Monetize Your Website or Blog

Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Friday, 26 August 2016

5.77 நிமிடத்தில் 9 ஒலிம்பிக் தங்கம்

சென்னை வார் மெமோரியலில் இருந்து கலங்கரை விளக்கம் வரையிலான மூன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடினால் என்ன வாங்கலாம். நம்மால் மூச்சு மட்டுமே வாங்க முடியும். ஆனால் உசேன் போல்ட் 9 தங்கப் பதக்கங்களை வாங்கியுள்ளார். 2004,2008,2012,2016 ஆகிய நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் உசேன் போல்ட் மொத்தம் ஓடியதே மூன்றரை கிலோமீட்டர்தான்.
 இந்த மூன்றரை கிலோ மீட்டரை ஓட போல்ட் எடுத்துக் கொண்ட நேரம் 5.77 நிமிடங்கள் மட்டுமே. கூகுளில் தேடுங்கள், பஸ்ஸில் செல்லவே 13 நிமிடங்கள் ஆகுமாம்.



 2004 ஒலிம்பிக்கின், 200 மீட்டர் போட்டியில் தோல்வியுடன் தொடங்கிய போல்ட், இலக்கை அடைய எடுத்துக் கொண்ட நேரம் 21.05 வினாடிகள். ஆனால் அவர் கொடுத்த டீ என்ட்ரியை டேபிளில் பாருங்கள்.

 அனைத்து பந்தயங்களிலும் போல்ட் தன் முழு திறனை செலுத்தி இருந்தால் இந்த நேரம் இன்னும் குறைந்திருக்கும். ஆனால் போல்ட் ஒரு வின்னிங் பேட்டர்னை பின்பற்றுகிறார்.
 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 200 மீட்டர் போட்டியில் போல்ட்டின் டைமிங்கை எடுத்துக் கொள்வோம். முதல் தகுதிச் சுற்றில் இலக்கை 20.64 விநாடிகளில் கடக்கிறார். காலிறுதியில் 20.29 வினாடிகளில் கடக்கிறார். அரையிறுதியில் 20.09 வினாடிகளில் கடக்கிறார். இறுதிச் சுற்றில் 19.30 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கத்தை தட்டிச் சென்றார். முதல் சுற்றுக்கும் இறுதி சுற்றுக்கு 1.34 வினாடிகள் வித்தியாசம். இதே வின்னிங் பேட்டர்னை ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும், ஒவ்வொரு போட்டியிலும் பார்க்கலாம். ஒவ்வொரு சுற்றுக்கும் இடையிலான இடைவேளை குறைவு. எனவே முதல் சுற்றிலேயே முழு சக்தியையும்  வெளிப்படுத்தினால், குறுகிய நேரத்தில் அடுத்த சுற்றுக்கு தேவையான முழு எனர்ஜியை மீட்டெடுப்பது சிரமம். ரியோவில் 4*100 மீட்டர் போட்டியில் தங்கம் குறைந்த வேகத்தில் ஓடியதற்கு, அரையிறுதிக்கும் காலிறுதிக்குமான இடைவேளை குறைவே காரணம் என்றார்.

100 Meters 200 Meters 4*100 Meters
OlympicRoundsTiming OlympicRoundsTiming OlympicRoundstiming
2008Round One10.2 2004Round one21.05 2008Final8.98
2008Quater Finals9.92 2008Round one20.64 2012Final8.7
2008Semi Finals9.85 2008Quater Finals20.29 2016Final8.97
2008Finals9.69 2008Semi Finals20.09    
2012Round One10.09 2008Finals19.3    
2012Semi Finals9.87 2012Round one20.39    
2012Finals9.63 2012Semi Finals20.18    
2016Round One10.07 2012Finals19.32    
2016semi Finals9.86 2016Round one20.28    
2016Finals9.81 2016semi Finals19.78    
    2016Finals19.78    



போல்ட் ஓடியது 5.77 நிமிடங்கள் தான் என்றாலும், அதற்குள் 12 ஆண்டுகளின் உழைப்பு இருக்கிறது.


Tuesday, 23 August 2016

சச்சின், சேவக் சாதனையை முறியடித்தார் அஸ்வின்!

மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள்  கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று முன்னிலை வகித்தது.நான்காம் போட்டி வியாழன் அன்று தொடங்கியது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாட ஆரம்பித்தார்கள். 


முதல் நாள் அரை மணி நேரம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட போட்டியில் மழை குறுக்கிட 22 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. அடுத்த நான்கு நாட்கள் மழை பெய்யாத போதும் ஆட்டம் நடைபெறவில்லை. மழையால் சேதமடைந்த மைதானத்தை, மீட்டெடுக்க முடியாமல் தொடர்ந்து நான்கு நாட்களும் வெறுமனே கழிந்தது. இறுதியாக , போட்டி  டிராவில் முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. தொடர் நாயகன் விருதை ஆறாவது முறை வென்று அசத்தினார்  அஷ்வின். இதன் மூலம் இந்திய வீரர் ஒருவர் அதிக முறை தொடர்நாயகன் விருது வென்றவர் என்ற சாதனையை முறியடித்தார். ஆறு முறை வென்றுள்ள இவர் சச்சின், சேவக் சாதனையை முறியடித்துள்ளார்.
அஷ்வின் : இந்தியாவின் வெற்றிக்காக பங்களிப்பது, அலாதியானது.நாங்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த மட்டுமே,இங்கு வந்தோம்.  ஐந்து பவுலர்களுடன் விளையாட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தோம்.ஒருவருக்கொருவர் சிறப்பாக செயல்படும் போது பாராட்டிக்கொள்கிறோம். அணி சிறப்பாக செயல்படுவதற்கு இது முக்கியமானதொரு காரணம். 
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் , ஆஸ்திரேலிய அணி தோற்றது. அதன் எதிரொலியாக , நம்பர் ஒன் ரேக்கிங்கை இந்தியாவிடம் இழந்தது. அந்தத் தொடரின் முடிவில், இந்தியா 112 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பாகிஸ்தான் 111 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இருந்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நான்காவது டெஸ்ட் போட்டி, டிராவில் முடிந்ததால், தற்போது பாகிஸ்தான் அணி , முதல் இடத்தில் இருக்கிறது. 



அது பற்றி கருத்து கூறிய கோலி "ஜிம்மிலும், பிளே ஸ்டேஷனிலும், கடந்த நான்கு நாட்களும் கழிந்தது.ஒவ்வொரு நாளும், அந்த நாட்டின் நேரப்படி எழுந்து ஒன்றுமே செய்யாமல் இருக்க வேண்டும் என்பது மிகவும் சோர்வடைய வைத்தது. முதல் இடம் என்பது மிகவும் குறைவான காலம் மட்டுமே இருக்கும்  என முன்னரே தெரியும். எங்களைவிட பிற அணிகள் , 10 போட்டிகள் அதிகமாக விளையாடி இருக்கிறார்கள்.தரவரிசைப் பட்டியல் என்பது  மாறிக்கொண்டே தான் இருக்கும்" என்றார். 
டெஸ்ட் தொடருக்குப் பின், அமெரிக்காவில் இரு டி20 போட்டிகளில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் விளையாட இருக்கிறது இந்தியா. 
இந்தியா அதன் அடுத்த 9 டெஸ்ட் போட்டிகளை உள்நாட்டில் விளையாட இருப்பதால், டெஸ்ட் ரேக்கிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 



வீழ்ந்தது ஜெய்ஷா அல்ல... இந்திய விளையாட்டுத்துறை!

ரியோ ஒலிம்பிக்கில் உலக வரைபடத்தில் ஒரு புள்ளி அளவே இருக்கும் பல நாடுகள் தங்கப்பதக்கம் வென்றுள்ளன. ஃபிஜி,சிங்கப்பூர் போன்ற நாடுகள் அதில் முக்கியமானவை. ஆனால் 130 கோடி மக்கள் தொகை கொண்ட, இந்தியா ஒரு வெள்ளி ஒரு வெண்கலத்துடன் பதக்கப்பட்டியலில் 67வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் 6 பதக்கம் வென்ற இந்தியாவால் இந்த முறை 2 பதக்கம்தான் வெல்ல முடிந்திருக்கிறது என்றால், அது எவ்வளவு பெரிய பின்னடைவு. இதற்கு விளையாட்டு வீரர் வீராங்கனைகளை மட்டுமே குற்றம் சொல்லி விட முடியுமா?   


இந்திய விளையாட்டுத்துறை அதிகாரிகள் காட்டும் அலட்சியங்கள்தான் சர்வதேச அரங்கில் நம்மை பல முறை தலை குனிய வைத்துள்ளன. ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க செல்லும் வீரர் - வீராங்கனைகளுககு 'எகனாமி கிளாஸ்' டிக்கெட் என்றால் அதிகாரிகளுக்கும் பயிற்சியாளர்களுக்கு 'பிசினஸ் கிளாஸ் 'டிக்கெட் வழங்கப்படுகிறது. வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக ரியோ சென்ற இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் மைதானத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஒலிம்பிக் கமிட்டியிடம் 'ரெட் கார்டு 'வாங்குகிறார். விதிமீறல்களும் அத்துமீறல்களும் தொடருவது ஒரு பக்கமென்றால், சொந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளைக் கூட முறையாக கவனிப்பதில்லை. போட்டிகளில் பங்கேற்கும் அவர்களுக்கு ஒத்தாசையாக இருப்பதும் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக ரியோவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரளாவை சேர்ந்த 33 வயது ஜெய்ஷா ரியோ ஒலிம்பிக் பெண்களுக்கான 42 கி.மீ மாரத்தனில் இந்தியா சார்பில் பங்கேற்றார். இந்த போட்டியில் 89வது இடத்தை பிடித்த நிலையில், எல்லைக் கோட்டை தொட்டதும் அவர் மயக்கமடைந்து விழுந்தார். இலக்கை 2 மணி 47 நிமிடம் 19 வினாடிகளில் அவர் கடந்தார். ரியோ நேரப்படி காலை 9 மணிக்கு இந்த போட்டி தொடங்கியுள்ளது. அப்போது கடும் வெயிலும் இருந்துள்ளது. மாரத்தான் போட்டியை பொறுத்த வரை, சுமார் 8 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் பொது  குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டிருக்கும். வீரர்கள் அதில் தண்ணீர் பாட்டில்கள் எனர்ஜி டிரிங்க்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.
அதுதவிர, போட்டியில் பங்கேற்கும் வீராங்கனையின் சொந்த நாட்டினர் தங்கள் விருப்பப்படி இரண்டரை கி.மீக்கு ஒரு இடத்தில் குடிநீர் மையம் அமைக்கலாம். அந்த வகையில் மற்ற நாட்டினர்  குடிநீர் மையம் வைத்திருந்திருக்கின்றனர்.  ஒவ்வொரு இரண்டு கிலோ மீட்டருக்கும் இந்தியக் கொடி இருந்துள்ளது. ஆனால் அங்கே  தண்ணீர் பாட்டில்களோ குளிர் பானங்களோ வைக்கப்படவில்லை. ஜெய்ஷாவுக்கு தண்ணீர் கொடுக்கவும் யாரும் இல்லை. பிற நாட்டினர் வைத்திருக்கும் ஸ்டால்களிலும் தண்ணீர் அருந்த முடியாது. அருந்துவது விதி மீறல். அப்படி அருந்தினால், ஊக்க மருந்து சோதனையின்போது பிற நாட்டினரைக் குற்றம் சொல்லும் வாய்ப்புள்ளதால் அப்படி ஒரு விதி.  இந்த நிலையில்தான் உயிரை பணயம் வைத்து ஓடியிருக்கிறார் ஜெய்ஷா.
                                  
ஆனால் ரியல் ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப்புடன் எல்லைக் கோட்டை அடைந்து விட்டார். என்னால் ஓட இயலவில்லை என ஒதுங்கி விடவில்லை. எல்லைக்கோட்டைத்  தொட்டதும் ஜெய்ஷா மயங்கி விழுந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்துள்ளார். இது குறித்து ஜெய்ஷா கூறுகையில், ''எனக்கான போட்டி நடந்த போது ரியோவில் வெயில் வாட்டி எடுத்தது. காலை 9 மணிக்கு ஓடத் தொடங்கினேன். வெயிலில் ஓடும் போது அதிகளவில் தண்ணீர் தேவைப்படும். மற்ற நாட்டினர் தங்கள் வீராங்கனைகளுக்கு உதவ 2 கிலோ மீட்டருக்கு ஒரு முறை தண்ணீர்பாட்டில்கள் எனர்ஜி பானங்கள் அளித்தனர். எனக்கு உதவி செய்ய யாருமே இல்லை '' எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் ஜெய்ஷா கூறுகையில், ''சுமார் 42 கிலோ மீட்டர் தொலைவை கடந்த நிலையில், எனது உடலில் உள்ள தண்ணீர் சத்து அத்தனையும் போய் விட்டது. எல்லைக்  கோட்டை தொட்ட பிறகு ஒரு அடி கூட எடுத்து வைக்க என்னிடம் சக்தி இல்லை. அப்படியே மயங்கி விழுந்து விட்டேன். பல்ஸ் ரேட் முற்றிலும் குறைந்து போனது. எனது பயிற்சியாளர்தான் என்னை தூக்கிக் கொண்டு ஓடினார். மருத்துவமனையில் எனக்கு 7 பாட்டில்கள் குளூக்கோஸ் ஏற்றப்பட்டது. எனது பயிற்சியாளரையும் உள்ளே அனுமதிக்கவும் இல்லை. வெளியே அனுப்பி விட்டனர்.மையத்தில் இருந்த போலீசாரைத் தள்ளிவிட்டுதான் அவர் என்னை வந்து பார்த்தார். நான் இறந்து விட்டதாகவே கருதி தலையில் அடித்துக் கொண்டார் அவர். இந்த போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும் எனது வாழ்க்கையில் நான் ஓடிய சிறந்த ஓட்டமாகத்தான் கருதுகிறேன்.  இந்த சம்பவம் நடந்து 3 மணி நேரம் கழித்தே அதிகாரிகள் என்னை பார்க்க வந்தனர். எனக்கு மைதானத்திலேயே இறக்க வேண்டுமென்பதுதான் ஆசை. அது நிறைவேறியிருந்தாலும் ஒருவகையில் சந்தோஷம்தான் ''என தெரிவித்துள்ளார்.


ஜெய்ஷா மருத்துவசிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது, உள்ளேயிருந்து வெளியேற்றப்பட்ட அவரது பயிற்சியாளர் நிகோலாய் ஸனஸரேவ், போலீசார் கட்டுப்பாட்டில் சிறிது நேரம் வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.ரியோவில் நடந்த  இந்த சம்பவம் விளையாட்டுத்துறை ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ''ஜெய்ஷா அலட்சியப்படுத்தப்பட்டிருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் ''என விளையாடுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார். அதே வேளையில், ஜெய்ஷா 1,500 மீட்டர் ஓட்டத்தில்தான் சிறந்தவர் என்றும் அவரது பயிற்சியாளர் நிகோலய் ஸனேசரவ்தான், அவரை மாரத்தான் பக்கம் திருப்பியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ''ஜெய்ஷாவின் உடல் நிலை இன்னும் மோசமான நிலையில்தான் இருப்பதாகவும் மேற்கொண்டும் சிகிச்சை அவசியம் ''என்று இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மருத்துவர் சரளா தெரிவித்துள்ளார்.
மாரத்தன் தகுந்த திட்டத்துடன்  பாதுகாப்புடன் ஓட வேண்டிய ஒன்று. தொடச்சியாக ஓடுவதால் உடல் நீர்ச்சத்தை இழக்கும். தாதுக்கள் குறைந்து விடும். நீழிழப்பு காரணமாக தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. அதுவே உயிரையும் பறிக்கவும் கூடும். எனவேதான் மாரத்தானில் பங்கேற்பவர்கள் அடிக்கடி நீர்,எனர்ஜி டிரிங்க்ஸ்,பழங்கள், எலுமிச்சை பழம், உப்பு போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். இதனால்தான் மற்ற நாட்டினர் 2 கிலோ மீட்டர்களுக்கு ஒரு முறை குடிநீர் மையம் அமைத்து வீராங்கனைகளுக்கு தேவையானவற்றை அளித்துள்ளனர். ஆனால் நமது விளையாட்டுத்துறை அங்கேயும் போய் வெறும் கடையை விரித்திருக்கிறது.
இந்த நிலையிலும் அவர் பேட்டிகளில் ஒலிம்பிக் அதிகாரிகளை விட்டுக்கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட நூறுக்கு மேற்பட்ட தண்ணீர் பாட்டில்கள் இந்திய அதிகாரிகளுக்கான அறையில் இருந்துள்ளன. ‘உலகச் சாம்பியன்ஷிப்பின் போது அவர்களாகவே வழிநெடுக ஆரஞ்ச், வாழைப்பழம், தண்ணீர், குளூக்கோஸ் ஆகியவற்றை வைத்திருந்தனர். அப்படி இங்கும் இருக்கலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். இதன் சீரியஸ்னஸ் அவர்களுக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எல்லைக்கோட்டைத் தொட்டதும் நான் விழுந்தேன். அதற்குப்பிறகு ஒரு சென்டிமீட்டர்கூட நான் அடியெடுத்து வைக்க முடியாதபடிக்கு என் உடலின் சக்தி அனைத்தும் தீர்ந்துவிட்டிருந்தது. அப்படி நாட்டுக்காக ஓடினேன் என்பதே எனக்கு பெருமைதான். ஆகவே, இதுதான் என் ஓட்டங்களிலேயே ஸ்பெஷலானது என்பேன்” என்றிருக்கிறார்.



சிந்துவின் பயிற்சியாளரை மாற்றுவோம்: தெலுங்கானா துணை முதல்வர்

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிவி சிந்துவுக்கும், அவரது பயிற்யாளர் கோபிசந்திற்கும், ஐதராபாத்தில் சிறப்பானதொரு வரவேற்பு வழங்கப்பட்டது.
இன்று காலை பிரேசிலில் இருந்து , ஐதராபாத் விமான நிலையம் வந்தடைந்தார் சிந்து.அமைச்சர்கள், ரசிகர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலர் அவரின் வருகைக்காக காத்திருந்தனர். மும்பையில் இருந்து வந்த திறந்தவெளி டபுள்டெக்கர் பேருந்தில், சிந்து கோபிசந்துடன் வலம் வந்தார். 



அங்கு இருந்து அவர் கச்சிபவுளி ஸ்டேடியத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தெலுங்கானா துணை முதல்வர் மஹ்மூத் அலி அவரை அங்கு வரவேற்றார். 

பயிற்சியாளர் கோபி சந்த் பேசும் போது , " எங்கள் அகாடெமியில் இருந்து பலர் முன்னேறி வருகிறார்கள். அவர்கள் உடன் வருபவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளிப்பார்கள்.ஸ்ரீகாந்த் கட்டம்பி மிகவும் சிறப்பாக விளையாடினார். தேவையான ஒரு சூழலில், இந்தியாவிற்காக சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்துவுக்கு நன்றி" என்றார்.
அதில் பேசிய துணை முதல்வர் மஹ்மூத் அலி, " கோபிசந்த் சிறப்பான பயிற்சியாளர் தான். ஆனாலும், சிந்துவின் பயிற்சியாளரை மாற்ற இருக்கிறோம். அதனால்,அவர் அடுத்து நடக்க இருக்கும் போட்டிகளில் வென்று தங்கம் வெல்வார் " என பேட்டியளித்து இருக்கிறார். 
சாய்னா நேவால், பிவி சிந்து என இந்தியாவின் பேட்மின்டன் சாதனையாளர்கள் பலருக்கு கோபிசந்த் தான் பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பதால், துணை முதல்வர் பேசியது அவசியமற்றது என கருத்துக்கள் எழுந்துள்ளது. 
 



Monday, 22 August 2016

சிந்துவின் செல்போனை திரும்ப கொடுத்தார் கோபிசந்த் ....ஐஸ்கிரீம் சாப்பிடவும் அனுமதி!

லிம்பிக்கில் பதக்கம் வெல்லும் நோக்கத்தில் சிந்துவின் செல்போனை அவரிடம் இருந்து பறித்து வைத்திருந்த பயிற்சியாளர் கோபிசந்த், அதனை திரும்ப ஒப்படைக்கப் போவதாக கூறியுள்ளார். 
br />

ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து பேட்மின்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதையடுத்து, அவரது பயிற்சியாளர் கோபிசந்த் கடும் உற்சாகமடைந்துள்ளார். விளையாட்டு உலகைப் பொறுத்த வரை, கோபிசந்த் கடுமையான விதிமுறைகளை பின்பற்றும் பயிற்சியாளர்களில் ஒருவர். சாய்னா முதல் பி.வி சிந்து வரை பயிற்சியின் போது கடும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டுமென கோபிசந்த் எதிர்பார்ப்பார்.

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக கூட, சிந்துவின் செல்போனை கோபிசந்த் வாங்கி வைத்துக் கொண்டார். கடந்த 90 நாட்களாக   ஃபேஸ்புக்,வாட்சப்பில் கூட நண்பர்களுடன் உறவாட முடியாத நிலையில்தான் சிந்து இருந்தார். முக்கியமாக ஐஸ்கிரீமுக்கும் தடை. சிந்துவுக்கோ ஐஸ்கிரீம், இனிப்பு என்றால் உயிர். ஆனால் சாதிப்பவர்கள் சில விஷயங்களை தியாகம் செய்ய முன்வர வேண்டுமென்பதுதான் கோபிசந்தின் லாஜிக்.

ஒலிம்பிக் இறுதிப் போட்டி வரை கடுமையான பயிற்சியாளராக தெரிந்த கோபிசந்த் தற்போது சிந்துவின் மூத்த சகோதரராகவே மாறி விட்டார். சிந்துவிடம் செல்போனைத் திரும்ப கொடுத்துவிட்டார். வாட்ஸப்பில் நண்பர்களுடன் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் அனுமதித்துள்ளார். இது குறித்து கோபிசந்த் கூறுகையில், ''கடந்த 3 மாதங்களாக சிந்துவின் செல்போன் என்னிடம்தான் இருக்கிறது. முதல் விஷயமாக செல்போனை அவரிடம் ஒப்படைக்க முடிவு செய்திருக்கிறேன். இரண்டாவது சிந்துவுக்கு லஸ்ஸி மிகவும் பிடித்த விஷயம். அதனை சாப்பிடவும்  தடை விதித்திருந்தேன். ஐஸ்கிரீமுக்கு தடை விதித்திருந்தேன். இனிமேல் அவர் என்ன வேண்டுமோ விரும்பியபடி சாப்பிட்டுக் கொள்ளலாம்.

கடந்த இரண்டு மாதங்களாகவே சிந்து கடுமையாக உழைத்தார். அதற்காக பலத் தியாகங்களை செய்ய வேண்டியது இருந்தது. ரியோவில் அவர் என்ன செய்ய வேண்டுமென்று நான் கருதினேனோ அதனை செய்துள்ளார். இப்போது நான் அடைந்துள்ள மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. நம்மை பெருமையடைய வைத்துள்ளார். சிந்துவுக்கு இன்னும் வயது இருக்கிறது. இது ஒரு தொடக்கம்தான். போடியம் ஏறும் போது சிந்துவிடம் நான் ஒரு விஷயம் சொன்னேன். தங்கம் இழந்ததற்காக வருத்தப்படாதே. வெள்ளி வென்றதற்காக பெருமைப்படு என்றேன் '
br
கோபிசந்த்.. We Respect You Man!


சிந்துவின் செல்போனை திரும்ப கொடுத்தார் கோபிசந்த் ....ஐஸ்கிரீம் சாப்பிடவும் அனுமதி!

லிம்பிக்கில் பதக்கம் வெல்லும் நோக்கத்தில் சிந்துவின் செல்போனை அவரிடம் இருந்து பறித்து வைத்திருந்த பயிற்சியாளர் கோபிசந்த், அதனை திரும்ப ஒப்படைக்கப் போவதாக கூறியுள்ளார். 
br />

ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து பேட்மின்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதையடுத்து, அவரது பயிற்சியாளர் கோபிசந்த் கடும் உற்சாகமடைந்துள்ளார். விளையாட்டு உலகைப் பொறுத்த வரை, கோபிசந்த் கடுமையான விதிமுறைகளை பின்பற்றும் பயிற்சியாளர்களில் ஒருவர். சாய்னா முதல் பி.வி சிந்து வரை பயிற்சியின் போது கடும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டுமென கோபிசந்த் எதிர்பார்ப்பார்.

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக கூட, சிந்துவின் செல்போனை கோபிசந்த் வாங்கி வைத்துக் கொண்டார். கடந்த 90 நாட்களாக   ஃபேஸ்புக்,வாட்சப்பில் கூட நண்பர்களுடன் உறவாட முடியாத நிலையில்தான் சிந்து இருந்தார். முக்கியமாக ஐஸ்கிரீமுக்கும் தடை. சிந்துவுக்கோ ஐஸ்கிரீம், இனிப்பு என்றால் உயிர். ஆனால் சாதிப்பவர்கள் சில விஷயங்களை தியாகம் செய்ய முன்வர வேண்டுமென்பதுதான் கோபிசந்தின் லாஜிக்.

ஒலிம்பிக் இறுதிப் போட்டி வரை கடுமையான பயிற்சியாளராக தெரிந்த கோபிசந்த் தற்போது சிந்துவின் மூத்த சகோதரராகவே மாறி விட்டார். சிந்துவிடம் செல்போனைத் திரும்ப கொடுத்துவிட்டார். வாட்ஸப்பில் நண்பர்களுடன் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் அனுமதித்துள்ளார். இது குறித்து கோபிசந்த் கூறுகையில், ''கடந்த 3 மாதங்களாக சிந்துவின் செல்போன் என்னிடம்தான் இருக்கிறது. முதல் விஷயமாக செல்போனை அவரிடம் ஒப்படைக்க முடிவு செய்திருக்கிறேன். இரண்டாவது சிந்துவுக்கு லஸ்ஸி மிகவும் பிடித்த விஷயம். அதனை சாப்பிடவும்  தடை விதித்திருந்தேன். ஐஸ்கிரீமுக்கு தடை விதித்திருந்தேன். இனிமேல் அவர் என்ன வேண்டுமோ விரும்பியபடி சாப்பிட்டுக் கொள்ளலாம்.

கடந்த இரண்டு மாதங்களாகவே சிந்து கடுமையாக உழைத்தார். அதற்காக பலத் தியாகங்களை செய்ய வேண்டியது இருந்தது. ரியோவில் அவர் என்ன செய்ய வேண்டுமென்று நான் கருதினேனோ அதனை செய்துள்ளார். இப்போது நான் அடைந்துள்ள மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. நம்மை பெருமையடைய வைத்துள்ளார். சிந்துவுக்கு இன்னும் வயது இருக்கிறது. இது ஒரு தொடக்கம்தான். போடியம் ஏறும் போது சிந்துவிடம் நான் ஒரு விஷயம் சொன்னேன். தங்கம் இழந்ததற்காக வருத்தப்படாதே. வெள்ளி வென்றதற்காக பெருமைப்படு என்றேன் '
br
கோபிசந்த்.. We Respect You Man!


அணைந்த ஒலிம்பிக் தீபம்!

கிரேக்கக் கடவுள்களில் ஒருவரான  ப்ரோமேதியஸ்  வருங்காலத்தை முன்கூட்டியே கணிக்கக் கூடியவர். கடவுள் என்றாலும் பொதுவுடைமைச் சிந்தனை கொண்டவர். மவுண்ட் ஒலிம்பியாவின் உச்சியில், கடவுள்களோடு கடவுளாக வாழ்வதில்  ப்ரோமேதியஸுக்கு அதிக விருப்பம் இல்லை. மக்களோடு மக்களாக வாழ தரைக்கு வந்தார். ஆனால், மக்களின் வாழ்க்கை சுகமாக இருக்கவில்லை. முடங்கிக் கிடந்தனர். அதிகக் குளிர். வேட்டையாட, சமைக்க முடியவில்லை. காரணம், அவர்களிடம் நெருப்பே இல்லை.
br />

கடவுள்களின் அரசனான ஜீயஸிடம் சென்றார்  ப்ரோமேதியஸ். ஜீயஸே இடி, மின்னல், நெருப்பு உள்ளிட்ட சக்திகளின் ஹோல்சேல் அதிபதி. ‘ப்ளீஸ், மக்களுக்கு நெருப்பு கொடுங்க...’ என்று விண்ணப்பம் வைத்தார். ‘நெருப்பைக் கொடுத்தால் மக்கள் சக்தி வாய்ந்தவர்களாக மாறிவிடுவார்கள். அது நமக்கு பாதகமாகிவிடும். சிறு பொறி கூட தரமாட்டேன்’ என்று கடுப்பு காட்டினார் ஜீயஸ்.
கவலையுடன் கடற்கரையில் நடந்து வந்த  ப்ரோமேதியஸ், அங்கே ஒரு மரத்துண்டைக் கண்டார். அதை உடைத்தார். அதன் வெற்றிடத்தின் உள்ளே நீண்ட நேரம் நின்று எரியும் பொருள்களை நிரப்பினார். ஜீயஸ் வாழும் இடத்தில் சென்று மறைந்து கொண்டார். இரவில் ஜீயஸ் உறங்கும்போது ப்ரோமேதியஸ் அவரருகே பதுங்கிப் பதுங்கிச் சென்றார். ஜீயஸ் கையில் வைத்திருக்கும் நெருப்பு உருவாக்கும் மந்திரக்கோலின் மீது அந்த தீப்பந்தத்தை வைத்தார். சிறு மின்னல் உருவாகி பந்தம் பற்றியது.
உடனே நிலத்துக்குத் திரும்பினார். குளிர்காய நெருப்பை மூட்டி, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். பிறகு ஒருநாள் ஜீயஸ், நிலத்தில் மக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி சந்தோஷமாக வாழ்வதைக் கண்டார். கோபமடைந்தார்.  ப்ரோமேதியஸுக்கு கடும் தண்டனை வழங்கினார். ஆனால்,  ப்ரோமேதியஸ் ஜீயஸிடமிருந்து திருடியிருக்காவிட்டால் மக்களுக்கு நெருப்பே கிடைத்திருக்காது என்பதே கிரேக்க புராணம் சொல்லும் கதை.
பண்டைய கிரேக்கத்தில், அதாவது கிமு 776 ல்,   முதல் ஒலிம்பிக் போட்டிகள்  நடந்த காலம் முழுவதும், இந்த நெருப்பு திருடிய நிகழ்வைக் கொண்டாடும் விதமாக, ஒரு கொப்பரையில் தீ எரிந்து கொண்டிருந்தது. நவீன ஒலிம்பிக் 1928 ல் ஆம்ஸ்டர்டாமில் நடந்துபோது, ஒலிம்பிக் தீபம் ஏற்றும் பண்டைய கிரேக்க வழக்கம் மறு அறிமுகம் செய்யப்பட்டது. 1936 பெர்லின் ஹிட்லர் ஒலிம்பிக்கில், தீபத்தை ஓட்டமாக எடுத்துச் சென்று, அதை துவக்க விழா சமயத்தில் கொப்பரையில் ஏற்றும் வழக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிக்கும் பிரத்யேகமாக ஒலிம்பிக் தீவட்டி தயாரிக்கப்படுகிறது. ஒலிம்பிக் ஆரம்ப விழாவுக்கு சில மாதங்களுக்கு முன்பாகவே, ஒலிம்பிக்கின் தாயகமான ஒலிம்பியாவில் இந்த தீவட்டி ஏற்றப்படுகிறது. பதினொரு கன்னிப் பெண்கள் சூழ்ந்திருக்க, சூரிய ஒளியை ஓர் ஆடியில் குவியச் செய்து அதன் மூலம் நெருப்பை உண்டாக்கி தீவட்டியை ஏற்றுகின்றனர். அதன்பின் காடு, மலை, பாலைவனம், கிராமம், நகரம், கடல், அருவி, வானம் என ஒவ்வொன்றையும் கடந்து, ஒலிம்பிக் நடைபெறும் மைதானத்தை நோக்கி, ஒலிம்பிக் தீபத்தின் பயணம் ஆரம்பமாகும்.
யார் இறுதியில் மைதானத்தில் ஓடிவந்து ஒலிம்பிக் தீபத்தை ஏற்றப்போகிறார் என்பதை ஒவ்வொரு முறையும் ரகசியமாகவே வைத்திருப்பார்கள். அந்த கௌரவம் மிகப் பெரியது. 1964 டோக்கியோ ஒலிம்பிக்கில் யார் தீபத்தை ஏந்தி வரப்போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அப்போது பிரபலம் அல்லாத பருவ வயது இளைஞன் ஒருவன்,  தீபத்தை ஏந்தி ஓடிவந்தான். அவன் பெயர் யோஷினோரி ஷகாய். இரண்டாம் உலகப்போரில், ஹிரோஷிமா நகரம் மீது அணுகுண்டு வீசப்பட்ட அதே தினத்தில் பிறந்தவன். போருக்குப் பின் ஜப்பான் மீண்டெழுந்ததைக் குறிக்கும் விதமாகவும், உலகில் அமைதியை வலியுறுத்தும் விதமாகவும் மாணவன் யோஷினோரிக்கு தீபம் ஏற்றும் கௌரவம் அளிக்கப்பட்டது.
br />
1992 பார்சிலோனா தொடக்க விழாவில், ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்ட விதம் உலகையே வாய்பிளக்கச் செய்தது. மைதானத்தில் பாராலிம்பிக் வில்வித்தை வீரர் ஆண்டனியோ ரெபோல்லோ காத்திருந்தார். மக்கள் ஆர்ப்பரிக்க ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி வந்த வீரர் ஒருவர், ஆண்டனியோ கையில் இருந்த அம்பின் முனையில் பற்ற வைத்தார். ஆண்டனியோ ஒரு வில்லில் அந்த நெருப்பு அம்பைப் பொருத்தி, 181 அடி உயரத்தில் இருந்த கொப்பரையை நோக்கி எய்தார். ஒலிம்பிக் தீபம் மளமளவென எரிந்தது. அதைக் கண்ட ஒவ்வொருவரும் பரவசத்தில் ஆழ்ந்தனர். இதுவே மிகச் சிறந்த ஒலிம்பிக் தீப ஏற்றும் நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது.


ஆனால், ஆண்டனியோ எய்த நெருப்பு அம்பு, கொப்பரை தாண்டி வைக்கப்பட்டிருந்த மணல் பெட்டிகளில் பாதுகாப்பாகச் சென்று விழுந்தது. கொப்பரையின் மேலே எரிவாயு பரவியிருந்தது. அம்பு எய்யப்பட்ட நொடியில், ரிமோட் கண்ட்ரோல் மூலம் கொப்பரையில் தீ ஏற்றப்பட்டது. எல்லாமே நாடகம். ரசிகர்களின் பாதுகாப்பு கருதியே இப்படிச் செய்தார்கள் என்று பின்னர் செய்திகள் வெளியாயின.
ஒலிம்பிக் தீப ஓட்டம் நடைபெறும் இடத்தில் போராட்டம் செய்வது, எதிர்ப்புகளைத் தெரிவிப்பது, மிரட்டல் விடுப்பது, ஓட்டத்தைத் தடுக்க நினைப்பது என ஒவ்வொரு ஒலிம்பிக் ஓட்டத்திலும் இந்த நெருப்பைச் சுற்றிய அரசியல் போராட்டங்களுக்கும் குறைவே இல்லை. 'ஒலிம்பிக் தீபத்தை அணைக்காமல் நாடு நாடாக, ஊர் ஊராகக் கொண்டு செல்ல முடியுமா, அது அணைந்ததே இல்லையா' என்ற கேள்விகள் எழலாம். அணைந்திருக்கிறது. அணைந்தால் மீண்டும் ஏற்றிக் கொண்டு ஓட்டத்தைத் தொடருவார்கள். அவ்வளவுதான்.
1976 மான்ட்ரியல் ஒலிம்பிக் போட்டிக்கான தீப ஓட்டம் நடைபெற்றது. ஆரம்ப விழாவில் கொப்பரையில் தீபம் ஏற்றுவதில் எல்லாம் பிரச்னையில்லை. இடையே ஒரு நாள் நல்ல காற்று, கனமழை. கொப்பரையில் நெருப்பு அணைந்துவிட்டது. அன்று போட்டி எதுவும் இல்லாததால் மைதானத்தில் யாரும் இல்லை. ஒரே ஒரு பிளம்பர் அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஒலிம்பிக் தீபம் அணைந்ததும், பதறிய அவர், ஒரு செய்தித்தாளை எடுத்து சுருட்டி, தன் சிகரெட் லைட்டரால் அதைப் பற்றவைத்து ஒலிம்பிக் தீபம் ஏற்றும் பெருமையினைத் தனக்குத் தானே தேடிக் கொண்டார். அவர் பெயர், பியரி பௌசர்ட்.
இதைக் கண்டு பதறிய ஒலிம்பிக் அதிகாரிகள் சிலர், வேக வேகமாக வந்து அந்த தீபத்தை அணைத்தனர். ஒலிம்பிக் தீபத்தின் புனிதம் கெட்டுவிட்டதாகப் பதறினர். மைதானத்தில் பத்திரமாக வைத்திருந்த பிரத்யேக ஒலிம்பிக் தீவட்டியை எடுத்து வந்து, மீண்டும் தீபமேற்றி புனிதத்தை மீட்டெடுத்தனர்.
இதுவரையிலான நவீன ஒலிம்பிக் வரலாற்றில், 2008 பீஜிங் ஒலிம்பிக் தீபத்தின் பயணம்தான் மிக நீளமானது. மார்ச் 24ல் ஆரம்பித்த ஓட்டம், ஆகஸ்ட் 8 வரை நடந்தது. அண்டார்டிகா தவிர, பிற ஆறு கண்டங்களிலும், 1,37,000 கி.மீ பயணம். 21,880 பேர் சுமந்து ஓடினர். எவரெஸ்ட் சிகரத்தில்கூட  அந்த ஒலிம்பிக் தீபம் பயணம் செய்தது. பறவைக்கூடு வடிவிலான தேசிய மைதானத்தில், சீன ஜிம்னாஸ்டிக் வீரர் லி நிங், கையில் ஒலிம்பிக் தீபத்துடன், அந்தரத்தில் பறந்தபடி ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி, அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்.
br />
2016 ரியோ ஒலிம்பிக் தீப ஓட்டத்தில், அகதிகள் முகாமிலிருக்கும் ஆப்கனிஸ்தான், ஈரான், சிரிய அகதிகளும் பங்கேற்றள்ளனர்.
ஒவ்வொரு ஒலிம்பிக் நிறைவு விழாவின் இறுதியாக, ஒலிம்பிக் தீபம் அணைக்கப்படும். அது மீண்டும் ஒலிம்பியாவில் உயிர்பெறும்வரை காத்திருப்போம்.


Saturday, 20 August 2016

என் தேசத்துக்காக நான் ஏன் ஓடக் கூடாது?'' - பிரதமர் மோடிக்கு ஒரு தடகள வீராங்கனையின் மடல்


க்‌ஷா பந்தன் விழாவையொட்டி முன்னாள் சர்வதேச தடகள வீராங்கனை சாந்தி செளந்திரராஜன் பிரதமர் மோடிக்கு சகோதரத்துவ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், ''என்னுடைய மூத்த சகோதரராக உங்களை நான் பார்க்கிறேன். ரக்‌ஷா பந்தன் வாழ்த்துத் தெரிவித்த இந்தத் தங்கையை ஏன் மறந்துவிட்டீர்கள்? அநீதி இழைக்கப்பட்ட எனக்கு என்ன பரிசுப்பொருள் கொடுக்கப் போகிறீர்கள்'' என்று கேட்டுள்ளார்.



''நான் மட்டும் ஏன் புறகணிக்கப்பட்டுள்ளேன்?''
''என்னைப்போன்று பாலினச் சோதனையில் சிக்கியவர் ஒடிசா வீராங்கனையான டூட்டி சந்த். அவர், தனது தடைக்கு எதிராகச் சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்தத் தடை விலக்கப்பட்டு, அவர் தற்போது ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். இருவருக்குமே ஒரே பிரச்னைதான். ஆனால், அவருக்கு மட்டும் நீதி கிடைத்துள்ளது. நான் மட்டும் ஏன் புறக்கணிக்கப்பட்டு உள்ளேன். டூட்டி சந்தின் நியாயமான போராட்டத்துக்கு அந்த மாநிலம் முழுவதுமாக ஒத்துழைப்பு அளித்தது. அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக விவாதங்கள் நடைபெற்றன. என் தடை மீது மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு மட்டும் ஏன் இன்னும் நீதி  கிடைக்கவில்லை?

ரக்‌ஷா பந்தன் விழாவை நீங்கள் கொண்டாடி வருகிறீர்கள். என் சகோதரா... உங்களிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். என்னை மட்டும் ஏன் மறந்துவீட்டீர்கள்? 10 வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால், என் நீதிக்கான கேள்விகளுக்கு மட்டும் இதுவரை ஏன் பதில் கிடைக்கவில்லை. பாலினச் சோதனையால் சிறந்த வீரர்கள் தடை விதிக்கப்படுகிறார்கள். 'எனக்குத் தடை விதிக்கவில்லை' என்று  இந்திய விளையாட்டு ஆணையம் சொல்கிறது. அவ்வாறு எனக்கு தடை விதிக்கவில்லை என்றால், என் தேசத்துக்காக நான் ஏன் ஓடக் கூடாது? இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகளை எண்ணும்போது மிகவும் அதிருப்தி அளிக்கிறது. ஒரு விளையாட்டு வீரருக்கு ஊக்குவிப்பும், மற்றொரு விளையாட்டு வீரருக்குத் தடைவிதிப்பும்தான் இந்த நாட்டின் நீதியா? வீளையாட்டு வீரர்களுக்காக Run with Rio  போன்றவற்றைச் செயல்படுத்தி வருகிறீர்கள். உங்களிடம் கேட்கிறேன்... என்னுடைய போராட்டத்துக்கான நீதியைக் காப்பற்றுங்கள். இந்தச் சகோதரியை ஏற்றுக்கொள்ளுங்கள்'' என்று மோடிக்கு சாந்தி கடிதம்  எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக சாந்தியை தொடர்புகொண்டபோது, ''நான் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதாலும், ஆணையத்தின் விதிகளைப் பின்பற்றி நடப்பதாலும் மீடியாக்களிடம் எதுவும் பேச முடியாது'' என்றார்.

சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் பாலின விதிகளை எதிர்த்துப் போராடிவரும் கோபிசங்கர், ''ஒடிசாவைச் சேர்ந்த தடகள வீராங்கனையான டூட்டி சந்துக்கு டெஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாகக் கூறி, அவரைத் தகுதி நீக்கம் செய்தது இந்திய தடகள சம்மேளனம். தடகளப் போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதித்தது. இதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘ஒருவரை ஆண் என்றும், பெண் என்றும் எவ்வாறு நிர்ணயம் செய்கிறீர்கள்? ஹார்மோன்களை அடிப்படையாகவைத்து மட்டும் பாலினத்தை நிர்ணயம் செய்வது முற்றிலும் அறிவியல் பூர்வமற்றது. பெண் தன்மையை உறுதி செய்வதற்காகத் தற்போதுள்ள விதிமுறைகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது. எனவே, சர்வதேச தடகள விளையாட்டுச் சம்மேளனம், பாலினப் பரிசோதனை முறை மற்றும் விதிமுறைகள் பற்றி 2 ஆண்டுகளுக்குள் திருப்தி அளிக்கும் வகையில் பதில் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதபட்சத்தில், பாலினப் பரிசோதனை நடைமுறை ஒட்டுமொத்தமாக நீக்கப்படும்’ என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரையில், ஓர் ஆண், தான் ஓர் ஆண்தான் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. ஆனால், பெண்கள் மட்டும் தங்களைப் பெண் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த விதிமுறையால் சர்வதேச அளவில் இதுவரையில் 75 வீராங்கனைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். டூட்டி சந்து விவகாரத்துக்குப் பிறகு சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தின் புதிய உத்தரவு மூலம் விளையாட்டுத் துறையில் பாலினச் சமத்துவம் நிலை நாட்டப்பட்டுள்ளது. டூட்டி சந்துக்கு 2 ஆண்டுகளுக்குள் நீதி கிடைத்துள்ளது. அவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தடை விலகிவிட்டது. கடந்த 2006-ம் ஆண்டு இதே விதியின் அடிப்படையில்தான் சாந்தி செளந்திரராஜனிடம் பதக்கங்கள் பறிக்கப்பட்டதோடு, போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. அவருக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லையே'' என்றார்.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கொடுக்கப்பட்ட தகவல்கள் குளறுபடியா?
சாந்தி, டூட்டி சந்த் இருவருக்குமே ஒரே பிரச்னைதான். இதில், ஒருவருக்கு நீதி கிடைத்துள்ளது. மற்றொருவருக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. இதுவரை சாந்திக்கு பாலினச் சோதனை ரிப்போர்ட்கூட கொடுக்கப்படவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தேசிய விளையாட்டு ஆணையம், மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகிய அமைப்புகளிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, சாந்திக்கு ஒரு பதிலும்... சாந்தி சார்பாக மற்றொருவர் கேட்ட கேள்விக்கு வேறொரு பதிலும் வந்துள்ளது.

தகவல் உரிமைச் சட்டத்தில் சாந்தி கேட்ட கேள்விக்கு வந்துள்ள பதில்!
1. பாலினச் பரிசோதனை அறிக்கை எனக்கு வழங்க வேண்டும்?
உங்கள் அடையாளத்தை நிரூபித்துவிட்டு, இந்திய தடகள சங்கத்திடம் இருந்து அறிக்கையை வாங்கிக்கொள்ளுங்கள்.  
2. என்னைப் பாலினச் பரிசோதனை செய்த அறிக்கையை நீங்கள் எப்படி நியாமான ரிபோர்ட் என்று நம்புகிறீர்கள். அதற்குப் பதில் கொடுங்கள்? எதைவைத்து, செல்லும்... செல்லுபடியாகாது என்ற முடிவுக்கு வந்தீர்கள்?  
அதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தம் இல்லை.  
3. பாலினப் பரிசோதனையில் தோல்வி அடையும் வீராங்கனைகள் தேசிய அல்லது சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கக் கூடாது என்று தடை இருக்கிறதா? அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதா... அந்த ஆணையைக் கொடுங்கள்?
அதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்மபந்தம் இல்லை.
4. தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதா?
இந்திய ஊக்க மருந்து தடுப்புக் குழுவின் விசாரணைக்கு நீங்கள் வராததன் காரணமாக அதைப் பற்றி நாங்கள் மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடியவில்லை.
இந்தக் கேள்விகளை சாந்தி சார்பாக மற்றொருவர் கேட்டபோது சில கேள்விகளுக்கு பதில்கள் மாறியுள்ளன. தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, 'தடை விதிக்கவில்லை' என்று பதில் அளித்துள்ளனர். ஆனால் சாந்தியின் கேள்விக்கோ, 'இந்திய ஊக்க மருந்து தடுப்புக் குழுவின் விசாரணைக்கு நீங்கள் வராததன் காரணமாக அதைப் பற்றி நாங்கள் மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடியவில்லை'என்று கூறியுள்ளனர். இந்தப் பதிலுக்கு சாந்தி  தரப்பில், ''அதுபோன்ற அழைப்பு தமக்கு வரவில்லை என்றும், விசாரணையும் நடைபெறவில்லை'' என்றும் கூறுகின்றனர்.
சாந்திக்கு தடை செய்யப்பட்ட விவகாரத்தில், ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தை ஆய்வுக்கு உட்படுத்தினால் மட்டுமே ஓர் உண்மையான வீரரின் அடையாளம் வரலாற்றில் பதிவாகும் என்பது தெள்ளத் தெளிவாகிறது.




4x100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் தட்டினார் உசேன்!

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


ஜமைக்கா நாட்டை சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட், ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் மட்டும் தொடர்ந்து 9 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார்.
பீஜிங் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் தொடர் ஓட்டம்), லண்டன் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் தொடர் ஓட்டம்) ஜமைக்கா நாட்டை சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் வென்றிருந்தார்.
அந்த சாதனையின் தொடர்ச்சியாக, தற்போது ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் ஒரு தங்கப் பதக்கத்தையும், அடுத்ததாக 200 மீ. ஓட்டத்தின் இறுதிச்சுற்றில் போல்ட் 19.78 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். அவருக்கு அடுத்தபடியாக கனடாவின் ஆன்ட்ரே டி கிரேஸ் (20.02) வெள்ளியும், பிரான்ஸின் கிறிஸ்டோப் லீமெய்ட்ரே (20.12) வெண்கலமும் வென்றனர். அதை தொடர்ந்து, 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் அவர் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது.


இந்நிலையில், மிகவும் பரபரப்பாக இன்று நடைபெற்ற 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 37.27 வினாடிகளில் வெற்றிக் கோட்டை கடந்து,  இந்த ஒலிம்பிக்கின் மூன்றாவது தங்கத்தை உசேன் போல்ட் தட்டிச் சென்றுள்ளார். இந்த வெற்றியுடன், தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் 9 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துளார் உசேன் போல்ட்.
இதே தூரத்தை 37.60 வினாடிகளில் கடந்த ஜப்பான் வீரர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதே நேரம் 37.62 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி,  அமெரிக்க அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தாலும், மைக் ராட்ஜர்ஸ் கையிலிருந்‌த பேட்டனை,  தன்னுடைய எல்லை கோட்டிலிருந்து மாறி ஜஸ்டின் கேட்லினிடம் கொடுத்ததால், அமெரிக்க அணி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதனால் 4வதாக வந்த கனடா அணிக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.




நான் குற்றவாளி என்றால், என்னை தூக்கிலிடுங்கள்! - நர்சிங் யாதவ் உருக்கம்

ரியோ டி ஜெனிரோ: நான் குற்றவாளி என்றால், என்னை தூக்கிலிடுங்கள், அதற்கு தயாராகவே உள்ளேன் என்று இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.


இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ், 2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (74 கிலோ) வெண்கலம் வென்று ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார். கடந்த ஜூன் 25-ம் தேதி இவருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. அதில், தடை செய்யப்பட்ட 'மெட்டாடியனன்' என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது உறுதியானது. இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் நர்சிங் யாதவ் கலந்து கொள்வது கேள்விக்குறியானது.
இதற்கிடையே, தேசிய ஊக்க மருந்து சோதனை அமைப்பின் ஆணையம் நர்சிங் யாதவ் பிரச்னை குறித்து விசாரணை நடத்தி, நரசிங் யாதவ் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளலாம். அவர் மீது எந்த தவறும் இல்லை. விடுதியில் வழங்கப்பட்ட உணவில்தான் ஊக்க மருந்து கலந்துள்ளது. அவர் தெரியாமலேயே இதை பயன்படுத்தியுள்ளா என்று தெரிவித்திருந்தது.
இந்தியாவின் தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு (NADA) நர்சிங் யாதவிற்கு வழங்கிய தடையில்லா சான்றிதழை எதிர்த்து உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு (WADA) முறையீடு செய்தது. இதனையடுத்து, உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் முறையீட்டு மனுவை விசாரித்த சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் நர்சிங் யாதவ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதித்ததுடன், நான்கு ஆண்டுகளுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கும் தடை விதித்துள்ளது.


இந்நிலையில், இது குறித்து இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் கூறும்போது, ''என்னுடைய பெயர் களங்கப்படுத்தப்பட்டுள்ளது. இது எனக்கு மட்டுமல்ல, இந்த தடை இந்தியா மீதான கறை ஆகும். நீதியுடன் திரும்பாவிட்டால், என்னை தூக்கில் தொங்க அனுமதியுங்கள், இதனை நான் உயர்மட்ட நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்வேன்.

இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்த பிரதமர் மோடியிடம் முறையிடுவேன். உண்மை வெளிவர வேண்டும். தேவையென்றால் சி.பி.ஐ. விசாரணை நடத்துங்கள். நான் குற்றவாளி என்றால் என்னை தூக்கில் இடுங்கள். அதற்கு நான் தயாராகவே உள்ளேன். எனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், விளையாட்டின் எதிர்காலம் இருண்டதாகி விடும்" என்று தெரிவித்துள்ளார்.




திருமணங்கள் ஒலிம்பிக்கில் நிச்சயிக்கப்படுகின்றன!

‘அந்த ஒரே ஒரு ஜப்பான் ஆளு மட்டும் காணாமப் போயிட்டாருங்க. அவர் ஓடியும் முடிக்கல. ஆனா, வழியில எங்க தேடியும் கிடைக்கல.’
1912 ல் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்கில், மாரத்தான் போட்டி நடத்தி முடித்தபின், வீரர்களது விவரங்களைச் சரிபார்த்த போட்டி அதிகாரிகள், ஷிஷோ கனாகுரி என்ற அந்த ஜப்பானிய வீரரைக் கண்டுபிடிக்க முடியாமல் திகைத்து நின்றனர். எங்கே போனார் ஷிஷோ?  பத்திரமாக ஜப்பானுக்குத்தான் திரும்பிப் போயிருந்தார். அந்த ஒலிம்பிக் போட்டிக்கு ஜப்பான் இரண்டே இரண்டு தடகள வீரர்களை மட்டுமே அனுப்பி வைத்தது. அதில் ஷிஷோவும் ஒருவர்.


ஜப்பானிலிருந்து ஸ்டாக்ஹோம் வந்து சேரவே 18 நாட்கள் பயணம். அதிலேயே அதீத சோர்வுடன் இருந்த ஷிஷோவுக்கு, அங்கு கிடைத்த உணவும் ஒத்துவரவில்லை. மாரத்தான் போட்டியன்று வெயிலும் காட்டு காட்டென்று காட்டியதால், பாதி வழியிலேயே துவண்டு போனார். ‘ஓட ஓட ஓட தூரம் குறையல’ என்று உடல் சோர்ந்தது. ஓடி முடிக்காவிட்டால் கேவலம் என்று மனம் எச்சரித்தது. விஷயம் மற்றவர்களுக்குத் தெரிந்தால்தானே? ஆகவே, யாரிடமும் எதுவும் சொல்லாமல் சத்தமின்றி தன் தேசத்துக்குக் கிளம்பிவிட்டார் ஷிஷோ.
பின்னர் ஷிஷோ 1920 ஒலிம்பிக்கில், மாரத்தானில் கலந்து கொண்டார். பதினாறாவதாக ஓடி முடித்தார். 1924 ஒலிம்பிக் மாரத்தானிலும் கலந்து கொண்டார். ஓடி முடிக்கவில்லை.

1967. ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்கில் பாதியில் காணாமல் போன ஜப்பானிய வீரர் ஷிஷோ, இன்னமும் ஜப்பானில் உயிரோடுதான் வசிக்கிறார் என்று எப்படியோ ஸ்வீடனுக்குத் தெரிய வந்தது.ஸ்வீடன் தொலைக்காட்சி ஒன்று ஷிஷோவை நாடியது. ‘மிஸ்டர் ஷிஷோ, ஸ்டாக்ஹோமில் நீங்கள் ஓடி முடிக்க இயலாத மாரத்தானை இப்போது ஓடி முடிக்கிறீர்களா...?’
ஷிஷோ சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். 1967ல் ஸ்வீடன் வந்தார். ஸ்டாக்ஹோமில் அன்று ஓடிய பாதையில் தொடர்ந்து ஓடி, வெற்றிகரமாக எல்லைக் கோட்டைத் தொட்டார். உலகின் அதிக காலம் எடுத்துக் கொள்ளப்பட்ட மாரத்தான் ஓட்டம் இது. ஆம், 54 வருடங்கள், 8 மாதங்கள், 6 நாள்கள், 5 மணி நேரங்கள், 32 நிமிடங்கள், 20.379 விநாடிகள்.
ஷிஷோவின் முகத்தில் அவ்வளவு திருப்தி. புன்னகையுடன் சொன்னார். ‘மிக நீண்ட பயணம் இது. இந்தப் பயணத்துக்கு இடையே எனக்குத் திருமணம் நடந்தது. ஆறு குழந்தைகள் பிறந்தன. பத்து பேரன், பேத்திகளும் பிறந்துவிட்டன.’
செக்கோஸ்லோவிகியாவைச் சேர்ந்த எமில் ஸடோபெக், தனது பதினாறாவது வயதில் பாட்டா ஷூ கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அங்கே விளையாட்டுப் பயிற்சியாளர் ஒருவர் உண்டு. ஒருநாள் எமில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, அந்தப் பயிற்சியாளர் அங்கே வந்தார். ‘நீங்கள் எல்லோரும் ஓட்டப் பந்தயத்துக்கு வந்து விடுங்கள்’ என்று நான்கு இளைஞர்களைப் பார்த்துச் சொன்னார். அதில் எமிலும் ஒருவர். அவருக்கு அதில் விருப்பமே இல்லை. தட்டிக் கழிக்க நினைத்தார்.
‘என்னால் ஓட முடியாது. நான் மிகவும் பலஹீனமாக இருக்கிறேன்.’
பயிற்சியாளர் விடவில்லை. எமிலை மருத்துவர் ஒருவரிடம் அனுப்பினார். பரிசோதித்த மருத்துவர், ‘நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்’ என்று எமிலுக்கு சான்றிதழ் கொடுத்தார். வேறு வழியே இன்றி எமில் ஓட்டப் பந்தயத்தில் அரை மனதுடன் கலந்துகொண்டார்.
100 மீ போட்டி. போட்டி ஆரம்பித்த கணத்தில் எமிலுக்கு ஓடுவதில் ஈடுபாடு உண்டானது. இரண்டாவது இடம் பிடித்தார். அந்த வெற்றியின் ருசி பிடித்திருந்தது. உள்ளூர் தடகள கிளப் ஒன்றில் இணைந்தார். ஆர்வத்துடன் பயிற்சிகளை மேற்கொண்டார். பின்லாந்தின் நட்சத்திர ஓட்டப்பந்தய வீரர் பாவோ நுர்மி குறித்து படித்து தெரிந்து கொண்டார். பாவோ நுர்மி - 1920, 1924, 1928 என மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களில் 9 தங்கம், 3 வெள்ளி வென்று சாதித்தவர். அவரது சாதனைகள் எமிலுக்கு உத்வேகம் கொடுத்தன. நானும் பாவோ நுர்மி போல சாதிக்கப் போகிறேன்.
1944ல் 2000மீ, 3000மீ, 5000மீ என தேசிய அளவில் பந்தயங்களில் கலந்துகொண்ட எமில், புதிய தேசிய சாதனைகளைப் படைத்தார். 1948 லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எமிலுக்கு அமைந்தது. அதில் 5000மீ பந்தயத்தில் 0.2 விநாடியில் தங்கப்பதக்கத்தைத் தவறவிட்டார். ஆனால், 10000மீ பந்தயத்தில் புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார்.


அதற்கடுத்த வருடங்களில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மற்றும் பிற சர்வதேசப் போட்டிகளில் ‘தன் சாதனையைத் தானே முறியடித்த தானைத் தலைவர்’ என்று எமிலின் பட்டியலில் பல புதிய சாதனைகள் சேர்ந்தன.
எமில் மற்றும் டானா

1952. ஹெல்சின்கி ஒலிம்பிக் எமிலுக்கு மிக உற்சாகமாக ஆரம்பித்தது. காரணம், அவரது ஆதர்ச நாயகன் பாவோ நுர்மிதான் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். 5000மீ, 10000மீ பந்தயங்களில் எமில் கலந்துகொண்டார். ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோலவே இரண்டிலும் தங்கம் ஜெயித்தார். அதில் ஜூலை 24ல் நடந்த 5000 மீட்டர் இறுதிப்போட்டியில், ஒரு சுற்று பாக்கியிருக்கும்போது, நான்காவது ஆளாகவே எமில் ஓடிக்கொண்டிருந்தார். அந்த இறுதிச் சுற்றில் வேகமெடுத்தார். பிரான்ஸின் அலெய்னை பின்னிக்குத் தள்ளி, மேற்கு ஜெர்மனியின் ஹெர்பெட்டைச் சட்டென முந்தி, இங்கிலாந்தின் கிறிஸ்ஸை வீழ்த்தி எல்லைக்கோட்டை அடைந்தார். புதிய ஒலிம்பிக் சாதனை.
செப்டெம்பர் 19, 1922ல் எமில் பிறந்தார். அதே தேதியில், அதே ஆண்டில் பிறந்த டானா என்ற பெண், அதே ஒலிம்பிக் மைதானத்தில் ஈட்டி எறிந்து கொண்டிருந்தார். 5000 மீ பந்தயத்தில் எமில் தங்கம் வாங்கிய அதே பொழுதில், டானா ஈட்டி எறிதலில் தங்கம் வாங்கினார். அண்ணலின் ஓட்டம், காதல் வேகத்தில் டானாவின் மனத்தில் தடதடக்க... அவள் எறிந்த ஈட்டி, எமிலின் இதயத்தில் இன்பமாக இறங்கியது.
ஜூலை 27. ஹெல்சின்கியில் சும்மா உட்கார்ந்து கொண்டிருந்த எமிலுக்கு அன்று நடைபெறவிருந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ளலாம் என்று தோன்றியது. காதலின் பின்விளைவாகக்கூட இருக்கலாம். ஆனால், எமில் அதற்கு முன்பு மாராத்தான் ஓடியது கிடையாது. அதற்கான பயிற்சிகள் எடுத்தது கிடையாது. மாரத்தான் விதிமுறைகளும் தெரியாது. 'என்ன, 26.2 மைல்கள் ஓட வேண்டியது இருக்கும். சும்மா ஓடித்தான் பார்ப்போமே...' என பெயர் கொடுத்து கலந்துகொண்டார்.
அந்த மாரத்தானில் இங்கிலாந்தைச் சேர்ந்த மாரத்தான் சாம்பியனும், உலக சாதனையைத் தக்க வைத்திருந்த வீரருமான ஜிம் பீட்டர்ஸ்தான் தங்கம் வாங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். எமில், ஒரு கணக்கு போட்டார். எப்படியாவது ஜிம் பீட்டர்ஸ்க்கு ஈடு கொடுத்து அவருடனேயே ஓடினோம் என்றால் மாரத்தான் தொலைவைக் கடந்துவிடலாம்.
எமில், அப்படித்தான் ஓடிக்கொண்டிருந்தார். ஜிம் பீட்டர்ஸுக்கு ஓரிரு அடிகள் பின்னாலேயே, அவரைத் தொடர்ந்தபடி ஓடினார். 15 கிமீ கடந்திருப்பார்கள். எமிலுக்கு ஒரு சந்தேகம். தான் ஓடும் வேகம் சரிதானா? இதே வேகத்தில் ஓடினால் இறுதிவரை ஓட முடியுமா? ஓடிக்கொண்டே ஜிம் பீட்டர்ஸுக்கு அருகில் வந்து தன் சந்தேகத்தைக் கேட்டார் எமில். ‘நான் இப்போது மிக வேகமாக ஓடுகிறேனோ?’
ஜிம் பீட்டர்ஸ் எரிச்சலுடன் ஒரு பதிலைச் சொன்னார். ‘இல்லை, மிக மெதுவாக ஓடுகிறாய்!’
அந்த பதில் ஜிம் பீட்டர்ஸுக்கு வினையாகிப் போனது. எமில் தன் வேகத்தை அதிகரித்தார். மேலும் மேலும் மேன்மேலும் முன்னேறினார். ஜிம் பீட்டர்ஸால் எட்டிப் பிடிக்க முடியவில்லை. எமிலுக்குத் தாகம் எடுத்தது. வழியில் மாரத்தான் ஓட்டக்காரர்களுக்கெனவே தண்ணீரும் பழங்களும் வைத்திருந்தனர். அது தெரியாத எமில், ஏக்கத்துடன் அவற்றைப் பார்த்தபடியே கடந்து சென்றார். ‘இதற்கெல்லாம் என்னிடம் காசு இல்லை.’
வியர்வை வழிய, தாகத்தில் நாக்கு வறண்டு போக, உடலைக் களைப்பு ஆட்கொண்டாலும் தன் வேகத்தைக் குறைக்காத எமிலி, மாரத்தான் பற்றிய எந்த அறிவும் இன்றி 26.2 மைல்களை வெற்றிகரமாக முதலாவது ஆளாகக் கடந்து தங்கம் வென்றார். எமிலை உசுப்பேத்திய ஜிம் பீட்டர்ஸால் முழுத்தொலைவைக் கடக்க முடியவில்லை.
5000மீ, 10000மீ, மாரத்தான் உள்ளிட்ட மூன்று  அதிக தூரப் பந்தயங்களில், ஒரே ஒலிம்பிக்கில் தங்கம் என்ற புதிய சாதனை எமில் வசமானது. அந்தச் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.  
எமிலுக்கு அந்த மூன்று தங்கப் பதக்கங்களைவிட, அதிகம் மகிழ்ச்சி கொடுக்கும் விஷயமாக டானாவின் காதலும் அங்கே கிடைத்தது. இருவரும், 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கிலும் காதலர்களாக கலந்து கொண்டனர். இருவருக்குமே ஏமாற்றம். எந்தப் பதக்கங்களும் கிடைக்கவில்லை.
அதே 1956 ஒலிம்பிக் தடகளத்தில், இன்னொரு காதலும் சுகமாக மலர்ந்தது. வட்டு எறிதலில் தங்கம் வென்ற செக்கோஸ்லோவாகியாவின் ஒல்கா பிகோடோவாவின் இதயத்தை, சம்மட்டி எறிதலில் (Hammer throw) தங்கம் வென்ற அமெரிக்க வீரர் ஹல் கனோலி ஆக்கிரமித்தார்.


1957ல் நடந்த எமில்-டானா திருமணத்துக்கு, கனோலி-ஒல்கா இருவரும் தம்பதிகளாக வந்து கலந்து கொண்டனர். ஆம், திருமணங்கள் ஒலிம்பிக்கிலும் நிச்சயிக்கப்படுகின்றன.