Monetize Your Website or Blog

Showing posts with label வணிகம். Show all posts
Showing posts with label வணிகம். Show all posts

Wednesday, 24 August 2016

இனி பி.இ படிப்பை யாரும் குறை சொல்ல முடியாது..!'- திசைகாட்டும் தமிழக முதல்வர்

பி.இ. மாணவர்கள் ஐ.இ.எஸ் படிப்பில் சேர்வதற்கு ஏதுவாக பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும், 15 நாட்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெறும் பொருட்டு அயல்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.


உயர்கல்வித் துறையில் இந்த ஆண்டு செயல்படுத்த உள்ள புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் இன்று அறிக்கை ஒன்றை வாசித்தார். "பொறியியல் படிப்பு பயிலும் மாணவர்கள் இந்திய பொறியியற் பணித் தேர்வில் Indian Engineering Service Exam-ல் தேர்ச்சி பெறச் செய்யும் வகையில், அதற்கான பயிற்சி மையங்கள் சென்னை, தர்மபுரி, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் திறன் மேம்படும் வகையில் வெளி நாட்டில் உள்ள கல்லூரிகளில் குறுகிய காலப் பயிற்சி பெற அந்த கல்லூரிகள் வகை செய்கின்றன. இது போன்ற வாய்ப்பு அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். எனவே, ஆண்டுதோறும் 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 100 மாணாக்கர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 15 நாட்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெறும் பொருட்டு அயல்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். இத்திட்டம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.


உலக அளவில் புகழ் பெற்ற உயர்கல்வி ஆசிரியர்களின் சிறப்பு விரிவுரைகள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள சிறந்த நிபுணர்களின் உரைகளை கேட்டு மாணாக்கர்கள் பயன் அடையும் வகையில் காணொலிக் காட்சி ஒலி ஒளியக மையம் சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நிறுவப்படும். இம்மையம் தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு இந்த உரைகளை காணொலி மூலம் வழங்கும். இத்திட்டம் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு மாநில, தேசிய மற்றும் உலகளாவிய கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, 5,000 பேர் அமரும் வசதி கொண்ட ஒரு பெருங் கூட்டரங்கம் அண்ணா பல்கலைக்கழகத்தில் 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் பயிற்சி மையம் ஒன்று அமைக்கப்படும். காப்பீடு உரிமை சார்ந்த அனைத்து தகவல்கள் மற்றும் காப்பீடு உரிமை பெற தேவையான அனைத்து உதவிகளையும் இம்மையம் ஒருங்கிணைக்கும். சிறநஙத திட்டங்கள் காப்பீடு உரிமை பெறவும் இம்மையம் உதவி புரியும். நவீன கண்டுபிடிப்புகள் சார்ந்த தகவல்கள், அடைகாக்கும் மையம் பற்றிய விழிப்புணர்வு; தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஆராய்ச்சி பற்றிய தகவல்கள் ஆகிய அனைத்தும் இம்மையத்தின் மூலம் அளிக்கப்படும். இந்த மையம் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.



ஊழியர்கள் விரும்பும் பாஸாக மூன்று வழிகள்

பாஸை குறைசொல்லாத பணியாளர்கள் இந்தக் காலத்தில் ரொம்ப குறைவு. அதிகரிக்கும் போட்டி, அசரடிக்கும் டார்கெட், ஆளைச் சாய்க்கும் கடுமையான வேலை போன்றவை பாஸுக்கும் பணியாளர்களுக்கும் இடையே எக்கச்சக்க இடைவேளையை ஏற்படுத்தி விடுகின்றன. நிர்வாகத்தின்  டார்கெட்டுகளால், அனுதினமும் சந்திக்க வேண்டிய நபராக இருந்தாலும் போலியான நடிப்பை வழங்குபவர்களாக பாஸும், பணியாளர்களும் மாறி விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இது கடுமையான மன உளைச்சலை தரக்கூடியதாக மாறிவிடுகிறது. இதை  தவிர்க்க என்ன வழி, பணியாளர்களுடன் நல்லுறவை  பேண ஒரு பாஸ் என்ன செய்ய வேண்டும்? 



1. நண்பன் பாதி ஆசிரியர் மீதி!
ஒரு பாஸ் தன்னுடைய பணியாளர்களிடமிருந்து அவர்களின் பெஸ்ட்டை வாங்க வேண்டுமென்றால்  கொஞ்சம் நண்பனாகவும்,மீதி ஆசிரியராகவும் இருக்கவேண்டியது அவசியம். அதிகாரத்தொனி என்பது இருதரப்பிடமும்  நல்லுறவை எப்போதும் வளர்க்காது . ஒரு குழுவுக்கு தலைவராக இருப்பவர்,  பணியாளர்களை  தனித்தனியாக சந்தித்து அடிக்கடி ஊக்கப்படுத்த வேண்டும். பணியாளர்கள் செய்யும் தவறை ஒரு நல்ல ஆசிரியன் என்ற முறையில் பொறுமையாக சுட்டிக்காட்ட வேண்டும். சொந்த விருப்பு வெறுப்புகள் இல்லாமல் ஆரோக்கியமான அலுவலக நட்பை வளர்த்துக்கொண்டாலே உங்களிடம் இருக்கும் பணியாளர்களிடம் இருந்து சிறப்பான அவுட்புட்டை உங்களால் வாங்கிவிட முடியும்.
2. ரோல்மாடல் பணியாளனாக இருங்கள்!
அலுவலகத்தில்  முதலில் நீங்கள் நம்பர் ஒன் பணியாளராக இருந்து மற்ற பணியாளர்களுக்கு உதாரணமாக திகழ்ந்தால் தான்  நீங்கள் ஒரு நல்ல பாஸ். நல்ல பணியாளன் என்பது அலுவலகத்தை பற்றி மட்டுமே எந்நேரமும் சிந்திக்க வேண்டும்; எப்போதும் அலுவகலமே கதியென இருக்க வேண்டும் என்பதில்லை. உங்களுக்கான நேரத்தில் உங்களுக்கான டார்கெட்டுகளை  திறமையோடு முடிப்பது, அலுவலகத்தில் சொந்த வேலைகளை பார்க்காமல் அலுவல் வேலைகளை  மட்டுமே கவனிப்பது, குறித்த நேரத்துக்கு பணிக்கு வருவது, இக்கட்டான சூழ்நிலைகளில் பொறுப்போடு இருந்து பணிகளை முடிப்பது  போன்றவை தான். நீங்கள் உதாரணமாக பெர்பெக்ட்டானவராக இருந்தாலே உங்கள் குழுவில் உள்ள பணியாளர்கள் உங்களை பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள். உங்கள் பணியாளர்கள் உங்களை ரோல்மாடலாக எடுத்துக்கொள்ளும் அளவுக்கு நேர்மையாக உழையுங்கள்.


3.  இன்சென்டிவ்களை மறக்காதீர்கள்!
இன்சென்டிவ் என்றவுடன்  அப்ரைஸல் பற்றியோ என நினைக்காதீர்கள். உங்கள் குழுவில் உள்ள ஊழியர் ஒரு வேலையை சிறப்பாகச் செய்தால் மனதார மற்ற ஊழியர்கள் முன்பு பாராட்டுங்கள். உங்கள் வசதியை பொறுத்து ஒரு டீக்கடைக்கோ ஒரு காபி ஷாப்புக்கோ அழைத்து ஸ்பான்சர் செய்யுங்கள். சின்ன சின்ன பாராட்டுக்கள்  உங்கள் பணியாளர்களை உற்சாகமூட்டும். பணியாளர்கள் எதாவது தவறு செய்திருந்தால் அவரை தனியாக கூப்பிட்டு  தேவைப்பட்டால் கண்டியுங்கள். " ஒரு வேலையை சரியாகச் செய்தால் எப்படி பாஸ் நம்மை பாராட்டுகிறாரோ அப்படித்தான் ஒரு வேலையை சரியாகச் செய்யவில்லை என்றால் நம்மை கண்டிக்கிறார்" என உங்கள் ஊழியர்கள் உங்களை புரிந்துகொண்டால் அது தான் உங்களின் வெற்றி.




Tuesday, 23 August 2016

2016-ம் ஆண்டிற்கான டாய்லெட் டிசைன்களில் இதுதான் டாப்!

நாள் முழுக்க உழைத்திவிட்டு, வீட்டிற்குள் வந்தாலும் முதலில் நாம் நுழையும் இடம் பாத்ரூம்தான். அதிலும் வாஷ்ஃபேஷன் தான் நாம் தேடிச்செல்லும் இடம். அப்படிப்பட்ட இடத்தை அழகாகவும், தூய்மையாகவும், வித்தியாசமாகவும் வைத்துக் கொள்வதன்  மூலமாக வீட்டிற்குள் நுழைந்ததும்,அது  உங்கள்  MOOD -ஐ மாற்றும். 


இன்று பலரும் தங்களுடைய வீட்டை அலங்கரிக்கும்போது அதிக கவனத்துடனும் கலைநயத்துடனும் இருக்க வேண்டும் என நினைப்பது, முதலில் பெட்ரூம், அடுத்து ரெஸ்ட் ரூம்(பாத்ரூம்) தான். சுவர் டிசைன் முதல் கலர் மற்றும் அங்கு இருக்கும் டைல்ஸ் என பல ரசனைகளை இன்றைய இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள். தங்களுடைய கற்பனைத் திறனை வைத்து புது புது டிசைன்களை தங்களுக்கென செய்து கொள்கிறார்கள். எல்லாமே OUT OF THE BOX-தான். மார்க்கெட்டும் அதைப் பொருத்து மாறிவருகிறது. ஸ்டீம் ஷவர், ஷவர் பேனல், டைல்ஸ், வாஷ் பேஷன், பாத் டப் என 2016 -ல் ஐந்து வகையான  MOST WANTED டிசைன்களை பார்ப்போம்,


Sultry designs in washbasin வித்தியாசமான டிசைன்களில், விதவிதமான கலர்களிலும் இந்த  வகையான வாஷ் பேசின்கள் கிடைக்கும். என்னதான் டிசைன்களில் வெரைட்டி காண்பித்தாலும் வெண்மை நிறம் தான் அழகுக்  கூட்டும். அதிலும், பிளன்டேட் பைப்புடன் கூடிய வாஷ்பேஷன்களுக்கு எப்போதும் மவுசு அதிகம். சான்டல் கலர், அடர்த்தி பிரவுன் கலர் மற்றும் பல டஸ்கி கலர்களும்  பலருடைய சாய்ஸாக இருக்கிறது.
டாய்லெட்களில் வொய்ட் கலர் எப்போதும் கவனத்தை ஈர்க்கும். மேலும், வாஷ்பேஷன்களில் UV  லைட்கள் பயன்படுத்தும் போது நம்முடைய டென்ஷன் மூட் குறைகிறது. LED remote கண்ட்ரோல் கொடுக்கப்பட்டிருக்கும் பாத்ரூம் டிசைன்கள் பெரும்பாலும் டெம்பரேச்சர் போன்றவைகளைச் சரியாக வைத்திருக்க உதவுகிறது.




அட... 49 ரூபாய்க்கு லேண்ட் லைன் தொலைபேசி சேவை! - யார் கொடுப்பது?

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 49 ரூபாய்க்குத் தரைவழித் தொலைபேசி சேவையைத் தொடங்கி உள்ளது பி.எஸ்.என்.எல். நிறுவனம்.



தன்னை விட்டுச் சென்ற வாடிக்கையாளர்களைத் திரும்ப வரவழைக்கும் விதமாக பல அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறது பி.எஸ்.என்.எல். நிறுவனம். கடந்த ஜூன் 15-ம் தேதி முதல் ரோமிங் கட்டணத்தை ரத்து செய்தது. மேலும், தரைவழித் தொலைபேசி சேவையில் தினந்தோறும் இரவு 9 மணி முதல் காலை 7 வரை பேசிக்கொள்ள இலவசம் என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுமேலாளர் கலாவதி, ''சில குறைபாடுகள் காரணமாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை விட்டுச் சென்ற வாடிக்கையாளர்களைத் திரும்ப வரவழைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாகப் பல்வேறு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒன்றாக, மாத கட்டணம் 49 ரூபாய்க்கு தரைவழித் தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தரைவழித் தொலைபேசி சேவையில், தினந்தோறும் இரவு 9 மணி முதல் காலை 7 வரை இலவசமாகப் பேசிக் கொள்ளலாம்.
மேலும், பி.எஸ்.என்.எல். லேண்ட் லைன் இணைப்பு வாயிலாக நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கும் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் உள்நாட்டு அழைப்புகள் இலவசம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகையும், தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 49 ரூபாய்க்கு தரைவழித் தொலைபேசி சேவைக்கும் பொருந்தும்.



பி.எஸ்.என்.எல் சேவையை அதிகப்படுத்தும் வகையில், விரைவில் 300 தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. தற்போதைய சூழலுக்கு ஏற்றபடி அதிநவீன வசதி கொண்ட பிராட்பேண்ட் சேவை அளிக்கப்பட உள்ளது" என்றார்.

ரிலையன்ஸ் முதல் ரிசர்வ் வங்கி வரை...! -உர்ஜித் பதவியை உறுதி செய்த 8 காரணங்கள்


இந்திய ரிசர்வ் வங்கியின் 24-வது கவர்னராக பொறுப்பேற்க இருக்கிறார் 52 வயதான உர்ஜித் பட்டேல். ' தனியார் வங்கிகளை உருவாக்குவது தொடங்கி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவான செயல்பாடுகளை முன்னெடுப்பது வரையில் உர்ஜித் பட்டேலின் செயல்பாடுகள் திகைக்க வைக்கின்றன' என அச்சப்படுகின்றனர் வங்கி ஊழியர்கள். 

ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் ரகுராம் ராஜனின் பதவிக் காலம் வருகிற செப்டம்பர் மாதம் 4-ம் தேதியுடன் நிறைவடைகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளுக்கு எதிராகப் பொதுவெளியில் பகிரங்கமாகப் பேசியதால், பா.ஜ.க மேலிடத் தலைவர்களின் அதிருப்திக்கு ஆளானார் ரகுராம் ராஜன். மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையாக இருந்தாலும் தாத்ரி சம்பவமாக இருந்தாலும் ராஜனின் பேச்சுக்கள் அதிர்வலையை ஏற்படுத்தின. இந்நிலையில், புதிய ஆளுநராக உர்ஜித் பட்டேல், சுபிர் கோகர்ன், அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோரது பெயர்கள் அடிபட்டு வந்தன. முடிவில், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பதவியில் இருந்த உர்ஜித் பட்டேல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதன்மூலம் ரிசர்வ் வங்கி தலைமைப் பொறுப்பு குறித்த நீண்டநாள் சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டது.

 

" ரிசர்வ் வங்கி ஆளுநர் சர்ச்சைக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது. ஆனால், உர்ஜித் பட்டேலின் நியமனம் பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்கிறது. மாணவர்களிடம் இருந்து கல்விக்கடன் வசூலிக்கும் பணியில் முனைப்போடு இறங்கியிருக்கிறது ரிலையன்ஸ். இதனை எதிர்த்துத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். ஸ்டேட் வங்கி மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இந்த உத்தரவை வழங்கியதில் உர்ஜித்தின் பங்கு மிக முக்கியமானது" என ஆதங்கத்தோடு தொடங்கினார் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின்(தமிழ்நாடு) பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன். தொடர்ந்து சில விஷயங்களைப் பட்டியலிட்டார். 

1. மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளோடு ஒத்துப் போகிறவர்கள் மட்டுமே ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி வகிக்க முடியும். பொதுத்துறை வங்கிகளை தனியார்மயத்தை நோக்கி அழைத்துச் சென்றதில் ரகுராம் ராஜனுக்கு பங்கு இருக்கிறது. அதற்கு சிறிதும் சளைத்தவரல்ல உர்ஜித் பட்டேல். லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸில் பி.ஏ., பட்டம் பெற்றபின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் எம்.பில் முடித்தார். இதன்பிறகு, யேல் பல்கலைகழக பொருளாதாரப் பிரிவில் ஆராய்ச்சிப் பட்டமும் முடித்திருக்கிறார். இதையடுத்து, ஐ.எம்.எஃப் எனப்படும் சர்வதேச பன்னாட்டு நிதியத்தில் பணியைத் தொடங்கியிருக்கிறார். குஜராத் மாநிலத்தின் பெட்ரோலியத் துறை தலைவர் பதவியைப் பெற்றபோது, அப்போது முதல்-அமைச்சராக பதவியில் இருந்தார் மோடி. அப்போதிருந்தே மோடியுடன் மிக நெருக்கமானார் உர்ஜித். ' பா.ஜ.கவின் கொள்கைகளோடு ஒத்துப் போகிறவர்' என்பதாலேயே ஆளுநர் பதவிக்கு வந்திருக்கிறார். 

2. பல தனியார் வங்கிகளில் ஆலோசகராகப் பணிபுரிந்திருக்கிறார் உர்ஜித். ஐ.டி.எஃப்.சி என்ற தனியார் வங்கியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல் இயக்குநர் பொறுப்பில் இருந்திருக்கிறார். தனியார் வங்கிகளை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வத்தோடு இருப்பவர். தற்போது புதிதாக அனுமதி வழங்கப்பட்ட பத்து பேமண்ட் வங்கிகளின் பின்னணியில் உர்ஜித் இருக்கிறார். 

3. ஸ்டேட் வங்கி கமிட்டியில் இருந்தபோது, ஸ்டேட் வங்கிகளை இணைப்பது உள்பட பல விஷயங்களுக்கும் மூல காரணமாக உர்ஜித் இருந்தார். ஸ்டேட் வங்கி ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே இடைவெளி உருவானதில் மிக முக்கியப் பங்கு வகித்தவர். இதை ஊழியர் விரோதப் போக்கு என்றே பார்க்க வேண்டியுள்ளது. பேமண்ட் வங்கி பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெயரும் இடம் பெற்றதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தார். முந்தைய காலகட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பொறுப்பு வகித்தவர் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. ஸ்டேட் வங்கி வழங்கிய கல்விக் கடனை ரிலையன்ஸ் வசூலிக்கும் என்ற முக்கிய முடிவு, இவர் போர்டில் இருந்போதுதான் எடுக்கப்பட்டது. ரகுராம் ராஜன் ஒருவகையில் ஜனநாயகவாதியாக இருந்தார். உர்ஜித்திடம் அதை எதிர்பார்க்க முடியுமா என்பது போகப் போகத்தான் தெரியும். 

4. கென்ய நாட்டில் பிறந்த உர்ஜித் பட்டேலுக்கு 2013-ம் ஆண்டில்தான் இந்திய பாஸ்போர்ட்டே கிடைத்தது என்ற தகவலும் சொல்லப்படுகிறது. ரிசர்வ் வங்கியைப் பொறுத்தவரையில், புதிய பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் மற்றும் புதிய தனியார் வங்கிகளை ஆதரிப்பவர்கள்தான் பதவியில் நீடிக்கின்றனர். அந்தவகையில், ' அரசு வகுத்திருக்கும் பாதையே தொடரும்' என்பதையே இந்த நியமனம் எடுத்துக் காட்டுகிறது.

5. புதிய ஆளுநருக்கு ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன. பணவீக்கத்தை அமெரிக்காவைப் போல ஒரு சதவீதம் அளவுக்குக் கொண்டு வர முடியுமா? டென்மார்க், நெதர்லாந்து நாடுகளில் 98 சதவீத மக்களுக்கு வங்கிச் சேவை சென்று சேர்ந்திருக்கிறது. நமது நாட்டில் 50 சதவீத இளைஞர்களுக்குத்தான் வங்கிக் கணக்கே இருக்கிறது. பொதுத்துறை வங்கிகள் மூலம் இதை முழுமைப்படுத்த நடவடிக்கை எடுப்பாரா?

 


6. பிரிக்ஸ் குழுவில் உள்ள நாடுகளில் பிரேசில், ரஷ்யா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில், ஒரு லட்சம் இளைஞர்களுக்கு நாற்பது வங்கிக் கிளைகள் இருக்கின்றன. இந்தியாவில் ஏழு கிளைகள்தான் செயல்படுகின்றன. பிரிக்ஸ் நாடுகளைப் போல, வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பாரா? 

7. இந்தியாவில் விவசாயக் கடன் என்பது கந்து வட்டிக்காரர்களால்தான் அதிகளவில் கொடுக்கப்படுகிறது. விவசாயக் கடன் கிடைக்காததால், மோடி ஆட்சியிலும் தற்கொலை விகிதம் அதிகரித்திருக்கிறது. இதைத் தடுப்பதற்கு முயற்சி எடுப்பாரா? 

8. பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து கடன் பெற்றுத் திருப்பித் தராத தனியார் நிறுவனங்களின் பட்டியலை அரசு வைத்திருக்கிறது. இந்தப் பட்டியலை அவர் வெளியிடுவாரா? தனியார் நிறுவனங்களிடம் இருந்து வராக்கடனை வசூலிக்க சட்டத் திருத்தம் கொண்டு வருவாரா? 2008-ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் 498 தனியார் வங்கிகள் திவாலாகிவிட்டன. இந்தியாவில் தனியார் வங்கிகள் பெருகுவதை தடுப்பாரா? இந்தச் சவால்களை எதிர்கொண்டு சீர்திருத்தம் கொண்டு வந்தால்தான், சிறந்த கவர்னராக உர்ஜித்தை ஏற்றுக் கொள்ள முடியும்" என்றார் தீர்மானமாக. 





Monday, 22 August 2016

டூவீலர் இன்ஷூரன்ஸ்... மூன்றாண்டு பாலிசி லாபமா?

ரு சக்கர வாகனங்களுக்கு பாலிசி எடுப்பவர்களில் பலரும் தொடர்ந்து அதை புதுப்பிப்பது இல்லை. இந்தியாவில் சுமார் 75% பேர் இரு சக்கர வாகன இன்ஷூரன்ஸ் பாலிசி இல்லாமல் இருப்பதாக 2015, மே மாதத்தில் ஐ.ஆர்.டி.ஏ. நடத்திய சர்வே ஒன்றில் தெரிய வந்துள்ளது. நகர்ப்புறங்களைவிட கிராமப் புறங்களில் இந்தப் போக்கு மிக அதிகமாக உள்ளது. பாலிசிக் காலம் முடிந்தபின்பு, அந்த பாலிசியை தொடர முடியாமல் போவதற்கு முக்கியக் காரணம், விழிப்பு உணர்வின்மையும் நேரமின்மையும்தான். இந்தப் பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வாக, மூன்றாண்டு பாலிசிகளுக்கு பிரீமியம் கட்டும் நடைமுறை இப்போது கொண்டு வரப்பட்டுள்ளது. 

br />
மோட்டார் வாகன பாலிசி களில் இரு வகைகள் உள்ளன. ஒன்று, நம் வாகன பாதிப்புக்கான ஓன் டேமேஜ் பாலிசி (Own Damage Policy). அடுத்து, நம் வாகனத்தால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கான மூன்றாம் நபர் பாலிசி (Third Party Insurance).  இந்த பாலிசிகளை ஒருவர் தனியாகவோ அல்லது குரூப்  பாலிசியாகவோ எடுக்கலாம்.  இந்த இரு பாலிசிகளை ஓராண்டுக்கு பதிலாக தற்போது மூன்றாண்டுகளுக்கு எடுக்கலாம்.   

ஒரு வருட பாலிசிக்கும், மூன்று வருட பாலிசிக்கும் என்ன வித்தியாசம், எதற்காக இந்த மூன்று வருட பாலிசி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது, இதனால் என்ன பயன் என்பது குறித்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் டிவிஷனல் மேனேஜர் கேசவனிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
“இரு சக்கர வாகனக் காப்பீடு பாலிசிகளை ஒரு வருட பாலிசியாகத்தான் வழங்கி வந்தோம். இப்போது நீண்ட கால பாலிசியாகவும் மூன்றாண்டுகளுக்கு கவரேஜ் இருக்கும்படியும் வழங்கி வருகிறோம். இருசக்கர வாகனங் களுக்கான இன்ஷூரன்ஸை பொறுத்தவரை, போலீஸ் அதிகாரிகள் கேட்கும்போதும், அல்லது வாகன விபத்து ஏற்படும் போதுதான் பாலிசியைப் புதுப்பிக்கவில்லை என்ற எண்ணமே நினைவுக்கு வருகிறது. இதுவே மூன்று வருட பாலிசி என்கிறபோது ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கத் தேவை இல்லை. ஒருமுறை புதுப்பித்து விட்டால் அடுத்த மூன்று வருடங்களுக்கு அந்த பாலிசியை வைத்திருக்கலாம். 

ஆண்டுதோறும் மூன்றாம் நபர் பாலிசியின் பிரீமியம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உதாரணத்துக்கு, ரூ.50,000 கவரேஜ், 150 சிசி திறன் கொண்ட இரு சக்கர வாகனத்துக்கு 2012-13-ல் ரூ.357 -ஆக இருந்த மூன்றாம் நபர் பாலிசி பிரீமியம், 2013-14-ல் ரூ.422-ஆகவும், 2014-15-ல் ரூ.464-ஆகவும், 2015-16-ல் 538 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மூன்றாண்டு கால பாலிசியை எடுக்கும்போது அதிகரிக்கும் பிரீமியத்தை செலுத்த தேவையில்லை என்பது பாசிட்டிவ்-ஆன விஷயம்” என்றவர் சற்று நிறுத்தி, ஓராண்டு பாலிசிக்கு பதில் மூன்றாண்டு பாலிசி எடுத்தால், எவ்வளவு பிரீமியம் மிச்சமாகும் என்பதைச்  சொன்னார். 

br />
‘‘ரூ.50 ஆயிரம் மதிப்புடைய 150சிசி திறன் கொண்ட புதிய வாகனம் அல்லது 5 ஆண்டுகள் ஆன பழைய வாகனம் என்றால், ஒரு வருட பாலிசியில் ஓன் டேமேஜ் பிரீமியம் முதல் ஆண்டுக்கு 854 ரூபாயும், இரண்டாம் ஆண்டில் 683 ரூபாயும், மூன்றாம் ஆண்டில் 640 ரூபாயும் என மூன்று ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.2,177 செலுத்த வேண்டும். இந்த  மூன்று ஆண்டுகளுக்கும் க்ளெய்ம் எதுவும் இல்லை என்கிற கணக்கில் (நோ க்ளெய்ம் போனஸ் சலுகை அளிக்கப்பட்டுள்ள நிலையில்) செலுத்தும் மொத்த பிரீமியம் ஆகும். 

இதுவே மூன்று ஆண்டு பாலிசி என்றால் 30%  தள்ளுபடியுடன் ரூ.1,793 செலுத்தினால் போதும். பாலிசி
 எடுப்பவர்கள் அதிகமான சலுகையை எதிர்பார்த்தால், கூடுதலாக 20% தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு உண்டு.  இந்தத் தள்ளுபடியும் கிடைத்தால், மூன்று ஆண்டு பாலிசிக்கு பிரிமீயம் ரூ.1,281 மட்டும் செலுத்தினால் போதும். ஆக, மூன்று ஆண்டு பாலிசி பிரீமியத்தில் குறைந்தது 18 % முதல் 41% வரை, அதாவது ரூ.384 முதல் ரூ.896  வரை சேமிக்க முடியும். 

மூன்றாண்டு பாலிசியை புதுப்பிக்கும்போது எந்த க்ளெய்மும் செய்யவில்லை என்றால் 30% நிச்சய தள்ளுபடி மற்றும் 20% சிறப்புத் தள்ளுபடி கிடைக்கலாம். இதுவே ஒருமுறை க்ளெய்ம் செய்திருந்தால், 30% நிச்சய தள்ளுபடியுடன், 10% சிறப்புத் தள்ளுபடி கிடைக்கலாம். இரண்டு முறை க்ளெய்ம் செய்திருந்தால், 30% நிச்சய தள்ளுபடி மட்டுமே கிடைக்கும். ஒரு வருட பாலிசியில் ஆண்டுக்கு ஒரு க்ளெய்ம் செய்திருந்தால், நோ க்ளெய்ம் போனஸ் கிடைக்காது. தவிர, ரெனிவல் பிரீமியம் அதிகரிக்கும்.   தற்போது, ஐ.ஆர்.டி.ஏ. மூன்றாண்டு பாலிசியை இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதித்து உள்ளது. விரைவில் நான்கு சக்கர வாகனங்களுக்கும் இந்த பாலிசி தரப்படலாம்” என்றார்.

br />
மூன்றாண்டு பாலிசியில் பணம் மிச்சமாவதோடு, நேரமும் மிச்சமாகிறது. இனி பாலிசியை புதுப்பிக்க நேரமில்லை என்று சொல்ல மாட்டீர்கள்தானே?

சுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் செலுத்தமாட்டோம்! - வேல்முருகன் அதிரடி

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் இனிமேல் வாழ்வுரிமை கட்சியினர் கட்டணம் செலுத்த மாட்டார்கள் என்று வேல்முருகன் அதிரடியாக தெரிவித்து உள்ளார்.
br />

வாழ்வுரிமை கட்சியின் தென்மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்த அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என வாழ்வுரிமை கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினோம்.
ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அதனால், எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் செலுத்த மாட்டார்கள். குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மக்கள் போராட்டம் எதிரொலியாக சுங்க வரியை அரசே ஏற்று கொண்டு செலுத்தி வருகிறது.
தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் உள்பட பல மொழிகளை மாணவர்கள் விரும்பி படித்தால் தவறில்லை. ஆனால் வலுக் கட்டாயமாக மொழியை திணிக்கக்கூடாது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை மற்றும் நீட் நுழைவு தேர்வு பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும்.
br />
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் வருகை அதிகரித்துள்ளதால் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இதை கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுப்போம்.
காவிரி, முல்லை, பெரியாறு மற்றும் பாலாறு பிரச்னையில் பக்கத்து மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சித்து வருகின்றன. இந்நிலையில் செம்மரம் கடத்துவதாக கூறி ஆந்திர அரசு தமிழர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்வது வேதனை அளிக்கிறது. இந்த தவறான நடவடிக்கையை ஆந்திர அரசு கைவிட வேண்டும். இல்லை என்றால் அந்த அரசின் தமிழக நிறுவனம் மற்றும் அம்மாநில தனியார் நிறுவனங்கள் செயல்படாத வகையில் எங்களின் நடவடிக்கை அமையும்" என்றார்.
br />


Friday, 19 August 2016

மிஸ்டர் விஷால்... தப்பித் தவறியும் இதெல்லாம் செஞ்சுடாதீங்க!

விஷாலுக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நடக்கும் கத்திச்சண்டைதான் இந்த வார பரபரப்பு. பஜ்ஜி போண்டா பஞ்சாயத்து பண்ணுகிறார்கள் என அவர் எகிற, பார்த்து பேசணும் தம்பி என இவர்கள் பாய, ரணகள கொதிகலனாகிக் கிடக்கிறது ஏரியா. 'ஹைய்யா அடுத்த ஆக்‌ஷன் பிளாக் சிக்கிடுச்சு' என இன்ச் கேப்பில் மொய்க்கின்றன கேமராக் கண்கள். நடிகர் சங்கத்தை கேட்ச் செய்தது போல தயாரிப்பாளர் சங்கத்தையும் லபக்கென பிடிக்க விஷாலுக்கு சில கலகல ஐடியாஸ். 
(ஆனா, இதெல்லாம் தப்பித் தவறி கூட பாலோ பண்ணிடாதீங்க விஷால். அம்புட்டுதான்!)


* ’இனி தமிழ் படங்களில், முக்கியமாக தன் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் இருக்காது. அதனால் தயாரிப்பு செலவு கம்மியாகும்’ எனச் சொல்லி தயாரிப்பாளர் தேர்தலில் வாக்குகள் கேட்கலாம். (விஷால் படத்துல ஆக்‌ஷன் சீன் மட்டும்தானே இருக்கும் என கேட்பவர்கள் அவர் திருட்டு விசிடி கடைக்காரர்களை வெளுக்கும் வீடியோ பார்க்கவும்). அதி முக்கியமாக, சுமோ, சின்ன யானை, புல்டோசர் போன்ற இயந்திரங்களை பேப்பர் ராக்கெட் போல பறக்கவிட மாட்டேன் என அவர் சத்தியம் செய்யலாம். லட்சக்கணக்கில் பணம் மிச்சம் என்பதால் ஓட்டுக்கள் விழ வாய்ப்பு அதிகம்.  
* இந்தக் காலத்து ஹீரோக்களுக்கு பொறுப்பே இல்லை என குற்றச்சாட்டுகள் நாலாபுறமும் சொய்ங்கென வருவதால் இவர் தலைமையில் ஆர்யா, சிம்பு, ஜெய் போன்ற பேச்சுலர் ஹீரோக்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம். புது கமிட்மென்ட் காரணமாக சிம்பு கரெக்டாக ஷூட்டிங்கிற்கு வருவார். (எல்லாம் ஒரு நம்பிக்கைதான்). தயாரிப்பு செலவுகள் கம்மியாகும். கமிட்மென்ட் நல்லது பாஸ்.
* விஷாலுக்கும் போலீஸ் வேஷத்திற்கும் ஏனோ ராசியே இல்லை. எனவே இனி போலீஸ் கதையில் நடிப்பதில்லை என அதிரடியாக முடிவெடுத்து அறிவிக்கலாம். இதே போல் ஒவ்வொரு ஹீரோவுக்கும் இருக்கும் சென்டிமென்ட்டை கண்டுபிடித்து அவர்கள் அந்த ஜானர்களில் நடிக்க தடை விதிக்கலாம்.
* விஷால் இதுவரை நடித்தது இருபத்தி சொச்ச படங்கள் என்றாலும் குறைந்தது 40 ஹீரோயின்களோடாவது டூயட் பாடியிருக்கிறார். அதிகபட்சமாக ஆம்பள படத்தில் எட்டு. (அத்தை - மருமகனுக்கு இடையிலான புனித பாசத்தை கொச்சைப் படுத்தாதீர்கள் என கச்சை கட்டுபவர்களின் மனசாட்சிக்கு கபீம்குபாம்தான்). இந்த மாதிரி மல்ட்டி ஹீரோயின்கள் சப்ஜெக்ட் நடிப்பதில்லை என முடிவெடுத்தால் தயாரிப்பாளர்களுக்கு இன்ப ஹனி வந்து பாயுது காதினிலே!
* இவ்வளவு வாக்குறுதிகள் கொடுத்தும் மசியாதவர்களுக்கு சண்டக்கோழி ஸ்டைல்தான். ஊர்ப்பக்கம் அழைத்துப் போய், மழையில் புட்பால் ஆடவிட்டு, மறுநாள் காய்ச்சலுக்கு நாட்டுக்கோழி சூப் வைத்துக்கொடுத்தால் 'முரட்டுத்தொடை' ராஜ்கிரணே இம்ப்ரஸ் ஆகும்போது தயாரிப்பாளர்கள் ஆகமாட்டார்களா என்ன? பாசத்துக்கு முன்னால எல்லாரும் பனிதான் பாஸ்!
* பாசத்திற்கும் பணியாத ஆட்கள் என்றால் வேறு வழியே இல்லை. கடைசி பிரம்மாஸ்திரத்தை எய்துவிட வேண்டியதுதான். கண்களில் க்ளிப் மாட்டிவிட்டு, கை கால்களை கட்டி உட்கார வைத்து, அவன் இவனில் அவர் செய்யும் நவரச நாட்டியத்தை ஆடிக்காட்ட வேண்டும். அதான் ஜி... நம்ம சூர்யா சிலிர்த்து போய் சில்லறை எல்லாம் விட்டெறிவாரே, அந்த பெர்ஃபாமன்ஸ்தான். சிங்கத்துக்கே கண்ணுல இருந்து வாட்டர் ஓவர்ஃப்ளோ ஆகுறப்போ தயாரிப்பாளர்களுக்கு வராமயா இருக்கும்? ஜெய் மகிழ்மதிதான்.
சரி இதெல்லாம் செய்து தயாரிப்பாளர் சங்கத்தையும் கேட்ச் பண்ணியாச்சு. அடுத்தகட்ட ஆப்ரேஷன்? அதுக்கும் திட்டம் இருக்குல்ல..!


* மீடியாவின் அதீத பப்ளிசிட்டி, சின்ன சின்ன ஆக்‌ஷன் சீக்வன்ஸ் என இவருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் எக்கச்சக்க ஒற்றுமைகள். எனவே அடுத்ததாய் டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடலாம். இரண்டு பேருமே ட்விட்டரில் ஆக்டிவ் என்பதால்...இருக்கு நெட்டிசன்ஸ்க்கு என்டர்டெயின்மென்ட் இருக்கு!
* சடகோபன் ரமேஷின் சினிமா சேவையை பாராட்டாதது, ஹேமங் பதானியை சி.எஸ்.கேவில் விளையாட வாய்ப்பு தராதது உள்ளிட்டவற்றைக் கண்டித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டி போடலாம். ஐ.பி.எல்லுக்கு போட்டியாக சி.சி.எல் நடத்திய அனுபவம் இருப்பதால் ஹெவி போட்டியாய் இருக்கும்.
* இதுதான் மிக முக்கியமான தேர்தல். பணி நிமித்தமாய் அடிக்கடி மதுரையில் இருந்து பஸ் ஏறி சென்னைக்கு வரும் ரெகுலர் கஸ்டமர்தான். ஆனாலும் மற்றவர்களை போல தன்னிடமும் சீசன் டைமில் அநியாய விலைக்கு டிக்கெட் விற்பதால் ஆம்னி பஸ் சங்க தேர்தலில் நிற்கலாம்!




Tuesday, 16 August 2016

புகாரை வாபஸ் வாங்கு...இல்லைன்னா ஆசிட் அடிப்பேன்!' - பாண்டிச்சேரி பல்கலை சர்ச்சை

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் மீது எழும் தொடர்ச்சியான பாலியல் குற்றச்சாட்டுக்களால் அதிர்ந்து போய் இருக்கிறார்கள் கல்வியாளர்கள். ' பேராசிரியர் ஒருவரின் அத்துமீறலை பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை' எனவும் கொந்தளிக்கின்றனர் மாணவர்கள்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது பாண்டிச்சேரி பல்கலைக்கழகம். ஆராய்ச்சிப் படிப்பில் பயிலும் மாணவிகளிடம் பேராசிரியர் ஒருவர், தவறான முறையில் நடந்து கொள்வதாக 2013-ம் ஆண்டு சர்ச்சை எழுந்தது. இதைப் பற்றி முறையாக விசாரிக்காத, பல்கலைக்கழக நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவிகளையே சஸ்பெண்ட் செய்தது. இதனை எதிர்த்து மாணவிகள் தொடர்ந்த வழக்கில், புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகத்தின் போக்கை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்தது. அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நாற்பதாயிரம் ரூபாய் அபராதம் வழங்கவும் உத்தரவிட்டது.



இந்நிலையில், ஆராய்ச்சிப் பிரிவு மாணவி ஒருவர் உடற்கல்வி பேராசிரியர் ஒருவர் மீது பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பாலியல் குற்றச்சாட்டு புகார் கூறியுள்ளார். " இந்தப் புகாரையும் பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை" எனக் கொதிக்கிறார் இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்த். அவர் நம்மிடம், " புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மாணவிகள் ஒரு சில பேராசிரியர்களால் தொடர்ந்து பாலியல்  சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு ஆராய்ச்சி மாணவி ஒருவர் உடற்கல்வித் துறை பேராசிரியர் பிரவீன் என்பவர் மீது புகார் அளித்தார். இதுகுறித்து காலாப்பட்டு காவல்நிலையத்தில் மாணவி கொடுத்த புகாரின்பேரில்  வழக்கு பதியப்பட்டது. தற்போது பேராசிரியர் பிரவீன், ' என் மீது கொடுத்துள்ள புகாரைத் திரும்ப  பெறு, இல்லையென்றால் உன் மீது ஆசிட் அடிப்பேன். உயிரோடு நீ வீட்டுக்குப் போக முடியாது' என மிரட்டுகிறார்.


மேலும் இதே பேராசிரியர் மீது ஆராய்ச்சி மாணவி ஒருவர் 2013-ம் ஆண்டு, 'மிரட்டும் தொனியில் நடந்து கொண்டதாக' புகார் அளித்துள்ளார்.  புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றும் இவர் மீது பல்வேறு வழக்குகள் காலாப்பட்டு காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ளது. பல்கலைக்கழக மாணவர் பேரவை நிர்வாகியையும் இவர் இதேபோன்று மிரட்டியுள்ளார். இவருக்கு ஆதரவாகச் சில பேராசிரியர்களும் இதுபோன்ற அவச் செயல்களில் ஈடுபடுகின்றனர். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவிகள் கொடுத்த பாலியல் சீண்டல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழுவின் தலைவர் இதுவரையில் ஒரு புகார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.


அந்தக் குழுவினர் மாணவிகள் கூறும் புகார்களை முறையாக கையாளத் தவறியதால்தான் இதுபோன்ற குற்றங்களை செய்யும் பேராசிரியர்கள் பணியில் தொடர்கிறார்கள். மாணவிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக பதிவாளர் உடனடியாக பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழுவை மறுசீரமைப்பு செய்து, கடந்த ஓர் ஆண்டுக்கு மேல் நிலுவையில் உள்ள மாணவிகள் புகார்கள் மீது அவசர கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தீவிரமான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். அதேபோல், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பாலியல் சீண்டல் புகாரில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு வழங்க வேண்டிய நாற்பதாயிரம் ரூபாய் அபராதத்தையும் சான்றிதழ்களையும் உடனே வழங்க வேண்டும்" என்றார் கொந்தளிப்போடு.

இதுகுறித்து உடற்கல்வித் துறை பேராசிரியர் பிரவீனைத் தொடர்பு கொண்டோம். ' ஸாரி...ராங் நம்பர்' என்றார்.  இதையடுத்து, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ராமச்சந்திரனிடம் பேசினோம். மாணவிகள் தரப்பில் இருந்து துணைவேந்தரின் கவனத்துக்கு புகார் கடிதம் வந்துள்ளது. இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். காவல்நிலையத்திலும் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. பல்கலைக்கழகத்திலும் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. " என்றார்.



மாணவிகளின் புகார் குறித்த நமது கேள்விகளுக்கு பல்கலைக்கழக தரப்பினர் அளிக்கும் விளக்கத்தை வெளியிட நாம் தயாராக இருக்கிறோம்.

Saturday, 13 August 2016

பெண்கள் தங்கள் மொபைலில் பதிந்திருக்க வேண்டிய 10 ஆப்ஸ்!

1. சேஃப்டி பின்:
இந்த ஆப் முழுவதும் பர்சனல் செக்யூரிட்டியை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது. இது அவசர எண் பதிவு, திசை வழிகாட்டல் என பல அம்சங்களை உள்ளடக்கியது. இதில் பாதுகாப்பான இடங்களைப்  பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். இந்த ஆப் ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பானிஷ் என மூன்று மொழிகளில் கிடைக்கிறது. நமக்கு ஏற்ற மொழிகளை இதில் பதிவிறக்கம் செய்யலாம்.


2. ரக்‌ஷா:
இதில் உங்களுக்கு நெருங்கியவரின் எண்ணை பதிந்து வைத்து விட வேண்டும். நீங்கள் ஆபத்தான தருணத்தில் இருந்தால், கொடுக்கப்பட்டிருக்கும் பட்டனை அழுத்தினால் போதும், அவர்களுக்கு அலர்ட் மெசேஜ் செல்லும். அதாவது அந்த குறிப்பிட்ட நபருக்கு தகவல் சென்று சேர, வால்யூம் பட்டனை மூன்று நொடிகள் அழுத்தினால் போதும், அவருக்கு அலர்ட் சென்று சேரும்.
3. ஹிம்மாட்:
டெல்லி போலீஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த ஆப். இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்தவுடன் டெல்லி போலீஸ் வெப்சைட்டில் தேவைப்படும் தகவல்களைப் பதிய வேண்டும். பதிவு நிறைவு செய்தவுடன் உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும். இந்த எண்ணை டைப் செய்து உங்களுடைய பதிவை உறுதி செய்து கொள்ளலாம். 
எதிர்பாராத விதமாக பிரச்னைகள் ஏற்படும் போது SOS Alert இந்த ஆப் வழியாக, இருக்கும் இடத்தின் விபரத்தோடு, ஆடியோ மற்றும் வீடியோ பதிவானது டெல்லி போலீஸாருக்கு தெரிவிக்கப்படும்.
4.பெண்கள் பாதுகாப்பு:
நீங்கள் ஆபத்தான ஒரு இடத்திலோ அல்லது சூழ்நிலையிலோ மாட்டிக் கொண்டால், நீங்கள் ஏற்கெனவே பதிவு செய்திருக்கும் எண்ணுக்கு, நீங்கள் இருக்கும் இடத்தின் முகவரியானது கூகுள் மேப் மூலம்  டைப் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுவிடும். மேலும், உங்களின் எதிரில் இருக்கும் இரண்டு படங்களையும் எடுத்து, சர்வருடன் தானாக இணைப்பட்டு குறிப்பிட்டுள்ள நபருக்கு அனுப்பிவிடும். இதில், மூன்று பட்டன்கள் இருக்கின்றன. சூழல்களைப் பொறுத்து அந்த பட்டன்களை அழுத்துவதன் வாயிலாகச் செய்தியானது உங்களின் நெருங்கியவருக்குச் சென்று விடும். அதைப் பொறுத்து உங்களைக்  காப்பாற்றும் முயற்சியினை அவர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
5. ஸ்மார்ட் 24X7


பல மாநிலங்களின் போலீஸாருடன் இணைக்கப்பட்டிருக்கிறது இந்த ஆப். முக்கியமாகப் பெண்கள் மற்றும் முதியோருக்கு இது பெருமளவில் உதவுகிறது. இந்த ஆப் வாயிலாக பேனிக் அலர்ட்டானது அவரச காலத்தில் அனுப்பப்படும். இந்த ஆப்பில் பேனிக் பட்டனுடன், வாய்ஸ் மற்றும் அந்த இடத்தின் படங்கள் என அனைத்து தகவல்களும், ஒரு சேர குறிப்பிட்டுள்ள நபருக்குச் சென்றுவிடும். எந்த மாதிரியான உதவிகள் வேண்டும் என்பதைப் பொறுத்து பட்டன்களை தட்டி, சப்மிட் கொடுத்து விட்டால் உங்களுக்கான உதவியானது உங்களைச் சார்ந்தவரிடமிருந்து வரும்.
6. ஷேக் 2 சேஃப்டி:
மிகவும் சுலபமாகப் பயன்படுத்தக் கூடிய ஆப் இது. அவசர காலத்தில் ஸ்மார்ட்போனை ஷேக் செய்தால் போதும் அல்லது பவர் பட்டனை நான்கு முறை அழுத்தினாலே நீங்கள் பதிவு செய்துள்ள நபருக்கு உங்களுடைய 'உதவி தேவை' என்ற செய்தியானது சென்று விடும். லாக் ஸ்கிரீனுடன் இதனை பதிவு செய்து கொள்ளலாம். உங்களைத் தவிர மற்றவரும் இந்த எண்ணைப் பார்த்துவிட்டு அவருக்குப் பதிலளிக்கலாம். இதற்கு இன்டர்நெட் கனெக்‌ஷன் தேவையில்லை. விபத்து, பாலியல் தொந்தரவு, கொள்ளை, இயற்கை சீரழிவு போன்ற காலங்களில் பெரும் உதவியாக இருக்கும்.
7. என் பில்:
குழந்தைப்பேறுக்காக காத்திருக்கிறீர்களா?... உங்களுக்கே உங்களுக்கான ஆப் தான் இது. மாதவிடாயின் போது எவ்வளவு உதிரப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. எப்பொழுது நீங்கள் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுது, நீங்கள் மருத்துவரைப் பார்க்க வேண்டும். எந்தெந்த நாட்களில், என்னென்ன மாதிரியான சிம்டம்ஸ் இருக்கும் என அவ்வப்போது உங்களுக்கு தகவல் சொல்லிவிடும் இந்த ஆப்.
8. சிடோர் ஸ்குவாட்:
பெண்களுக்குப் பெரிய பிரச்னையே டாய்லெட் பிரச்னைதான். பயணம் செய்யும் இடங்கள் அல்லது புது இடங்களில் ரெஸ்ட் ரூம் எங்கே இருக்கிறது என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டிவிடும், இந்த ஆப். உங்களுக்கு அருகாமையில் உள்ள ரெஸ்ட் ரூம்களை பயன்படுத்தியவர்களின் கமெண்ட்ஸ் அனைத்தையும் காண்பித்து விடும் என்பதால் உங்களுக்கு சிரமம் கொடுக்காமல் நல்ல ரெஸ்ட்ரூம்களை உங்களுக்குக் கண்டுபிடித்து தந்து விடும். ஸோ, கூலாகப் பயணம் செய்யலாம்.  
9.ஒ.பி.ஐ:
எந்த கலர் நெயில் பாலிஷ் உங்களது உடல் நிறத்திற்கு ஏற்றவாறு இருக்கும் என்பதை உங்களுக்குக் காட்டிவிடும் இந்த ஆப். இந்த ஆப்பின் கேமரா வாயிலாக உங்கள் விரலை படம் எடுத்தால்,  எந்த கலர் உங்களுக்கு கச்சிதமாக இருக்கும் என்பதற்கான ஆப்ஷன்களை காட்டிவிடும். அதற்கு பிறகு என்ன...? உங்களுக்கு ஏற்ற நெயில் பாலிஷ்களை தேர்ந்தெடுக்கும் நேரத்தை மிச்சப்படுத்தலாமே..?
10. மிண்ட்:


பட்ஜெட்டை எப்படி மெயின்டெயின் செய்வது என்று தெரியவில்லை. எழுதி வைக்கவோ, நினைவில் வைக்கவோ நேரம் இல்லை என்பவர்களுக்கு இந்த ஆப் ஒரு வரப் பிரசாதம். இதில் உங்களுடைய பேங்க் அக்கவுன்ட் மற்றும் கிரடிட் கார்ட் போன்ற தகவல்களைப் பதிவு செய்து, உங்களுடைய செலவுகளை டைப் செய்து பதிவு செய்து கொண்டே வந்தால், ஒவ்வொரு மாதத்திலும் நீங்கள் செய்திருக்கும் செலவு கணக்கினை துல்லியமாக காண்பிக்கும். கடந்த மாதம் எவ்வளவு செலவாகியிருக்கிறது. இந்த மாதம் எவ்வளவு செலவு என்பதையும் உங்களுக்கு கம்பேர் செய்து காண்பித்து விடும்.



காஞ்சிபுரம் டூ கோயம்பேடு! - 1000 கி.மீ. டார்கெட்டால் தவிக்கும் அரசுப்பேருந்து ஓட்டுநர்கள்

சென்னை கோயம்பேடு முதல் காஞ்சிபுரம் வரையிலும்,காஞ்சிபுரம் முதல் கோயம்பேடு வரையிலும் தினமும் 1000 கிலோமீட்டர் வரை பேருந்துகளை இயக்கவேண்டும் என்று டார்கெட் நிர்ணயிக்கப்பட்டு, காஞ்சிபுரம் மண்டல பேருந்து ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் உத்தரவு போடப்பட்டுள்ளதாகவும் இதற்கு மறுக்கும் ஊழியர்கள் மீது மேல் அதிகாரிகள் டார்ச்சர் நடவடிக்கை எடுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. 

இது தொடர்பாக சென்னை கோயம்பேடு பணிமனையில் உள்ள காஞ்சிபுரம் மண்டல பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அளித்துள்ள புகார் மனுவில், " கோயம்பேடு பணிமனையில் அதிகாரியாக உள்ள மீனாட்சி சுந்தரம், ஒரு பேருந்தின் ஷெட்யூல் கிலோமீட்டரை விட கூடுதல் கிலோ மீட்டர்கள் ஓட்டச் சொல்லி கட்டாயப் படுத்துகிறார். ஷெட்யூல் கிலோமீட்டர் 575 தான். ஆனால் அதைவிட கூடுதலாக 1000 கி.மீ. வரை ஓட்டுவதால் ஓட்டுநரும் நடத்துநரும் தூக்கமின்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டு அல்லல்படுகின்றனர். இதனால் சாலைகளில் விபத்துக்கள் ஏற்படும்   ஆபத்து உள்ளது. மேலும் எங்கள் குடும்பத்தினரை காணவும் பேசவும் கூட நேரமில்லாமல் தவிக்கிறோம். 



மேலும், பழுது அடைந்த பேருந்துகளை இயக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தப் படுகிறோம். இதுதான் விபத்துக்கள் ஏற்பட காரணமாகவும் அமைந்துவிடுகிறது. இது மேல் அதிகாரிகளின் டார்ச்சரால் தினமும் தொடருகிறது. அதே நேரத்தில் அதிகாரி மீனாட்சி சுந்தரம், ஊழியர்களைக் கேவலமாகப் பேசி அடிமை போல நடத்துகிறார். இதனால் நாங்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். ஒரு டியூட்டி முடிந்து கலெக்சன் பணத்தைக் கட்ட போனால் அதை வாங்க மறுத்து இன்னொரு டியூட்டியை பார்த்துவிட்டு வா என்று எங்களைக் கட்டாயப்படுத்துகிறார். இப்படி நாள்தோறும் எங்களின் துன்பம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையிலேயே சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இப்படித்தான் நடக்கிறதா என்று விசாரித்தோம். அதில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. S.E.T.C. பிரிவிலும் இதே போன்ற பிரச்னைகள் ஊழியர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறது  என்கிறார்கள் அதில் பணியாற்றும் தொழிலாளர்கள்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய கோயம்பேடு S.E.T.C. பிரிவின் சி.ஐ.டி.யூ. சங்க பிரதிநிதி ரவி, " சென்னை கோயம்பேடு பணிமனையில் இருந்து பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும்,தமிழகத்தின் வெளி மாவட்டங்களுக்கும் செல்லும் விரைவுப் போக்குவரத்துக் கலகத்தின் நடத்துநர்கள் ஓட்டுநர்களுக்கு ஓய்வு அறை இல்லை. இருக்கும் அறையும் சுத்தமின்றி, நோய் உண்டாக்கும் நிலையில்தான் இருக்கின்றன. கழிவறை கூட இல்லை. இந்த பணிமனையில் உள்ள ஜி.எம். கென்னடி ஆளும் கட்சியின் செகரெட்டரி போல செயல்படுகிறார். ஆளும் கட்சித் தரப்பில் வரும் நபர்களுக்கு மட்டுமே, ரூட் நல்லதாக கொடுப்பது, ஓ.டி.க்கு அனுமதி கொடுப்பது,புதிய நபர்களுக்கு மரியாதையும், ஏற்கெனவே பணிபுரியும் சீனியர்களுக்கு வசவுச் சொற்களும் கொடுத்து மன உளைச்சல் கொடுத்துவருகிறார். பழுது அடைந்த வண்டிகளை உடனே பழுது பார்த்துக் கொடுக்க அறிவுறுத்துவதில்லை.
டெக்னிக்கல் பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை. ஒரு வண்டிக்கு சராசரியாக 7.5 பேர் இருக்கவேண்டும். இதில், நடத்துனர்கள்,ஓட்டுநர்கள்,தொழில் நுட்ப பணியாளர்கள் அடக்கம். ஆனால் இப்போது ஒரு வண்டிக்கு  5.5 பேர்தான் இருக்கிறார்கள். இது பெரும் சிக்கலை உண்டாக்குகிறது. பணிச்சுமை ஏற்படுத்தி மன ரீதியாக  பாதிக்கப்படும் வகையில் நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

மாநிலத்தின் பிற போக்குவரத்துக் கோட்டங்களுக்கு ஆண்டுதோறும் புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு மட்டும் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை.  இருக்கும் வண்டிகளையே புதிய பெயிண்ட் அடித்து எப். சி. கொடுத்து வழித்தடங்களில் ஓட்டப்படுகின்றன.  பெயிண்ட் மட்டுமே புதியது. அந்தப் பேருந்து எந்த கண்டிஷனில் இருக்கிறது என்று ஆர். டி .ஓ.  பார்ப்பதில்லை. தனியார் பேருந்துகளை மட்டும் ஓட்டி பார்த்து எப்.சி. வழங்கும் ஆர்.டி.ஓ. ,  அரசுப்பேருந்துகளை மட்டும்  ஓட்டியே பார்ப்பதில்லை. இது பயணிகளுக்கு அச்சம் தரும் விஷயம். பொதுமக்களின் உயிரோடு விளையாடும் வேலையை செய்கிறார்கள் அதிகாரிகள்.



மேலும் புதிய பொருட்கள்,பேருந்துகளுக்குத் தேவையான உதிரி பாகங்கள் வாங்குவதிலும் பெருமளவில் முறைகேடுகள் நடக்கின்றன. கமிஷன் அதிகம் தரும் கம்பெனிகளிடம் கோடிக்கணக்கில் உதிரி பாகங்கள் வாங்குவார்கள். பொருட்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தங்களுக்கு வரும் கமிஷனையே இலக்காக வைத்து  போக்குவரத்துக்கு கழகத்தை நடத்துகிறார்கள்." என்றார் கொதிப்போடு.

ஓட்டுனர்கள் நடத்துனர்கள் மீது  தொடுக்கப்படும் துறை ரீதியிலான நடவடிக்கைகள், புகார்கள் குறித்து கோயம்பேட்டில் உள்ள  காஞ்சிபுரம் மண்டல டிப்போ மேனேஜர் மீனாட்சி சுந்தரத்திடம் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.
அவர் கூறுகையில், "கூடுதல் கிலோமீட்டர்கள் பேருந்துகளை இயக்கவேண்டும் என்பதை காஞ்சிபுரம் தலைமை அலுவலகம் தான் முடிவுசெய்துள்ளது.கோயம்பேட்டில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல.அவர்கள் சொல்வதை நான்  கேட்கிறேன் அவ்வளவுதான். இவ்வளவுதூரம் ஓட்டவேண்டும் என்று நான் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை.நிர்பந்தம் செய்யவும் இல்லை.அரசு என்ன அளவீடு வைத்துள்ளதோ அதுதான் நடைமுறையில் உள்ளது.அதைக் கூட்டி குறைக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. ஊழியர்களை டார்ச்சர் செய்வதாக  கூறப்படுவதில் உண்மை இல்லை.மேற்கொண்டு பதில் வேண்டும் என்றால் காஞ்சிபுரம் அலுவலகத்தில் கேளுங்கள் " என்றார்.

காஞ்சிபுரம் மண்டல தலைமை அலுவலகத்தினரைப் பலமுறை தொடர்புகொண்டோம். பதிலளிக்க மறுத்துவிட்டனர்.   




மடக்கப்பட்ட தாதுமணல் லாரிகள்! சூடு பிடிக்கிறதா சசிகலாபுஷ்பா - வைகுண்டராஜன் விவகாரம்?


திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில் தாதுமணல் கடத்திச் சென்ற லாரிகளை மாவட்ட அரசு நிர்வாகம் மடக்கிப் பிடித்து, போலீஸ் நிலையத்தில் சிறை வைத்துள்ள விவகாரம் தென் மாவட்ட அரசியல் புள்ளிகள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இதன் பின்னணி குறித்தும் விறுவிறுப்பாக விவாதிக்கப்படுகிறது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தனது தாது மணல் ஏற்றுமதி தொழிலில் கோலோச்சி வருபவர்கள் வைகுண்டராஜன் அண்ட் பிரதர்ஸ். அரசிடம் முறையான அனுமதி வாங்கவில்லை என்று கூறி, கடந்த 2013 முதல் தாது மணல் ஏற்றுமதிக்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது என்றெல்லாம் கூறப்பட்டாலும் வி.வி பிரதர்ஸ் என்னும் 'மாய சக்தி'யின் தொழில் தங்கு தடையின்றி நடந்து கொண்டேதான் உள்ளது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.



தற்போது சப்-கலெக்டர் ஒருவரால் மணல் லாரிகள் வளைக்கப்பட்டிருப்பதே அதற்கு சாட்சி.
நெல்லை மாவட்டம் திசையன்விளையைச்  சேர்ந்தவர் வைகுண்டராஜன். இவருடன், இவரின்  சகோதரர்கள் ஜெகதீசன், சுகுமாரன், சந்திரேசன் ஆகியோர் அடங்கிய 'டீம்'  கடற்கரையோரத்திலுள்ள தாது மணலை அள்ளி அதிலிருக்கும் தாதுக்களைப் பிரித்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை அசராமல் செய்து வருகிறார்கள். அரசிடம் முறையாக அனுமதி வாங்குவதில்லை எனவும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் வி.வி. குழுக்களை ஒன்றும் செய்திட முடியவில்லை. அந்த அளவிற்கு தொழில் சூத்திரங்களைக்  கற்று வைத்திருக்கிறார்கள் என்றும் சூடாக விவாதிக்கப்படுவதே நெல்லை வட்டார ஹாட் டாப்பிக்.  
தமிழகத்திலுள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் ஆதரவு பார்வை இருப்பதால் வி.வி பிரதர்ஸின்  தொழிலுக்கு எந்தத்  தடையும் வந்ததில்லை. அப்படியே வந்தாலும் அதை ஆரம்பத்திலே முறியடித்து தாதுமணல் ராஜாங்கம் நடத்தும் தந்திரத்தை கற்றவர்கள் வி.வி.பிரதர்ஸ்.  அதனால் அரசு உத்தரவுகள் இவர்களை என்றுமே தொந்தரவுகள் செய்ததில்லை. அவை மணலோடு மணலாய் மாயமாகிப்போகும்.



ஆனாலும் சமூக ஆர்வலர்கள் பாதிக்கப்படும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் கொடுப்பதால் எதாவது இரண்டு லாரிகளை பெயருக்குப்  பிடித்து போட்டுவிடுவது மட்டும் அவ்வப்போது நடக்கும்.ஆனால் அதன்பிறகும் அதே தொழில் தொடர்ந்து நடைபெறும்.அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் போலீஸ் ஸ்டேசனில் கடந்த ஒரு மாத காலமாக இரண்டு லாரிகள் லோடோடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அண்மையில் 'என்னை எனது தலைவர் அறைந்தார்' என்று நாடாளுமன்றத்தில் பேசி உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு தேசிய அளவில் பரபரப்பை உண்டாக்கிய எம்.பி. சசிகலா புஷ்பாவின் அரசியல்  வளர்ச்சிக்கு வைகுண்டராஜன் தான் காரணம் என பேசப்பட்டு வருகிற நிலையில், டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சசிகலாபுஷ்பா, 'என்னைச்  சீண்டினால் அ.தி.மு.கவின் உள்ளே நடப்பதை வெளியில் சொல்வேன். என்னை சாதாரணமாக நினைக்க வேண்டாம். தமிழக அரசியலையே புரட்டிப் போட்டுவிடுவேன்’ என்று கூறியிருக்கிறார். அவரின் இந்தப் பேச்சு, வைகுண்டராஜன் விவகாரத்தில், தமிழக அரசு வேகமெடுக்க காரணமாகிவிட்டதோ என்று எண்ண வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக நேற்று(வியாழன்) மாலையில் நெல்லை - தூத்துக்குடி எல்லையான உவரி பகுதியில் தாது மணல் ஏற்றிச்  சென்ற மூன்று டாரஸ் லாரிகள் மற்றும் மணலை அள்ளி போடும் ஒரு லோடரையும் அம்பாசமுத்திரம் சப்-கலெக்டரான விஷ்ணு வளைத்துப் பிடித்து உவரி போலீஸாரிடம் ஒப்படைத்தார். உவரி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.

இன்னும் என்ன என்ன நடவடிக்கைகள் மூலம் தமிழக அரசு தனது பிடியை இறுக்கும் என்பதை பொறுத்திருந்ததுதான் பார்க்கவேண்டும்.
 


Friday, 12 August 2016

ஒன் கன்ட்ரி.. ஒன் டாக்ஸ்... ஜிஎஸ்டி அமலானால் இதெல்லாம் கிடையாது!

வரி வருவாய்களைப் பொறுத்தவரை நேர்முக வரி, மறைமுக வரி என இரண்டு வகைகள் உள்ளது. தனி மனிதர் அரசுக்கு நேரடியாகச் செலுத்துகின்ற 'தனிநபர் வருமான வரி' அல்லது நிறுவனங்கள் செலுத்துகின்ற 'பெருநிறுவன வருமான வரி' போன்றவை நேரடி வரிகள்.
ஆனால், ஒரு பொருட்களை உற்பத்தி செய்து அதனைச் சந்தையில் விற்பனை செய்யும் வரை செலுத்துகின்ற கலால் வரி, வாட் வரி, சேவை வரி போன்றவை மறைமுக வரிகளாகும். ஆனால், ஜிஎஸ்டி அமலுக்கு வரும் போது இப்போது புழக்கத்தில் இருக்கும் மறைமுக வரிகள் என்று சொல்லப்படும் எந்த ஒரு வரியும் இனி இருக்காது. 


இந்த நிலையில் ஜிஎஸ்டி அமலுக்கு வரும்போது இனி எந்தெந்த மறைமுக வரிகள் இடம்பெறாது என்பது குறித்து வழக்கறிஞர் மற்றும் வரி நிபுணர் வைத்தீஸ்வரனிடம் கேட்டோம். அவர் 
மறைமுக வரியைப் பொறுத்தவரை மத்திய அரசு விதிக்கும் கலால் வரி, சேவை வரி, சிறப்பு கூடுதல் வரி மற்றும் பொருள் குவிப்பு வரி என 4 வகையான வரி விதிக்கப்படுகிறது. இதில் 
கலால் வரி (Excise Duty) 
பொருள்களை உற்பத்தி செய்யும்போது செலுத்தும் வரியாகும். 
சேவை வரி (service tax) 
சேவைகளுக்கும் விதிக்கப்படும் வரியாகும். 
சிறப்பு கூடுதல் வரி (Special Additional Duty) 
வெளிநாடுகளிலிருந்து ஒரு பொருள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும்போது உற்பத்தி வரிக்கு நிகராக விதிக்கப்படும் வரி. 
பொருள் குவிப்பு வரி (Countervailing Duty) 
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களைக் கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கப்படும் வரி. 
இதைப்போல மாநில அரசும், மதிப்பு கூட்டு வரி, கொள்முதல் வரி, நுழைவு வரி மற்றும் மத்திய விற்பனை வரி போன்ற முக்கிய வரிகளையும், இதுதவிர சொகுசு வரி, கேளிக்கை வரி மற்றும் விளம்பர வரி போன்ற வரிகளையும் விதிக்கிறது. இதில் 
மதிப்பு கூட்டு வரி (வாட் -VAT) (Value Added Tax) 
பொருட்களை மதிப்புக் கூட்டி வேறு ஒரு பொருளாக விற்கும்போது விதிக்கப்படும் வரியாகும்.
மத்திய விற்பனை வரி (Central Sales Tax) 
ஒரு மாநிலத்திலிருந்து வேறு ஒரு மாநிலத்திற்குப் பொருட்களை எடுத்துச் செல்லும்போது உற்பத்தி செய்த மாநிலம் விதிக்கும் வரி 


கொள்முதல் வரி (Purchase Tax) 
விற்பனை வரியைச் செலுத்தாமல் இருப்பவர்கள் பொருட்களை கொள்முதல் செய்யும்போது செலுத்தும் வரிதான் கொள்முதல் வரியாகும். 
நுழைவு வரி (Entry Tax) 
பொருட்களை வாகனத்தில் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு எடுத்துச் சொல்லும்போது 
விதிக்கப்படும் வரியாகும். 
சொகுசு வரி (Luxury Tax) 
ஆடம்பர வசதிக்கான விதிக்கப்படும் வரி 
கேளிக்கை வரி (Entertainment Tax) 
கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு விதிக்கப்படும் வரியாகும் 
விளம்பர வரி (Advertising Tax) 
விளம்பரங்களுக்கு விதிக்கப்படும் வரி 
ஆக மத்திய அரசு, மாநில அரசு என இரண்டு அரசுகள் விதிக்கும் அனைத்து மறைமுக விதிகளும் சரக்கு மற்றும் சேவை வரி என்று சொல்லப்படும் ஜிஎஸ்டி அமலுக்கு வரும் போது இனி இருக்காது. இந்த மசோதா அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த ஜிஎஸ்டி மசோதாவில் எத்தனை சதவிகிதம் என்பது இறுதியாகவில்லை. 


மை டியர் யங் எம்எல்ஏ..!'- பேரவையில் திமுக எம்எல்ஏ-வுடன் ஜெயலலிதா காரசார விவாதம்!


ட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் காரசார  விவாதம் இன்று நடந்தது. தமிழகத்திற்கு வரவேண்டிய தாெழிற்சாலைகள் கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்றுவிட்டதாக குற்றச்சாட்டிய திமுக உறுப்பினரை பார்த்து,  'மை டியர் யங் எம்எல்ஏ...!' என்று முதல்வர் அழைத்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று தொழில், குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.


இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவின் மேற்கூறிய குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, " உறுப்பினர் பேசுகின்றபோது, அண்மைக்காலமாக இங்கே, தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய சில தொழில்கள் கர்நாடகத்திற்கும், ஆந்திர பிரதேசத்திற்கும் சென்று விட்டன என்று கூறினார். அப்படிச் சென்ற ஒரு தொடர் நிறுவனத்தின் பெயரையாவது அவரால் குறிப்பிட முடிந்தால், நன்றாக இருக்கும். உண்மை என்னவென்றால், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட இன்னும் பல மாநிலங்களின் முதலமைச்சர்கள், இங்கே தமிழ்நாட்டிற்கு வந்து தொழில் அதிபர்களையெல்லாம் அழைத்து, கூட்டங்களை நடத்தி, எங்கள் மாநிலத்திற்கு வாருங்கள், அங்கே தொழில் தொடங்குகள், உங்களுக்கு நிலத்தை இலவசமாக அளிக்கிறோம், இதை அளிக்கிறோம், அதை அளிக்கிறோம் என்று கூவிக் கூவி அழைத்தார்கள். ஆனால், ஒருவர் கூட செல்லவில்லை. ஒரு தொழில் தொடங்க வேண்டுமானால், அது வெற்றிக்கரமாக நடைபெற வேண்டுமானால்,
இலாபத்தை ஈட்ட வேண்டுமானால், முதல் தேவை அந்த மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு, அது ஒழுங்காக காப்பாற்றப்பட வேண்டும். அது தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது என்று என்னால் உறுதியாக கூற முடியும்.

அடுத்த தேவை, தடையில்லா மின்சாரம், தரமான மின்சாரம், அது தமிழ்நாட்டில்தான் கிடைக்கிறது. இன்றைக்கு ஆந்திர பிரதேசமாகட்டும், கர்நாடகமாகட்டும், தமிழ்நாட்டை கேட்டு, பணம் கொடுத்து, எங்களிடமிருந்து, நம்மிடமிருந்து மின்சாரத்தை வாங்குகின்ற நிலைமையில்தான் இருக்கிறார்கள். ஆகவே, இன்னும் எத்தனை ஆண்டுகள் போனாலும், இங்கிருந்து, கர்நாடகத்திற்கோ, ஆந்திர பிரதேசத்திற்கோ எந்த தொழில் முதலீட்டாளர்களும் செல்ல மாட்டார்கள். வரிசையில் நின்று, இங்கு தமிழ்நாட்டுக்குத்தான் வருவார்கள் என்று என்னால் நம்பிக்கையுடன், உறுதியுடன் கூற முடியும்" என்றார்.

இதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர் ராஜாவுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நடந்த விவாதம்...

ராஜா: Hon'ble Speaker Sir, I am absolutely sure that Chief Minister should have understood that I am trying to say is that I was actually trying to put forth the policy for your approval Madam. But, I believe, both the Ministers got my point and they have been talking about Minimum Support Price and having not.....

ஜெயலலிதா: My dear young MLA, I have fully understood what you were trying to say. I only responded to the point you made about industries having fled the State and having gone to Karnataka and Andhra Pradesh, which is not true.

ராஜா: I beg to differ again. Honble Madam, I was actually saying 'என்ற சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.' That would actually mean, these are the doubts that prevail in the market. But, I believe you didn't get it probably. So I have just clarified that point. So, you have clarified that the...

ஜெயலலிதா:
 Hon'ble Speaker Sir, my dear young man, I fully got what you were trying to convey. You are trying to play with words. That won't work with me. You said very clearly that industries that should have come to Tamil Nadu, went to Karnataka and Andhra Pradesh, which I repeat, is not true.

ராஜா: OK Madam, if that's what you have got, it is OK. VAT refund. I will be doling out numbers soon and then you can keep going on about it......

ஜெயலலிதா: Hon'ble Speaker Sir, In the mean time, I have some numbers to dole out.

இதைத் தொடர்ந்து தமிழில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, தமிழ்நாட்டிலிருந்து வேறு எங்கும் செல்லாத தொழிற்சாலைகள் பற்றி, 'சென்றதாக சொல்லப்படுகிறதே' என்று கூறியுள்ளார். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலை, ஏன் இங்கு நடத்தப்படாமல், ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டிக்கு சென்றுவிட்டது, ஏன் அங்கு துவங்கப்பட்டது என்று விளக்கம் கூற தயாரா என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். பதில் சொல்லத் தெரியாத விஷயங்களுக்கெல்லாம், 'நான் அதற்குள் போக விரும்பவில்லை' என்று சொல்கிறார். இந்தப் பிரச்னையை ஆரம்பித்ததே உறுப்பினர்தான். இங்கிருந்து செல்லாத தொழிற்சாலைகள் ஆந்திராவிற்கும்,
கர்நாடகத்திற்கும் சென்றதாக, 'பேசப்படுகிறது, கூறப்படுகிறது' என்றார். உண்மையாகவே இங்கிருந்து ஆந்திராவிற்கு சென்ற, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்ற, ஒரு தொழிற்சாலை ஏன் சென்றது? மெட்ரோ ரயில் இங்கே ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்காக பெட்டிகளை தயாரிக்கப்பட வேண்டிய தொழிற்சாலை இங்கே துவங்கப்படாமல், அது ஏன் ஆந்திராவிற்கு சென்றது? ஏன் அங்கே துவங்கப்பட்டது என்று உறுப்பினர் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். 'அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை' என்று சொல்லி தப்பித்துக்கொள்ள முடியாது.



மெட்ரோ ரயில் திட்டமே மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து ஒப்பந்தம் செய்துகொண்டு நடத்துகின்ற ஒரு திட்டம். இதற்கு ஆரம்பத்தில் பிள்ளையார் சுழி போட்டது அதிமுக அரசுதான். அப்பொழுது அதற்கான- மெட்ரோ ரயிலுக்கான coach பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை இங்கே தொடங்குவதாகத்தான் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இங்கே துவங்கப்படாமல், அது ஆந்திராவுக்கு சென்றுவிட்டது. ஆகவே, இங்கே ஏன் துவங்கப்படவில்லை என்று கேட்டதற்கு, இது மத்திய அரசின் திட்டம் என்றால், இது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம் அல்ல. மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் சேர்ந்து நடத்துகின்ற ஒரு திட்டம்தான் இது. கேட்கப்பட்ட கேள்வி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஏன் ஆந்திராவுக்கு சென்றது? தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஏன் சென்றது? என்றுதான் கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொல்லாமல், உறுப்பினர் வேறு புள்ளிவிவரங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கும், மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். உறுப்பினர் பேசுகின்றபோது, தொழிற்சாலைகள் ஆந்திராவிற்கும் கர்நாடகத்திற்கும் சென்று கொண்டிருக்கின்றன என்ற ஒரு தவறான கருத்தைச் சொன்னார். அதற்குப் பதில் சொல்ல நான் சில கருத்துகளை இங்கே தெரிவித்தேன். அதன் பிறகு, இப்பொழுது அவர் சொல்லுகிறார், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஏன் ஆந்திராவிற்குச் சென்றது என்று நான் கேட்டபோது, அதற்குப் பதில் சொல்ல முடியாமல் வேறு ஏதேதோ பேசி, இப்பொழுது மெட்ரோ ரயில் திட்டத்தையே எதிர்த்த முதலமைச்சர் இப்போது பெட்டிகள் ஏன் ஆந்திராவிற்குச் சென்றன என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஒரு கேள்வியைக் கேட்டு, அவருடைய lack of maturity அதாவது முதிர்ச்சியின்மையைத்தான் அவர் காட்டுகிறார் என்று சொல்ல வேண்டும்.

அதாவது, Point No. 1, கேள்வி, இவர் எழுப்பிய கேள்வி. இங்கே வரவேண்டிய தொழிற்சாலைகள் ஏன் ஆந்திராவிற்கும், கர்நாடகத்திற்கும் சென்றன என்று கேட்டார். அதற்கு நான் சுட்டிக்காட்டினேன், இங்கே வரவேண்டிய ஒரு தொழிற்சாலை ஆந்திராவிற்கு சென்றுவிட்டதே, தி.மு.க. ஆட்சியிலே சென்றுவிட்டதே? ஏன் சென்றுவிட்டது? என்று கேட்டேன். ஆனால், மேலும் அவர் ஏதேதோ பேசிக்கொண்டிருப்பதால், இதற்கு பதில் சொல்ல முடியவில்லை. இப்போது தொழில் துறை அமைச்சர் தி.மு.க. ஆட்சிக் காலத்தில், தி.மு.க. அரசுக்கும், அதாவது தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் இந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்காகப் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், எப்படி தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டிருக்கிறது, எப்படி தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை விவரமாகச் சொன்னார். அவர் பல விவரங்களைச் சொன்னார். அதை எளிதாகப் பாமர மக்களுக்குப் புரியும் விதத்தில் நான் இங்கே விளக்கம் கூற விரும்புகிறேன். அவர் சொன்ன பல கருத்துகளின் மையக் கருத்து, சாராம்சம், என்னவென்றால் முக்கியமாக அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இலாபத்தில் மத்திய அரசுக்கும் பங்கு உண்டு. மாநில அரசுக்கும் பங்கு உண்டு. ஆனால் நஷ்டம் ஏற்பட்டால் அந்த நஷ்டம் முழுவதையும் மாநில அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. அந்த விவரம் உறுப்பினருக்குத் தெரியுமா? தெரியாதா?

மேலும் இந்தத் திட்டமே JICA என்ற ஜப்பான் நிறுவனத்திடமிருந்து, அமைப்பிலிருந்து பெறப்பட்ட கடனுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. மேலும், அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் JICA கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என்றால், அதில் மத்திய அரசுக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது. தமிழக அரசுதான், மாநில அரசுதான் திருப்பிச் செலுத்தவேண்டும் என்று அதில் சரத்து இருக்கிறது. இப்படிப்பட்ட, தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற, தமிழகத்திற்கு துரோகம் செய்கின்ற சரத்துகளெல்லாம் அந்த ஒப்பந்தத்தில் இருக்கின்றன. அதைத்தான் இப்போது அண்மையில்கூட நான் பிரதமருக்கு கடிதம் எழுதியபோதுகூட நான் அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும், தமிழ்நாட்டுக்கு எதிராக இருக்கின்ற சரத்துகளையெல்லாம் மாற்றியமைக்கவேண்டுமென்று கேட்டிருக்கிறேன். இதைப் பற்றியெல்லாம் உறுப்பினருக்குத் தெரியுமா? தெரிந்தால், பதில் சொல்ல முடியுமா? இப்படி தமிழ்நாட்டை தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஏன் வஞ்சித்தீர்கள்? இப்படிப்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏன் கையெழுத்திட்டீர்கள்? அவருக்கு maturity போதவில்லை என்பதை நான் மட்டும் சொல்லவில்லை, அவரே அதை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்" என்று கூறினார்.