்சி நடத்தி அவரது செல்வாக்கை குறைக்க முடியுமா...

உண்மைதான்...நீங்கள் சொன்னவர்களில் எஸ்.டி.எஸ், எம்.ஜி.ஆரின் புகழை குறைக்க கட்சித்துவங்கியவர். அதனால் காணாமல்போனார். ஆனால் நாங்கள் இன்று கட்சி துவங்கியிருப்பதே அந்த எம்.ஜி.ஆரின் புகழை காக்கவேண்டும் என்றுதானே! எம்.ஜி.ஆரைவிட மக்கள்சக்தி கொண்டவர் வேறு யாரேனும உண்டா?...இந்த நுட்பமான விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள்.
புரட்சித்தலைவரின் தொண்டர்கள் என்னுடன் தொடர்ந்துபேசிவருகிறார்கள். தமிழகம் முழுவதும் ஒரு சுற்றுப்பயணம் செய்து புறக்கணிக்கப்பட்ட தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறேன். புரட்சித்தலைவரின் சிந்தனைகளை எங்கள் கட்சி செயல்படுத்தும். எம்.ஜி.ஆர் அபிமானிகளுக்கான கட்சியாக இது இருக்கும்.

புதிய கட்சிக்கு எதிர்ப்புகள் ஏதேனும் வந்ததா...

வராமலிருக்குமா...மதுரையின் முக்கிய புள்ளி ஒருவர் மூலம் நைச்சியமான மிரட்டல் வந்தது. 'கட்சிப் பேரை கெடுக்கப்பார்க்கறீயா' என கொந்தளித்தவர், 'எதையாவது பண்ணிக்க, ஆனா, எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தாதே' என எகிறினார். பதிலுக்கு நானும், “எம்.ஜி.ஆர் 1972 ல் கட்சி அதிமுகவை துவக்கியபோது கொடியிலும் கட்சியின் பெயரிலும்  அண்ணாவின் படத்தை இடம்பெறச் செய்தார். அதற்கு கருணாநிதியே ஒன்றும் செய்யமுடியவில்லை. எம்.ஜி.ஆர் எங்கள் சொத்து. அவர் படத்தை பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது. எம்.ஜி.ஆர் படத்தை நீங்க முறையாக பயன்படுத்தியிருந்தீங்கன்னா நாங்க ஏன் தனியா கட்சி துவக்கிறோம்'னு பதில் சொன்னேன். 'பிரச்னை வராம பார்த்துக்கங்க...'என்றார். எம்.ஜி.ஆருக்காக உயிரையே கொடுக்க அவரது ரசிகர்கள் தயாரா இருக்கோம். அதைவிட இழப்பு ஒன்று வருமா என்றேன். போனை வெச்சிட்டார்.
இன்றைய அரசியல் எப்படி உள்ளது...

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே அநாகரிக அரசியலை செய்கின்றன. இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறிகளாக்கிவிட்டனர். இன்று விவசாயத்திற்கு கூலியாட்கள் கிடைப்பதில்லை. காரணம் 100 நாள் வேலைதிட்டம். வேலை செய்யாமல் காசு வரும்போது வேலைக்கு ஏன் போக வேண்டும் என்ற மனநிலை வந்துவிட்டது பலருக்கு. சட்டசபை ஆடல் பாடல் என அரசவை போல் ஆகிவிட்டது. போட்டி சட்டமன்றம் நடத்தி ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்குகிறது திமுக. 'திமுக, அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்று காமராஜர் அன்று சொன்னது இன்று நிஜமாகி வருகிறது.

நேற்றுவரை 'அம்மா' புகழ்பாடிவிட்டு இன்று அதிமுகவுக்கு எதிராக கட்சி பொங்குகிறீர்கள்...திடீரென ஜெயலலிதா உங்களை அழைத்து சமாதானப்படுத்தினால் என்ன நிலை எடுப்பீர்கள்

அத்தனை சுலபமல்ல அது. சொன்னால் நம்பமாட்டீர்கள்...கட்சியில் இந்த 30 ஆண்டுகளில் ஜெயலலிதாவை இதுவரை ஒருமுறை கூட சந்தித்ததில்லை. சந்திக்கவிட்டதில்லை. தோட்டத்திலும் அலுவலகத்திலும் உள்ள சில ஆட்கள் இதை சாமர்த்தியமாக செய்கிறார்கள். அவரை பார்ப்பதற்காக கொட நாட்டிலும், சென்னை வீட்டிலும் என பல நாட்கள் காத்திருந்திருக்கிறேன். அவரை சந்திப்பதற்காகவே தேர்தல் சமயங்களில் விண்ணப்பிப்பேன். ஒரு பலனுமில்லை. போயஸ் கார்டனில் தீக்குளிக்க முயன்றால்தான் அவரை சந்திக்க முடியும் என்பதுதான் நிலை. அப்படிப்பட்டவர் இனி அழைப்பார் என்பதில் நம்பிக்கையில்லை.


ஒருவேளை நீங்கள் சொல்வதுபோல் அவர்கள் அழைத்தால் சில நிபந்தனைகளுடன்தான் சந்திப்பேன். எம்.ஜி.ஆர் புகழ்பரப்பும் பணியை செய்வது, எம்.ஜி.ஆர் அபிமானிகளுக்கு முக்கியத்துவம், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் சசிகலா குடும்பத்தை வெளியேற்றுவது உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொண்டால் பரிசீலிக்கலாம்...ஆனால் இதில் எதுவும் நடக்க வாய்ப்பில்லை. அதுதான் ஜெயலலிதா!




கமல்ஹாசன் மீது ஜெயலலிதாவுக்கு ஏன் கோபம்!

நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ' கமல் நடிகர் மட்டுமல்ல. சமூகப் பற்றுள்ள மாபெரும் கலைஞன். அவருக்கு வாழ்த்து சொல்வதற்குக்கூட முதல்வருக்கு நேரமில்லையா?' எனக் கொந்தளிக்கிறார் நாம் தமிழர் கட்சியின் சீமான். ஆனால், ஜெயலலிதாவுக்கும் கமலுக்கும் இடையே கடந்த 2015 டிசம்பர் மாதத்தில் பனிப்போர் ஆரம்பமானது. தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம், தொடர்ந்து மந்தமான நிவாரண பணிகள் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.


ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அளித்த அந்த பேட்டியில், அரசு செயல் இழந்துவிட்டது, நாங்கள் கட்டிய வரிப்பணமெல்லாம் எங்கே.? என்றெல்லாம் கூறியிருந்தார். கமலின் இந்த பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் பன்னீர் செல்வம் சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ''எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல, குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமல்ஹாசன், உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார்'' என்று கடுமையாக சாடியிருந்தார்.
இதை சற்றும் எதிர்பாராத கமல்ஹாசன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பதில் அளித்து மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்... அதில், ''மின் அஞ்சல் வழி என் வடநாட்டு பத்திரிக்கை நண்பருக்கு எழுதிய ஆங்கிலக் கடிதம். அந்தக் கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் வெளியானது. என் கடிதம் தமிழகத்திற்கு நேர்ந்த பேரிடர் பற்றியும் மக்களின் அவதியைப் பற்றிய புலம்பலே. இது ஓ.பன்னீர்செல்வம் அறிக்கைக்கு பதில் அறிக்கை அல்ல. களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும், பல்வேறு கட்சிகளுக்கும் ஓட்டுப்போடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழப்பத்தில் நற்பணி செயல்களில் தடுமாற்றம் கண்டுவிடக் கூடாது என்பதற்கே இவ்விளக்கம்.

மதங்கள் தனிமனிதக் கோபங்களையும் தவிர்த்துச் செயல்பட வேண்டிய பேரிடர்காலம். களமிறங்கி வேலை செய்யும் யார் மனதையும் நான் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் கூட, மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். வாத பிரதிவாதங்களை புறந்தள்ளி ஆக்க வேலையில் முன்போல் முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கிய நண்பர்களும் என்னை கடுமையாக விமர்சிப்பவர்களும் அதையெல்லாம் விடுத்து செய்யும் உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன்'' என்று சொல்லியிருந்தார்.


கமல் திடீரென பல்டி அடித்திருக்கிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. ஆனாலும், அவரின் பதில் அறிக்கையை ஜெயலலிதா ரசிக்கவில்லை என்பதுதான் நிஜம். அதன் வெளிப்பாடே தற்போது செவாலியர் விருது பெற்ற கமலுக்கு வாழ்த்துச் சொல்லாமல் புறக்கணித்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.


கமல்ஹாசனை தெரிகிறதா முதல்வர் அவர்களே!' -சீறிப் பாயும் சீமான்

டிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ' கமல் நடிகர் மட்டுமல்ல. சமூகப் பற்றுள்ள மாபெரும் கலைஞன். அவருக்கு வாழ்த்து சொல்வதற்குக்கூட முதல்வருக்கு நேரமில்லையா?' எனக் கொந்தளிக்கிறார் நாம் தமிழர் கட்சியின் சீமான். 





தமிழ்நாட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குப் பிறகு, செவாலியர் விருதுக்குத் தேர்வாகியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இதற்காக, திரையுலகப் பிரமுகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் வாழ்த்துச் செய்தியில், ' எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்'  எனத் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனும் தன்னுடைய ட்விட்டர் தளத்தில், ' இந்திய அறிஞர்களும், இந்த விருதைப் பெற்று இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இதை விளம்பரப்படுத்துவதில்லை. பணிவுக்கும் புகழுக்கும் இடையே, நான் சிறுபிள்ளைத்தனமாக புகழைத் தேர்வு செய்து இருக்கிறேன். என் நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி" என அறிவித்துள்ளார். " ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன். செவாலியர் விருது பெற்றமைக்காக, ஒரு வார்த்தையைக்கூட முதல்வர் சொல்லவில்லையே ஏன்?" எனக் கொந்தளிக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவர் நம்மிடம்,
" செவாலியர் விருதுக்கு கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டதற்கு எந்த ஒரு பரிசையும் தமிழக அரசு அறிவிக்கவில்லை. இந்த தேசமும் அவரைக் கொண்டாடவில்லை. திரையுலகைச் சேர்ந்தவர்கள் அவரைச் சந்தித்துப் பாராட்டுகிறார்கள். தமிழக அரசிடம் இருந்து மனதார ஒரு வாழ்த்துச் செய்தி வந்ததா? செவாலியர் விருதுக்காக ஏன் பத்








Tuesday, 23 August 2016

பொண்டாட்டிடா’ டப்ஸ்மாஷ் பெண்ணைச் சந்தித்த ரஜினி!




'கபாலிடா..."  என்று 'கபாலி' டீஸரில்  ரஜினி பேசிய வசனத்தை உலகம் முழுக்க 3-கோடி மக்கள் பார்த்து ரசித்தனர். டப்ஸ்மாஷிலும்  வைரலடித்தது அந்த வசனம். பலரும் தங்கள் மேனேஜருக்கு, பாஸுக்கு, நண்பனுக்கு, எதிரிக்கு என்று டப்ஸ்மாஷ் கிளப்ப, தமிழில் ஒரு பெண்   'பொண்டாட்டிடா..'  என்று பேசி நெட்டில் பரவவிட்ட ஒரு டப்ஸ்மாஷ் டரியல் வைரலானது. தன் பார்வைக்கு வந்த அந்த வீடியோவை  ரஜினியும் பார்த்து ரசித்தார். அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய உடனே அந்த  பெண்ணை சந்திக்க ஆசைப்பட்டார். சோ விரும்பியதின் பேரில்  'கபாலி'  ப்ரிவ்யூ காட்சியில் கலந்து கொண்ட ரஜினியை, உடல்நிலையைக் காரணம் காட்டி மருத்துவர்கள் கடிந்து கொண்டனர்.  ஆகவே வெளியுலக சந்திப்பை தவிர்த்து வந்தார் ரஜினி.
நேற்று  'கபாலிடா' டயலாக் பேசிய அந்தப் பெண்ணை  நேரில் பார்க்க ஆசைப்பட்டார், ரஜினி. அதன்படி  திடீரென  அந்த பெண்ணுக்கு ரஜினி வீட்டிலிருந்து போன் வர, எதிர்முனையில் இருந்த பெண்ணுக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை. ரஜினியே லைனில் வந்து  நேரில் பார்க்க விரும்புவதாகச் சொல்ல ஆனந்தத்தில் திக்குமுக்காடி விட்டார்.  அதன்படி  சென்னை சேமியர்ஸ் சாலையில் இருக்கும்  தனுஷ் வீட்டில்  அந்த பெண்மணி ரஜினியை சந்தித்தார்.  ரஜினியை சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்ள லட்சம்பேர் போட்டி போட்டுக் கொண்டிருக்க ரஜினி ஆர்வமாக அந்த பெண்ணுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்
'கபாலிடா...' டயலாக்கை மாற்றி 'பொண்டாட்டிடா...' என்று பேசும் எண்ணம் எப்படி வந்தது.. இந்த டயலாக்கைக் கேட்டுவிட்டு உங்கள்  உறவினர், நண்பர்கள் என்ன சொன்னார்கள் என்று ஆர்வமாக கேட்டார், ரஜினி.  வைரல் வீடியோ டயலாக்கில் கணவர்கள் சமூகத்தை  கண்டபடி சகட்டுமேனிக்கு வெளுத்துக்கட்டிய அந்த பெண்மணி வெட்கத்தோடு தலைகுனிந்து ரஜினிக்கு பதில் சொன்னதை  பார்த்து ரஜினிமகள் ஐஸ்வர்யா ரசித்தார்.




Monday, 22 August 2016

84 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர்! - வேதனைப்படும் விஜயகாந்த்

தமிழகத்தில் 84 லட்சம் இளைஞர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் உள்ளனர் என்று வேதனையுடன் விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.


இது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் சமீபத்தில் சொல்லப்பட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி மொத்தம் 84 லட்சம் இளைஞர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சாதி வாரியாக தாழ்த்தப்பட்டவர்கள் 18,24,342, அருந்ததியினர்கள் 1,96,784, மலைவாழ் இனத்தினர்கள் 63,898, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்கள் 22,00,498, இஸ்லாமியர்கள் 3,24653, பிற்படுத்தப்பட்டோர் 34,53,868, மற்றவர்கள் 2,67,821, ஆக மொத்தம் 84 லட்சம் பேர் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
br />
மேலும், பல இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்து தங்களுடைய விவரங்களை பதிவு செய்யாமல் பல லட்சம் பேர் இருக்கிறார்கள். கடந்த வாரம் சட்டசபையில் இதுகுறித்து விவாதம் வந்தபோது அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு விவாதித்தார்களே தவிர, ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்தவில்லை.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதே அ.தி.மு.க. ஆட்சியின்போது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி மக்கள் வரிப்பணம் பலகோடி ரூபாய் வீணடிக்கப்பட்டதே தவிர, மாநாடு முடிந்து ஒரு வருட நிறைவு பெற உள்ள நிலையில் கூட, எந்த தொழிற்சாலைகளோ அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்போ இந்த அரசு ஏற்படுத்தியதாக நிரூபிக்கப்படவில்லை.
வேலைவாய்ப்பு இல்லாமல் பல லட்சம் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து அவர்களின் எதிர்காலமே மிகப்பெரிய கேள்வி குறியாக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் விளைவாக மதுவுக்கு அடிமையாவதும், செயின் பறிப்பு, கொலை, கொள்ளை, போன்ற பல சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளுக்கு ஆட்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த அரசு, இந்த பிரச்னைகளை மிக முக்கிய பிரச்னையாக கருத்தில் கொண்டு, கல்லூரிகளின் கல்வி தரத்தை உயர்த்துவதும், மாவட்டம் வாரியாக தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதும், அனைவருக்கும் வேலைவாய்ப்பை அவரவர்கள் தகுதிக்கு ஏற்ப வழங்க வேண்டும்.
br />
லஞ்சம் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு சுலபமாக தொழில் தொடங்க வேண்டிய கட்டமைப்பு வசதிகள், சாலை வசதி, மின்சார வசதி போன்ற அனைத்து உதவிகளையும் வழங்கி உடனடியாக தொழிற்சாலைகள் தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதுபோன்ற மக்களின் முக்கிய பிரச்னைகளை சட்டசபையில் பேசி மக்களுக்கு நன்மை பயக்கும் சட்டசபையாக இருக்க வேண்டுமே தவிர, ஓட்டு போட்ட மக்களுக்கு ஏமாற்றத்தை பரிசாக அளிக்கக்கூடிய அரசாகவே உள்ளது. நம் நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.
br />


எங்கள் தலைமுறையின் செவாலியரே..! கமலை புகழும் ரஜினி

எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசனுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


தமிழ்நாட்டில் 1960ம் ஆண்டு வெளிவந்த ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை கமல் பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தி வரும் கமல்ஹாசன், இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
br />
எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்

ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கமல்ஹாசன் வெளிப்படுத்தி இருக்கிறார்.50 ஆண்டுகள் திரைத்துறையில் காலடி பதித்துள்ள கமல், 4 முறை தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். தற்போது இவருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான ‘செவாலியே’ விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் கலாசாரத்துறை அறிவித்துள்ளது. சிறந்த நடிப்பு ஆற்றலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

‘செவாலியே’ விருது பெற இருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு திரை உலகத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,”  எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்”  என்று தெரிவித்துள்ளார்.
br />


கமல்ஹாசன் என்னும் சினிமா யானை!

எப்போது பார்த்தாலும் கண் விலகாமல் ஆச்சர்யம் தரும் யானை, ரயில், அருவி, குழந்தை போல எனக்கு ஆச்சர்யம் தரும் இன்னொரு விஷயம் கமல். பார்வையற்றவன் யானையின் உருவத்தை சொல்ல முயற்சித்தது போல முயற்சி செய்திருக்கிறேன் 

தமிழ் சினிமா 75-ல் இருந்து 80-களின் பெரும்பகுதி வரை 'கரகர' கரம் மசாலாவாகவே இருந்தது. இதில் பாலச்சந்தர், பாரதிராஜா போன்றவர்கள் நல்ல படங்களை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற சினிமா சீனியர்களின் ஓய்வுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மசாலா மணத்தை குறைக்க முற்பட்டதில் முதலிடம் கமலுக்கு கொடுக்கலாம். ரஜினிக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத்தந்த 'முள்ளும் மலரும்' மூலமாக பாலுமகேந்திராவை தமிழுக்கு கொண்டு வந்தது கமல் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. அதுவரை டாக்கியாக இருந்த சினிமாவை மூவியாக மாற்ற முயற்சித்தவர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா. அவர்களை ஒத்த அலைவரிசையில் இருந்தவர் கமல். "கமல் மலையாள படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தபோதே தமிழ் சினிமாவின் நிறத்தை மாற்றும் எண்ணம் இருந்தது. இத்தனைக்கும் அப்போது அவர் வயது 25க்குள் இருந்தது" என எழுத்தாளர் சுஜாதா கூறியிருக்கிறார். br />


கமல் ஆரம்ப காலத்தில் ரொமான்டிக் ஹீரோவாக இருந்தாலும், பின்பு ஆக்சனுக்கும் மாறியவர்தான். நிறைய மசாலா படங்கள் மூலம் வெற்றியை சுவைத்தவர்தான். 'குரு', 'சகலகலா வல்லவன்' அதில் சிகரம் என சொல்லலாம். தன்னுடைய 100வது படமான 'ராஜபார்வை'யில் நடித்தபோது கமலின் வயது 25. தன்னுடைய 100வது படம் என்பது ரிஸ்க் இல்லாமல் வெற்றி படமாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லா ஹீரோக்களும் விரும்புவார்கள். (இதில் விதிவிலக்காக ஜெயித்தவர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, விஜயகாந்த் ஆகியோர்தான். ரஜினி, சத்யராஜ், பிரபு எல்லோருக்கும் 100வது படம் தோல்விப்படங்களே). கமல் சினிமாவின் நிறத்தை மாற்றவேண்டும் என்ற ஆர்வத்தில் தெரிந்தே 'ராஜபார்வை' என்ற தீயில் கையை வைத்தார். "ராஜபார்வைக்காக விருது வாங்கியபோது மட்டும்தான் கை 'ஜில்' என்று இருந்தது" என கமல் குறிப்பிட்டார்.

கமலும் சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே மூலம் உச்சபட்ச வெற்றியை சுவைத்தார். ஆனால், அதில் சிக்கிக்கொள்ளாமல் எழுத்தாளரை சினிமாவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற ஆவலில், சுஜாதாவுடன் இணைந்து எடுத்த படம்தான் 'விக்ரம்'. எனக்கு தெரிந்து கம்ப்யூட்டர் முதன்முதலில் காண்பிக்கப்பட்டது விக்ரமில்தான். ஏவுகணையின் ஆபத்தை தமிழர்கள் அறிய செய்த படம். 'ப்ளூ மேட்' டெக்னாலஜியில் உருவான முதல் தமிழ்ப்படம். ராஜஸ்தானுக்கு தமிழர்கள் சுற்றுலா சென்றுவந்தது போல் அழகாக படம் பிடிக்கபட்ட படம். சத்யராஜ் வில்லனாக நடித்த கடைசி படம் என பல விஷயங்கள் இதில் உண்டு. இயக்குனர் ராஜசேகர் இடையில் மாவீரனை இயக்க போய்விட சந்தானபாரதியும், கமலும் செய்த 'பேட்ச் ஒர்க்' படத்துக்கு செட்டாகவில்லை. இதனால் விக்ரம் தோல்விப்படமாக அமைந்தது. அதுவரை  நடித்து சம்பாதித்த அனைத்து பணத்தையும் அதில் போட்டிருந்தார் கமல் என்ற தகவலும் உண்டு. 'மன்னாதி மன்னன்' தோல்வி அடைந்திருந்தால் என்னவாகியிருக்குமோ, அது கமலுக்கு நடந்தது எனத்தகவல். ஆனாலும், வித்தியாசமான முயற்சிகளை விடவில்லை.
தொடர்ந்து பிசியாக நடிக்க வேண்டிய சூழல், இல்லையென்றால் 'பேர் சொல்லும் பிள்ளை'யும், 'மங்கம்மா சபதமும்' வந்திருக்காது. கமலின் பேனா கமர்சியல் வெற்றி பெற்றது 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில்தான். மூன்று வேடங்கள், மூன்று பாடி லாங்குவேஜகள் என கமல் தன்னை வருத்தி ரசிகனை குதூகலப்படுத்திய படம். கிரேசி மோகன், கமலுக்கு 'பக்கா'பலம் ஆனார். அப்பு கேரக்டருக்கு கமல் பட்ட சிரமங்கள் ஏராளம். அதில் பின்புறமாக கால்களை கட்டிக்கொண்டு நடித்ததும் ஒன்று. அதில் அப்பு கேரக்டரை சற்று மனநிலை பாதித்தவனாக காட்டியிருந்தாலும் கூட (வில்லன் படம் மாதிரி) இந்த படம் வெற்றி பெற்றிருக்கும். ஏனெனில் திரைக்கதை அவ்வளவு நன்றாக இருந்தது. இப்படி மெனகெட்டிருக்க தேவையில்லை. ஆனால், ரசிகனுக்கு புதிய விஷயத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக கமல் அவ்வளவு மெனக்கெட்டார் என்பதுதான் நிதர்சனம். கமல், அபூர்வ சகோதர்கள் வரையிலும்,  ரஜினி, பாட்ஷா வரையிலும் ரசிகர்கள் தங்களை எப்போது வேண்டுமானாலும் வீட்டில் உட்காரவைத்து விடுவார்கள் என்ற மனநிலையில் இருந்தார்கள் என்பது தகவல். சிவாஜியையே ஒதுக்கியவர்கள் அல்லவா தமிழர்கள்.

கமல் 90க்கு  பிறகு தன் பாதையை மாற்ற எடுத்த முதல் முயற்சிதான் 'குணா'. குணா மனநிலை பாதிக்கபட்டவன், அவனது தாய் தப்பான தொழில் செய்பவள். இதற்குமுன் எந்த பெரிய ஹீரோவும் தன்னுடைய பின்புலத்தை இவ்வளவு மோசமாக அமைத்து கொண்டதில்லை. கமல் - இளையராஜா - சந்தானபாரதி என்ற கூட்டணி வெற்றி தராமல் போனாலும், தமிழுக்கு மற்றொரு வாசல் திறந்த படம் குணா. கமல் பேனா பிடித்த படங்களின் திரைக்கதையில் ஒரு ஒழுங்கு இருக்கும். அதில் இரண்டாம் படம் தான் குணா. இவ்வளவு மெனக்கெடல் ஒரு படத்துக்கு வேண்டுமா என ரசிகனை பேசவைத்தது. அதுவரை வெறும் 'பைத்தியம்' என்ற உச்சரித்த தமிழ் சினிமா 'மனநிலை பாதிக்கப்பட்டவன்' என்ற சொல்லை உபயோகிக்க காரணமாயிருந்தது குணாதான்.
அது செல்வராகவன் காதல் கொண்டேன் செய்யுமளவுக்கு வந்து நின்றது. கமல் குணாவாகவே மாறி உலவினார். ஒரு அறைக்குள்ளேயே கமல் சுற்றி சுற்றி வசனம் பேசும்போது தமிழ்சினிமாவும் சுற்றியது. அதுவரை இருந்த ஸ்டேண்டிங் காமிராக்களுக்கு விடுதலை. குணா குகைக்கு (முன்பு டெவில்ஸ் கிச்சன்) போகும் வழி மிகவும் ஆபத்தானது. ஒவ்வொருவராக பாலத்தில் சென்று அந்த இடத்தை அடைவார்களாம். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் கமல் அதில் சென்று நடித்தார். ஆனாலும், அது அப்படியொரு இடத்தில் படமாக்கபட்டது ரசிகனுக்கு தெரியாது. கடைசி ரசிகனுக்கும் நியாயம் செய்யவே அப்படி ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து சிரமத்துடன் நடித்தார். அதனால்தான் ராஜாவின் 'கண்மனி அன்போடு காதலன்'க்கு நியாயம் செய்ய முடிந்தது. இதுதான் எல்லா இளையராஜா ரசிகனின் ப்ளே லிஸ்ட்டிலும் கண்மனி இடம் பிடிக்க காரணம். 

கமலின் பேனாவுக்கு வைரைக்கல் வைத்த படமென்றால் 'தேவர் மகன்' தான். அன்னை இல்லத்து ராஜா நீண்ட இடைவெளிக்கு பிறகு அரிதாரம் பூசியதற்கு அதுவரை அவர் பெறாத சம்பளத்தை கொடுத்தார் கமல். (படையப்பாவில் ரஜினி அதை முறியடித்தார்.) பொதுவாக கமல், ரஜினி நடிக்கும் படங்களில்தான் மற்ற நடிகர்களுக்கு சரியான சம்பளம் கிடைக்கும் என்ற தகவலும் உண்டு. குருதிப்புனலில் இயக்குனர் விஸ்வநாத்துக்கு சம்பளம் ரூ.85 லட்சதுக்கு மேல் கொடுத்தார் என்பது தகவல். கமல் தன்னை சிறந்த தயாரிப்பாளராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். தேவர் மகன் மூலம் 'ஃபங்க்' ஸ்டைலை அறிமுகம் செய்து வைத்தார். அனைத்து நாயகர்களின் ரசிகர்களும் கூட பேதமின்றி 'ஃபங்க்' வைத்துக்கொண்டார்கள். பொதுவாக கமல் ஸ்டைல் செய்யமாட்டார். செய்தால் அது வெகுநாளைக்கு இருக்கும். உதாரணம், 'சத்யா' பட ரிங் இப்போது வரை காலேஜ் பசங்ககிட்ட கூட டிரெண்ட்.

br />
தமிழ்சினிமாவின் சிறந்த பத்து படங்களை சொன்னால் அதில் தேவர் மகனை சேர்க்காமல் முடியாது. தேவர்மகனில் சிவாஜி இருக்கும் காட்சிகளில் கமல் அடக்கியே வாசித்தார். சிவாஜி என்ற பிதாமகனை வேறொரு கோணத்தில் காட்டி ரசிக்க வைத்தார். தேவர்மகனின் வசனங்கள் இன்றும் பாடமாக படிக்க வேண்டியவை. தமிழ் சினிமாவின் சிறந்த வசனங்களை உள்ளடக்கிய படங்களில் ஒன்று. திரைக்கதை என்ற இலக்கணத்துக்கு சரியான உதாரணம். தெற்கில் இருக்கும் ஜாதி வெறியை, பெரியவர், சின்னவர் என்ற பேதத்தை, சொத்து பிரச்சனையை, அந்த பகுதி மக்களின் வெள்ளந்திதனத்தை கண்ணாடிபோல் காட்டியது திரைக்கதை. சங்கிலி முருகன் அதற்கு உதவினார். சிவாஜியின் 'இன்னைக்கு  நான் விதை போடுறேன்' வசனம் மனித வாழ்வில் பாடமாக படிக்க வேண்டிய ஒன்று. 'போய் புள்ளகுட்டிகள படிக்க வைங்கடா' என்று சொல்லி தமிழர்களை விழிக்க செய்தார். தலைவாசல் விஜய், வடிவேல் போன்ற திறமையாளர்களை அடையாளம் காட்டினார். எனக்கு பிடித்த கமலின் 'எவர் கிரீன் மூவி' என்றால் அது 'தேவர்மகன்'தான்.

தேவர் மகனுக்கு பிறகு கமல் மீதான மரியாதை கூடிய படம் 'மகாநதி'. கிருஷ்ணசாமியாக கமல் வாழ்ந்தார். பெண்களுக்கு எதிரான அக்கிரமங்களை, அநீதிகளை வெளிச்சமிட்டு காட்டிய படம். 'சோனாகாஞ்சி' என்ற வார்த்தையை கடைசி தாய்மாருக்கும் கொண்டு போய் சேர்த்தார். ஒரு தவறான தொழில் செய்யும் பெண்ணின் காலில் விழுந்து அழுது தன்னுடைய நட்சத்திர அந்தஸ்த்தை உடைத்து 'தான் ஒரு நடிகன் மட்டுமே' என்று கமல் ஊருக்கு உணர்த்தினார். சகமனிதனின் கோபம் என்ன செய்யும் என காட்டினார். எனக்கு தெரிந்து பெண்களோடு சேர்ந்து, ஆண்களும் கண்ணீர் சிந்தியபடி பார்த்தபடம் 'மகாநதி' தான். அதில் முதன்முதலில் 'ஆவிட்' எனும் கம்ப்யூட்டர் எடிட்டிங்கை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தார். புதுமையை தமிழ் சினிமாவில் புகுத்திக்கொண்டேயிருக்க வேண்டும் என விரும்பினார். இந்த யானையை பற்றி எழுதும்போது அன்பே சிவம், ஹேராம் இரண்டையும் எழுதாமல் இருக்க முடியாது. ஆனால் அதை தொட்டால் இந்த கட்டுரைக்குள் அடக்க முடியாது. அதற்கென ஒரு பதிவு எழுதனும்.
சில படங்கள் காலங்கள் கடந்தபோதும் பார்க்குறப்ப எல்லாம் அப்டியே ஃப்ரெஷ்ஷா இருக்கும். சில படங்கள் சில காலம் கழித்து கொண்டாடப்படும். ஆனால், வந்த புதிதில் வரவேற்பை பெறாமல் போயிருக்கும். இதில் 'விக்ரம்', 'மைக்கேல் மதன காமராஜன்', 'பம்மல் கே.சம்பந்தம், 'பஞ்ச தந்திரம்', 'தில்லு முல்லு', 'அன்பே சிவம்' போல பல படங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் 'ஆளவந்தான்'. மனப்பிறழ்வை மிக வித்தியாசமான கோணத்தில் பதிவு செய்த படம். அதில் வரும் நந்துவின் கவிதைகள் வீரியம் மிக்கவை (உபயம் வைரமுத்து). நந்து வந்தவுடன் படத்தின் நிறம் மாறும், வேகம் வேகம், பாடல் இசைக்கு சங்கர் எசான் லாய், பின்ணனி இசைக்கு மகேஷ் என கமலின் புதிய படை தங்கள் பங்கை சரியாக செய்தார்கள். கமல் வில்லனுக்கென எந்த காம்பரமைஸும் செய்துகொள்ளாமல், நந்துவுக்கு தோன்றுவதையே திரைக்கதையாக அமைத்தார். இடைவேளைக்கு பிறகான படத்தின் வேகம் சமீபத்தில் கூட எந்த படத்திலும் பார்த்த நியாபகம் இல்லை.

2000ஆம் ஆண்டு தீபாவளிக்கு வந்த தெனாலிக்கு கொடுத்த வரவேற்பை, 2001ஆம் ஆண்டு தீபாவளிக்கு வந்த ஆளவந்தானுக்கு மக்கள் ஏன் கொடுக்கவில்லை என்று இன்றும் தெரியவில்லை. பெண்கள் பலருக்கு கமல் நிர்வாணமாக அமர்ந்திருந்த, படுத்திருந்த போஸ்டரே படத்துக்கு செல்ல தேவையில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்த போதுமானதாக இருந்தது. அந்த சமயத்தில் கமல் பெர்சனல் வாழ்வில் வந்த பிரச்னைகளும் படத்தின் மைலேஜை குறைத்தது. கமலஹாசன் உடைகள் 'சாய்' என டைட்டிலில் வந்தது. கலைப்புலி தாணுவே போதுமான விளம்பரம் கொடுத்ததாக தெரியவில்லை. தாணு கமலை விமர்சித்து, அவரே தியேட்டர்களில் எடிட்டும் செய்தார். "பெண்ணை கட்டி கொடுத்தாச்சு இனி நல்லபடியா பார்த்துக்குறதும், கொடுமைபடுத்துறதும் அவங்க கையில இருக்கு" என கமல் பேட்டிகளில் வருத்தப்பட்டார். கமல் மீதான் கோபத்தை கமல்-சரிகா விவாகரத்துக்கு பிறகு 'புன்னகை பூவே' படத்தில் சரிகாவை ஒரு பாடலுக்கு ஆட வைத்து தாணு காட்டிக்கொண்டார். கமல் செய்த ஒரே தவறு ஆளவந்தானை 2001-ல் ரிலீஸ் செய்ததுதான்.2 015-ல் எடுத்து ரிலீஸ் செய்திருந்தால் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கும். இதற்கு லார்ட் ஆப் த ரிங்க்ஸ் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பர்னின் பாராட்டே உதாரணம்.

கமலுக்கும், இளையராஜாவுக்குமான நட்பு மிக ஆச்சர்யம் அளிக்ககூடிய ஒன்று. 2005க்கு பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. ஆனாலும், அவர்களின் நட்பு அப்படியே இருக்கிறது. இளையராஜாவின் லண்டன் இசை விழாவில் ஒரு பாடகனாக கலந்து கொண்டு பாடினார். இளையராஜாவுக்கும், கமல் கொஞ்சம் ஸ்பெஷல்தான். ஏனெனில், இளையராஜாவின் பாடல்களுக்கு அதிகபட்ச நியாயம் செய்து படமாக்கியதில் கமலுக்கு மட்டுமே முதலிடம்  

கமல் ஹாலிவுட் படங்களை காப்பியடிக்கிறார் என்று சொல்கிறார்கள். நல்ல விஷயங்களை, மக்கள் அறிந்திராத விஷயங்களை நெருக்கமாக கொண்டு வர உதவி புரிகிறார் என்றே சொல்ல வேண்டும். அவ்வை சண்முகி 'என் மீசையானாலும் மனைவி'தான்னு கிரேசி மோகன் பலமுறை சொல்லியும் இது மிஸஸ் டவுட் பயர்-தான் என்று சொல்கிறார்கள். அப்படியே பார்த்தாலும் ஆண்-பெண் புரிந்துகொள்ளலை சேர்ந்து வாழவேண்டிய அவசியத்தை, மிக நகைச்சுவையாக சொன்னதில் அவ்வை சண்முகி, ஆங்கில படத்தை விட நன்றாகவே இருந்தது. கமல் நல்ல இந்தியப் படங்களையும் விட்டதில்லை. மராட்டி 'துரோக்கால்'தான் 'குருதிப்புனல்' ஆனது. 'சத்யா' கூட ரீமேக்தான். அது இப்ப 'பாபநாசம்' வரை தொடர்கிறது.
br />
இந்த யானையின் பிடித்த முகங்களில் ஒன்று ரசிகன் முகம். சிவாஜி, நாகேஷ், அவ்வை சண்முகம், எம்.ஆர்.ராதா, பாலச்சந்தர் என அவர் ரசிக்கும் விஷயங்களும், அதை இப்போது சொல்லும்போதும் காட்டும் ஆர்வமும், ரசிக்க தகுந்த ஆச்சரியப்படக்கூடிய ஒன்று. சமீபத்தில் சுகாசினி ஒரு நிகழ்ச்ச்சியில் கமலிடம் "வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் படங்களை ரீமேக் செய்து நடிக்க சொன்னால் எந்த படத்தில் நடிப்பீர்கள்" என கேட்டதற்கு, கமலின் பதில், "எந்த கேரக்டரில்ன்னு சொல்லவே இல்லையே" என்றவர், “வேண்டுமானால் கப்பலோட்டிய தமிழன் படத்தில் சுப்ரமணிய சிவாவாக நடிக்கலாம். ஏன்னா அதுல என் ஆசான் சண்முகம் அண்ணாச்சி நடித்திருந்தார்" என பதில் சொன்னார். அவர் சிவாஜிக்கும், அவர் இடத்துக்கும் கொடுக்கும் மரியாதை பிரமிக்க தகுந்த ஒன்று. இத்தனைக்கும் சிவாஜி கடைசி வரை கமலை தன் வாரிசாக அறிவிக்கவே தயங்கினார் என்பதே உண்மை. சிவாஜி தன் நடிப்புலக சக்கரவர்த்தி எனும் நாற்காலியை யாரிடமும் பங்கு போட்டுக்கொள்ள விரும்பவில்லை தேவர்மகன் நாற்காலி உட்பட.

நாகேஷ் - இன்று வரை கமல் எந்தவொரு தொலைக்காட்சி பேட்டியிலும் நாகேஷை குறிப்பிடாமல் பேசியதாக நியாபகம் இல்லை. நாகேஷ் குறித்து சொல்லும்போதெல்லாம் 200% எனர்ஜியாக சொல்லுவார். இன்னும் கூட கண்கள் விரிய, விரிய நாகேஷ், பாலச்சந்தர் நட்பை விவரிப்பார். கமலின் தற்போதைய உயரத்துக்கு இந்த அளவுக்கு சக நடிகனை ரசிப்பதை வெளியில் காட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், ரசிப்பதில் குறை வைப்பவரல்ல கமல். கமல் தன் படங்களில் நாகேஷை தொடர்ந்து பயன்படுத்தி அன்பை காட்டினார். அவ்வை சண்முகி ஜோசப், அபூர்வ சகோதர்கள் வில்லன், பஞ்ச தந்திரம் மாமனார், நம்மவர் புரபசர், மகளிர் மட்டும் பிணம், வசூல் ராஜா வாத்தியார், அப்பா என கமல் நாகேஷுக்கு கொடுத்த வைரைட்டிகள் அதிகம். தசாவதாரத்தில் கமல் நாகேஷுக்கு கொடுத்தது கவுரவ 'செண்ட் ஆப்'. 'ஐ அம் ஹானர்டு'டா என நாகேஷ் கமலை பார்த்து சொன்னார். தன் விருப்ப நடிகரின் கடைசிப்படம் தன் படமாக மாறிப்போனதில் கமல் நிச்சயம் சந்தோசப்பட்டிருக்கமாட்டார்.

கமலுக்கு கடவுள் பக்தி இல்லை. ஆனால் குரு பக்தி நிறைய உண்டு. பாலச்சந்தரின் மீது கமல்ஹாசனின் மரியாதை வியக்கதக்க ஒன்று. இந்த விசயத்தில் கமல், ரஜினி இருவரும் நேர்க்கோட்டில் இருப்பார்கள். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கமல் சொன்னார், "பாலச்சந்தர் காரில் வந்துகொண்டிருந்தபோது, இந்த படத்தில் யாரை நடிக்க வைக்கிறது. ரோட்டுல போறவனையா?'' என பாலச்சந்தரிடம் ஒருவர் கேட்க, அவர், ''ரோட்டுல போற அவன்தான் நடிக்க போறான்'' என்று பாலச்சந்தர் சொன்ன இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தது நான். நல்லவேளை அந்த பக்கம் நான் நடந்து போனேன்" என குறிப்பிட்டார். கமல் பாலச்சந்தரின் இயக்கத்தில் கடைசியாக நடித்தபடம் 'உன்னால் முடியும் தம்பி' என்றாலும் கூட, 'பார்த்தாலே பரவசம்' படத்தில்கூட ஒரு சீன் வந்து தன் குரு பக்தியை காட்டினார். உத்தமவில்லனில் பாலச்சந்தரை நடிக்க வைத்து குருபக்தியை காட்டினார். உத்தமவில்லன் பாலசந்தரின் கடைசி படமாக அமைந்தது இயற்கையின் சொல்

கமல், ரஜினி நட்பும் ஆச்சரியம் அளிக்கும் ஒன்றுதான். ரஜினி 80க்கு பிறகு துறவறம் மேற்கொள்ள முயற்சித்தபோது, அவரை மீண்டும் லௌகீக வாழ்க்கைக்கு அழைத்துவர முயற்சித்ததில் பெரும்பங்கு கமலுக்கு உண்டு. கமல்-சிம்ரன் பிரச்னையில் ரஜினி தலையிட்டு தீர்த்து வைத்தார் என்ற தகவலும் உண்டு. ரஜினி 'தெனாலி' என தலைப்பு வைக்க, படையப்பாவுக்கு ஒரு இடைவேளை மட்டுமே விடவேண்டும் என கமல் முடிவு செய்ய என இருவரது நட்பும் மிக ஆச்சரியமிக்க ஒன்று.
கமல்ஹாசன் படங்கள் என்றாலே 'லிப் கிஸ்' என எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் சினிமா விமர்சகர்கள். உண்மையில் அதுபோல அமைந்தது சில படங்களே. அதுவும் காட்சிக்கு தேவைப்பட்டிருக்கும் ஹேராம், மகாநதி, குருதிப்புனல், புன்னகை மன்னன் என சில படங்களில் மட்டுமே வரும். இப்போது யோசித்தால் அடுத்து வரும் காட்சிக்கு தேவையானதாகவே இருக்கும். தேவர் மகனுக்கு பிறகு கமலின் படங்களில் சமூகப்பொறுப்பு அதிகமாகவே இருந்தது. திருமண பந்தத்தில் நம்பிக்கை இல்லாத கமல், இதுவரை அதற்கு முரணான படங்களில் நடித்ததில்லை. மும்பை எக்ஸ்பிரஸ்ல் வரும் மனீஷாவின் கேரக்டர் உதாரணம். அவ்வளவு தவறான குணங்களுடைய பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொண்டு மனிதர்கள் அனைவரும் குறையுடையவர்கள்தான். நாம்தான் அனுசரித்து நல்வழிப்படுத்தி வாழவேண்டும் என சொல்லாமல் சொன்னார். கிளைமேக்ஸில் எங்க போறோம் என்பதற்கு 'நேர் வழியில' என பதில் சொன்னார். தொடர்ந்து வேட்டையாடு விளையாடு-வில் ஜோதிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொள்வார். இதில் கமல் முரண்பட்டிருந்தால் கௌதம்மேனன் மாட்டேன் என சொல்லியிருக்கமாட்டார். ஆண், பெண் மறுமணத்துக்கான் அழகான கவிதை அது. 

புத்தங்களை படிக்கவேண்டும் என வலியுறுத்துபவர். 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியில் ஜெயமோகனின் 'அறம்' புத்தகத்தை, பிரகாஷ்ராஜுக்கு பரிசாக தந்ததனால் 'அறம்' அனைவரும் அதிகளவில் படிக்கும் புத்தகம் ஆனது. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் கிடைத்த பரிசுத்தொகை 50 லட்சத்தைக்கூட 'பெற்றால்தான் பிள்ளையா' அறக்கட்டளைக்கு கொடுத்து தன் சமூகப்பொறுப்பை காட்டினார். அவருடைய நற்பணி இயக்கங்கள் செய்துவரும் நற்பணிகள் ஏராளம். பாபநாசம் படப்பிடிப்பில் கூட அந்த பகுதி சமூக ஆர்வலர்களை தேடிப்போய் சந்திக்கிறார். கமலின் பிளஸ் என்பது வெற்றியோ, தோல்வியோ எதிலும் தேங்கிவிடாமல் ஆற்று நீரைப்போல் நிற்காமல் ஓடிக்கொண்டிருப்பதுதான். பாபநாசம் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்காமல் 'தூங்கவனம்' முடித்து விட்டார். br />
       

தற்போதைய தமிழ் சினிமாவில் 1965க்கும், 2015க்கும் இடையிலான தமிழ் சினிமாவின் அப்டேட்டட் அறிவுப்பாலமாக இருப்பது கமல் மட்டுமே. சில குறைகள், சில விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ் சினிமாவின் உண்மையான கதாநாயகன் கமல் மட்டுமே.

யெஸ் தி ரியல் 'ஆளவந்தான்'!