Monetize Your Website or Blog

Thursday, 7 April 2016

குற்றாலம் போயிருப்பீங்க... ஆனால் இந்த அருவிகளுக்கு போயிருக்கமாட்டீங்க!

ழக்கமாக மே மாதத்தின் கடைசி வாரத்தில் குற்றாலத்தில் சீசன் தொடங்கிவிடும் என்பதால் அங்கு செல்ல சிலர் முடிவெடுத்து இருக்கக்கூடும். குற்றாலத்துக்கு செல்பவர்கள் அங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் இதமான சாரல் மழையில் நனைந்தபடியே  குளித்து மகிழ்ந்து இருப்பீர்கள். இது தவிர, குற்றாலத்தைச் சுற்றிலும் மேலும் சில அருவிகளும் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

குண்டாறு


குற்றாலத்துக்கு அருகில் இருக்கும் குண்டாறு நீர்த்தேக்கம் சீசன் சமயங்களில் நிறைந்து விடும், தென்காசியில் இருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கும் குண்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரில் குளிக்க அந்த இடத்தைப் பற்றி அறிந்தவர்கள் மட்டுமே வருகிறார்கள். குழந்தைகளுடன் சென்று குளிக்கக் கூடிய இடமாக இந்த அணைப்பகுதி அமைந்துள்ளது. அந்த இடத்திற்கு அருகே நிறைய தனியார் அருவிகள் உள்ளன. தனியார் அருவி என்பது, தனியாருக்குச் சொந்தமான வனப்பகுதிக்குள் பாய்ந்து வரக்கூடிய தண்ணீர் அருவியாக கொட்டும் இடங்களில் எந்த நெரிசலும் இல்லாமல் குளிக்கலாம். அதற்கு அந்த தனியாரிடம் அனுமதி பெற வேண்டும். சில அருவிகளில் குளிப்பதற்கு கட்டணம் கூட வசூலிக்கிறார்கள். ஆனால், மக்கள் நெரிசல் இல்லாமல் அருவியின் இன்பத்தை அனுபவிக்க முடியும் என்பது அதன் சிறப்பு.

நெய்யருவி

குண்டாறு அணைக்கட்டுக்கு மேலே 2 கி.மீ தூரத்தில் இந்த அருவி இருக்கிறது. கரடு முரடான பாதையில் கார்கள் செல்ல முடியாது. இங்கு செல்வதற்காக உள்ளூர்காரர்கள் ஜீப் சர்வீஸ் நடத்துகிறார்கள். நபருக்கு 100 ரூபாய் கட்டணத்தை மேலே செல்லவும் திரும்பி வரவும் சேர்த்து வசூலிக்கிறார்கள். அறிமுகம் இல்லாத வெளியூர்க்காரர்களிடம் 500 ரூபாய் வரை கூட வசூகிக்கிறார்கள். இந்த ஜீப் டிரைவர்களே நெய்யருவியில் குளிக்கவும் ஏற்பாடு செய்து கொடுத்து விடுவார்கள்.

சின்னக் குற்றாலம்

தென்காசியில் இருந்து 20 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த அருவிக்கு புளியறை வழியாகச் செல்ல வேண்டும். தெற்குமேடு என்கிற பகுதிக்கு அருகில் இருக்கும் இந்த அருவியை சுற்றுலா மையமாக மாற்ற கடந்த ஆட்சியின்போது நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அதற்கான பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாததால் பாதை கரடு முரடாக இருக்கிறது. இந்த அருவியில் குளித்தால் குற்ராலத்தின் சுகத்தை அனுபவிக்க முடியும். அத்துடன், சக சுற்றுலா பயணிகளின் தொந்தரவுகளில் இருந்து விடுபட்டு குடும்பத்துடன் ஜாலியாக குளிக்க விரும்புபவர்கள் நிச்சயமாக இந்த அருவிக்கு செல்லலாம்.

எருமைசாடி அருவி

தென்காசியில் இருந்து 28 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த அருவியானது மேக்கரை பகுதியில் உள்ள அடவிநயினார் அணைக்கட்டுக்கு அருகில் இருக்கிறது. இந்த அருவியானது தனியாரின் கட்டுப்பாட்டில் இருகிறது. ஆனால், காரில் சுலபமாக இந்த அருவிப்பகுதிக்கு சென்றுவிட முடியும். அத்துடன், கார் பார்க்கிங் வசதியும் சிறப்பாக இருக்கும். எப்போதும் ஆள்நடமாட்டம் இருக்கும் இடம் என்பதால் குழந்தைகள் மற்றும் பெண்களை அழைத்துச் சென்றால் ரீங்கரித்து விழக்கூடிய இந்த அருவில் உற்சாகமாக குளித்து மகிழ்வார்கள்.

கன்னிகாம்பாறை அருவி


தென்காசியில் இருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த அருவியானது, வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. உரிய அனுமதி பெறாமல் அங்கு செல்ல முடியாது.கற்குடி வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவி, இதமான சூழலில் உள்ளது. அனுமதி பெற்றுச் சென்றால் மிகுந்த புத்துணர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாக இந்த அருவி அமையும். 

No comments:

Post a Comment