Monetize Your Website or Blog

Showing posts with label சமையல் குறிப்புகள். Show all posts
Showing posts with label சமையல் குறிப்புகள். Show all posts

Thursday, 25 August 2016

புற்றுநோயைத் தடுக்கும் 5 சமையல் பொருட்கள் !


பலமானவரையும் உருக்கிப்போட்டுவிடும் அசுரபலம் கொண்டது புற்றுநோய். வந்த பிறகு அவஸ்தைப்படுவதைவிட, வருமுன் காப்பதே புத்திசாலித்தனம். புகைபிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது, உடல் உழைப்பில்லாமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவது, ஊட்டச்சத்துக் குறைபாடு, மனஅழுத்தம், மனச்சோர்வு, காஸ்மெட்டிக் பொருட்களை அதிகம் உபயோகிப்பது, பிளாஸ்டிக் பயன்பாடு... எனப் புற்றுநோய்க்கான காரணிகள் ஏராளம். இவற்றைத் தவிர்ப்பது ஒருபுறம் இருக்கட்டும். இயற்கையாகவே புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சக்திகொண்ட சில சமையல் பொருட்களும் மூலிகைகளும் இருக்கின்றன. அவற்றை நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தினாலே போதும்; புற்றுநோயை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளலாம். அவை...


                                          
இஞ்சி
நாட்டுவைத்தியத்தில் இஞ்சியின் பயன்பாடு மிக முக்கியமானது. நம் முன்னோர்கள் சளித் தொந்தரவில் இருந்து மூலநோய் வரைக்கும் இஞ்சியை மருந்தாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இஞ்சியை அப்படியே ஃபிரெஷ்ஷாகவோ பௌடராகவோகூடப் பயன்படுத்தலாம். சமைக்கும்போது மட்டும், அளவில் கவனம் தேவை. ஒரு டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி என்பது, 1/8 டீஸ்பூன் இஞ்சி பௌடருக்குச் சமம். சமையலில் இஞ்சி சேர்ப்பது சுவையைக் கூட்டும்; சமைத்த பொருள் சீக்கிரம் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும்; ஆரோக்கியத்துக்கு உதவும்; குடல், வயிறு ஆகியவற்றைப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும்.
                                       
மஞ்சள்
உணவின் நிறத்துக்காகப் பயன்படுகிறது என நாம் நினைக்கும் மஞ்சள் மகத்தானது. மஞ்சளில் இருக்கும் மஞ்சள் நிறம் அபாரமாகச் செயல்புரியும் தன்மை கொண்டது. இது, ஆன்டிஆக்ஸிடன்ட்டாகச் செயல்படுகிறது. குர்குமின் (Curcumin) என்ற சத்து, புற்றுநோய் வளராமல் பாதுகாக்கிறது. தினமும் கால் டீஸ்பூன் அளவு உணவில் சேர்த்து கொள்வது நல்லது. குடல், ப்ராஸ்டேட், மார்பகம் மற்றும் தோல் தொடர்பான புற்றுநோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு.
                                           
சிவப்பு மிளகாய்
நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் சிவப்பு மிளகாயேதான்... அதன் ஆற்றலோ அபாரம். இதில் இருக்கும் காரத்தன்மையில் உள்ள சேர்மானம் வலியில் இருந்து நிவாரணம் தரக்கூடியது; தோலுக்குப் பாதுகாப்பு தரக்கூடியது; செரிமானக்கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது. சிவப்பு மிளகாயை அளவோடு சமையலில் சேர்த்துக்கொள்வது தோல் தொடர்பான புற்றுநோயில் இருந்து பாதுகாப்பளிக்கும்.


                                                       
பூண்டு
மருத்துவக் குணம் கொண்ட பூண்டு உடலில் சேரும் நச்சுக்களை முறிக்க வல்லது. இதை, அன்றாடம் சமையலில் சேர்த்துக்கொள்வது நல்லது. பூண்டில் இருக்கும் சல்ஃபர், ஆர்ஜினைன், ஃப்ளேவனாய்ட்ஸ் மற்றும் செலினியம் எல்லாமே உடல் ஆரோக்கியத்துக்கு உதவுபவை. பூண்டை நசுக்கும்போது அதிலிருந்து கிளம்பும் மணத்துக்குக் காரணம், பூண்டில் இருக்கும் ஆலிசின் (Allicin) என்ற சேர்மானம்தான். பூண்டு உடலில் சேரும் கொழுப்பைத் தடுக்க உதவுகிறது. மார்பகம், குடல், வயிறு, உணவுக்குழாய், கணையம் ஆகியவற்றில் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. ’லுகூமியா’ எனும் ரத்தப் புற்றுச் செல்களை அழிப்பதில் துணைபுரிகிறது. பூண்டுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் ஆற்றலும் உண்டு.
                                                      
புதினா
பல நூற்றாண்டுகளாக நாம் பயன்படுத்தி வரும் புதினா ஓர் அருமருந்து. வாயுக்கோளாறு, செரிமானமின்மை, முதுகுப்பிடிப்பு, மூட்டுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இர்ரிடபிள் பௌல் சிண்ட்ரோம் மற்றும் ஃபுட் பாய்ஸன் போன்ற பிரச்னைகளின்போது உதவக்கூடியது. வயிற்றுப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் புதினாவுக்கு உண்டு.




Monday, 22 August 2016

உடல் எடையைக் குறைக்கும் 5 உணவுகள்!​

தினமும் ​அரை மணி நேரம் ஓடுவது, பிறகு யோகா​,​ டயட் என உட​ல் எடையை குறைக்க பாடுபவர்கள்​,​ கண்டுகொள்ளாத விஷயம் அவர்கள் உண்ணும் உணவு. ஆம், டயட்​டில்​ இருப்பதோடு நாம் சில​ உணவுகளை உண்டால்​, உடலிலுள்ள கெட்ட கொழுப்பு​ விரைவில்​ கரைந்து விடும். 'ஃபேட் பர்னிங்'​ ​(Fat burning) காய்​ மற்றும் க​​னி​ வகைகளை அன்றாடம் நம் உணவு பட்டியலில் சேர்த்து கொள்வது நல்லது.
br />
1. எலுமிச்சை
இந்த பட்டியலில் முதல் இடம்​,​ எலுமிச்சைக்குதான். எலுமிச்சையில்  ​'​வைட்டமின் சி​'​ ​  சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் சி நி​றைந்த அனைத்து உணவுகளுமே, கொழுப்பைக் கரைக்க கூடியவை. காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில்​,​ எலுமிச்சை ஜூஸ்​ கலந்து​ குடித்தால், உடலிலுள்ள ​கழிவுகளை அகற்றும்​.​ வைட்டமின் சி​ சத்து,​ கொழுப்பை கரைக்கும் வேலையை செய்யும்.  இது​ ​மட்டுமல்லாமல், தொடர்ந்து எலுமிச்சை சாறு அருந்தி வந்தால், இருமல், ​சளி, தலைவலி, அஜீரண கோளாறு ஆகியவை ​வராமல் தடுக்கும்.
2. சோம்பு
சோம்பில் ​தாதுக்கள் நிறைந்துள்ளன. ​மேலும், இதில் கலோரி​களும்​ குறைவு​தான்​. ​உடலில் ​செரிமான சக்தியை அதிகப்படுத்து​ம்​. இரவு உறங்குவதற்கு முன்பு​,​ சோம்பை வெதுவெதுப்பான நீரில் ஊர வை​த்து, காலையில்​ அந்த நீரைக் குடிக்க​ வேண்டும். அதேபோல, ​​ஹெவியான உணவுகளை சாப்பிட்ட பிறகு சிறிதளவு சோம்பை மென்று திண்ணலாம்.
3. கிரீன் டீ
கிரீன் டீயில், வேறு எந்த உணவிலும் காண முடியாத அளவு ஆண்டிஆக்ஸிடண்ட்​ சத்துக்களை​ காணலாம். இதில்​ பாலிஃபினால்​ ​(​polyphenol​)​ ​ ​எனப்படும் ​சத்துக்களும் நிறைந்துள்ள​ன. சர்க்கரை இல்லாமல் தினமும் கிரீன் டீ பருகி வருவது உடலிலுள்ள கொழுப்பை உருக செய்யும். இதிலுள்ள ​இதர சத்துக்கள்​ ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தக் கூடியது. தினமும் கிரீன் டீ பருகுவதால்,  கொழுப்பைக் கரைப்பதோடு, நம் உடலையும் பாதுகாக்கும்.
br />
4. தர்பூசணி
தர்பூசணி முழுக்க முழுக்க நீர்ச்சத்து நிரம்பியது. இதுதவிர, தர்பூசணியில் ஏராளமான அளவு வைட்டமின்களும் ​தாதுக்களும் உள்ளன. இது உடல் எடையைக் குறைக்க உதவும். தர்பூசணி கொழுப்பை நம் உடலில் சேர விடாமல் ​தடுக்கும்​.​ தொப்பையைக் குறைக்க விரும்புபவர்கள்​,​ உடற்பயிற்சி​,​ டயட்டோடு​ அவசியம்​ சேர்த்து​ கொள்ள வேண்டிய உணவு​ தர்பூசணி​.​
5.​ குறுக்காக வெட்டி பயன்படுத்த கூடிய​  காய்கறிகள்
இதை ஆங்கிலத்தில்​ க்ருசிஃபெரஸ் (cruciferous vegetables​)​ என்று அழைப்​பர்​. அதாவது, குறுக்காக வெட்டினால்​ இந்த  காய்கறி வகைகளைப் பயன்படுத்த முடியும்.​ ​ காலிஃபிளவர், முட்டைக்கோஸ், பிராக்கோலி போன்ற ​காய்கறிகள் இவ்வகையை சேர்ந்தது. இதில் ​நார்ச்சத்து​களும் அதிகம். இதிலுள்ள ஆண்டிஆக்ஸிடண்ட்​,​ கொழுப்பைக் குறைப்பதோடு​,​ நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்​கும்.​
இனிமேல், உங்கள் உணவில் ​இந்த ஐந்து உணவுகளும் இடம் பெறட்டும்!​
br />



Wednesday, 10 August 2016

நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு...?! - கல்லிடைக்குறிச்சி கலகல

நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் ‘நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு?’ என்கிற தலைப்பில்   சாப்பிடும் போட்டி நடைபெற்றது.

வடிவேலு பாணியில் சொல்வதானால், ‘ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?‘ என்று சொல்லும் அளவுக்கு வித்தியாசமானதொரு போட்டியை,  கல்லிடைக்குறிச்சியில் உள்ள நாச்சியார் அசைவ தர்பார் ஹோட்டல் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்தில், நடிகர் பரோட்டா சூரி ஒரு சாப்பாட்டுப் போட்டியில் பங்கேற்று,  50 பரோட்டாக்களை சாப்பிட்டு முடித்ததும், கடைக்காரர் அதனை ஒத்துக் கொள்ளாததால், ‘நீங்க கோட்டை எல்லாம் அழிங்க.. நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்’ என்று சொல்லி கலங்கடிப்பார்.

அதே பாணியில் இந்த ஹோட்டலில், ‘நம்ம ஊரு பரோட்டா சூரி யார்?’ என்ற பெயரில் சாப்பிடும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அதிகபட்சமாக சாப்பிட்டு வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 5001 பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. போட்டி காலை 11 மணிக்கு தொடங்கி, இரவு 9 மணிக்கு முடிவடையும் என ஹோட்டல் நிர்வாகத்தினர் அறிவித்து இருந்தனர். போட்டிக்காக ஹோட்டலில் மைக் செட் கட்டப்பட்டு, போட்டி குறித்த அறிவிப்பு  வெளியாகிக் கொண்டிருந்தது.

இந்தப்  போட்டியில் பங்கேற்க சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருந்தன. அதன்படி, மது அருந்தியவர்களுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி கிடையாது. போட்டி நடைபெறும் நேரத்தில் இடையூறு செய்வது போல நடந்து கொண்டால் காவல்துறையில் புகார் செய்யப்படும். காலை 11 மணி முதல் இரவு 7 மணிவரை இப்போட்டியில் பங்கேற்க டோக்கன் வழங்கப்படும். ஆனால் சரியாக 9 மணிக்கு போட்டி முடிவடையும். அதன் பின்னர் யாரும் பங்கேற்க அனுமதி கிடையாது.

போட்டியில் பங்கேற்பவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவரின்  உடல்நிலையில் மாற்றம் ஏற்படுவது தெரிந்தால், அதாவது அதற்கு மேலும் சாப்பிட முடியாத அளவுக்கு அசாதாரண நிலை ஏற்பட்டால், அவரை உடனடியாகப்  போட்டியில் இருந்து நீக்கி , உரிய மருத்துவம் செய்ய அழைத்து செல்லப்படுவார். போட்டியில் பங்கேற்பவர்கள் அனைவரும் தாங்கள் சாப்பிட்ட பரோட்டாவுக்கான தொகையை செலுத்தி விட வேண்டும். போட்டியின் முடிவில் அதிக எண்ணிக்கையில் சாப்பிட்டவருக்கு பரிசுத் தொகையாக 5001 வழங்கப்படும்’’ என விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருந்தன.
இந்தப்  போட்டி குறித்து அறிந்ததும் உள்ளூரில் இருந்து மட்டும் அல்லாமல் பக்கத்து கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், பெரியவர்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து போட்டியில் பங்கேற்றனர். அதனால் பகலில் இருந்தே ஹோட்டலில் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொருவரும் சாப்பிட்ட பரோட்டாக்களின் எண்ணிக்கை குறித்துக் கொள்ளப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் கூட்டம் அதிகமாக இருந்தது. இடம் கிடைக்காதவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது.

இப்போட்டியில், விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த கோதர் மைதீன் என்பவர், 42 பரோட்டாக்களை சாப்பிட்டு பரிசை தட்டிச் சென்றார்.


அவரிடம் பேசியபோது, ‘நான் அத்லெடிக் பிளேயர். தினமும் ஓட்டப்பந்தயத்துக்காக பயிற்சி எடுத்துக் கொள்வேன். நானும் நண்பர்களும் சேர்ந்து பயிற்சி செய்து விட்டு, சில சமயம் நாங்களே, ‘யார் அதிகம் சாப்பிடுகிறார்கள்?’ என போட்டி வைத்துக் கொள்வோம். அதில் பெரும்பாலும் நானே ஜெயிப்பேன். அந்த பயிற்சியும் இன்று கைகொடுத்தது. அதனால்தான் என்னால் 42 பரோட்டாக்களை சாப்பிட முடிந்தது. எனக்கு அடுத்த இடத்தில் வந்தவர் 35 பரோட்டாக்களை மட்டுமே சாப்பிட்டு இருக்கிறார்’’ என்று சொன்னவர்,  இன்னும் நாலைஞ்சு பரோட்டாக்களை கூட என்னால் சாப்பிட முடியும்’’ என்று சொல்லி,  அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்தார்.

இந்தப் போட்டிக்கான ஏற்பாட்டை செய்திருந்த நாச்சியார் ஹோட்டல் நிர்வாகி மோசஸ் என்ற பாஸ்கரன் பேசும்போது, ‘‘நான் பொறியியல் பட்டதாரி. கம்ப்யூட்டர் படித்துவிட்டு  சென்னையில் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செஞ்சேன். அந்த வேலை பிடிக்காததால் சொந்த ஊருக்கு வந்து கம்ப்யூட்டர் கடை நடத்தி வந்தேன். பின்னர் ஹோட்டல் தொழிலில் ஈடுபட முடிவு செய்தேன். விக்கிரமசிங்கபுரத்தில் நான் கடை தொடங்கினேன்.

இந்தக்  கடையை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினேன். கடையை விளம்பரப்படுத்துவதற்காக ஆரம்பத்தில்,  'ஒரு பிரியாணி வாங்கினால் மற்றொன்று இலவசம்'னு அறிவித்தேன். கூட்டம் அலைமோதியது. அதேபோல, 'பத்து பரோட்டா வாங்கினால் கூடுதலாக பத்து பரோட்டா இலவசம்'னு அறிவித்தேன். இந்த சமயத்தில், கூட்டம் அலைமோதியதால் காவல்துறையை வைத்துக்  கூட்டத்தைச்  சமாளிக்க வேண்டிய நிலைமை உருவானது.



அதன்பின்னர், சில தினங்களுக்கு முன்பு பக்கத்து ஊரைச்  சேர்ந்த இளைஞர்கள் சிலர் வந்து,  அவர்களுக்குள்ளாகவே அதிக பரோட்டா சாப்பிடுவது தொடர்பான போட்டியை நடத்தினாங்க. ரொம்ப ஜாலியா  அவங்க இதில் பங்கேற்றதைப்  பார்த்ததும், நாமே இப்படி ஒரு போட்டியை நடத்தலாமேன்னு தோணுச்சு. அதனால் இந்தப்  போட்டியை நடத்தினேன். இதில் நிறைய பேர் ஆர்வத்தோட கலந்துக்கிட்டது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இந்தப்  போட்டியில் கோதர் மைதீன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பரிசுத்தொகை வழங்கினோம்’’ என்றார் உ ற்சாகமாக.

Tuesday, 14 June 2016

ராகியும் அதன் நண்பர்களும்...

ச்சைப் பசேலென்ற வயல்வெளி ஓரமாக ராகி நடந்து வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த வழியே நெல்லும் கோதுமையும் எதிரே வந்தன. ராகியை கண்ட நெல், 'அடேய், நீயெல்லாம் இன்னும் ஊரில் தான் இருக்கிறாயா? என்று சொல்லி ஏளனமாய்ச் சிரித்தது.

பொறுமையுடன் கடக்க முயலும் ராகிக்கு வழிவிடாமல் கேலியை இன்னும் தொடர்ந்தது நெல். "உன்னையெல்லாம் ஊர்ல ஒரு பய மதிக்கறது இல்ல, சுத்த வேஸ்ட்டுடா நீ" என்றது நெல்.  அதுவரை பொறுமை காத்த ராகி நெல்லைப் பார்த்து புன்னகைத்தபடியே சொன்னது, "இந்த ஊருக்கு நீயெல்லாம் வர்றதுக்கு முன்னாடியே வந்தவன் நான்".

"இருந்து என்ன பிரயோஜனம்? இதோ இவனைப் (கோதுமையைக் காட்டி) போல வலிமையா இருக்கியா .. இல்லை என்னைப் போல டேஸ்டான தானியமா இருக்கியா..சொல்லு என்றது.

"ஹலோ, உனக்கு என்னைப் பத்தி சரியா தெரியல ப்ரோ! அதான் இப்டியெல்லாம் பேசற... சொல்றேன் கேட்டுக்கோ... உங்க எல்லாரையும் விட என்கிட்டதான் அதிக புரோட்டின் சத்துக்கள் இருக்கு. அதுவும் இல்லாம மிக அதிக மினரல் சத்தும் எனக்குள்ளதான் இருக்கு.." 
கோதுமை அதிர்ச்சியாகி, "அட... அப்பறம்..." என ராகி சொல்வதை கேட்கத் தயாரானது


"நான் வலிமையா  இல்லாம இருக்கலாம் ப்ரோ, ஆனா என்னை சாப்பிட்டதால்தான் உங்க தாத்தா, பாட்டி எல்லாம் இன்னும் எனர்ஜிடிக்கா இருக்காங்க புரிஞ்சுக்க. என்னை சாப்டறவங்களுக்கு சர்க்கரை நோய் வராது. அதுமட்டும் இல்லாம.. நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கிற தன்மை என்கிட்டதான் அதிகமா இருக்கு. 

இப்போது கோதுமை ராகியின் பக்கம் வந்து நின்றது.. தன் பேச்சை ராகி தொடர்ந்தது. “என்னை தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். கெட்ட கொழுப்பு சேராம இருக்கறதால இதய நோய்கள் வராமலும் நான் தடுக்கறேன்”

"அதெல்லாம் சரி, இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, யாருக்கும் உன் டேஸ்ட் பிடிக்கலதானே” என தளர்ந்த குரலில் கேட்டது நெல்.

இப்போது, ராகிக்கு ஆதரவான குரல் கோதுமையிடமிருந்து வந்தது


"இல்ல மாம்ஸ்... நீ நினைக்கறது தப்பு. நிறைய குழந்தைகளுக்கு ராகில செஞ்ச 'லட்டு', 'குக்கி'கள் அப்பறம் 'ராகி பக்கோடா'லாம் ரொம்ப பிடிக்கும். அதுவுமில்லாம ராகியினால் உருவாக்கப்படும் Cereal வகை உணவு, உடலுக்கு ஆரோக்கியமானதுங்கூட. குட்டீஸ்கள் மட்டுமில்லாம வீட்ல இருக்கற பெரியவங்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கு இந்த Cereal. அதுமட்டுமில்லாம உன்னை, என்னை போல அதிக கவனம் எடுத்துக்கவேண்டிய  பயிர் இல்ல இவன்."

நெல் சோர்ந்துபோனது, ராகி மற்றும் கோதுமையின் பதில்களால். ராகியின் குணங்களைப் புரிந்துகொண்டது. “அப்ப இவன் சைல்டண்டா இருந்து சாதிக்கறவன்னு சொல்லு!”  என்று கூறியபடி ராகிக்கு பெரிய சல்யூட் ஒன்றை அடித்தது.  இப்போது ராகி முன்னே வர... நட்புடன் அதன் இரண்டு பக்கங்களிலும் நெல், கோதுமை தோளில் கை போட்டபடி நண்பர்களாக  தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்தன அந்த பாதையில்.  




Friday, 3 June 2016

இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

விஜய் நடித்த “தெறி” இன்றுடன் 50வது நாள். உதயநிதியின் “மனிதன்”, சூர்யாவின் “24”, விஷாலின் “மருது”, சிம்புவின் “இது நம்ம ஆளு” மற்றும் தைரியமான கதைக்களத்துடன் புதுமுக இயக்குநர் விஜய்குமார் இயக்கிய “உறியடி” என்று ஒவ்வொரு வாரமும் படங்கள் ரிலீஸாகி வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் வெற்றியை தக்கவைத்துவருகின்றன. இந்த வரிசையில் இந்த வார வெள்ளிக்கிழமை என்னென்ன படங்கள் ரிலீஸ்....?


இறைவி: 

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வைரல் லிஸ்டில் முதலிடம் பிடிப்பது கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் “இறைவி”. எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா, விஜய்சேதுபதி, கமலினி முகர்ஜி, அஞ்சலி, பூஜா என்று ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்டார் இப்படத்தில் நடித்திருப்பதே இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பீட்சா, ஜிகர்தண்டா தந்திருக்கும் வெற்றி இந்தப் படத்திற்கான காட்சிகளை முன்னதாகவே ஹவுஸ் ஃபுல்லாக்கிவிட்டது. சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவரும் இந்தப் படத்திற்கு விவேக் ஹர்சன் படத்தொகுப்பு.  பெண்களை மையப்படுத்திய கதைக்களம் என்பதால் இறைவி என்று பெயரிட்டுள்ளார் இயக்குநர்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்: 

விஷ்ணுவிஷால் தயாரித்து நடித்திருக்கும் இப்படத்தை எழில் இயக்கியிருக்கிறார். விஜய் நடித்த “ துள்ளாத மனமும் துள்ளும்”, அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்” படங்களை இயக்கியவரே எழில். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நாயகியாக நிக்கி கல்ராணி மற்றும் சூரி, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன் என்று காமெடிக்கு பஞ்சமில்லாமல் நான் ஸ்டாப் அதகளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ...ஆ... 

சமந்தா நடிப்பில் இன்றே ரிலீஸாகியிருக்கிறது ஆ..ஆ.. என்ற தெலுங்கு படம். அல்லு அர்ஜூனின் “சன் ஆஃப் சத்தியமூர்த்தி”, பவன்கல்யாண் நடித்த “ அட்டரின்டிகி தேரிடி” என்று வெற்றிப் படங்களை இயக்கிய த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கம். சமந்தாவுக்கு ஜோடியாக இப்படத்தில் நித்தின் குமார் நடித்திருக்கிறார். காமெடி கலந்த ரொமான்டிக் காதல் கதையாக இப்படம் உருவாகியிருக்கிறது.


ஹவுஸ்ஃபுல் 3
அக்‌ஷய் குமார், அபிஷேக் பச்சன், ரித்தேஷ் தேஷ்முக் , ஜாக்குலீன் ஃபெர்னாண்டஸ், நர்கிஸ் ஃபக்ரி நடிப்பில் நர்கிஸ் ஃபர்ஹத் இயக்கியிருக்கும் கலர்ஃபுல் இந்தி படம் ஹவுஸ் ஃபுல் 3 . இப்படமும் நாளை ரிலீஸ் ஆகும் படங்களின் கூட்டணியில் இணைந்துள்ளது. கமர்ஷியல், ரொமான்ஸ், காமெடி என கலக்கலாக முதல் இரண்டு சீரிஸ்களாக வெளியான இப்படம் தற்போது மூன்றாவது இன்ஸ்டால்மெண்டையும் களமிறக்க உள்ளது. ரஜினியின் 2.0 வில்லனான அக்‌ஷய் படம் என்பதால் தமிழ் நாட்டிலும் அக்‌ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் 3’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 
ஹாலிவுட் இறக்குமதி: 

கடந்த வாரங்களில் “ஆங்கிரி பேர்ட்ஸ்”,“அலைஸ் தி வெண்டர்லேண்ட்”,“எக்ஸ் மேன்” என்று கிறங்கடித்த ஆங்கிலப் படங்களின் லிஸ்டில் இந்த வாரம் இணைகிறது “நிஞ்சா டர்ட்டில்ஸ்”. ஆமைகளின் அதிரடி அதகள சரவெடியாக அனிமேஷனில் கலக்கவிருக்கிறது. குட்டிஸூக்கு நிச்சயம் பெஸ்ட் எண்டர்டெயினராக இந்தப்படம் இருக்கும்.  மற்றுமொரு படம் “ ME BEFORE YOU". தமிழில் கார்த்தி, நாகர்ஜூனா நடித்த தோழா படம் போலவே, கை, கால் செயழிலந்த ஹீரோவின் மீது காதலில் விழும் நாயகி. செம ரொமான்டிக் கதையென்பதால் லவ்வர் பாய்ஸ் & கேர்ள்ஸ் கவனத்திற்கு...
போனவாரம் வந்த படங்களில் உறியடி சாதிக்கெதிரான சாட்டையடியாக அமைந்து, பேசப்பட்டது போல இந்த வாரம் எந்தப் படம் ஆச்சர்யம் கொடுக்கும் என்று பார்க்கலாம்.


இந்தப் படத்தையெல்லாம் பார்த்து முடிச்சிட்டு, அப்பாடா என்று திரும்பும்போது அடுத்த வெள்ளியும் என்ன ரிலீஸ் என்ற பட்டியலை தந்துடுவோம் பாஸ்.


Tuesday, 24 May 2016

பிரட், பிசா, பர்கர்... இவற்றிலும் நச்சு ரசாயனம்! அதிர்ச்சி ஆய்வு


இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் விரும்பி சாப்பிடும்  உணவுப்பொருளில் பிரட், பிசா, பர்கரும் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இத்தகையை உணவுப்பொருட்களில் உடலுக்கு கேடு விளைவிக்கும் நச்சு ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த உணவுப்பொருட்களில் எடுக்கப்பட்ட அடுத்தடுத்த பரிசோதனைகளில் நச்சு ரசாயனம் இருப்பது தெரியவந்துள்ளது எனவும், இந்த நச்சு ரசாயனத்தை உட்கொள்வதால், தைராய்டு, புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவியல் சுற்றுச்சூழல் மைய ஆய்வு தெரிவித்துள்ளது.


இந்தியாவில் இயங்கி வரும் ஐந்து பன்னாட்டு உணவகங்களான கேஎஃப்சி, டோமினோஸ், பிட்சா ஹட், சப்வே, மெக்டொனால்ட்ஸ் போன்ற நிறுவன உணவகங்களில் பயன்படுத்தப்படும் பிரட்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதாக அறிவியல், சுற்றுச்சூழல் மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தவிர பிரிட்டானியா, ஹார்வெஸ்ட் கோல்ட் நிறுவன பிரட்களிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில்  கேஎஃப்சி உள்ளிட்ட உணவகங்களில் இருந்தும், கடைகளில் விற்பனை செய்யப்படும் பிரட்களில் இருந்தும் மொத்தம் 38 மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் 84 சதவீத பிரட்களில் பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் ஆகிய வேதிப்பொருள்கள் கலந்துள்ளன. இவை இலங்கை, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் இந்த வேதிப்பொருள்கள் கலந்த பிரட்கள் தாராளமாக கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை சாப்பிடுபவர்களுக்கு தைராய்டு பிரச்னை முதல் புற்றுநோய் வரை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சாண்ட்விச் பிரட், வொயிட் பிரட், பாவ், பன் ஆகியவற்றில் அதிக அளவில் கேடு விளைவிக்கும் வேதிப்பொருள் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சி தகவல் வெளியானதை அடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

 

எனினும், அகில இந்திய பிரட் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, உரிய பாதுகாப்பு தரத்துடன்தான் இந்தியாவில் பிரட்கள் தயாரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நூடுல்ஸில் ரசாயன வேதிப்பொருள் இருப்பதாக பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆய்வுக்கு பின்னர் தற்போது நூடுல்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Saturday, 16 April 2016

ரத்தத்தைத் தூய்மை செய்யும் புளிச்சக்கீரை!

புளிச்சக்கீரை... புளிப்புச்சுவை நிறைந்தது என்பதால், இந்தக் கீரை புளிச்சக்கீரையானது. புளிச்சக்கீரைக்கு காசினிக்கீரை என்ற பெயரும் உண்டு. இது ஆந்திரா பகுதியில் ‘கோங்குரா’ என்ற பெயரில் பிரசித்தி பெற்றது. கோங்குரா சட்னி, கோங்குரா துவையல், கோங்குரா தொக்கு போன்றவை சுவைக்கு பெயர் பெற்றவை.

இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் நிறைந்த இந்த புளிச்சக்கீரையை சாப்பிடுவதால் ரத்தம் தூய்மை பெறுவதோடு மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. உடல் குளிர்ச்சி பெறுவதோடு மந்தம் நீங்கி விந்து கெட்டிப்படும். பொதுவாக புளிச்சக்கீரையுடன் மிளகாய் சேர்த்து வேக வைத்து உப்பு சேர்த்து துவையலாகச் செய்து சாப்பிடுவார்கள்.
வாதநோய் உள்ளவர்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை புளிச்சக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் காலப்போக்கில் அவர்களுக்கு வாத நோய் தணிந்துவிடும். இதேபோல், மலச்சிக்கலால் கஷ்டப்படுகிறவர்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை புளிச்சக்கீரை சாப்பிட்டு வந்தால் பிரச்னை தீரும். சொறி, சிரங்கு உள்ளவர்கள் அதற்கான மேல்பூச்சு மருந்து போட்டு வரும் நேரங்களில் இந்த புளிச்சக்கீரையை சமைத்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடுவது குணம் பெறுதலை விரைவுபடுத்தும்.

புளிச்சக்கீரையை காய வைத்து அதனுடன் சம அளவு பாசிப்பருப்பு (பச்சைப்பருப்பு), ஜாதிக்காய், சுக்கு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், இந்துப்பு சேர்த்து பொடி செய்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கான குழந்தையின்மை குறைபாடு விலகும். இந்தப் பொடியை காலை மற்றும் மதிய உணவில் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைபாடு சரியாகும். பெண்களும் இதை சாப்பிடுவதால் தாம்பத்திய உறவு பலப்படும்.

(பின்குறிப்பு: சில வகை நோய் மற்றும் குறைபாடுகளுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் உப்பு, புளி சேர்த்தால் பிரச்னை தீவிரமாகும் என்பதை மனதில் கொண்டு, புளிப்புச்சுவை நிறைந்த இந்தக் கீரையை புளி பத்தியம் இருப்பவர்கள் அந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது)


Saturday, 9 April 2016

சென்னையில் மிஸ் பண்ணக்கூடாத 5 உணவகங்கள்!

கோழி இட்லி

அ.தி.மு.க பிரமுகர்களுக்கு நன்றாக தெரிந்த கடை இது. லாயிட்ஸ் ரோட்டில் அ.தி.மு.க அலுவலகத்திற்கு மிக அருகில் இருக்கிறது இந்த கடை. இட்லிதான் இங்கே ஸ்பெஷல். ஆனால், இட்லிக்கு சட்னி கிடையாது. நல்ல சுவையான காரமான கோழிக்குழம்பு கொடுக்கிறார்கள். கூடவே கோழி கொத்துக்கறி. மூன்று இட்லியுடன் ஒரு கப் சிக்கன் குழம்பு வித் ஒரு சிக்கன் பீஸ் சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும். இட்லி கேட்டதும் உடனுக்குடன் எலக்ட்ரிக் குக்கரில் போட்டு கொடுப்பதால் எந்த நேரத்தில் சென்றாலும் சுவையான இட்லி உடனே கிடைக்கும்.

முகவரி - 155, அவ்வை சண்முகம் சாலை, அதிமுக அலுவலகம் அருகில், ராயப்பேட்டை, சென்னை - 14
தட்டுவடை செட்டுகடை

சேலத்தில் ரொம்பவே பிரபலமானது தட்டுவடை. அதை சென்னையில் விற்கிறார்கள். ஒரிஜினல் அளவுக்கு இல்லையென்றாலும் நிச்சயம் புதிய சுவை விரும்பிகள் கட்டாயம் முயற்சி செய்து பார்க்கலாம். தட்டையான வடையோடு சில மசாலா ஐட்டங்கள் சேர்த்து சான்ட்விச் போல கொடுக்கிறார்கள். அதிலேயே பலவித வெரைட்டிகளும் கிடைக்கிறது. மாங்கசெட்டு, தக்காளி செட்டு, ஆனியன் செட்டு என எல்லாமே நாவுக்கு நல்ல வேட்டையாக இருக்கும். கூடவே குடிக்க கோலிசோடாவும் கொடுக்கிறார்கள். ஒரு ப்ளேட் ரூ.30 முதல் ரூ.50 வரைதான் என்பதால் பாக்கெட்டும் பழுக்காது.

முகவரி - தட்டுவடை செட்டுகடை, கடை எண் 23, க்ராசெட்டேரியா, டி.ஏ.வி ஆண்கள் பள்ளிக்கு அடுத்து, லாயிட்ஸ் சாலை, கோபாலபுரம், சென்னை.
கண்ணப்பா பாஸ்ட்ஃபுட் இட்லி

நெய்யில் பொறித்த இட்லிக்கு இந்த கடை ரொம்ப ஃபேமஸ். எந்நேரமும் கூட்டம் அம்முகிற ஒரு சின்ன கடை. சூடான இட்லியின் மீது நெய் ஊற்றி அதில் காரப்பொடி போட்டு வித்தியாசமாக கொடுக்கிறார்கள். கார இட்லிக்கு தருகிற தேங்காய் சட்னியும் நன்றாகவே இருக்கிறது. கூடவே இங்கே பன்னீர் தோசையும் நிச்சயம் முயற்சி செய்யலாம். விலையும் அதிகம் கிடையாது என்பதால் வயிறார சாப்பிடலாம். கடை மிகச்சிறியது என்பதால் கொஞ்சம் காத்திருந்து சாப்பிட வேண்டியிருக்கும்.

முகவரி - கண்ணப்பா பாஸ்ட்புட் - 4/2, ஒர்ம்ஸ் சாலை, கீழ்பாக்கம், சென்னை - 10
தூத்துக்குடி சிம்னி

விருதுநகர் பொரித்த பரோட்டா சாப்பிட்டதுண்டா? தூத்துக்குடி, விருதுநகர் பக்கம் இதுதான் ஃபேமஸ். கொஞ்சம் எண்ணெய் தூக்கலாக இருந்தாலும் சுவை தாறுமாறாக இருக்கும். அதுதான் இப்போது சென்னையில் கிடைக்கிறது. தூத்துக்குடி சிம்னி என்கிற கடையில் நல்ல மட்டன் அல்லது சிக்கன் சுக்காவோடு ருசியான விருதுநகர் பொரித்த பரோட்டா கிடைக்கிறது. மட்டன் கிரேவியில் ஊறவைத்து சாப்பிட்டால் ஒருவாரத்திற்கு பசிக்காது! விலைதான் கொஞ்சம் ஜாஸ்தி. இரண்டு பரோட்டா வித் சுக்கா 200 ரூபாய்!

முகவரி - தூத்துகுடி சிம்னி, 132பி, நெல்சன் மாணிக்கம் சாலை, சோபன்பாபு சிலையருகில், அமைந்தகரை, சென்னை - 600029
சீனாபாய் இட்லி ஊத்தப்பம்

சவுக்கார் பேட்டையில் இருக்கிறது இந்த இட்லிகடை. சீனாபாய் என்றதும் ஏதோ சீனாக்காரர் கடை என்று நினைத்துவிடவேண்டாம். சீனுவை சவுக்கார்பேட்டை இந்திவாலாக்கல் பாய் ஆக்கியதால் சீனாபாய் ஆனதால் வந்த பெயர்.
இந்தக்கடை இட்லிக்கு சௌகார்பேட்டையே அடிமை! ஒரே தட்டில் பன்னிரெண்டு குட்டி இட்லிகள் வைத்து கொடுக்கிறார்கள். அதன்மீது நெய் ஊற்றி பொடி போட்டு மணக்க மணக்க பரிமாறுகிறார்கள். முதல் இட்லிக்கும் பன்னிரெண்டாவது இட்லிக்கும் நடுவில் சாப்பிடும்போது நடந்தது தெரியாத அளவுக்கு அபார ருசி.

முகவரி - என்.எஸ்.சி போஸ் ரோட்டில் இறங்கி சீனாபாய் இட்லிக்கடை கேட்டால் யாருமே சொல்லிவிடுவார்கள்.


Tuesday, 5 April 2016

சமோசா விற்று, கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் சென்னைக்காரர்!

சமோசா... சக்சஸ்... கோடீஸ்வரர்!


15 ஆண்டுகளுக்குமுன்... ஒரு வானலி, அடுப்பு மட்டுமே வைத்துக்கொண்டு சமோசா விற்றவர், இன்று கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார். இத்தனைக்கும் இவர் ஆறாவது வரை மட்டுமே படித்தவர்.

“எந்தவொரு தொழிலாக இருந்தாலும், அதில் ஒரு ஆத்மார்த்தமான தேடல் இருந்தால் நிச்சயம் ஜெயிக்க முடியும். தொழில் செய்பவருக்கும் தொழிலதிபருக்கும் இடையே உள்ள வித்தியாசமே இங்குதான் தொடங்குகிறது” என்றபடி சென்னை, புதுப்பேட்டையில் சமோசா வியாபாரம் செய்ய தொடங்கியக் கதையைச் சொன்னார் ஹாஜா புன்யாமின். 



     

“இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி, தங்கையுடன் பிறந்தேன். பெரிய குடும்பம், வறுமை எங்களைப் பிடித்து ஆட்டியது. மாநகராட்சி பள்ளியில் அரை நாள் பள்ளிக்கூடம் முடிந்ததும் சமோசாவைத் தூக்கில் எடுத்துக் கொண்டு தெரு தெருவாக வியாபாரம் செய்தேன். பிறகு ஆறாவது வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, முழுநேரமாக சமோசா விற்க ஆரம்பித்தேன். பிற்பாடு பல கடைகளில், பல இடங்களிலும் வேலை செய்தேன். 

வாழ்க்கையில் உயர வேண்டும் என்கிற முனைப்பு எனக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. எனவே, நானும் என் நண்பனும் சேர்ந்து சிக்கன் பக்கோடா கடை வைத்தோம். அந்த சமயத்தில்தான் எனக்கு திருமணம் நடந்தது.

திருமணத்துக்குப் பிறகு நானும் என் மனைவி ஃபரிஷாவும் சேர்ந்து தனியாக ஒரு சமோசா கடை வைத்தோம். அப்போது மாத சம்பளம் 400 ரூபாய்க்கு ஒரு பையனை வேலைக்கு வைக்க நிறைய யோசித்தேன். காரணம்,  மாதம் 400 ரூபாய் சம்பளம் தர முடியுமா என்பதே எனக்கு சந்தேகமாக இருந்தது. 

அப்போது எனக்கு ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியிலிருந்து மாதத்துக்கு ஒரு லட்சம் சமோசா பீஸ் ஆர்டர் கிடைத்தது. நான் செய்வதை எப்போதும் தரமாக செய்ய வேண்டும் என்று நினைப்பேன். அதுதான் ரோட்டு கடையாக இருந்தாலும் நல்ல வியாபாரம் நடக்கவும், இப்போது எக்ஸ்போர்ட் ஆர்டர் வந்ததுக்கும் காரணம்.

ஆனால், அந்த ஆர்டரை எடுத்துச் செய்கிற அளவுக்கு என்னிடம் போதுமான இடமும் இல்லை. ஃப்ரீசரும், ஃபுல் ஏர் கண்டிஷனும் தேவைப்பட்டது. அந்த வசதிகளுடன் கிடைத்த இடத்துக்கு 2 லட்ச ரூபாய் அட்வான்ஸ் தர வேண்டியிருந்தது. அதை ஒரு லட்சமாகக் கேட்டு குறைத்தேன். ஆனாலும் அந்த ஒரு லட்சமும் கையில் இல்லை. எனக்கு உதவி செய்யவும் யாரும் இல்லை. எந்த வங்கியிலும் கடன் கிடைக்கவில்லை.
அந்த சமயத்தில்தான் பாரதிய யுவ சக்தி ட்ரஸ்ட் மூலமாக உதவி கிடைத்தது. ஆதித்தனார் சாலை இந்தியன் வங்கியில் ஜாமீனில் 1 லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். யாரும் எனக்கு செய்யாத உதவியை பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை எனக்கு செய்தது. அந்த உதவிக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

அந்த டிரஸ்ட் கடன் தந்ததோடு, ஒரு மென்டாரையும் (வழிகாட்டும் ஆலோசகர்) கொடுத்தார்கள். ஏனெனில் நம் அணுகுமுறையின்படி, நாம் செய்வதெல்லாமே நமக்கு  சரியாகத்தான் படும். அந்தத் துறையைப் பற்றி தெரிந்த ஒருவர் வெளியிருந்து பார்த்து சொல்லும் போதுதான் நம் தவறுகள் தெரியும். அதைப் பார்த்து, ‘இது தப்பு, இப்படி பண்ணாதீங்க, இத அப்படி மாத்தி பண்ணிங்கன்னா கண்டிப்பா ரிசல்ட் இருக்கும்’ என்பது போன்ற அறிவுரைகளை  உத்தரவாக இல்லாமல், ஆலோசனையாகச் சொல்வார்.

உதாரணமாக, மைதாவை சில்லரையாக  வாங்குவதற்கும், மொத்தமாக மில்லில் இருந்து வாங்குவதற்கும் இடையே உள்ள காஸ்டிங் வித்தியாசத்தை அவர் சொல்வார். அதன் மூலமே நான் மாதம் ரூ.6000 வரை சேமிக்கிறேன். என்னதான் நமக்கு லட்சியங்கள், கனவுகள் இருந்தாலும், நம் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல  யாராவது ஒருவர் வேண்டும்.

இன்னொரு முக்கியமான விஷயம் எனக்கு சமோசா ஆர்டர் தந்த அந்த எக்ஸ்போர்ட்  கம்பெனியே  எனக்கும் என் மனைவிக்கும் ஃபுட் ஃபுரோசன் பிராசஸிங் (Frozen processing) பற்றி பயிற்சி தந்தது. 

கடனாக வாங்கிய அந்த ஒரு லட்சத்தை வைத்து அந்த எக்ஸ்போர்ட் ஆர்டரை இரண்டு வருடம் நன்றாக செய்தேன். தீடீரென்று  2007-ல் அந்த எக்ஸ்போர்ட் ஆர்டர் அக்ரிமென்ட் முடிந்துவிட்ட தாகச் சொல்லிவிட்டார்கள். இந்த ஆர்டரை நம்பி ஏழு, எட்டு பேரை சம்பளத்துக்கு வேலைக்கு வைத்து, இடத்தை வாங்கி, அதற்காகவே எல்லாம் தயார் செய்து தொழிலைச் செய்து வந்்தேன். ஆர்டர் கேன்சல் ஆனதால், நான் திக்குமுக்காடிப் போனேன். ஆனாலும் விடாமல் முயற்சி செய்தேன்.

நான் கற்றுக்கொண்ட ஃபுட் பிராசஸிங் ட்ரெய்னிங், என் அன்றைய நிலைமை, வளர வேண்டும் என்கிற வேகம் எல்லாம் சேர்ந்துதான் என்னை துவண்டுபோகாமல் பார்த்துக் கொண்டது. எல்லோரையும் மாதிரி சமோசாவை சுட்டு விற்காமல், அந்த எக்ஸ்போர்ட் கம்பெனி தொடங்கி வைத்த, பதப்படுத்தி விற்பனை செய்கிற தொழிலையே பெரிய அளவில் செய்யலாம் என்று முடிவு செய்தேன். என்னிடம் வேலைக்கு இருந்த ஐந்து பேருடன், மீண்டும் தொழிலை ஆரம்பித்தேன். அப்படி ஆரம்பித்ததுதான் இந்த ஹாஃபா ஃபுட்ஸ் அண்ட் ஃபுரோசன் புட்ஸ்.


ஆனால், எனக்கு என்ன பண்ணனும், எப்படி மார்க்கெட் பண்றது, யாரு இதை வாங்குவார்கள் என  எதுவுமே தெரியாது. ஏதோ ஒரு ஆர்வத்துல தொடங்கிவிட்டேன். ஆட்களை வேலைக்கும் வைத்துவிட்டேன், பொருளையும் செய்துவிட்டேன்.  ஆனா, யார்கிட்ட விக்கிறதுன்னு தெரியாம முழித்தேன். 

அந்த நேரத்தில்தான் எனக்கு ஒரு போன் வந்தது. அந்த ஒரு போன்கால் என் வாழ்க்கையையே புரட்டி போட்டது. முன்பு எனக்கு ஆர்டர் கொடுத்த எக்ஸ்போர்ட் கம்பெனியிடம் இருந்து சமோசா வாங்கிய ஒருத்தர், ‘ஏன் சமோசா சப்ளை பண்ணலைன்னு’ தொந்தரவு செய்ய, அவருக்கு என் போன் நம்பரைத் தந்்திருக்கிறார்கள். அவர் எனக்கு போன் செய்தார். அவர் சமோசா கடை வைத்து நடத்துபவர். அவரை நேரில் போய் பார்த்தபோதுதான் என் கஸ்டமர் யார் என்று எனக்கு தெரிந்தது. அவர் கடை மாதிரியே சில கடைகளைப் புடிச்சேன். அப்பறம் காலேஜ் கேன்டீன்களில் பேசி ஆர்டர் பிடித்தேன். 

புதுப்புது ரெசிப்பிகளைச் செய்ய தொடங்கினேன். சமோசா மட்டுமே போட்ட நான், இப்போது கட்லட், பர்கர் பேட்டி, ஸ்பிரிங் ரோல், சீஸ் பால் என்று பல புராடக்ட்களைச் செய்தேன். எல்லாவற்றுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

என்னுடைய பொருளின் ஸ்பெஷல் என்னவென்றால், அதற்குரிய டெம்பரேச்சரில் வைத்திருந்தால், ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். எந்த கெமிக்கலையும், பிரிசர் வேட்டிவ் -யும் நான் பயன்படுத்துவதில்லை.
அதே மாதிரி, ஒவ்வொரு புது புராடக்ட்டை செய்யும்போதும், அது சரியாக வரும் வரை முயற்சி செய்துகொண்டே இருப்பேன். என் பொருள் எந்த வகையிலும் வீணாகக் கூடாது என்று நினைப்பேன்.  அதனால்தான் என் தயாரிப்புகள் மக்கள் விரும்பக்கூடிய வகையில் இருக்கிறது.

மார்க்கெட்டிங்கை பொறுத்த வரை, ஆரம்பத்தில் இருந்தே தனி ஆளாக மார்க்கெட்டிங் செய்தேன். நான் ஒரு சாலையில் பயணித்தால், என் பொருட்களை வாங்கக்கூடிய பத்து கடைகளை என்னால் அடையாளம் காண முடிகிறது. அவர்களிடம் பேசி என் பொருட்களுக்கான ஆர்டரை எடுக்கிறேன். மேலும், பல பேர் இந்த மாதிரி கடைகளில் சாப்பிட்டு, அதனுடைய தரமும் டேஸ்ட்டையும் பார்த்து என்னிடம் வருகிறார்கள். என்  வெப்சைட்டைப் பார்த்துவிட்டு வந்தவர்கள் எவ்வளவோ பேர். எந்தவொரு போன் காலையும் விடாமல் எடுத்து பொறுமையாக பதில் சொல்வதன் மூலமும் ஆர்டர்கள் அதிகரிக்கிறது.

அதே போல், கணக்குவழக்கு களில்  கச்சிதமாக இருப்பது அவசியம். என் மனைவியின் உதவியோடு அனைத்தையும் சரியாகச் செய்கிறேன். பத்து ரூபாயாக இருந்தாலும், என் கவனத்தை மீறிச் செல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்.  

உணவுத் தொழிலில் நிலைத்து நிற்பது என்பது  கடினம். நான் என்னுடைய பிராண்ட் பிரபலமாக வேண்டும் என்று நினைக்காமல், என் பொருள் எல்லா இடத்தையும், மக்களையும் போய் சேர்ந்தாலே போதும் என்று நினைத்ததால்தான் வளர முடிந்தது. இன்று ‘சாட் அயிட்டம்ஸ்’ கடைகளில் இருந்து, மால்கள், ஸ்டார் ஓட்டல்கள் மற்றும் விமானங்கள் வரை எனது பொருள் சேர்ந்திருக் கிறது. இன்று மாதத்துக்கு ஐந்து லட்சம் பீஸ்களை தயாரித்து விற்பனை செய்கிறோம். இரண்டு பேரோடு தொடங்கிய இந்தத் தொழிலில் இப்போது 45-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்க்கின்றனர். வருடத்துக்கு ரூ.1.5 கோடி டேர்ன் ஓவர் கிடைக்கிறது. 

இப்போது இருக்கும் சிறிய உற்பத்தி இடத்தை வைத்து இந்த வருமானத்தை ஈட்டி வருகிறேன். மேலும் மேலும் ஆர்டர்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. அந்த ஆர்டர்களை எல்லாம் நிறைவேற்ற வேண்டுமெனில், இந்த இடம் போதாது. அதனால் பெரிய இடம் ஒன்றுக்கு என்னுடைய பேக்டரியை மாற்றத் திட்டமிட்டுள்ளேன். அதற்கான நிதி கிடைக்கும்பட்சத்தில், என்னால் மேலும் இதனை விரிவுபடுத்தி வருடத்துக்கு ரூ.50 கோடி வரை வருமானம் ஈட்டும் தொழிலாக என்னால் வளர்க்க முடியும்.

எத்தனை இக்கட்டான சூழ்நிலைகளிலும் சோர்ந்து போகாமல் தொடர்ந்து நமக்கான வழியைத் தேடிக்கொண்டே இருந்ததால், நமக்கு சாதகமான சூழல் உருவாகும். நான் அந்த சாதகமான சூழலுக்கு நம்பிக்கை குறையாமல் தொடர்ந்து காத்திருந்ததால்தான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன்’’ என்று உற்சாகத்துடன் முடித்தார்.

சமோசாதானே என்று தன் தொழிலைக் குறைவாக நினைத்திருந்தால், அவரால் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. எல்லா தொழிலிலும் வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதைக் கண்டுபிடித்தால் நிச்சயம் வளர்ச்சிதான்! 

கற்றுக் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

1. உங்கள் மீதும், தொழிலின் மீதும் முதலில் நம்பிக்கை வையுங்கள்.

2. கல்வி இரண்டாம் பட்சம்தான். தேடலும் உழைப்புமே முதன்மையானது.

3. அவசரம் கூடவே கூடாது. பொறுமை வேண்டும். உடனடியாக வளர்ச்சி வந்துவிடாது.

4. முழு ஆர்வம் இருந்தால் மட்டும் தொழில் தொடங்குங்கள். சும்மா ட்ரை பண்ணுவோம் என்கிற அணுகுமுறை வேண்டாம்.

5. எத்தனை இக்கட்டான சூழ்நிலைகளிலும் சோர்ந்து போகாமல் தொடர்ந்து நமக்கான வழியைத் தேடிக்கொண்டே இருந்தால் நமக்கான சூழல் உருவாகும்.

Wednesday, 9 March 2016

மகத்துவம் நிறைந்த வெள்ளைப்பூண்டு!

பூண்டு, வெள்ளைப்பூண்டு, பூடு, உள்ளி என அழைக்கப்படும் பூண்டு பருவகால தாவரமாகும். பழங்காலத்திலிருந்தே சமையலில் இடம்பெற்று வரும் பூண்டுக்கு மருத்துவக்குணம் அதிகம். பூண்டு ஒரு கிருமிநாசினி. பூண்டை அரைத்து அதே அளவு தண்ணீர் கலந்து பருகினால் காலரா நம்மை நெருங்காது. சுவாச கோளாறுகளை சரி செய்ய பூண்டிலுள்ள சல்பைடு எண்ணெய் மிகவும் உதவியாக உள்ளது.

வயிற்று உப்புசம் போக்கக்கூடிய பூண்டு பக்கவாதம், உடல் விரைப்பு, இதயநோய், வயிற்றுவலி போன்றவற்றுக்கு கைகண்ட மருந்தாகும். நுரையீரலில் கட்டியிருக்கும் மார்புச்சளியை கரைக்கக்கூடியது. கபத்தை இளக்கி தூக்கத்தை தரக்கூடிய பூண்டானது செரிமானத்தை சீர்படுத்தக்கூடியது; உடல் எடை கூட்டக்கூடியது.

வாய்வுக்கோளாறினால் சிலருக்கு முதுகுப்பிடிப்பு, இடுப்புப்பிடிப்பு, கை-கால் வீக்கம் உள்ளிட்ட கோளாறுகள் ஏற்படக்கூடும். அப்போது, வெள்ளைப்பூண்டை தீயில் சுட்டு அதன் தோலை உரித்து பூண்டை மட்டும் சாப்பிடுவதால் மேலே சொன்ன கோளாறுகள் எல்லாம் சரியாகும். பூண்டை ரசம் வைத்தும் சாப்பிடலாம், குழம்பும் வைத்தும் சாப்பிடலாம். இதன்படி, சிலர் ‘எங்கள் வீட்டில் இஞ்சி, பூண்டு இல்லாமல் சமையலே கிடையாது’ என்பார்கள்.

சமையலில் பெயருக்கு பூண்டு சேர்ப்பதால் கிடைப்பதன் பலன் வேறு. மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து பூண்டு ரசம், குழம்பு, துவையல் என பல்வேறு வடிவங்களில் சாப்பிடுவதன்மூலம் கிடைக்கும் பலன் வேறு. அதன் தனித்துவத்தின் காரணமாக வாயுதொடர்பான நோய்கள் குணமாகும். இதே வாயுத்தொல்லை உள்ளவர்கள் மட்டுமல்லாது இதயக்கோளாறு, ரத்த அழுத்தம் உள்ளவர்களும், ரத்தக்குழாயில் கொழுப்பு படிந்திருப்பவர்களும் வெள்ளைப்பூண்டை வேக வைத்து சாப்பிடுவதால் நாளடைவில் அவர்களுக்கு நோய்கள் கட்டுக்குள் வரும்.


சளித்தொல்லை உள்ளவர்களுக்கும் வெள்ளைப்பூண்டு பலன் கொடுக்கும். 10, 15 பூண்டுப்பற்களை உரித்து 50 மில்லி பாலுடன் அதே அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்துக்கொள்ளவும். பால் + நீர் பாதியாக வற்றியதும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், மிளகுப்பொடி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக கடைய வேண்டும். பிறகு தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து இரவு தூங்கப்போவதற்கு முன் அருந்தினால் மூக்கடைப்பில் தொடங்கி, நெஞ்சுச்சளி, கபம், மலச்சிக்கல், ரத்த அழுத்தம், இதயக்கோளாறு போன்றவை சரியாகும். பிரச்னை உள்ள கால கட்டங்களில் சில நாட்கள் மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

இவைதவிர கிருமி தாக்கிய புண்களை, பூண்டுச்சாறுடன் தண்ணீர் கலந்து துடைத்து வருவதால் பலன் கிடைக்கும். இப்படி செய்வதன்மூலம் புண்களில் வலி குறைந்து, சீழ் பிடிப்பது குறைந்து நாளடைவில் புண் ஆறத்தொடங்கும்.

மண் சட்டி சமையலில் அசத்தும் 'செல்லம்மாள் மெஸ்' செல்வி!

"நேரமாகிருச்சி எனக்கு சாப்பாடு வேணா. நா வெளிய ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிறேன்" - இந்த குரல் எல்லார் வீட்லயும் கேட்க  கூடியது தான். ஆனால், மணிக்கணக்காக வேலை செய்யனும்னு நினைக்கிற நாம், ஒரு அரைமணி நேரமாவது சாப்பாட்டுக்காக ஒதுக்கனும்னு நினைக்கிறது கிடையாது. எல்லா விஷயத்திலயும் சுத்தத்தை பார்க்கிற நாம், சாப்பாட்லயும் அதே சுத்தத்தை பார்க்கிறோம். ஆனா ஆரோக்கியம்?

நாம் கொஞ்சம் ஆழமாக யோசிக்கிற போது, ஒரு பெரிய கேள்விகுறி நம்ம சாப்பாடு முன்பாக நிக்கிறதே தெரியுது. இனி அப்படிப்பட்ட கேள்வியே வேண்டாம் என்கிறார், திருச்சி மாவட்டம், புத்தூரில் செல்லம்மாள் மெஸ் நடத்தி வரும் செல்வி.

கோவில்கள் நிறைந்த சிறந்த சுற்றுலாத்தள மாவட்டமாகவும், வெளியூர், வெளிநாட்டு பயணிகள் வருகை புரியும் ஊராகவும்  விளங்ககூடியது நம்ம திருச்சி மாவட்டம். அப்படி வெளியூர், வெளிநாடுகளிலிருந்து நம்மள தேடி வருகிறவங்கள நாம கவனிச்சுக்கிறதுதானே சிறந்த உபசரிப்பாக இருக்க முடியும்.

உபசரிப்பெல்லாம் வேணா நல்ல உணவு கிடைச்சா போதும் என்ற எண்ணத்துடன் உருவாக்கப்பட்டது தான் செல்லம்மாள் மெஸ். இதுல என்ன புதுசா இருக்கிறது கேட்கிறீர்களா?

நம்ம தலைமுறை குழந்தைகள் பார்க்காத குதிரைவாலி அரிசி சாதம், வாழைப்பூ உருண்டை குழம்பு, கொள்ளுரசம், வரகு, கேழ்வரகு - அவள் பாயசம், வாழைப் பூ வடை, வாழைப் பூ துவையல் என 32 வகையான பாரம்பரிய உணவுகளை தினமும் தன்னுடைய செல்லம்மாள் மண்பானை உணவகத்துல வழங்குறாங்க.
சர்க்கரை நோயாளிகளும், அல்சர் போன்ற வயிற்றுப் புண் உள்ளவர்களும், அன்றாட வாழ்வில் பல காரணங்களுக்காக மருந்து உண்பவர்களுக்கும் தக்க உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட ஒரு கப் ரூ.10 என்ற விலையில் ஆரோக்கியத்தையும் உடன் வழங்குகிறார்கள்.

செல்லம்மாள் உணவகத்துல குளிர்சாதன வசதி கிடையாது. ஆனால், எப்போதும் குளுகுளு என்றுதான் இருக்கிறது. உணவகம் முழுவதும் மண்பானையால் சூழப்பட்டிருக்கிறது. சின்னச் சின்ன மண் குடுவைளில் தான் உணவு பரிமாறுகிறார்கள். சமையல் செய்வதும் மண் பானையில்தான்.
                         
இதை பற்றி செல்வியிடம் கேட்டபோது, ''இந்த மெஸ் தொடங்கப்பட்டு இரண்டரை வருடம் ஆகுது. பெண்களா சேர்ந்து உணவகம் நடத்துறதுனால முதல் ஒரு வருடம் கஷ்டமாகத்தான்  இருந்தது. திருநெல்வேலி மற்றும் பாண்டிச்சேரி போன்ற  இடங்கள்ல செய்கிற பானைகளை வாங்கி வந்துதான் சமைக்கிறோம்.
மண் பானையில் சமைக்கிறதால உணவுப்பொருளோட முழுசத்தும் கிடைக்குது. அதோடு, உணவுப்பொருட்களோட நிறமும்  மாறாது. சமைக்கிறப்போ 20% மட்டுமே வீணாகும். விறகுகள் கொண்டு புகையில்லாத, புகைபோக்கி அடுப்புகளை வைத்து சமைக்கிறதால, சமையல் செய்கிற 10 பெண்களுக்கும் எந்தவித பாதிப்பும் வருவதில்ல.


நாங்களே அரைக்கிற, இடிக்கிற மிஷின்கள் வச்சிருக்கிறோம். செக்குல ஆட்டி எடுக்கிற நல்லெண்ணெய்ல தான் முழுக்க முழுக்க சமையல் செய்கிறோம்.

ஒரு மதத்திற்கு குறைஞ்சது ரூ.35 ஆயிரத்தில இருந்து ரூ.45 ஆயிரம் வரை செலவாகும். பல நேரங்கள்ல சமைக்கும்போதும், உணவுப் பரிமாறும் போதும் மண்பாண்டங்களை கவனக்குறைவா கையாளுறதுனால பானைகள் உடைஞ்சு போகுது. இதனால், கூடுதல்  செலவானாலும் தரம் மேம்படுகிறது. ஆரோக்கியமான உணவின் மீது உள்ள இஷ்டம் புரியும் போது கஷ்டம் விலகிபோகிறது'' என்றார்.


Thursday, 3 March 2016

உடல்நலன் காக்கும் உணவுமுறை!

நம்முடைய உணவு சத்தானதாக இல்லை என்பது சாப்பிட உட்காரும் ஒவ்வொரு முறையும் புரிகிறது. ஆனால் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை. சாலட், பழங்கள் மட்டும் எடுத்துப்பார்க்கலாம் என்றால், இரண்டு நாட்களுக்கு மேல் தொடர முடிவதில்லை. மரபு சார்ந்த, மண் சார்ந்த உணவுகள் உடலுக்கு நல்லது என்பதுப் புரிந்தாலும், துரித உணவுக்குப் பழக்கப்பட்டுவிட்ட நாக்கையும் மனதையும் எப்படி மாற்றுவது? 
  
தினசரி உணவில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம், நம் உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமாக மாற்றிவிடலாம்.
காபி, டீ க்குப் பதிலாக...


காலை எழுந்ததும் ஏதேனும் சூடாகக் குடிக்கும் பழக்கம் இருந்தால், அது டீ, காபியாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சுக்கு காபி, பானகம், மூலிகை டீ மற்றும் கஞ்சியாகவும் இருக்கலாம். இனிப்புக்குக் கருப்பட்டியைச் சேர்க்கலாம். மூலிகை டீ குடிக்க விரும்புவோர், சுக்கு, மிளகு, பட்டை, ஏலக்காய், தனியா, ஆவாரம் பூ, லெமன் க்ராஸ், கொய்யாத் தழை, முருங்கைத் தழை, துளசி ஆகியவற்றை சேர்த்துக் காய்ச்சிக் குடிக்கலாம். சுக்கு, ஏலக்காய், கொத்தமல்லி போன்றவற்றைச் சேர்த்து, சுக்கு மல்லி காபி குடிக்கலாம்.  வெந்நீரில் வெல்லம் சேர்த்து, ஏலக்காய் தட்டிப்போட்டு பானகமாகக் குடிக்கலாம்.
குழந்தைகளுக்கு, பிறந்த ஆறு மாதத்திலிருந்தே, ராகி மாவு, சுக்கு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து கஞ்சியாகக் கொடுக்கலாம். ஊறவைத்த கேழ்வரகை, முளைகட்டவைத்து, நிழலில் உலர்த்திப் பொடித்து, வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு கலந்து, கஞ்சி அல்லது கூழாகக்  கொடுக்கலாம்.
100 கிராம் கேழ்வரகில் 344 மி.கி கால்சியம் உள்ளது. இது எலும்பு மற்றும் எலும்பு மஜ்ஜையின் ஆரோக்கியத்துக்கு உதவும். சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுவதால், உறுப்புகளும் நன்றாக செயல்படும். இதனால் நோயும் நெருங்காது.
காலை உணவு
காலையில் நாம் சாப்பிடும் இட்லி, தோசை ஆகியவை வெள்ளையாக மட்டுமே இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறுதானியங்களில் இட்லி, தோசை, இடியாப்பம், பொங்கல், உப்புமா, கஞ்சி, புட்டு ஆகியவற்றைச் செய்து சாப்பிடலாம். நிறம் மாறியிருக்குமே தவிர, உடலுக்கு அவ்வளவு நல்லது. 
 
முந்தைய நாள் ஊறிய பழைய சோறை, மறுநாள் சாப்பிடும்போது அதில் உருவாகியிருக்கும் ப்ரோபயாடிக் (Probiotic) உடலில் எதிர்ப்பாற்றலை உருவாக்கும். இதனுடன் சிறு வெங்காயம், காய்கறிக்கூட்டு சேர்த்துச் சாப்பிடுகையில், அன்றைய நாளுக்குத் தேவையான ஆற்றலையும், புத்துணர்வையும் தந்துவிடும்.
முந்தைய நாள் களியை மறுநாள் கூழாக, கீரை மற்றும் காய்கறிக் கூட்டோடு் சேர்த்துச் சாப்பிடும் நம் மரபான உணவு முறையே சரியான உணவுமுறை.
மதிய உணவு
வெள்ளை மணி போல், தனித்தனிப் பருக்கைகளாகத் தட்டை அலங்கரிக்கும் அரிசி உணவுப் பழக்கத்திலிருந்து மீள்வது ஒன்றே ஆரோக்கியத்
தின் முதல்படி. மதிய உணவு திடமான உணவாக இருக்கலாம். ரொட்டி, பாலிஷ் செய்த அரிசியைத் தவிர்த்து, சாம்பார் சாதம், மல்லி சாதம், கறிவேப்பிலை சாதம், குழம்பு சாதம், பிரியாணி ஆகிய உணவு வகைகளும் ஏற்றது.
 எலுமிச்சை சாதத்துக்குத் தினை அரிசி, பிரியாணிக்கு வரகு, தயிர் சாதத்துக்குக் குதிரைவாலி, மல்லி மற்றும் கறிவேப்பிலை சாதத்துக்கு சாமை, சாம்பார் சாதத்துக்கு வரகு, குழம்பு ஊற்றிச் சாப்பிட சாமை, ஆப்பத்துக்கு மாப்பிளை சம்பா, தோசைக்குக் கருங்குருவை என ஒவ்வொரு அரிசி வகைக்கும் கலவை உணவு அற்புத சுவையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும். ஆப்பம் பிரவுன் நிறத்திலும், தோசைக் கருநீல நிறத்திலும் வருவதால் நிறத்திற்கு ஏற்ற ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகமாக இருக்கும். அலுவலகம் செல்வோர், சிறுதானியத்தில் செய்த, கலவை சாதங்களை எடுத்துச் செல்லலாம்


சோறுடன் தயிர், ரசம் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. வேப்பம் பூ, துத்திக் கீரை, தூதுவளை, கோவைத் தழை, நுணாத் தழை, அருகம்புல், மூக்கரட்டை, கீழாநெல்லி இவற்றில் ஏதாவது ஒன்றை வதக்கி, சீரகம், மிளகு, பூண்டு, காய்ந்த மிளகாய், புளிக் கரைசல் சேர்த்து, வைக்கும் ரசம் மதிய உணவுக்கு அருமையாக இருக்கும். தீட்டப்படாத சிறுதானியங்களை உண்பதே நல்லது. மேலும், எல்லோரும் சிறுதானியங்களை உண்ணும்போது, அதன் விலையும் குறைய வாய்ப்பு உள்ளது.
இரவு உணவு
இரவில் சிறுதானியக் களி  போன்ற உணவுகளைச் சாப்பிடும் பழக்கம் இருந்தது. ஆனால், இன்று வாழ்வியல் பழக்கம் மாறிஉள்ளதால், இரவிலும் டிபன் உணவுகளைச் சாப்பிடுவதே சரி. ஆனால், அவை எளிதில் செரிக்கக்கூடிய இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பம் போன்ற உணவாக இருப்பது நல்லது.
நொறுக்குத் தீனி பொட்டுக்கடலை, வேர்க் கடலை, எள்ளு உருண்டை, பொருள்விளங்கா உருண்டை, கார அரிசி புட்டு, அவல் பாயசம், அவல் உப்புமா, பனங்கிழங்கை வேக வைத்து, பொடியாக்கி செய்யும் சத்து உருண்டை, நவதானியங்களால் ஆன சத்து மாவு உருண்டை, தேங்காய் பர்ப்பி போன்றவை  ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கின்றன.





Thursday, 25 February 2016

புத்துணர்வு தரும் உணவுகள்

பிஸி வாழ்க்கையில், வேலைப்பளு, மன அழுத்தம் ஆகியவை நம்மை ஆக்கிரமிப்பது தவிர்க்க முடியாதது. உடலையும் மனதையும் நல்ல முறையில் பராமரித்தால், புத்துணர்வு தானாகவே கிடைக்கும். சரியான உணவு வகைகளை, சரியான நேரத்துக்கு தவிர்க்காமல் எடுத்துக்கொள்வதும், போதுமான நீர் ஆகாரங்களைப் பருகுவதும் சோர்வைத் தவிர்த்து சுறுசுறுப்போடும் புத்துணர்வோடும் வலம் வர நமக்கு உதவும்.
நீர் உணவு

புத்துணர்வுடன் இருக்க ஒரு நாளைக்கு இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம். (சிறுநீரகச் செயலிழப்பு உள்ளிட்ட பிரச்னை உள்ளவர்கள், டாக்டர் பரிந்துரையின்படி தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்) உடலில் நீர் அளவு குறையும்போது, உடற்சோர்வு ஏற்படும்.
தேன் நீர்
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில், ஒரு அவுன்ஸ் தேனைக் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்திவர கபத்தன்மை சீராகி, உடல் சோர்வின்றி இருக்கும்; ரத்த உற்பத்தியும் அதிகரிக்கும். உடல் பருமன் உள்ளவர்களுக்கு நல்லது.

முருங்கைக்கீரை சூப்
இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக்கீரையை நீரில் அலசி, அத்துடன் சின்ன வெங்காயம் கைப்பிடி அளவு, கொத்தமல்லி விதை ஒரு தேக்கரண்டி, சீரகம் ஒரு தேக்கரண்டி, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து முருங்கை சூப் செய்து, குடித்துவர, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது சிறந்தது. கர்ப்பிணிகளும் இதை எடுத்துக்கொள்ளலாம். முருங்கையில் புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி, கே மற்றும் கால்சியம், மாங்கனீசு உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைவாக உள்ளன. இவை உடலுக்கு ஆற்றலைத் தரும்.

அருகம்புல் சாறு
அருகம்புல் ஓர் அற்புத மூலிகை. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கக்கூடியது. உடல் வறட்சியை நீக்கக்கூடியது. சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்தது. விஷக்கடி, தோல் ஒவ்வாமைகளுக்கு இது ஒரு சிறந்த மருந்து. அருகம்புல்லில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உள்ளன. களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி அடிக்காத இடங்களில் சேகரித்த அருகம்புல்லை சுத்தம்செய்து ஒரு டம்ளர் நீரைச் சேர்த்துப் பிழிந்து எடுத்த சாற்றை வெறும் வயிற்றில் குடிக்க நல்லது.

ராகி கூழ்
முளைகட்டிய ராகி ஒரு பங்கு, தோல் நீக்கிய முழு உளுந்து அரைப் பங்கு, சுக்கு, ஏலக்காய் சிறிதளவு அனைத்தையும் வறுத்து, பின் மாவுபோல் அரைத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவு எடுத்து, கஞ்சி காய்ச்சி பால், சர்க்கரை கலந்து பருக உடல் பலம் பெறும். ராகியில் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிக அளவில் உள்ளன. குழந்தைகள். சர்க்கரை நோயாளிகள் (சர்க்கரையைத் தவிர்த்துப் பயன்படுத்தலாம்), இரும்புச்சத்து குறைபாடு உடையவர்கள் போன்ற அனைவருக்கும் சிறந்தது.

சோயா பால்
ஒரு கைப்பிடி அளவு சோயா எடுத்து, நீரில் ஒரு நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் மிக்ஸியில் அரைத்துப் பிழிந்து, பால் எடுத்துக் காய்ச்சி, ஏலக்காய், சர்க்கரை கலந்து பருகலாம். இதில், அதிக அளவு புரதச்சத்துடன் நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள், கனிமச்சத்துகள் உள்ளன. மாதவிடாய் நின்ற காலத்தில் இது ஒரு சிறந்த உணவு.

பார்லி நீர்
பார்லியை அரைத்து மாவாக்கி, 2 தேக்கரண்டி அளவு எடுத்து 3 டம்ளர் நீர்விட்டு குக்கரில் 3-4 விசில் வரும் வரை விட்டு ஆறியபின் வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை, தேவை எனில் எலுமிச்சைப் பழச்சாறு கலந்து குடிக்கலாம். இது உடல் சூட்டைக் குறைக்கும். சிறுநீர் எரிச்சலைத் தணிக்கும். சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க உதவும். கர்ப்பிணிகளுக்கு வரும் கால் வீக்கத்தைக் குறைக்க உதவும்.

சுக்கு காபி
சுக்கு, மல்லி, ஏலக்காய் மற்றும் பனங்கருப்பட்டி கலந்து, காபிபோல் செய்து, பால் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ குடித்துவர, பசி மந்தம், தலைவலி, மூட்டுவலி நீங்கும். மேலும், சுறுசுறுப்புடன் இருக்கவும் இது உதவும்.

நெல்லிக்காய்ச் சாறு
2 அல்லது 3 பெரிய நெல்லிக்காய்களைக் கொட்டை நீக்கி, ஒரு டம்ளர் நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை கலந்து குடிக்க, பார்வைத்திறன் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். மலச்சிக்கல் நீங்கும். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நீக்கி, மஞ்சள் தூள் கலந்து பருகிவர ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.