தமிழக சிறைகளில் கைதிகளின் மேம்பாட்டுக்காக செயல்பட்டு வந்த உற்பத்திக் கூடங்கள் முற்றிலும் முடங்கிப் போய்விட்டன. ' ஊழல் காரணமாகத்தான் ஃப்ரீடம் அங்காடிகளின் இயக்கம் நின்று போனது. இதை அறியாமல், தொழிற்கூடங்களின் லாபம் பெருகி வருகிறது என அமைச்சர் சொல்லலாமா?' எனக் கேள்வி எழுப்புகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.
தமிழ்நாட்டில் புழல், கடலூர், சேலம், கோவை, திருச்சி உள்ளிட்ட ஒன்பது இடங்களில் மத்தியச் சிறைகள் செயல்பட்டு வருகின்றன. பெண் கைதிகளுக்கு என சென்னை, வேலூர், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தனிச் சிறைகள் செயல்படுகின்றன. அனைத்து சிறைகளிலும் சுமார் 17 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் தண்டனைக் கைதிகள், பயனுள்ள வகையில் காலத்தைக் கழிக்கவும் அவர்களின் குடும்பத்திற்குப் பயன் அளிக்கும் வகையிலும்' ஃப்ரீடம்' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் தயாரிக்கப்படும் உற்பத்திப் பொருட்களை, வெளிச்சந்தையில் விற்று, அதன்மூலம் கிடைக்கும் லாபத்தின் ஒரு பங்கை கைதிகளின் கணக்கில் வரவு வைத்தனர். இதன்மூலம் கைதிகளின் குடும்பத்தினர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
இனிப்பு, கார வகைகள் தயாரிப்பது, டெய்லரிங், காலணி உற்பத்தி, மெழுகுவர்த்தி, பாண்டேஜ், குழந்தைகள் நாப்கின், இயற்கை காய்கறி, கீரை, தச்சு வேலை, சலூன் கடை, பினாயில் என சிறை வளாகங்களின் போக்கே மாறியது. குறிப்பாக, பண்டிகை நாட்களில் கைதிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு கூடுதல் வரவேற்பு கிடைத்தது. சிறை வளாகத்தின் வெளியே, ' ஃப்ரீடம் அங்காடிகள்' என்ற பெயரில் ஏராளமான கடைகள் நடத்தப்பட்டு வந்தன.
தமிழ்நாட்டில் புழல், கடலூர், சேலம், கோவை, திருச்சி உள்ளிட்ட ஒன்பது இடங்களில் மத்தியச் சிறைகள் செயல்பட்டு வருகின்றன. பெண் கைதிகளுக்கு என சென்னை, வேலூர், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தனிச் சிறைகள் செயல்படுகின்றன. அனைத்து சிறைகளிலும் சுமார் 17 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் தண்டனைக் கைதிகள், பயனுள்ள வகையில் காலத்தைக் கழிக்கவும் அவர்களின் குடும்பத்திற்குப் பயன் அளிக்கும் வகையிலும்' ஃப்ரீடம்' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் தயாரிக்கப்படும் உற்பத்திப் பொருட்களை, வெளிச்சந்தையில் விற்று, அதன்மூலம் கிடைக்கும் லாபத்தின் ஒரு பங்கை கைதிகளின் கணக்கில் வரவு வைத்தனர். இதன்மூலம் கைதிகளின் குடும்பத்தினர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
ஆனால், " கடந்த நான்கு மாதங்களாக சிறையின் தொழிற்கூடங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுவிட்டன. எங்களுக்கு எந்த வேலையும் தரப்படவில்லை. காரணம், ஃப்ரீடம் அங்காடிகள் மூலம் கிடைத்து வந்த மொத்த லாபத்தையும் அதிகாரிகள் தங்கள் கணக்கில் வரவு வைத்துவிட்டதுதான். இதனால் ஏற்பட்ட பல லட்ச ரூபாய் இழப்பை ஈடுகட்ட முடியாததால், உற்பத்தியை நிறுத்திவிடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வேலையே செய்யாமல் கொட்டடிக்குள் முடங்கிக் கிடக்கிறோம்" என கொந்தளிக்கிறார்கள் கைதிகள்.
ஃப்ரீடம் அங்காடிகளைத் திறப்பது குறித்து எந்த முடிவும் அரசும் எடுக்கவில்லை. ஆனால், சட்டசபையில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், " தமிழகத்தில் மொத்தம் 138 சிறைச்சாலைகள் உள்ளன. இவற்றில் 17 ஆயிரத்து 606 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் இருந்தவாறே நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் உரையாடும் வகையில் தொலைபேசி வசதி செய்யப்பட உள்ளது. ஒன்பது மாவட்ட சிறைகள் மற்றும் இரண்டு திறந்தவெளி சிறைகளில் 99 லட்ச ரூபாய் செலவில், தொலைபேசி
வசதி ஏற்படுத்த இருக்கிறோம். அதேபோல், சிறை தொழிற்கூடங்களின் உற்பத்தி மதிப்பு 2015-16ம் ஆண்டில் 40 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது தி.மு.க ஆட்சியைவிட பத்து மடங்கு அதிகம். சிறைத் தொழிற்கூடங்களுக்கு 2 கோடி ரூபாய் மதிப்பில் புதிய இயந்திரங்கள் வாங்கப்படும்" எனப் பேசினார்.
" ஒட்டுமொத்த உற்பத்தியே முடங்கிவிட்ட பிறகு, லாபம் எப்படி வரும்? கிடைத்த லாபத்தை சில அதிகாரிகள் பங்கிட்டுக் கொண்டதன் காரணமாகத்தான் ஃப்ரீடம் அங்காடிகள் இழுத்து மூடப்பட்டன. புதிய இயந்திரங்களை யாருக்காக வாங்குகிறார்கள்" எனக் கொந்தளித்த சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநர் வழக்கறிஞர்.புகழேந்தி,
ஃப்ரீடம் அங்காடிகளைத் திறப்பது குறித்து எந்த முடிவும் அரசும் எடுக்கவில்லை. ஆனால், சட்டசபையில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், " தமிழகத்தில் மொத்தம் 138 சிறைச்சாலைகள் உள்ளன. இவற்றில் 17 ஆயிரத்து 606 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் இருந்தவாறே நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் உரையாடும் வகையில் தொலைபேசி வசதி செய்யப்பட உள்ளது. ஒன்பது மாவட்ட சிறைகள் மற்றும் இரண்டு திறந்தவெளி சிறைகளில் 99 லட்ச ரூபாய் செலவில், தொலைபேசி
" ஒட்டுமொத்த உற்பத்தியே முடங்கிவிட்ட பிறகு, லாபம் எப்படி வரும்? கிடைத்த லாபத்தை சில அதிகாரிகள் பங்கிட்டுக் கொண்டதன் காரணமாகத்தான் ஃப்ரீடம் அங்காடிகள் இழுத்து மூடப்பட்டன. புதிய இயந்திரங்களை யாருக்காக வாங்குகிறார்கள்" எனக் கொந்தளித்த சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநர் வழக்கறிஞர்.புகழேந்தி,
ஒவ்வொரு முறையும் சிறைத்துறையின் தலைவராக வருபவர்கள் கைதிகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வேலைகளில் தீவிரம் காட்டினார்கள். தற்போதைய சிறைத்துறை உயர் அதிகாரிக்கு இதுகுறித்து எந்தவித அக்கறையும் இல்லை. டி.ஜி.பியாக திரிபாதி இருந்தபோது ஃபிரீடம் அமைப்பை விரிவுபடுத்தினார். கைதிகளின் உழைப்பிற்கு உரிய மரியாதையும் கிடைத்து வந்தது. ஃப்ரீடம் அங்காடிகளில் பல லட்ச ரூபாய் ஊழல் நடந்த பிறகு, உற்பத்தியை முழுவதுமாக நிறுத்திவிட்டனர். நாள் முழுவதும் சிறைக் கொட்டடிக்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர் கைதிகள். இதனால் அவர்கள் மனநலன் பாதிக்கப்படுவதற்கே வாய்ப்பு அதிகம். இந்த உண்மை அறியாமல், உற்பத்தி மதிப்பு பத்து மடங்கு பெருகிவிட்டன என அமைச்சர் சொல்வது பொய்யான தகவல். விரைவில் ஃப்ரீடம் அங்காடிகளைத் திறக்க, முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் ஆதங்கத்தோடு.
No comments:
Post a Comment