Monetize Your Website or Blog

Monday, 1 February 2016

'களவாணி' அறிக்கி வயலுக்கும் மு.க. ஸ்டாலின் நடவு நட்ட வயலுக்கும் என்ன சம்பந்தம்?

மக்கு நாமே பயணத்தின்போது தஞ்சாவூர் வந்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்,  ஒரு வயலில் நாற்று கட்டுகளை எடுத்து கொடுத்ததுடன்,  தானும் இறங்கி சில பயிர்களை நடவும் செய்தார். இப்போது அறுவடை முடிக்கபட்டுள்ள அந்த வயலில் விளைச்சல் அமோகமாக இருந்தது என்று திமுகவினர் பூரிக்கின்றனர். 

கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுக்க, 'நமக்கு நாமே பயணம்' சென்று வருகிறார் ஸ்டாலின். அதில் மக்கள் குறைகளை கேட்பது மற்றும் அவர்களின் தேவைகள் என்ன என்று தெரிந்து கொள்வது மட்டும் இல்லாமல், ஆட்டோ ஒட்டுவது, டீ குடிப்பது, மக்களுடன் மக்களாக ஹோட்டலில் சாப்பிடுவது, சாலைகளில் நடப்பது போன்ற செயல்களிலும்  அதகளப்படுத்தினார். மேலும் ஏர், டிராக்டர் ஒட்டுவது, நெசவு நெய்வது என தொழிலாளர்கள் செய்யும் வேலைகளை அவர்களுடன் சேர்ந்து செய்யவும் செய்தார்.

எல்லா ஊர்களுக்கும் கலர் உடையில் கலக்கலாக வந்த ஸ்டாலின், தஞ்சாவூர் வந்தபோது மட்டும் எப்பவும் போல் வேஷ்டி சட்டையில் வந்தார். நம்ம ஊருக்கும் மட்டும் தளபதி வழக்கம் போல வந்து இருப்பது ஏன்? என அந்த சமயத்தில் காரணம் புரியாமல் விழித்தனர் திமுக தொண்டர்கள்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, தஞ்சாவூர் கண்டீயூர் அருகே உள்ள வயலில் திமுக தொண்டர்கள் கூடியிருக்க, வேட்டியை மடித்துக் கட்டி கொண்டும், தலையில் முண்டாசு கட்டிக் கொண்டும் ஸ்டாலின் வயலில் இறங்கினார். இதை பார்த்த உடன் பிறப்புகள் உற்சாக விசிலடிக்க,  நடவு நடும் பெண்களிடம் நாற்று கட்டுகளை எடுத்து கொடுத்தார். தானும் சில பயிர்களை நட்டதுடன்,  அந்த நடவு வயல் முழுக்க ஒரு ரவுண்டும் அடித்தார். 'நானும் தஞ்சை மண்ணை சேர்ந்தவன்தான்... எனக்கும் விவசாயம் தெரியும்!' என ஸ்டாலின் அப்போது பேச,  தொண்டர்கள் மற்றும் விவசாயிகள் எழுப்பிய சத்தம் அடங்கவே நீண்ட நேரம் ஆனது. அவர் நடவு செய்த அந்த வயலில் இப்போது அறுவடை முடிந்து  இரண்டு மடங்கு கூடுதலாக விளைச்சல் கிடைத்திருப்பதாக திமுகவினர் பேசி வருகின்றனர்.
இது குறித்து தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சன்.ராமநாதனிடம் பேசினோம். 

" தளபதி தஞ்சாவூருக்கு வந்தபோது வயலில் நடவு நடுவதற்கு ஏற்பாடு செய்யபட்டது. அவர் ஒரு விவசாயி போலவே வயலில் இறங்கி நாற்றுகளை நடவும் செய்தார். ஒரு ஏக்கரில் நாற்று நடபட்ட அந்த வயலில்,  வழக்கமாக 35 மூட்டைகள்தான் மகசூல் கிடைக்கும். ஆனால் தளபதியால் நடவு செய்யபட்ட வயலில் விளைச்சல் அமோகமாக வந்துள்ளது. 41 மூட்டைகள் வரை நெல் மகசூல் கிடைத்துள்ளது. தொடர்ந்து பெய்த மழையில் இருந்து தப்பி இந்த அளவுக்கு விளைச்சல் கிடைத்தது தளபதி நடவு செய்ததால்தான். இதெல்லாம் எங்க தளபதியோட ராசிதான். விவசாயிகளோட வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர் தளபதி. அவர் மனம் போலவே விளைச்சலும் அமோகமாக விளைந்திருக்கிறது" என்றார்.
 

அதிமுகவினரோ, " களவாணி படத்துல கதாநாயகன் வயலில் கதாநாயகி நடவு செய்வாள். அவளால் நடபட்ட பகுதியை மட்டும் கதாநாயகன் கூடுதலாக கவனிக்க, அந்த பயிர் மட்டும் உயரமாக இருக்கும். அதுபோல்தான் திமுகவினர் ஸ்டாலினால் நடபட்ட வயலை மட்டும் அதிக அக்கறையுடன் பார்த்து கொண்டிருப்பார்கள் போல. ஆனால் கூடுதலாக விளைந்திருக்க வாய்ப்பில்லை" என்கின்றனர்.


No comments:

Post a Comment