தமிழர்கள் காலத்தை பெரும்பொழுது, சிறுபொழுது என்று பிரித்து வாழ்ந்தார்கள். திணையியல் கோட்பாட்டை வகுத்து வாழ்ந்தார்கள். ஒவ்வொரு திணைக்கும், ஒவ்வொரு பொழுதிற்கும் ஒரு இயல்புண்டு. அந்த திணை, பொழுதிற்கு ஏற்றார் போல் தமிழர்கள் வாழ்வியல் கோட்பாடுகளை வகுத்துக் கொண்டார்கள். ஒரு திணையில் பூக்க வேண்டிய பூ, ஒரு நிலத்தில் பறக்க வேண்டிய பறவை இன்னொரு நிலத்தில் பூப்பதையும், பறப்பதையும் ‘திணை மயக்கம்’ என்றார் தொல்காப்பியர்.
ஆனால், அவர் குறிப்பிட மறந்த இன்னொரு பொழுதும், திணை மயக்கமும் இருக்கத்தான் செய்கிறது. ஆம் அந்த பெரும்பொழுது தேர்தல் காலம். அந்த தேர்தல காலத்தில், ஒரு கட்சியில் பறக்க வேண்டிய பறவை, இன்னொரு கட்சியில் சிறகை விரித்து உயரப் பறக்கிறது. இதை திணை மயக்கம்.
தொல்காப்பியம், தமிழ் இலக்கண விதிகளை இலக்கிய நயத்துத்துடன் விவரிக்கும் நூல். வாழ்க்கை அறக்கோட்பாடுகளையும் மிக விரிவாக விவரிக்கிறது. இன்று மேடையில் முழங்கும் நம் அரசியல் தலைவர்கள் பலர், இதனை நன்கு படித்தவர்கள். ஆம். படிக்க மட்டுமே செய்தவர்கள். அது மட்டும்தான் பெரும் பிழை.
கொள்கைகளற்ற கட்சிகள்:

ரகுபதி, செல்வகணபதி, அனிதா ராதாகிருஷ்ணன், ரித்தீஷ் என்று நீள்கிறது பட்டியல். இவர்கள் அனைவரும் என்ன கட்சியின் அடிப்படை கொள்கைகளில் முரண்பட்டா, இன்னொரு கட்சிக்கு வந்தார்கள்?
சரி. இதற்கு காரணம் என்ன..? காலத்திற்கு ஏற்றார் போல், அவர்கள் ஏன் கட்சி மாறுகிறார்கள்...? யார் மீது தவறு...? நிச்சயம் கட்சியிலிருந்து சென்றவர்கள் மீது எள்முனை அளவும் தவறில்லை. கட்சிகள் எப்போதோ தங்கள் கொள்கைகளிலிருந்து தடம் மாறிய பின், அதன் உறுப்பினர்கள் தடம் மாறுவதில் நாம் எப்படி குற்றம் சொல்ல முடியும்...?
ஒவ்வொரு கட்சி துவங்கப்படுவதற்கும், ஒரு வரலாற்று காரணமும், சமூகத் தேவையும் அல்லது குறைந்த பட்சம் தனிப்பட்ட காரணங்களும் இருக்கும். எந்த காரணமாக இருந்தாலும் அந்த கட்சிக்கென ஒரு கொள்கை தேவை. அந்த கொள்கைகள் மீது ஈர்ப்புடையவர்கள் அந்த கட்சியில் சேருவார்கள். இது உலக பொதுவிதி. ஆனால், தமிழகத்தில் இந்த பொதுவிதி அடிப்பட்டு பல தசாப்தங்கள் ஆகப்போகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் துவங்கப்பட்டதற்கு, ஒரு காரணம் இருந்தாலும், அவை தமக்கென சில கொள்கைகளை வகுத்துக் கொண்டாலும், அவை அனைத்தும் தடம்மாறி பல ஆண்டுகள் ஆகப்போகிறது.
திமுக, தான் வகுத்துக் கொண்ட கொள்கைகளின் படிதான் இயங்குகிறதா...? சர்வதேசியம் பேசும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறம் பிறழாமல்தான் செயல்படுகிறதா...? மதிமுக, தான் தவங்கப்பட்ட காரணங்களை வென்றடையத்தான் இயங்குகிறதா...? இந்த கேள்விகளை, நாம் அதிமுக, தேமுதிகவை நோக்கி தொடுக்க முடியாது. அந்த கட்சிகளின் கொள்கை அந்த கட்சியின் தலைமைக்குதான் வெளிச்சம்.
கட்சிகளின் நிலை இந்த லட்சணத்தில் இருக்கும்போது, அந்த கட்சிகளின் தலைமைகள் வேறு கட்சிக்கு சென்ற நிர்வாகிகள் மீது மட்டும் பழி சுமத்தி என்ன பயன்...?

கடைசியாக கொள்கை வகுப்புகள் நடந்தது எப்போது...?
அனைத்து கட்சிகளின் பிரதான கொள்கைகளும் பணம், பதவி என்றாகிவிட்டது. வலியது வாழும் என்பது போல், ஒவ்வொரு கட்சியில் பண பின்புலம், சாதி பலம் இருப்பவர்களுக்குதான் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இப்போது திமுகவில் இளைஞர்
குறைந்தபட்சம் கொள்கை வகுப்புகள் நடத்துவது இடதுசாரிகள் மட்டும்தான். ஆனால் அவர்களும், குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்ற தளி ராமச்சந்திரன் போன்றோருக்கு வாய்ப்பு கொடுத்து அழகு பார்க்கிறார்கள். அமைப்பு அளவில் வலிமையாக இருக்கும் சிபிஎம் கூட சந்தர்ப்பவாதிகளாகதான் இருக்கிறார்கள்.
தருமபுரி நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன் மர்மமான முறையில் இறந்தபோது, டெல்லியிலிருந்து சிபிஎம் கட்சியின் எம்.பி ராஜேஷ் வந்திருந்தார். அவரிடம், “இனி எக்காலமும் பாமகவுடன் சிபிஎம் கூட்டணி வைக்காது என்று சொல்ல முடியுமா...?” என்று கேட்டதற்கு ஒரு மழுப்பலான பதிலையே தந்தார். ஆக. இங்கு யாருக்கும் கட்சி கொள்கைகள் குறித்தோ, அதன் மீது செயல்பட வேண்டும் என்ற எண்ணமோ இல்லை. அனைத்து கட்சிகளுக்கும், அப்போதைய உடனடி தேவைதான் பிரதானமாக இருக்கிறது.
கட்சிகள் தங்கள் உறுப்பினர்களுக்கு, கொள்கை வகுப்புகள் நடத்தி இருக்குமாயின், அந்த கொள்கைகளின் படி தன் வாழ்வை வடிவமைத்து கொள்ள தூண்டி இருக்குமாயின், நிச்சயம் எக்காலத்திலும், எந்த உறுப்பினரும் கட்சியை விட்டு போயிருக்கமாட்டார். கட்சிகளுக்கு கொள்கைகளை விட தனி மனித நலன் முதன்மையாகும்போது, அதன் உறுப்பினர்களுக்கும், தம் நலன்தான் பிரதானமாகிறது. அவர்கள் எந்த மரத்தில் கனிகள் அதிகம் இருக்கிறதோ, அங்கு செல்கிறார்கள்.
தேர்தல் கட்சிகள், சந்தர்ப்பவாதிகளா...?:
தேர்தல் கட்சிகள் சந்தர்ப்பவாதிகள் என்று மக்கள் தூற்ற துவங்கிவிட்டனர். பொருந்தா கூட்டணிகளும்,கொள்கை மறந்த கட்சிகளும்தான் அதற்கு காரணம். தேர்தல் கட்சிகள், மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற, தேர்தல் வெற்றி தோல்விகளை கணக்கில் கொள்ளாமல், கொள்கைபூர்வமான அரசியல் செய்வதுதான் சிறந்தது. தொலைநோக்கில் அதுதான் நிலைத்து நிற்கும்.
No comments:
Post a Comment