Monetize Your Website or Blog

Friday, 12 August 2016

தனது சுதந்திர தின உரைக்கு பொதுமக்களிடம் கருத்துகள், ஆலோசனைகளை கேட்கும் மோடி!'

சுதந்திர தினத்தன்று மக்களிடையே தான் உரையாற்றப்போகும் உரையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் பிரதமர் மோடி யோசனை கேட்டுள்ளார்.





நாட்டின் 70வது சுதந்திர தின விழா வருகின்ற 15ம் தேதி (திங்கட்கிழமை), நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. தலைநகர் டெல்லியில், மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற பின், 3வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார். இதற்காக தனது உரையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சக இணையதளத்தில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதில், பொதுமக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளையும் 'மை கவ்' (எனது அரசு) வலை தளத்திலோ, நரேந்திர மோடி வலைதளத்திலோ அல்லது மொபைல் அப்ளிகேஷனிலோ தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் பிரதமர் அவற்றை படித்துப் பார்த்து, சிறப்பான யோசனைகளை தனது சுதந்திர தின உரையில் சேர்த்துக் கொள்வார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டும் இதேபோல் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது, பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பிரதமர் மோடி உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment