Monetize Your Website or Blog

Showing posts with label சாகுபடி. Show all posts
Showing posts with label சாகுபடி. Show all posts

Friday, 1 July 2016

விக்ரம் மகளுடன் பேரனுக்கு திருமணம் நிச்சயமானது எப்படி...?- நெகிழும் மு.க. முத்துவின் துணைவியார்!


திமுக தலைவர் கருணாநிதியின் மூத்தமகன் மு.க.முத்துவின் பேரன் மனு ரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவுக்கும் திருமணம் செய்ய இரு குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பழம்பெரும் பாடகர் சி.எஸ்.ஜெயராமனின் மகளும், மு.க.முத்துவின் துணைவியாருமான சிவகாம சுந்தரியிடம் பேசினோம். 



''சிவாஜியின் முதல்படமான  ' பராசக்தி'யில் அவருக்கு முதன்முதலாக குரல்கொடுத்து, 'கா.. கா..' பாடலை பிரபல பாடகரான என் தந்தையார் சி.எஸ் ஜெயராமன்தான் பாடினார். எனக்கு திருமணம் நடந்தபோது எம்.ஜி.ஆர், சிவாஜி என கலையுலகின் அத்தனை பிரபலங்களும் வந்து வாழ்த்தினாங்க. அப்போது எம்.ஜி.ஆர்,  திமுகவில்  இருந்தார். எனது மகள் தேன்மொழியை, கடலூரில் சி.கே. ரெங்கநாதன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தோம். ரெங்கநாதனின் தந்தையார் சின்னி கிருஷ்ணன் பிரபல தொழிலதிபர். 

இந்தியாவில் முதன்முதலாக 'சிக் ஷாம்பு' என்கிற பாக்கெட்  ஷாம்பை அவர்தான் அறிமுகம் செய்தார். என் பேத்தி அமுதா அமெரிக்காவில படித்தபோது, அவருடன் நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவும் படிச்சாங்க.  இந்தியா வரும்போது, கிழக்கு கடற்கரை சாலையில இருக்குற என் மகள் வீட்டுக்கு அக்‌ஷிதா  சில சமயங்கள்ல வந்திருக்கு.  கவின்கேர் கம்பெனியை கவனிச்சுட்டு இருந்த என் பேரன் மனு ரஞ்சித்,  மேற்கொண்டு பிசினஸ் மேனேஜ்மென்ட் படிக்க அமெரிக்காவுக்குப் போனார். அப்போதுதான் பேத்தி அமுதாவோட தோழி அக்‌ஷிதாவும் ரஞ்சித்துக்கும் அறிமுகம் ஆனாங்க. நண்பர்களா பழகியிருக்காங்க.
ஒரு கட்டத்தில் என் பேரன் ரஞ்சித்தை, விக்ரம் குடும்பத்துக்கும் பிடிச்சுப் போச்சு. எங்களுக்கும் அக்‌ஷிதாவின் குணங்கள் பிடிச்சுப் போனதால், ஏன் இருவருக்கும் திருமணம் செய்துவைக்ககூடாதுன்னு தோணிச்சு. இரண்டு குடும்பமும் பேசினோம். திருப்திகரமா இருந்தது. திருமணத்தை முடிவு செஞ்சிட்டோம்.



ஜூலை 10-ம் தேதி லீலா பேலஸ் ஹோட்டலில் மனு ரஞ்சித் - அக்‌ஷிதா நிச்சய தாம்பூலம் நடக்குது. நிச்சயத்துக்கு மாமா (கருணாநிதி) மற்றும் உறவினருங்க எல்லாரும் வருவாங்க” என்று பேரன் திருமணம் குறித்து நெகிழ்கிறார் சிவகாம சுந்தரி.


Tuesday, 14 June 2016

ராகியும் அதன் நண்பர்களும்...

ச்சைப் பசேலென்ற வயல்வெளி ஓரமாக ராகி நடந்து வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த வழியே நெல்லும் கோதுமையும் எதிரே வந்தன. ராகியை கண்ட நெல், 'அடேய், நீயெல்லாம் இன்னும் ஊரில் தான் இருக்கிறாயா? என்று சொல்லி ஏளனமாய்ச் சிரித்தது.

பொறுமையுடன் கடக்க முயலும் ராகிக்கு வழிவிடாமல் கேலியை இன்னும் தொடர்ந்தது நெல். "உன்னையெல்லாம் ஊர்ல ஒரு பய மதிக்கறது இல்ல, சுத்த வேஸ்ட்டுடா நீ" என்றது நெல்.  அதுவரை பொறுமை காத்த ராகி நெல்லைப் பார்த்து புன்னகைத்தபடியே சொன்னது, "இந்த ஊருக்கு நீயெல்லாம் வர்றதுக்கு முன்னாடியே வந்தவன் நான்".

"இருந்து என்ன பிரயோஜனம்? இதோ இவனைப் (கோதுமையைக் காட்டி) போல வலிமையா இருக்கியா .. இல்லை என்னைப் போல டேஸ்டான தானியமா இருக்கியா..சொல்லு என்றது.

"ஹலோ, உனக்கு என்னைப் பத்தி சரியா தெரியல ப்ரோ! அதான் இப்டியெல்லாம் பேசற... சொல்றேன் கேட்டுக்கோ... உங்க எல்லாரையும் விட என்கிட்டதான் அதிக புரோட்டின் சத்துக்கள் இருக்கு. அதுவும் இல்லாம மிக அதிக மினரல் சத்தும் எனக்குள்ளதான் இருக்கு.." 
கோதுமை அதிர்ச்சியாகி, "அட... அப்பறம்..." என ராகி சொல்வதை கேட்கத் தயாரானது


"நான் வலிமையா  இல்லாம இருக்கலாம் ப்ரோ, ஆனா என்னை சாப்பிட்டதால்தான் உங்க தாத்தா, பாட்டி எல்லாம் இன்னும் எனர்ஜிடிக்கா இருக்காங்க புரிஞ்சுக்க. என்னை சாப்டறவங்களுக்கு சர்க்கரை நோய் வராது. அதுமட்டும் இல்லாம.. நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கிற தன்மை என்கிட்டதான் அதிகமா இருக்கு. 

இப்போது கோதுமை ராகியின் பக்கம் வந்து நின்றது.. தன் பேச்சை ராகி தொடர்ந்தது. “என்னை தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். கெட்ட கொழுப்பு சேராம இருக்கறதால இதய நோய்கள் வராமலும் நான் தடுக்கறேன்”

"அதெல்லாம் சரி, இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, யாருக்கும் உன் டேஸ்ட் பிடிக்கலதானே” என தளர்ந்த குரலில் கேட்டது நெல்.

இப்போது, ராகிக்கு ஆதரவான குரல் கோதுமையிடமிருந்து வந்தது


"இல்ல மாம்ஸ்... நீ நினைக்கறது தப்பு. நிறைய குழந்தைகளுக்கு ராகில செஞ்ச 'லட்டு', 'குக்கி'கள் அப்பறம் 'ராகி பக்கோடா'லாம் ரொம்ப பிடிக்கும். அதுவுமில்லாம ராகியினால் உருவாக்கப்படும் Cereal வகை உணவு, உடலுக்கு ஆரோக்கியமானதுங்கூட. குட்டீஸ்கள் மட்டுமில்லாம வீட்ல இருக்கற பெரியவங்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கு இந்த Cereal. அதுமட்டுமில்லாம உன்னை, என்னை போல அதிக கவனம் எடுத்துக்கவேண்டிய  பயிர் இல்ல இவன்."

நெல் சோர்ந்துபோனது, ராகி மற்றும் கோதுமையின் பதில்களால். ராகியின் குணங்களைப் புரிந்துகொண்டது. “அப்ப இவன் சைல்டண்டா இருந்து சாதிக்கறவன்னு சொல்லு!”  என்று கூறியபடி ராகிக்கு பெரிய சல்யூட் ஒன்றை அடித்தது.  இப்போது ராகி முன்னே வர... நட்புடன் அதன் இரண்டு பக்கங்களிலும் நெல், கோதுமை தோளில் கை போட்டபடி நண்பர்களாக  தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்தன அந்த பாதையில்.  




Friday, 13 May 2016

ஐயப்பா மசாகி- வறட்சியிலும் நீர் சேமிக்க வழி சொன்ன மனிதர்!

ந்தியாவின் மேற்கில் இருந்து கிழக்கு வரை நிலத்தடி நீர் வற்றிவருகிறது. அதுமட்டுமில்லாமல், கடந்த 80 வருடங்களில் இல்லாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டு இருக்கிறது. இப்படி ஒரு சூழலில் தண்ணீரை முறையாகப் பயன்படுத்தினால், இந்த நிலை வராது என நிரூபித்திருக்கிறார் ஐயப்பா மசாகி. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மசாகி அங்கு நீர் காந்தி, நீர் வித்தைக்காரர், நீர் மருத்துவர் என பொதுமக்களால் வாஞ்சையாக அழைக்கப்படும் மனிதர். 

நீர் சேமிப்பு தொடர்பான ஐயப்பா மசாகியின் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தினால், 2020ல் இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் என்ற சொல்லே காணாமல் போய்விடும் என்கிறார்கள் சுற்றுச்சூழலியலாளர்கள் .


கர்நாடகாவில், தான் பிறந்த ஊரான கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவிய ஒரு சூழலில், அவர் பிறந்தார். அந்நாளில் தினமும்​ அதிகாலை 3 மணிக்கு ​எழுந்து, பல கிலோமீட்டர் தொலைவு சென்று தண்ணீர் எடுக்கச் சென்ற அவருடைய குழந்தைப் பருவமே, அவரை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. மண்ணெண்ணெய் வாங்கக் கூட வசதி இல்லாத பெற்றோர், பல கஷ்டங்களுக்கு இடையிலும் இவரை படிக்க வைத்தனர். படித்து வேலைக்குச் சென்ற மசாகிக்கு, வழக்கமான  வேலையில் நாட்டம் இல்லை. காரணம் அவர் சிறுவயதில் சந்தித்த குடிநீர் பிரச்னை. 

சில நாட்களில் ஊர் திரும்பிய அவர், 6 ஏக்கர் பரப்பளவில் வறண்ட ஒரு நிலப்பகுதியை வாங்கினார். அங்கு காபியும்,​ ரப்பரும் வளர்த்தார்.  கனமழை,​ பிறகு 2 வருடங்கள் வறட்சி என மாறி மாறி வந்ததில் பயிர்கள் அழிந்தன. அப்போதுதான் இவருக்கு ஒன்று புரிந்தது. 'குளிரிலும், வெள்ளத்திலும் மக்கள் வீட்டினுள் தூங்கி முடங்கிவிடுகின்றனர். சுளீரென வெயில் அடித்து வறட்சி ஏற்படும்போதுதான்​, அய்யய்யோ என்ன இது இப்படி வெயில் கொளுத்துகிறது' என கொதித்து ​எழுகின்றனர்.
இதற்கெல்லாம் தீர்வு காண முடிவெடுத்தார் மசாகி. இடையே அண்ணா ஹசாரே, ராஜேந்திர சிங் போன்றோரை சந்தித்து விவாதித்தார். போர்வெல்களில் அதிக நீரை சேமிப்பதன் மூலமும், பாசனத்திற்கு குறைந்த அளவு நீரை உபயோகிப்பதன் மூலமும் நீரை அதிகளவு சேமிக்கலாம்​ என்பதை அறிந்தார்.​
அடுத்தடுத்த வருடங்களில், அது வெற்றியை கொடுத்தது. இம்முறையைப் பயன்படுத்தி அவர் அதிக அறுவடை செய்தார். பிறகு, பக்கத்து வயல்களிலும் இம்முறையைப் பரிசோதித்து வெற்றி பெற்றார். அவருடைய வேலையை உதறிவிட்டு இப்பணியிலேயே தன்னை​ ஈடுபடுத்திக்கொண்டார். 

நிலத்தில் ஒரு குழி தோண்டி அதில் மணல், களிமண், கூழாங்கற்கள், பாராங்கற்கள் ஆகியவற்றை போட்டார். மழை நீர் உள்ளே சென்றால் கற்களையும்,​ மணலையும் தாண்டிச் சென்று அடிமண்ணை நனைக்கும். ஒரு saturation புள்ளிக்கு வந்த பிறகு, நிலத்தில் இருந்து நீர் ஊற்று போல் பெருக்கெடுக்கும்.​ இதுவே இவரது அவரது நீர் சேகரிப்பு முறை திட்டம். இவருடைய வழிகாட்டுதலில், பலரும் ​நீர் சேமிப்பு பணியிலும் விழிப்பு உணர்வு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


ஐயப்பா மசாகியின் விவசாய சேவைக்காக அசோகா  fellowship, Jamnalal Bajaj உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். 2012 ம் ஆண்டு 600 செயற்கை ஏரிகளை உருவாக்கி சாதனை புரிந்ததற்காக, லிம்கா சாதனை புத்தகத்தில் இவரது நிறுவனம் இடம்பெற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 70,000 போர்வெல்கள் இவரது நிறுவனத்தால் போடப்பட்டிருப்பதும் பெரும் சாதனைதான். 



Wednesday, 11 May 2016

விதவிதமான ரகங்கள், கூடுதல் மகசூல் கொடுக்கும் உதயம் வாழை!

வ்வொரு பயிரைப் பற்றியுமான அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை அள்ளித்தரும் இந்தப்பகுதியில்வாழை சாகுபடிக்கான பட்டம்மண் வகைகளைப் பற்றிய கேள்விகளுக்கான பதில்களையும்,சில வாழை ரகங்களைப் பற்றியும் பார்த்தோம்தொடர்ந்துவாழை ரகங்களைப் பற்றிய தகவல்களைப்பகிர்ந்து கொள்கின்றனர்திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் எம்.எம்.முஸ்தபா மற்றும் முதன்மை விஞ்ஞானி எஸ்உமா.





 களர்உவர் நிலத்துக்கு ஏற்ற கற்பூரவல்லி!
களர்உவர் மண் வகைகளிலும்வறட்சியிலும் தாங்கி வளரக்கூடியதுகற்பூரவல்லி ரகம்மரங்கள்தடித்து வளர்வதுடன்உயரமாகவும்பெரிய இலைகளுடனும் காணப்படும்பழங்கள் நடுத்தரஅளவுடன்பழுத்தாலும் காம்பு உதிராமல் நிலையாக இருக்கும்தோல்மிதமானகெட்டித்தன்மையுடன்சாம்பல் பூச்சுடன் காணப்படும்சதைப்பகுதிசுவையுடன் சாறு மிகுந்து திடமாக,நறுமணத்துடன் காணப்படும்தார்கள் உருளை வடிவில் இருப்பதால்நெடுந்தூரப் பயணங்களுக்குஏற்றவைஜூஸ்உலர்பழங்கள்வாழைப்பூ சட்னி என தயாரிக்கலாம்இலை பயன்பாட்டுக்கும் இந்தரகம் பயிரிடப் படுகிறதுஇதன் வயது, 14 முதல் 16 மாதங்கள்ஒவ்வொரு தாரிலும் 10 முதல் 12சீப்புகளுடன், 180 முதல் 200 பழங்கள் வரை இருக்கும்ஒவ்வொரு தாரும் 25 முதல் 28 கிலோ வரைஎடை இருக்கும்இந்த ரகத்தில் 'பனாமா வாடல்நோய்’ தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.ஆகையால்இந்த நோய் தாக்குதல் இல்லாத மரங்களில் இருந்துகன்றுகளைத் தேர்வு செய்து நடவுசெய்ய வேண்டும்.

காற்றில் சாயாத உதயம்!
திருச்சிதேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் 2005ம் ஆண்டு, 'உதயம் வாழை’ ரகம்வெளியிடப்பட்டதுகற்பூர வல்லியைப் போன்ற குணாதிசயம் கொண்ட ரகம் இதுஆனால்,கற்பூரவல்லியைவிட 40 சதவிகிதம் கூடுதல் மகசூல் கொடுக்கக்கூடியதுதார்உருளையாகஇருப்பதால்நெடுந்தூரப் பயணங்களுக்கு ஏற்றதுஇதன் பழங்களில் இருந்துஜூஸ்ஜாம்,உலர்பழங்கள் போன்றவற்றைத் தயாரிக்கலாம்மரங்கள் உறுதியான தண்டுடன்உயரமாக இருக்கும்.ஒவ்வொரு தாரிலும் 18 முதல் 20 சீப்புகளுடன், 250 முதல் 300 பழங்கள் வரை இருக்கும்இந்த ரகத்தில்ஒவ்வொரு தாரும் 35 முதல் 40 கிலோ எடை வரை இருக்கும்நன்றாக பராமரிப்பு செய்யும்பட்சத்தில், 50 கிலோ வரை எடை  இருக்கும்பழுக்க ஆரம்பித்ததில் இருந்துஅதிகபட்சம் 7 நாட்கள் வரை மஞ்சள்நிறத்திலேயே இருக்கும்காற்று அதிகம் வீசும் பகுதிகளில்பயிரிட ஏற்ற ரகமிதுவாழை முடிக்கொத்துநோயைஎதிர்த்து வளரும் சக்தி கொண்டதுஇந்த ரக வாழையும் களர் மற்றும் உவர் தன்மையைத்தாங்கி வளரும் தன்மை கொண்டவை.

 ஊடுபயிருக்கு ஏற்ற பச்சநாடன்!
தமிழ்நாடுகர்நாடகாகேரளா ஆகிய மாநிலங்களில் பச்சநாடன் வாழை ரகம் பயிரிடப்படுகிறது.தென்னைபாக்கு மரங்களுக்கு ஊடுபயிராக பயிரிட ஏற்றதுமலைப்பிரதேசங்களில் இதை 'லாடன்என்றும்சமவெளிப் பகுதிகளில் 'நாடன்’ என்றும் அழைக்கின்றனர்கற்பூரவல்லிரஸ்தாளிநேந்திரன்மாதிரியான நீண்டகால வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்பட்ட தோட்டங்களில் கன்றுகள்அழுகிப்போனாலோ அல்லது காய்ந்து போனாலோ இடைவெளிப் பகுதியில் இவற்றை நடவு செய்தால்,அந்த வாழை ரகங்களுடன் இந்த வாழை ரகமும் அறுவடைக்கு வந்துவிடும்இதனாலேயே இந்தவாழை ரகத்தை 'காலி வாழை’ என்றும் விவசாயிகள் அழைக்கிறார்கள்இருமண் பாங்கான நிலம்,களிமண் மற்றும் கரிசல் மண் ஆகியவற்றில் சிறப்பாக வளரும் தன்மை கொண்டதுஇதுஇந்த ரகத்தின்வயது 11 முதல் 12 மாதங்களாக இருந்தாலும், 8ம் மாதத்திலே குலை தள்ளிவிடும்ஒவ்வொருதாரிலும், 7 முதல் 8 சீப்புகளுடன், 100 முதல் 120 பழங்கள் வரை இருக்கும்தாரின் எடை 10 முதல் 15கிலோஇந்த ரகத்தில்மூளை வளர்ச்சிக்குத் தேவையான மாங்கனீசுரத்தத்தில் ஹீமோகுளோபின்அளவு அதிகப்படுத்தும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளனஇந்த ரகத்தைவாடல் நோய் தாக்கும்வாய்ப்பு உண்டு.


 வறட்சியைத் தாங்கும் நெய் பூவன்!
கிராண்ட்9 (ஜி9) வாழை ரகத்துக்கு அடுத்தப்படியான ஏற்றுமதிக்கு ஏற்ற ரகம்நெய் பூவன். 'ஏழரசி,ஞானிபூவன்ஏலக்கி பாலேபுட்டபாலே’ என்ற பல பெயர்கள் இருந்தாலும்பெரும்பாலும் 'நெய் பூவன்என்றே அழைக்கிறார்கள்இந்த ரகம் தமிழ்நாடுகர்நாடகாகேரளா ஆகிய மாநிலங்களில் அதிகமானஅளவில் பயிரிடப்படுகிறதுஎல்லா வகை மண்ணிலும் நன்றாக வளர்வதுடன்வறட்சியைத் தாங்கியும்வளரும்கர்நாடகா மற்றும் கேரளாவில் பாக்கு மரங்களுக்கு ஊடுபயிராக இ்்தை பயிரிடுகிறார்கள்.இதன் வயது 13 முதல் 14 மாதங்கள்ஒவ்வொரு தாரிலும் 10 முதல் 12 சீப்புகளுடன், 120 முதல் 150பழங்கள் வரை இருக்கும்ஒவ்வொரு தாரும் 15 முதல் 18 கிலோ எடை வரை இருக்கும்பழங்கள் அதிகசுவையுடன் இருந்தாலும்காய்கள் கனிவதற்கு 5 முதல் 6 நாட்கள் ஆகும் என்பதால்நன்கு பழுத்தபழங்கள் கூட எளிதில் உதிர்வதில்லைஇந்த ரக வாழையில் வாடல் நோய்நூற்புழு போன்றவைதாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளனஆகையால்கன்று தேர்வு செய்யும்போது நோய் தாக்காதகன்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

 காய்க்கும்பழத்துக்கும் மவுசு உள்ள நேந்திரன்!
காய்க்காகவும்பழத்துக்காகவும் இந்த வாழை ரகம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பயிரிடப்படுகிறது.இதற்கு ஏத்தன்மலையேத்தன்சிப்ஸ்காய்வறுவல்காய்நெடுநேந்திரன்ஆட்டுநேந்திரன் என வேறுபெயர்களும் உண்டு.  இந்த ரகம்  பெருமளவு சிப்ஸ் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டாலும்கேரளாவில்பழமாகவும் சாப்பிடுகிறார்கள்ஓணம் போன்ற பண்டிகைக் காலங்களில் அதிகமாக விற்பனைசெய்யப்படுகிறதுபழங்களின் தோல் சற்று தடிமனாக இருப்பதுடன்இனிப்புச் சுவை அதிகமாகஇருக்கும்பழங்களில் வைட்டமின்ஏ வும் (ஒரு கிராமில் 750 முதல் 800 மைக்ரோ கிராம்), எலும்புமற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவும் சுண்ணாம்புச் சத்துக்களும் (ஒரு கிராம் பழத்தில் 14 மில்லிகிராம்நிறைந்துள்ளன.

இந்த ரகத்தின் வயது 11 முதல் 12  மாதங்கள்தமிழ்நாட்டில் மாசிப்பட்டத்தில் நடவு செய்யலாம்இந்தரகத்தில் மறுதாம்பு விடுவதில்லைஅதிகமான காரத்தன்மை கொண்ட நிலங்களில்இந்த ரகம் சரியாகவளராதுஒவ்வொரு பழமும் 20 முதல் 25 சென்டி மீட்டர் நீளத்தில் இருக்கும்ஒவ்வொரு தாரும் 5முதல் 6 சீப்புகளுடன், 40 முதல் 50 பழங்களுடன் இருக்கும்ஒவ்வொரு தாரும் 10 முதல் 12 கிலோஎடை இருக்கும்இந்த ரகத்தில்  நூற்புழுகிழங்கு கூன்வண்டு  மற்றும் தண்டுத் துளைப்பான் தாக்குதல்அதிகமாக இருக்கும்இவற்றின் தாக்குதலைக் குறைக்க... பூச்சித் தாக்குதல் இல்லாத கிழங்குகளைத்தேர்வு செய்துநடவு செய்ய வேண்டும்.