Monetize Your Website or Blog

Showing posts with label மாடித்தோட்டம். Show all posts
Showing posts with label மாடித்தோட்டம். Show all posts

Saturday, 19 March 2016

அமைதி! ஆரோக்கியம்! மூலிகை இல்லம்

வீட்டைவிட்டு வெளியே வந்தாலே, டென்ஷன். அப்படி எனில், வீடாவது அமைதியைத் தர வேண்டும்தானே? ‘‘இருப்பதோ ரெண்டு ரூம். இதுல, எப்பப் பாரு டி.வி வேற, டென்ஷன் இல்லாமல் இருக்கணும்னா கிராமத்துக்குத்தான் போகணும்’’ என்பார்கள். நகரங்களில் டென்ஷன் இயல்பு, கிராமங்களில்தான் அமைதி கிடைக்கும் என்பது, பொதுவான மனநிலை. வீட்டையே தோட்டமாக மாற்றினால், கிராமங்களின் அமைதியை, நகரங்களிலும் சாத்தியப்படுத்தலாம். அவை மூலிகைத் தோட்டமாக இருந்தால், ஆரோக்கியமும் போனஸ். ஆரோக்கிய வீடுகளுக்கு வழிகாட்டுகிறது இந்தப் பக்கம்...
வெந்தயக் கீரை
10 நாட்களில் வளர்ந்துவிடும். இதை உட்கொண்டால், உடல் குளிர்ச்சி அடையும். அல்சர் பிரச்னை குறையும். மோருடன் வெந்தயக் கீரை சாற்றைக் கலந்து குடித்தால், தொண்டை முதல் குடல் வரை நன்மையை உண்டாக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

புதினா
புதினா இலைகளைப் பயன்படுத்தும்போது, அதன் தண்டுகளைத் தூக்கி எறியாமல், தொட்டியில் நட்டு வைத்தாலே போதும், வளர்ந்துவிடும். புதினாவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. நார்ச்சத்து நிறைந்தது. வாய் துர்நாற்றத்தைப் போக்கி, பசியைத் தூண்டும். புதினா இலையில் டீ தயாரித்தும் அருந்தலாம்.
துளசி / மின்ட் துளசி
உணவு செரிக்காமல் போனால், நான்கு துளசி இலைகளைச் சாப்பிடலாம். செரிமானத்தைத் தரும்.  பசியைத் தூண்டும். தினமும் ஒரு துளசி இலையை, டீ அல்லது பழச்சாறுடன் கலந்து சாப்பிட, நோய்கள் அருகே வராது.  நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். சளி, இருமல், கிருமித் தொற்று போன்றவற்றைக் குணமாக்கும். துளசி வகையில் ஒன்றான மின்ட் துளசிக்கும் இதே பலன்தான். உடலுக்குக் குளிர்ச்சியையும் புத்துணர்வையும் தரும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.
மணத்தக்காளி
மணத்தக்காளி செடியை வெட்டி, தொட்டியில் வைத்தாலே, வளர்ந்துவிடும். வாய்ப்புண், வயிற்றுப்புண்ணுக்குச் சிறந்த மருந்து. நச்சுக்களை நீக்கும். மணத்தக்காளி பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, மலச்சிக்கல் பிரச்னை தீரும். நல்ல தூக்கத்தைத் தரும்.
லெமன் கிராஸ்
புல் போன்று இருக்கும் இந்தச் செடியில் ஒரு இலையைக் கிள்ளி, கசக்கி முகர்ந்தால் எலுமிச்சை வாசனை வரும். இதன் வாசனை கொசுக்களுக்குப் பிடிக்காது என்பதால், கொசுக்கள் வீட்டினுள் வராது. உணவு செரிக்காமல் அவதிப்படுவோர், லெமன் கிராஸை வெந்நீரில் போட்டு, கஷாயமாகக் குடிக்க, உடனடி பலன் கிடைக்கும். பால் கலக்காத டீயில் சேர்த்துக் குடிக்கலாம். சுவை அருமையாக இருக்கும்.
கொத்தமல்லி
நாட்டு தனியாவை தரையில் தேய்த்து, பின், மண்ணில்  புதைத்தால் 10 நாட்களிலே கொத்தமல்லி வளர்ந்துவிடும். தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளலாம். கொத்தமல்லியைச் சாறாகவோ,கஷாயமாகவோ குடித்தால், நச்சுக்கள் நீங்கும். கல்லீரல் சுத்தமாகி, பலப்படும். பூஞ்சைத் தொற்றுக்களைப் போக்கும். கொத்தமல்லி இலைகளை அரைத்து, தேன் கலந்து, பூசினால் சருமத் தொற்றுக்கள் குணமாகும்.

கற்றாழை
இளமையைப் பராமரிக்கும் மூலிகை. சருமத்தின் மிகச்சிறந்த மாய்ஸ்சரைசர். தோல் சீவி, கற்றாழையின் சதைப்பகுதியை  மட்டும் எடுத்து, நன்றாகக் கழுவி, மோர் அல்லது கருப்பட்டியுடன் சாப்பிட்டுவர, கர்ப்பப்பை  தொடர்பான பிரச்னைகள் தீரும். உடல் வெப்பம், வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும். சைனஸ், ஒற்றைத் தலைவலி இருப்பவர்கள், கற்றாழையைச் சருமத்திலோ, கூந்தலிலோ பூசுவதைத் தவிர்க்க வேண்டும்.
கற்பூரவல்லி
குழந்தைகள் இருக்கும் வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகை. அடிக்கடி சளி, இருமல், நெஞ்சுச் சளி வந்தால், கொழுந்து இலையாகப் பறித்து, ஒரு கல் உப்புடன் கலந்து மெல்லலாம். காலை வேளையில் சாப்பிட வேண்டும். இரவில் சாப்பிட்டால், தூங்கவிடாமல் சளி வந்துகொண்டே இருக்கும்.

பிரண்டை
மூலநோய், மூட்டுப் பிரச்னை இருப்பவர்களுக்கு அருமருந்து. வளர்க்க எந்தவிதப் பராமரிப்பும் தேவை இல்லை. பிரண்டையை, நெய் அல்லது நல்லெண்ணெயில் வதக்கிச் சாப்பிட வேண்டும். வயதானவர்கள் இருக்கும் வீட்டில், பிரண்டைச் செடி அவசியம் இருக்க வேண்டும்.   
அருகம்புல்
உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இது ஒரு எனர்ஜி பூஸ்டரும்கூட. காலையில் ஜூஸாகக் குடித்துவர, வயிறு சுத்தமாகும். நச்சுக்கள், கழிவுகள் வெளியேறும். ரத்தசோகைப் பிரச்னை தீரும்.
கீழாநெல்லி
மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும். அடிக்கடி சாப்பிடக் கூடாது.  மாதம் இருமுறை சாப்பிடலாம். சிறுநீரகப் பாதிப்பு, சிறுநீர் கடுப்பு, சிறுநீர் வராமல் இருக்கும் தொந்தரவுக்கு, கீழாநெல்லி சூப் சாப்பிடலாம். அதிகக் கசப்புச் சுவை கொண்டது. கல்லீரலைச் சுத்தம் செய்யும்.
தூதுவளை
இந்தக் கீரையில் கால்சியம் அதிகம் இருப்பதால், எலும்பு, பற்கள் தொடர்பான பிரச்னைகள் சரியாகும். இருமல், சளி, ஆஸ்துமா இருப்பவர்கள், ரசமாகச் செய்து குடிக்கலாம். கை, கால் நடுக்கத்துக்கு அருமருந்து. நரம்பு தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும். மலச்சிக்கலைப் போக்கும்.
வெற்றிலை
வெற்றிலையை வளர்க்க கொஞ்சம் ஈரப்பதம் அவசியம். செரிமானத்துக்கு உதவும். உணவில் துவர்ப்புச் சுவை இல்லாததை உணவுக்குப் பிறகு, சாப்பிடும் வெற்றிலை ஈடு செய்யும். பூச்சிகள் கடித்தால், வெற்றிலையும் மிளகும் சேர்த்துச் சாப்பிட, விஷத்தை முறிக்கும். 
திருநீற்றுப்பச்சிலை
சருமத்தில் ஏற்படும் புண்களுக்குச் சிறந்த மருந்து. பெரிய அளவில் சீழ் கோர்த்த கட்டிகள், விஷப் புண்களையும் சரியாக்கும். திருநீற்றுபச்சிலையைக் கசக்கி, பருக்கள், கட்டிகளின் மேல் தடவலாம். இலைகளை மிக்ஸியில் அரைத்தால், அதன் சூடும் வேகமும் சத்துக்களை நீக்கிவிடும். உரலில் இடித்து, சாற்றை சருமத்தில் பூச வேண்டும்.

சிறியாநங்கை
சிறியாநங்கைச் செடியை வளர்த்தால், விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் வராது. ஏதாவது விஷக்கடி ஏற்பட்டாலும், அதன் மேல் சிறியாநங்கையின் இலைகளைக் கசக்கித் தேய்க்கலாம்.  இந்த இலைகள் கசப்புச் சுவையைத் தரும். இரண்டு நாள் வரை அந்தக் கசப்பின் சுவை நாக்கிலே இருக்கும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.


Thursday, 25 February 2016

மூலிகை வனம்

மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்க, இயற்கையே உருவாக்கிக் கொடுத்த அருமருந்துகள்தான்மூலிகைகள். பூமி முழுக்க அந்தந்தப் பகுதியின் தட்பவெப்பம், தாக்கும் நோய்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப,இயற்கையின் ஏற்பாட்டில் அந்தந்தப் பகுதியில் மட்டுமே சிறப்பாக விளைந்து கொண்டிருக்கின்றனஇந்த மூலிகைகள். இப்படி இயற்கையே அனைத்துக்கும் அற்புதத் தீர்வுகளை நம்முடனேயே பிறக்கவைத்திருக்கிறது. ஆனால், மனிதனின் ஆசையும், வேகமும் இயற்கை மீதான புரிதல்களைத்தடுத்துவிட, வேறு எதையோ நோக்கி நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால், உண்மை புரிந்துமூலிகைகளின் பக்கம் கவனத்தைத் திருப்பும்போது... அவற்றைப் பறிப்பதற்குக்கூட தெம்பில்லாமல்சுருண்டு போய்விடுகிறோம்... வயது காரணமாக!

மூலிகைகள், மனிதர்களுக்காக மட்டும் படைக்கப்படவில்லை. ஆடு, மாடு, நாய், பூனை, கோழி இன்னபிற ஜீவராசிகளுக்கும் சேர்த்தேதான் படைக்கப்பட்டுள்ளன. தேவை என்று வரும்போது, காடு, மலைஎன அவற்றுக்காக அலையக் கூடாது என்பதற்காகவே... புறக்கடை, வாய்க்கால், வரப்பு, சுடுகாடு,தெருவோரங்கள்... எனக் காணும் இடங்களில்எல்லாம் மலிந்து கிடக்கின்றன மூலிகைகள்.நோயோடும், ரூபாய் நோட்டோடும் மருத்துவமனை நோக்கி ஓடும் நோயாளிகளைப் பார்த்து, 'உனக்கான தீர்வு நான்தான். உனது காலடியிலேயே இருக்கிறேன்’ என அழைக்கின்றன. ஆனால்,காலடியில் கிடக்கும் காயகல்பங்களான மூலிகைகளை விட்டுவிட்டு, மருத்துவமனைகளில்மணிக்கணக்கில் காத்திருந்து, வந்த நோயை விரட்டுவதற்கு பதிலாக, இலவச இணைப்பாக இன்னும்சில நோய்களையும் சேர்த்துக் கொண்டு வீடு திரும்புகிறோம்!

 மூலிகைகளே முதலுதவிப் பெட்டிகள்!

பொங்கல் பண்டிகையின்போது வீடுகளுக்கு வெள்ளையடித்து, 'காப்புக் கட்டுதல்’ என்ற சடங்கைநடத்துவது வழக்கம். ஆவாரை, கார்த்திகைப்பூ என்ற சிறுபீளை, வேப்பிலை இந்த மூன்றுமூலிகைகளையும் ஒரு கொத்தாகக் கட்டி, வீட்டு முற்றத்தில் செருகி வைப்பார்கள். ஏன் தெரியுமா?அதுதான் அந்தக் காலத்தில் முதலுதவிப் பெட்டி. ஒவ்வொரு மூலிகையும் ஒவ்வொரு குணமுடையது.ஆபத்து நேரங்களில் அங்கிங்கு அலையாமல் சட்டென எடுத்துப் பயன்படுத்தவே 'காப்புக் கட்டு’ என்றபெயரில் பழக்கப்படுத்தினார்கள். காலப்போக்கில் அது வெறும் சடங்காகிப் போனது... நம் துரதிர்ஷ்டம்.அப்படி மறந்து போன மூலிகைகள் பற்றிய புரிதலை உண்டாக்குவதற்காகவே இங்கே மலர்கிறது'மூலிகை வனம்’ என்ற புதிய தொடர். இதழ்தோறும் ஒவ்வொரு மூலிகையின் மணம் உங்கள் நாசிகளைவருடும். இனி, செலவில்லாத மருந்து, உங்கள் இல்லத்திலேயே...

ஆவாரை!
புராணங்களில் சொல்வதுபோல் ஏழு கடல், ஏழு மலைகளுக்கு அப்பால் கிடைப்பதல்ல மூலிகைகள்.சாதாரணமாக, நாம் அன்றாடம் கடந்து செல்லும் பாதையில், கைக்கெட்டும் தூரத்திலேயேஆயிரக்கணக்கான மூலிகைகள் இருக்கின்றன. அந்த வகையில், தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் மஞ்சள் நிறப் பூக்களுடன் புன்னகைப்பவை... ஆவாரை. வறண்ட நிலத்தில் தான்வளர்ந்தாலும், மனிதர்களின் நோய்களை நீக்கி நீண்ட ஆயுளை கொடுக்கும் அற்புத மூலிகை ஆவாரை.இந்தச் செடி இருக்கும் இடங்கள்தான், உண்மையில் ஆரோக்கிய மையங்கள். இருக்கும்இடத்தைவிட்டு, இல்லாத இடம் தேடி அலையும் மனித மனதுக்கு, செலவில்லாமல் கையருகேகிடைக்கும் இதன் அருமை தெரிவதில்லை. மனித சமுதாயத்துக்கு ஆவாரை அள்ளி அள்ளித் தரும்பலன்கள் சொல்லி மாளாது.

புற்றுநோய்க்கு எதிர்ப்பாற்றல்!


கிராமங்களில் கொளுத்தும் வெயிலில் ஆடு, மாடுகளை மேய்ப்பவர்கள், வெயிலின் சூட்டைத் தவிர்க்க,ஆவாரம் இலைகளை தலையில் வைத்துக் கட்டிக் கொள்வார்கள். இக்காட்சியை இன்றைக்கும்பார்க்கலாம். சூட்டிலிருந்து உடலைக் காத்து குளிர்ச்சியை அளிப்பதில் ஆவாரையின் பங்குஅலாதியானது. உலகை உலுக்கும் கொடிய நோய்களான புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்இரண்டுக்கும் எதிரான ஆற்றல் கொண்டது, ஆவாரை. அதனால்தான் உலகின் பல நாடுகளில்கேன்சருக்கான சின்னங்களில் ஆவாரம் பூ இடம் பிடித்திருக்கிறது. குறிப்பாக, 'கனடா கேன்சர்சொசைட்டி’ சின்னத்தில்இதைத் தெளிவாகப் பார்க்கலாம். உலகின் பல நாடுகளில் விளையும்ஆவாரையைவிட, நம் மண்ணில் விளையும் ஆவாரைக்கு ஆற்றல் அதிகம் என்கிறார்கள்.  

ஆவாரை நீர்!

இன்றைக்கு தேநீர் அருந்தாமல் நம்மால் இருக்க முடியவில்லை. அதனால், உடல் ஆரோக்கியத்துக்குஎந்தப் பலனும் இல்லை. பணம் செலவாவதுதான் மிச்சம். ஆனால், அதைவிட ருசியான, மிகமிகசெலவு குறைந்த, ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆவாரை நீரைப் பருகிப் பாருங்கள். பிறகு, அதைமட்டும்தான் பருகுவீர்கள். கையளவு ஆவாரம் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி,அதனுடன் தேன் அல்லது பனங்கருப்பட்டி கலந்து அருந்தினால்... உடல் புத்துணர்ச்சி பெறுவதுடன்,சரும நோய்களும் குணமாகும் என்கிறது, சித்த மருத்துவம்.

'கிரீன் டீ’ என்ற பெயரில் இன்றைக்கு அதிகமாக விற்பனையாகும் தேநீரை விட, ஆயிரம் மடங்குஅற்புதமானது, ஆவாரை நீர். இது மட்டுமல்ல... ஆவாரை இலையைப் பறித்து, கல்லில் வைத்து அரைகுறையாகத் தட்டி, தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு, கண்களின் வழியே வெளியேறுவதைஉணர முடியும். தலை முடி வளர, உடலை மினுமினுப்பாக்க, உடல் துர்நாற்றத்தைத் துரத்த... எனஅனைத்துக்கும் ஆவாரை பயன்படுவதால் இதனை, 'சகலநோய் தீர்க்கும் சர்வரோக நிவாரணி’என்கிறார்கள்.

இவ்வளவு அற்புதங்களைச் செய்வதால்தான் 'ஆவாரை பூத்திருக்க, சாவாரைக் கண்டதுண்டோ’ எனச்சொல்லி வைத்தார்களோ நம் முன்னோர்கள். இனிஆவாரையை ஆராதிப்போம்.

 கிலோ 10 ரூபாய்!
மூலிகைச் செடிகளை வாங்கி விற்பனை செய்து வரும் விருதுநகரைச் சேர்ந்த கருப்பையா, ''கிராமங்கள்ல காடுகள்ல தானா முளைச்சிருக்கிற ஆவாரம் பூவை பறிச்சுட்டு வந்து விக்குறத, சிலருதொழிலா செய்றாக. காய்ஞ்ச ஆவாரம் பூவை, போன வருஷம் கிலோ 20 ரூபாய்னு வாங்கினோம். இப்பமழையில்லாததால ரொம்ப பேரு இந்தத் தொழில்ல இறங்கிட்டாங்க. அதனால, வரத்து அதிகமாஇருக்கு. கிலோ 10 ரூபாய்க்கு வாங்குறோம். இதை, குளியல் பொடி செய்றதுக்கும், சர்க்கரைநோய்க்கான மருந்து தயாரிக்கவும் வாங்கிட்டுப் போறாங்க'' என்கிறார்.

சர்க்கரை கட்டுக்குள் வரும்!
 ஆவாரையின் மகத்துவத்தைப் பேசிய கோயம்புத்தூரைச் சேர்ந்த சுவாமி சுந்தரானந்தர், ''பூகாய்,இலைபட்டைவேர் ஆகிய ஐந்தும் சேர்ந்ததை 'ஆவாரைப் பஞ்சாங்கம்’ என்கிறார்கள்இவற்றை சமஅளவு எடுத்துபொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி அளவு வாயில் போட்டுவெந்நீர் பருகி வந்தால்... நீரிழிவுஉடல் சோர்வுநா வறட்சிதூக்கமின்மை போன்ற பல நோய்கள்குணமாகும்.


ஆவாரம் பூவின் இதழ்களை நிழலில் காயவைத்து, பொடியாக்கி, கஷாயம் செய்து அருந்தி வந்தால்...சர்க்கரை கட்டுக்குள் வரும். ஆவாரம் பூ, குப்பைமேனி இலை, பூவரசு இலை, செம்பருத்தி இலை ஆகியநான்கையும் சமஅளவு எடுத்து அரைத்து, முழங்காலுக்கு கீழே பூசி வந்தால்... நீரிழிவு நோயால்பாதிக்கப்பட்ட கால்பகுதி உணர்ச்சி பெறும்' என்றார்.


மென்பொருளி‘ல் இருந்து ‘உண்பொருள்‘ நோக்கி!

ப த்தாம் வகுப்பு படித்து விட்டாலே மடிப்பு கலையாத சட்டை, பேன்ட் போட்டு... காலரைதூக்கி விட்டுக் கொண்டு ‘கலெக்டர் வேலை பார்க்கறதுக்காகத்தான் நான் பொறந்திருக் கேன்’என்று ‘வெள்ளைச் சட்டை' வேலைக்காக அலைகிற காலமிது. ஆனால், கம்ப்யூட்டர்படித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ஒருவர், திடீரென எல்லாவற்றையும் உதறிவிட்டு, குடும்பத்தோடு நாடுதிரும்பி, பேருந்து போக்குவரத்து கூட இல்லாத குக்கிராமத்தில் நாலுமுழ வேட்டியோடுவிவசாயம் பார்த்துக் கொண்டிருக் கிறார் என்றால் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியுமா?


பெயரில் ஆத்தூர் இடம்பெற்றிருந்தாலும் அந்த ஊரிலேயே கிடைக்காத 'ஆத்தூர் கிச்சடிசம்பாவை' பொத்தி பாதுகாக்கிறார் பாலாஜி சங்கர் என்று கடந்த இதழில் படித்திருப்பீர்கள். 'அட' போட வைக்கும் அவரின் கதையை அடுத்த இதழில் பார்க்கலாம் என்றுகுறிப்பிட்டிருந்தோம். அந்த பாலாஜி சங்கர்தான் ஆச்சர்யத்துக்குரிய மனிதர்.
கோயம்புத்தூர் அருகில் இருக்கும் துடியலூரைச் சேர்ந்த பாலாஜி சங்கரின் குடும்பமேபடிப்பாளி குடும்பம்தான். பாலாஜியும் அவரின் அண்ணனும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள்.தங்கை எம்.எஸ்.சி. கணிதம். இப்படிப்பட்ட சூழலில் இருந்துதான் விவசாயம் பக்கம்பார்வையைத் திருப்பியுள்ளார் பாலாஜி.

''எல்லோருமே பாதுகாப்பான வேலை... பக்கவான சம்பளம் என்றுதான் காலத்தைநகர்த்துவார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு, எவ்வித உத்தரவாதமும் இல்லை என்றுசொல்லப்படும் விவசாயத்தை எப்படி விரும்பினீர்கள்?'' என்ற கேள்வியோடுதான் அவரைச்சந்தித்தோம். ‘‘விவசாயம்தான் உலகத்திலேயே மிகமிக பாதுகாப்பானது என்று நான்நம்புகிறேன். பல்லாயிரம் வருடங்களாக தன்னை நம்பிய எல்லோருக்கும் சாப்பாடு போட்டுவாழவைத்த இந்த பூமித்தாய், எதிர்கால சந்ததியை மட்டும் காப்பாற்றாமல் விட்டுவிடுவாளாஎன்ன? எதிர்காலத்துக்கும், போட்ட முதலுக்கும் பயமில்லாத ஒரு பாதுகாப்புவிவசாயத்தில்தான் இருக்கிறது.

பாதுகாப்பான முதலீடுகள் என்று சொல்லப்படுகிற எதில் முதலீடு செய்தாலும் அதிகபட்சம்12% வட்டி கிடைக்கும். ஆனால், விவசாயத்தில் நிச்சயமாக எந்த தப்பும் இல்லாமல்குறைந்தது 24% கிடைக்கும். 2002-ம் வருடம் நான் விவசாயத்தில் இறங்கியது முதல், இன்றுவரைக்கும் இந்த அளவு ஆதாயம் அடைந்து கொண்டு வருகிறேன். அதனால்தான்விவசாயம்தான் பாதுகாப்பானது என்று அழுத்தமாகச் சொல்கிறேன்’’ என்று சொன்னபாலாஜியை விழிகளால் நாம் வியந்து பார்த்தபடி இருக்க... கம்ப்யூட்டர் மவுஸிலிருந்துவிலகி, கழனியில் கை வைத்த கதையைச் சொல்லத் தொடங்கினார்.

‘‘ஆஸ்திரேலியாவில் இருந்தபோது, ஓய்வு நேரங்களில் நிறைய புத்தகங்கள் படிப்பேன்.ராச்சேல் கார்சன் எழுதிய 'சைலன்ட் ஸ்பிரிங்' ( Silent spring ) என்ற ஆங்கில புத்தகத்தில்,பூச்சிக் கொல்லி மருந்துகளால் ஏற்படும் தீமைகளைப் பற்றி படித்துவிட்டு, அதிர்ச்சியில்உறைந்து போனேன். அதேபோல, ஷூ மேக்கர் எழுதிய 'ஸ்மால் ஈஸ் பியூட்டிஃபுல்' ( Small is beautiful ) என்ற புத்தகமும் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்தோடு,சென்னையில் நடந்த இயற்கை விவசாய கருத்தரங்கு ஓன்றும் என்னை ரொம்பவே யோசிக்கவைத்து விட்டது.


அதன் பிறகு ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 200 விவசாயிகளை சந்தித்துப் பேசினேன்.அவர்கள் யாருமே விவசாயம் செய்து லாபமடையவில்லை என்பது என்னை வேதனைகொள்ள வைத்தது. ஏன் இந்த அவலம் என்று, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி'நம்மாழ்வாரை சந்தித்துப் பேசியபோது தான், இயற்கை விவசாயம் செய்தால் எல்லோராலும்லாபம் அடைய முடியும் என்பது புரிந்தது. அத்தோடு மண்ணின் வளத்தையும் காப்பாற்றிஎதிர்கால சந்ததிக்கும் அதை ஒப்படைக்க முடியும் என்பதும் தெரிந்தது.

இதைப் பற்றி இன்னும் தெளிவாக தெரிந்து கொள்ள 'கிடாத்தலைமேடு' சேதுராமன்என்பவரை சந்தித்தேன். வயல், வீடு, கொல்லை என்றே வாழ்பவர் அவர். அவரிடம் நேரடிஅனுபவம் பெற்றேன். இயற்கை விவசாயம் செய்து லாபம் பெற முடியும் என்பதைவார்த்தைகளால் உலகுக்குச் சொல்வதை விட, வாழ்ந்தே சொல்லி விடலாம் என்றுமுடிவெடுத்து நானே விவசாயத்தில் இறங்கினேன்’’ என்று சொல்லி, தன்னுடைய வயலில்நடக்க ஆரம்பித்தார்.


தமிழ்நாடு முழுவதும் அலைந்து திரிந்து... நிலத்தின் விலை, நீர்வளம், தொழிலாளர் வளம்என எல்லாம் ஒட்டுமொத்தமாக அமையும் இடமாக தேடியிருக்கிறார். மயிலாடுதுறைஅருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோவில் நகரிலிருந்து மேற்கே பத்தாவது கிலோ மீட்டரில்உள்ள மேலாநல்லூர் கிராமத்தைத் தேர்வு செய்திருக்கிறார்.

இரண்டு ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி விவசாயத்தை ஆரம்பித்தவர், இப்போது பத்துஏக்கராக வளர்த்திருக்கிறார். முழுக்க இயற்கை விவசாயம்தான். வயலில் விளையும்பொருட்களைக் கொண்டே 'கம்போஸ்ட்' உரம் தயாரித்து வயலுக்கு போடுகிறார். ஏக்கருக்கு1,500 கிலோ வரை நெல்லில் மகசூல் செய்கிறாராம். பெரும்பாலும் பாரம்பரியவிதைகளையே தேடிபிடித்து பயிர் செய்கிறார். தானே அரிசியாக அரைத்து விற்பனைசெய்கிறார். சென்னையில் இருக்கும் இவரின் நண்பர்கள் வீட்டு உலையில் கொதிப்பது...இவருடைய வயலில் விளைந்த அரிசிதான்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு தமிழகம் முழுக்க விவசாயிகளைத் தேடிப்பிடித்துசந்தேகங்களுக்கு தெளிவு பெற்ற பாலாஜியை நோக்கி, இப்போது விவசாயிகள் தேடி வந்தவண்ணம் இருக்கிறார்கள் தங்களின் சந்தேகங்களை போக்கிக்கொள்ள.
‘‘நம்மால் முடிந்தவரை எல்லோருக்கும் பாதுகாப்பான உணவைத் தருகிறோம் என்கிறபோதுஏற்படுகிற திருப்தி, மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் போது கூடகிடைக்கவில்லை. இப்பவும் நான் விவசாயிகளுக்கு என்ன சொல்கிறேன் என்றால், ஒருஏக்கர் நிலம் இருந்தால் அதைவைத்து ஒரு குடும்பம் நிம்மதியாக நன்றாக வாழ முடியும்.இயற்கை விவசாய முறையில் செலவில்லாம விவசாயம் செய்யவேண்டும்...அவ்வளவுதான். ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனி தொழில் நுட்பம் தேவைப்படாது. எல்லாமண்ணிலும் எல்லா பயிரும் பண்ண முடியும். எல்லாவற்றையும் மண்ணே பார்த்துக்கொள்ளும்’’ என்று சொல்லும் பாலாஜி, தன் மனைவி காயத்ரியை நினைத்துதான் நெகிழ்ந்துபோகிறார்.

''சென்னையில் பிறந்து வளர்ந்தவர். ஆஸ்திரேலியாவில் பெரிய நகரத்தில வாழ்ந்தவர்.மாதம் மாதம் ஒன்றரை லட்ச ரூபாயை செலவழித்து குடும்பம் நடத்தியவர். இப்போதுஎன்னுடன் இந்தச் சின்ன கிராமத்தில் சின்ன வீட்டில் மாதம் பத்தாயிரம் ரூபாய் செலவில்குடும்பத்தை நடத்துகிறார். அவங்க மட்டும் ஒத்துழைப்பு கொடுக்காமல் போயிருந்தால்,ஏதோ ஒரு நாட்டில் எந்திரத்தனமாக வேலை பார்த்துக் கொண்டு, செயற்கையானவாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்திருப்பேன்.

பொய்யில்லாத ஒரு வாழ்க்கை, கட்டுப்பாடில்லாத ஒரு சுதந்திரம், ஆரோக்யமானஉடல்நலம், எதிர்கால சந்ததிக்கு ஒரு நல்ல அடித்தளம் என என்னால் வாழ முடிவதற்குமுக்கிய காரணமே காயத்ரிதான்'' என்று சொன்ன பாலாஜி,

''திட்டமிட்டு காரியங்களை செய்ய ஆரம்பித்து விட்டால், கிராமத்திலிருந்து நகரம் நோக்கிவேலைவாய்ப்புக்கு செல்லும் தற்போதைய நிலை மாறும். கிராமத்தில் அவ்வளவு வேலைவாய்ப்பு ஏற்படும். என்னை போல் வெளிநாட்டுக்கு சென்ற பலரும் தாய் நாட்டுக்குதிரும்புவார்கள். இன்னும் சொல்லப் போனால், மற்ற நாட்டவர்க்கு நாம் வேலைக்காக விசாகொடுக்கலாம். அதற்கு அரசும் விவசாயிகளும்தான் மனது வைக்க வேண்டும்’’ என்றுசொல்லி விடை கொடுத்தார்.
எதையுமே நம்ப முடியாத நிலையில், நம்மை நாமே கிள்ளிப்பார்த்துக் கொண்டுதான்அங்கிருந்து கிளம்பினோம்.


பாலாஜி, தற்போது வைத்திருக்கும் நிலத்தில் சில பகுதிகள் அந்தக் காலத்தில் நந்தனாரின்முதலாளிக்குச் சொந்தமானவையாம். பாலாஜியின் நிலத்துக்குப் பக்கத்தில் 'பத்துக் கட்டு'என்ற பெயருடன் கூடிய நிலப் பகுதி பரமநாதன் பிள்ளை என்பவரிடம் உள்ளது. இதுவும்நந்தனாரின் முதலாளிக்குச் சொந்தமாக இருந்ததாம்.

சிதம்பரம் கோயிலுக்குப் போகவேண்டும் என்று நந்தனார்
சொன்னபோது, 'பத்துக் கட்டு நாத்தையும் நட்டுட்டு போ' என்று முதலாளி உத்தரவிட,நொந்து போய்விடுவார் நந்தனார். பத்துக் கட்டு நாற்றுகளை கிட்டத்தட்ட ஒரு ஏக்கரில் நடவுசெய்ய முடியும். நந்தனாரின் வாட்டத்தைப் போக்க, பூத கணங்களை விட்டு இரவோடுஇரவாக இறைவனே நடவு செய்தார் என்பது புராணம். அதனாலேயே 'பத்துக் கட்டு' என்றபெயரில் இன்றும் அந்தப் பகுதி அழைக்கப்படுகிறதாம்.


Tuesday, 16 February 2016

இளமையை காக்கும் துளசி...இன்னும் பல நோய்களை தீர்க்கும்!

நந்தவனத்தில் எத்தனைச் செடிகள் இருந்தாலும், அது நந்தவனமாகாது. அதே நேரத்தில் ஒரு துளசி செடி மட்டுமே இருந்தாலும் அது நந்தவனம் ஆகிவிடும் என்கிறது வேதம். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தை. 300க்கும் மேற்பட்ட துளசி வகைகள் இருந்தாலும், வெண்துளசியைத்தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். 

மூலிகைகளின் அரசி!

‘துளசி இலை நல்லது..அதை சாப்பிட்டா சளிப் போயிடும்...’ என்ற ஒற்றை சொல்லில் அலட்சியப்படுத்தும் துளசி, கட்டுப்படுத்தும் நோய்களின் எண்ணிக்கை ஓராயிரம். அதனால்தான் இதனை ‘மூலிகைகளின் அரசி’ என்கிறார்கள். நோய் வருமுன் காத்து, வந்த நோயை விரட்டி, எதிர்காலத்திலும் நோய் வராத அளவுக்கு எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது.

நாம் நினைப்பதுப் போல நோய் நிவாரணி மட்டுமல்ல.. சுற்றுச்சூழலிலும் இதன் பங்கு மகத்தானது. காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும் அற்புத பணியை செய்கிறது. இந்த பணியை பெரும்பாலான தாவரங்கள் செய்தாலும், துளசிக்கும் மற்ற தாவரங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. துளசியிலுள்ள மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களால் வளிமண்டலத்திலுள்ள புகைக் கிருமிகள் போன்ற மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. அதனால் சுத்தமான காற்று கிடைக்கிறது. துளசி, அதிகம் உள்ள இடங்களில் கொசுக்கள் வராது. 

காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து!

மாதம் ஒரு பெயரில் புதுப்புது காய்ச்சல் வந்துக்கொண்டே இருக்கிறது... ஒவ்வொரு காய்ச்சலுக்கும் பெயர் வைப்பதில் காட்டும் வேகம், நிவாரண நடவடிக்கைகளில் காட்டுவதில்லை. ஆனால், இதுவரை வந்த காய்ச்சல், இனி வரப்போகும் காய்ச்சல் என எந்த காய்ச்சலாக இருந்தாலும், துளசியிடம் இருக்கிறது தீர்வு. இதை உலகளவில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஏற்கனவே வைரஸ் காய்ச்சல், ஜப்பானியர்கள், என்செபலாடிடிஸ் எனப்படும் மூளைக்காய்ச்சல் ஆகியவற்றுக்கு துளசியைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். ‘‘10 துளசி இலையுடன் 5 மிளகை நசுக்கி, 2 டம்ளர்  நீர்விட்டு, அரை டம்ளர் சுண்டும்படி காய்ச்சி, குடித்து விட்டு, சிறிது எலுமிச்சை சாறை அருந்தி, கம்பளிக் கொண்டு உடம்பு முழுக்க மூடிக்கொண்டு படுத்தால் மலேரியா காய்ச்சல் கூட படிப்படியாக குறையும்’’ என்கிறது சித்த மருத்துவம்.

இருமலை இல்லாமல் செய்துவிடும்!

சளித்தொல்லைக்கான நிவாரணத்தையும் தன்னுள் வைத்துள்ளது துளசி. உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றுவதுடன், உடலில் உள்வெப்பத்தை ஆற்றும் குணமும் இதற்கு உண்டு. துளசி சாறுடன் கொஞ்சம் தேன் கலந்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும். இருமல், சளி, ஜலதோஷம் உள்ளிட்டவைகளுக்கு இலவசமாக கிடைக்கும் அருமருந்து துளசி. இருமலைக் கட்டுப்படுத்தும் யூஜினால் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதில் உள்ளன. 

ரத்த அழுத்தம் குறையும்!

இன்றைக்கு முக்கிய நோய்களாக மூன்றை சொல்லலாம். 'நீரிழிவு' என்ற சர்க்கரை நோய், 'ஒபிசிட்டி' என்ற உடல் பருமன், 'பிளட் பிரசர்' என்ற ரத்த அழுத்தம். இவை மூன்றில் ஒன்று நம்மில் பலருக்கும் இருக்கிறது. தினமும் சில துளசி இலைகளை மென்று தின்றாலே சர்க்கரையின் அளவு கட்டுப்படும். எடையைக் குறைக்க, எத்தனை தூரம் ஓடினாலும், நடந்தாலும், ‘நான் வளர்கிறேனே மம்மி’ என ஊட்டச்சத்து குடித்த குழந்தைப் போல தொப்பை மட்டும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து, ஆயிரக்கணக்கான பணத்தை செலவழித்து எது எதையோ வாங்கி சாப்பிட்டும் பயனில்லை என புலம்புபவர்களுக்கான தீர்வும் துளசியிடத்தில் இருக்கிறது. துளசி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடுபடுத்தி, சிறிது தேன் கலந்து உணவுக்கு பின்பு உட்கொண்டு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை குறையும். துளசி இலை, முற்றிய முருங்கை இலைகளை சம அளவு எடுத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றில் 50 மில்லி எடுத்து, 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை இருவேளையும் 48 நாட்கள் உண்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும். இதை சாப்பிடும் காலத்தில் உப்பு, புளி, காரம் குறைக்க வேண்டும்.

தோல் நோய் தொல்லை, இனி இல்லை!

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு விழுது போல் அரைத்து, தோல் நோய்களுக்கு பற்றுப் போடலாம். இதனால் சொரி, சிரங்கு போன்றவை குணமாகும். துளசி இலையுடன், அம்மான் பச்சரிசி இலையை சம அளவு எடுத்து அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவினால் முகப்பரு மறையும்’’ என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.


என்றும் இளைமை!

இவையெல்லாம் விட, என்றும் இளமையுடன் திகழ உதவுகிறது துளசி நீர். சுத்தமான செம்பு பாத்திரத்தில், கொஞ்சம் நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி துளசியைப் போட்டு 8 மணி நேரம் மூடி வைத்து பின்பு அந்த நீரைக் குடிக்க வேண்டும். இதை வெறும் வயிற்றில் 48 நாட்கள் செய்து வந்தாலே எந்த நோயும் அண்டாது. அத்துடன் தோல்சுருக்கம் நீங்கி, நரம்புகள் பலப்படும். பார்வை குறைபாடு நீங்கும். 

உடலுக்கான கிருமிநாசினி!

துளசி அதி அற்புதமான கிருமிநாசினி. வீட்டுக்கு கிருமிநாசினி பயன்படுத்துவதுப் போல மனித உடலுக்கான கிருமிநாசினியாக பயன்படுகிறது துளசி. ஆனால், நாம் தான் பயன்படுத்துவதில் அக்கறைக்காட்டுவதில்லை. தினமும் துளசி இலையை மென்று சாறை விழுங்கி வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பல பிரச்னைகள் வாழ்நாள் முழுக்க வரவே வராது. வாய் துர்நாற்றம் இருக்கவே இருக்காது. ‘உடலில் வியர்வை வாடை போகவே மாட்டேங்குது’ என கவலைப்படுபவர்கள், குளிக்கும் நீரில் முதல் நாளே துளசி இலைகளை ஊறவைத்தால், வியர்வை துர்நாற்றம் போய் உடல் மணக்கும்.

மொத்தத்தில் துளசி இலையை தினமும் மென்று தின்பதனாலும், குடிநீரில் போட்டு குடிப்பதனாலும் அனேக நோய்களை விரட்டலாம் என்கிறது சித்த மருத்துவம்.


Saturday, 6 February 2016

மின்வெட்டுப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி... 80% மானியத்தில் சோலார் பம்ப்செட்டுகள் !

'உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால், மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி’ என்பார்கள். அதேபோல ஆட்கள் பிரச்னையும், மின்சாரப் பிரச்னையும் விவசாயிகளை வாட்டி வதைக்கின்றன. மேற்படி பிரச்னைகளுக்குத் தீர்வு காணும்விதமாக, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. குறிப்பாக, மின் வெட்டுப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக... மாநிலம் முழுவதும் 80% மானியத்தில் சோலார் (சூரியசக்தி) பம்ப்செட்களை அமைத்துக் கொடுத்து வருகிறது, அரசு (இதைப் பற்றி, 'சோலார் பம்ப்செட்டுக்கு 80% மானியம்... வாரிக் கொடுக்கும், பொறியியல் துறை...’ என்ற தலைப்பில் 10.5.2014 தேதியிட்ட இதழில் எழுதி இருக்கிறோம்).
நடைமுறையில் இத்திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்துகொள்வதற்காக, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகிலுள்ள, இரும்பேடு கிராமத்தில், சோலார் பம்ப்செட் அமைத்திருக்கும் சிவானந்தத்தைச் சந்தித்தோம். சோலார் பம்ப்செட்டை இயக்கிக் காட்டிவிட்டு, பேச ஆரம்பித்தார், சிவானந்தம்.

''பத்தாவது வரைக்கும் படிச்சுட்டு, அப்பாகூட விவசாயத்துல இறங்கிட்டேன். நெல், கரும்பு, மணிலானு பல பயிர்களை சாகுபடி செஞ்சதுல ஓரளவுக்கு வருமானம் கிடைச்சுது. வேளாண்மைத்துறை அதிகாரிகளோட அறிமுகம் கிடைச்சப்போ அவங்க சொன்ன முறைகள்ல நெல், மணிலா, கோலியஸ், சூரியகாந்தி மாதிரியான பயிர்களை சாகுபடி செஞ்சேன். விளைச்சல் அதிகமா இருந்தாலும், விலை குறைவா இருந்ததால, பெரிய லாபமில்லை. அதனால, உரம், பூச்சிக்கொல்லி செலவைக் குறைக்கிறதுக்காக இயற்கை விவசாயத்துக்கு கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு இருக்கேன்'' என்று முன்னுரை கொடுத்த சிவானந்தம், தண்ணீர் பிரச்னை பற்றிப் பேச ஆரம்பித்தார்.
''பாகப்பிரிவினையில எனக்கு 8 ஏக்கர் நிலம் கிடைச்சுது. விவசாயத்துல போதுமான வருமானம் கிடைக்காததால வீட்டுப் பிரச்னைகளை சமாளிக்கறதுக்காக, 3 ஏக்கரை விற்பனை செய்துட்டேன். 5 ஏக்கர்தான் கையில இருக்கு. ஒரு காலத்துல, இங்க இருக்கற கமண்டல நாக நதியில தண்ணி வரும். அது எங்க கிராமத்துல இருக்குற ஏரியில நிரம்பி, வாய்க்கால் மூலமா பாசனம் நடந்துச்சு. வாய்க்கால்ல தண்ணி குறையவும் 50 அடி ஆழத்துக்கு கிணறு வெட்டியிருந்தார் எங்கப்பா. அதுல, 15 அடியில தண்ணி இருந்துச்சு. அதை வெச்சுதான், 2 ஏக்கர்ல கரும்பு போட்டு, வெல்லம் ஆட்டி விற்பனை செஞ்சுட்டிருந்தேன். கிணத்துலயும் தண்ணி குறைய ஆரம்பிச்சுடுச்சு. அதனால, கரும்பை விட்டுட்டு நெல், மணிலானு மாறிட்டேன். கிணத்துல சுத்தமா தண்ணி இல்லாம போனதால, 2 வருஷத்துக்கு முன்ன, நிலத்துக்கு பக்கத்துலயே 85 சென்ட் நிலம் வாங்கி, 310 அடிக்கு போர்வெல் போட்டேன். அதுல 100 அடியில தண்ணீர் கிடைச்சுது. இலவச கரன்ட்டுக்காக 50 ஆயிரம் ரூபாயைக் கட்டி ரெண்டு வருஷமாகியும் கிடைக்கல.
இந்த சமயத்துலதான் வேளாண் பொறியியல்துறை மூலமா 80% மானியத்துல சோலார் பம்ப்செட் அமைச்சுக் கொடுக்கறதா தகவல் தெரிஞ்சுது. அதிகாரிகளைப் போய் பார்த்தப்ப... மீதமுள்ள 20% தொகையான 95 ஆயிரத்து 342 ரூபாய்க்கு டி.டி எடுத்துக் கொடுக்கச் சொன்னாங்க (இது பழைய விலை. தற்போது கூடியிருக்கிறது. விவரங்கள் பெட்டிச் செய்தி மற்றும் அட்டவணையில்). அதுக்கப்பறம், மார்ச் மாசம் என்னுடைய போர்வெல்லுல சோலார் பாசனத்துக்கான கருவிகளை அமைச்சுக் கொடுத்துட்டாங்க. 17 பேனல்கள் மூலமா 5,100 வாட்ஸ் வரை மின்சாரம் உற்பத்தியாகுது. இதை, பிரத்யேக கருவி மூலமா 'த்ரீ ஃபேஸா’ மாத்தி, போர்வெல்லுல இருக்குற 5 ஹெச்.பி மோட்டாரை ஓட்டிட்டு இருக்கேன். காலையில 7.30 மணியிலிருந்து, சாயந்திரம் 4.30 மணி வரை மோட்டார் ஓடுது'' என்ற சிவானந்தம்,
''இந்த சோலார் பம்ப்செட் பாசனம் மூலமா ஒண்ணரை ஏக்கர் நெல் வயலுக்கு தண்ணி பாய்ச்சலாம். சொட்டுநீர், தெளிப்புநீர் போட்டிருந்தா மூணு ஏக்கருக்கு போதுமானதா இருக்கும். கரன்ட் எப்போ வரும் நாள் முழுக்க மோட்டார் பொட்டிகிட்ட காத்துக் கிடக்குற விவசாயிகளுக்கு, சோலார் பம்ப்செட் வரப்பிரசாதம்தான்'' என்றார், மகிழ்ச்சியாக.!
தமிழக அரசின் கவனத்துக்கு...

சோலார் பம்ப்செட் பயன்படுத்தி வரும் அனுபவத்தின் மூலமாக, தமிழக அரசுக்கு சிவானந்தம் வைக்கும் கோரிக்கைகள்...
காலை மற்றும் மாலை வேளைகளில் குறைவான அளவு தண்ணீரைத்தான் பம்ப் செய்கிறது இந்த பம்ப்செட். கூடுதலாக சோலார் பேனல்களைச் சேர்த்து, கூடுதல் மின்உற்பத்திக்கு அரசு உதவினால், இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
சோலார் பேனல் மூலமாக கிடைக்கும் மின்சாரத்தின் மூலமாக மோட்டார் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று வரையறை செய்துள்ளனர். இதனால், மோட்டர் ரூமில் எரியும் மின்விளக்குகளுக்காக மட்டும், மின்வாரியத்திடம் இருந்து தனி மின் இணைப்பு அமைக்க வேண்டியிருக்கிறது. எனவே, சோலார் பேனல் மின்சாரத்தின் மூலமாகவே மின்விளக்கு எரிக்கும் வசதியையும் செய்து கொடுக்க வேண்டும்.
இலவச மின்சாரத்துக்கு விண்ணப்பித்து, பல்லாண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயி களுக்கு, சோலார் பம்ப்செட் மானியம் பெறு வதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
80% மானியம்... புதிய விலையுடன்!

5 ஹெச்.பி சோலார் பம்ப்செட் அமைப்பதற்கு சொட்டுநீர்ப் பாசனத்துடன் கிணறு அல்லது போர்வெல் இருக்கவேண்டும். தண்ணீர் 150 அடியில் கிடைக்க வேண்டும். சோலார் பேனல்கள் அமைக்க, கிணற்றில் இருந்து 10 மீட்டர் தூரத்தில் 200 சதுரஅடி அளவுக்கு நிழல் விழாத இடம் இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகள் பொருந்தும் விவசாயிகள், தங்களின் மாவட்ட வேளாண் பொறியியல் துறையை அணுகி, இந்தத் திட்டத்தில் பயனடையலாம். இவ்வளவு பரப்பில் நிலம் இருக்க வேண்டும், என்கிற குறியீடு கிடையாது.


தொடர்புக்கு, சிவனாந்தம்,
செல்போன்: 95979-81740.



Thursday, 4 February 2016

கல்லூரியில் களை கட்டும் மாடித்தோட்டம்!

ஞ்சு இல்லாத இயற்கை உரங்கள் இடப்பட்டு  பயிரிடப்பட்ட காய்கறிகளை,  கல்லூரியில் மாடித்தோட்டம் அமைத்து எல்லோருக்கும் முன்மாதிரியாக விளங்குகிறார் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் விஜயகுமார். 

இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்தக் கல்லூரியில் சுமார் 2400 சதுர அடியில் 75க்கும் மேற்பட்ட செடிகளை மாடியில் தோட்டமாக பயிரிட்டுள்ளார். 

'ராகா பசுமை' மாடி தோட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இங்கு பல்வேறு விதமான காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு 'ராகா பசுமை' திட்டத்தின் கீழ் ஆர்வமுடன் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

”நான் பசுமை விகடனின் தீவிரமான வாசகன். எங்களுக்கு விவசாயக் குடும்ப பின்னணி இருந்தாலும், இயற்கை விவசாயம், மாடித்தோட்டம் இது பற்றிய விழிப்புணர்வு எல்லாம் பசுமை விகடன் மூலமாதான் தெரிய வந்தது. ’பசுமை ஒலி’ பகுதி எங்களைப் போல் விவசாய ஆர்வம் உள்ளவர்களுக்கு நிச்சயம் ஒரு பயனுள்ள பகுதி” என்றார் விஜயகுமார்.


மாடித்தோட்டம் குறித்த நன்மைகளுடன் மேலும் பேச ஆரம்பித்த அவர், “எந்த ஒரு விஷயத்தையும் தியரியாக செய்யாமல் நடைமுறைப்படுத்தும்போதுதான் அது இன்னும் ஆழமாக பதியும். அதுபோல மாடித்தோட்டமும். மாணவர்களுக்கு இது குறித்த புரிதல் வர வேண்டும் என்றால் அவர்களை நேரடியாக களத்தில் இறக்குவது தான் சரியானது. எனவேதான் எங்கள் கல்லூரி மாணவர்களை செடிகளை பராமரிப்பதில் ஈடுபடுத்தியுள்ளோம். தினசரி மாலை ஒரு மணி நேரம் நீர் விடுதல், களை சுத்தம் செய்தல் போன்றவற்றில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பார்கள். இவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்களும் ஆர்வமுடன் வருவார்கள். 

மாணவர்கள் எந்நேரமும் படித்துக் கொண்டே இருக்காமல் இது போன்ற செயல்களில் தங்கள் நேரத்தை செலவிடுவதால் அவர்களுக்கு நல்ல மாறுதல்  தெரியும்.


இங்கு நாங்கள் கத்திரிக்காய், மிளகாய், வாழை, சோளம், கீரை வகைகள், புடலங்காய், பூசணி, பீர்க்கங்காய், பாகற்காய், காலிஃப்ளவர், கொத்தமல்லி, வேர்க்கடலை, ரோஜா செடி, தக்காளி, அலங்கார செடிகள், துளசி, கற்றாழை, பிரண்டை, பப்பாளி முதலான செடி, கொடி வகைகள் எல்லாவற்றையும் இங்கு பயிரிட்டுள்ளோம்” என்றார் ஆர்வமுடன்.  

பயன்கள் அதிகம்:

மேலும், “மாடித்தோட்டம் என்பது நம் அன்றாடம் செய்யும் காய்கறி செலவுகளை குறைக்க உதவும். நாம் மாடித்தோட்டம் அமைப்பதால் அதிலிருந்து வரும் காய்கறிகளை உபயோகிக்கலாம். அடுத்தவர்களை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நம் மேற்பார்வையிலே வளருவதால் தேவையில்லாத செயற்கை உரங்கள் இல்லாமல் இயற்கை உரங்கள் இட்டு பெறுவதால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.


நம்மிடம் இருப்பதயே உபயோகிக்கலாம்:

மாடித்தோட்டம் அமைக்க பெரிய அளவில் செலவு செய்யலை. எங்ககிட்ட இருந்த பழைய பெயிண்ட் டப்பாக்களைத்தான் மாடித்தோட்டம் அமைக்க பயன்படுத்தினோம். செடிகளுக்கு தேவையான மண் வகைகள் எல்லாம் வெளியே வாங்கிக்கிட்டோம். அப்புறம் தோட்டத்திற்கு தேவையான நிழல் வலை,  மூங்கில் குச்சி எல்லாம் நாங்களே அமைச்சோம். தரையில் செடி வைக்கும் போது நாம நீர் விடும்போது கீழே போனாலும் அதை மண் ஈர்த்துக்கும். ஆனா தொட்டிச் செடிகளுக்கு நீர் விடும்போது அப்படி இல்லை. கீழே உபரி நீர் வழிந்தால் அதை சேகரம் செய்து மீண்டும் உபயோகிக்க ஒரு தட்டு வைத்துள்ளோம். 

அதே போல் மண்ணில் தேங்காய் நார் கலந்து போடுவோம். அப்போது தான் வேருக்கு ஏர் சர்குலேஷன் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் இங்கே வரும் காய்கறிகளை எங்களுக்குள்ளே பகிர்ந்துப்போம். அப்போதுதான் அவர்கள் மூலமாக விரைவில் பரவி, மற்றவர்களுக்கும் ஒரு ஆர்வம் பிறக்கும்” என்றார் மகிழ்ச்சியாக.


உரங்கள்:
இதைத் தொடர்ந்து செடிகளுக்குத் தேவையான உரங்கள் பற்றி கூறிய அவர், “இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செடிகளுக்குத் தேவையான சாணிக் கரைசலை தருவோம். பூச்சிவிரட்டிக்கு பால் உள்ள இலைகளை மாட்டு கோமியத்துடன் கலந்து செக்கில் இடித்து ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் நிழலில் வைத்து இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு ஸ்ப்ரே கன்னில் வைத்து தெளிப்போம். இதுமட்டுமல்லாமல் பசுமாட்டுச்சாணம், நெய், பால், தயிர், மோர், வாழைப்பழம், நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி ஆகியவை கலந்த ஜீவாமிர்தம், மீன் அமிலம், பஞ்சகாவ்யம் ஆகியவற்றையும் வாரம் ஒரு சுழற்சியில் செடிகள் வாடும்போதும், அவை வளரும் பருவத்திலும் கொடுத்தால் நல்ல பலன் தரும்” என்றார்.

மாடித்தோட்டத்தில் செய்யக் கூடாத தவறுகள்:

புதிதாக மாடித்தோட்டம் போடுபவர்கள் ஆரம்பத்தில் சில தவறுகள் செய்வது உண்டு.
அப்படி செய்யக் கூடாத தவறுகள் குறித்து கூறிய விஜயகுமார், “நாங்கள் புதிதாக மாடித்தோட்டம் போடும் போது நிழல் வலையை கவனத்தில் கொள்ளவே இல்லை. அதனால் அதிக சூரிய வெளிச்சம் மற்றும் தரை சூட்டினால் நிறைய செடிகள் கருகி போச்சு. அதே மாதிரி தேங்காய் நார் கலக்காமல் வெறும் மண் மட்டும் போட்டதினால் இறுகி ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செடிகள் வளரவே இல்லை. அதன் பிறகுதான் ஒரு பக்கெட் மண்ணுக்கு ஒரு பக்கெட் தேங்காய் நாரு என சரிவிகிதமாக கலந்து செடிகள் நட்டோம். அதன் பிறகு செடிகளின் தொட்டியைச் சுற்றி சிறு சிறு துளைகளும் இட்டு பராமரித்து வருகிறோம். எனவே இது போன்ற விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.