வெளிநாடுகளில் இருந்து நவீன ரக ரயில்பெட்டிகளை இறக்குமதி செய்வதுதான் இந்தியாவின் வழக்கம். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கூட பிரேசில் நாட்டில் இருந்துதான் நவீன ரயில் பெட்டிகள் வரவழைக்கப்பட்டன. ஆனால் தற்போது முதல் முறையாக நவீனத்தின் உச்சத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய நாட்டுக்கு நவீன ரயில் பெட்டிகளை அனுப்பி இந்தியா சாதனை படைத்துள்ளது.
'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் பரோடாவில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு முனையத்தில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. சுமார் 46 டன் எடையும் 75 அடி நீளமும் கொண்ட இது போன்ற 6 பெட்டிகள் நேற்று மும்பை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அடிலெய்ட் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இந்த பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன. இது போன்று இன்னும் 450 பெட்டிகள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஆஸ்திரேலியாவில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தி வரும் கனடா நாட்டை சேர்ந்த நிறுவனம் 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் அளித்துள்ளது.
அது மட்டுமல்ல... வழக்கமாக பிரேசிலில் இருந்து ரயில் பெட்டிகள் வரவழைக்கப்படும் நிலையில் பிரேசில் நாட்டுக்கு 521 ரயில் பெட்டிகளை அனுப்ப இந்தியாவுக்கு ஒப்பந்தம் கிடைத்துள்ளது. பிரேசிலின் மிகப் பெரிய நகரான சாபோலோ மெட்ரே ரயில் திட்டத்துக்காக இந்த நவீன ரயில் பெட்டிகள் அனுப்பப்படவுள்ளது.

மேலும் டெல்லி மெரோ ரயில் 1 மற்றும் 2ஆம் திட்டத்துக்கு 90 சதவீத பெட்டிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. டெல்லி மெட்ரோ ரயில் திட்டம் ஒன்றுக்கு தேவைப்பட்ட 1,234 ரயில் பெட்டிகளில் 36 ஜெர்மனியிடம் இருந்து 64 பெட்டிகள் கொரியாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன மற்றவை அனைத்தும் உள்நாட்டு தயாரிப்புதான். அதே போல் 2வது திட்டத்துக்கு தேவைப்பட்ட 846 பெட்டிகளில் 120 பெட்டிகள் மட்டுமே தென் கொரியாவில் இருந்து வாங்கப்பட்டன.
இந்தியாவில் குஜராத்தின் சாவ்லி,பெங்களுருவில் இயங்கி வரும் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம், ஆகியவை ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றன. சென்னை ஸ்ரீபெரும்புதூரில் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ரயில் பெட்டிகளை தயாரிக்கும் புதிய தொழிற்சாலையை தொடங்கியுள்ளது.
வெளிநாடுகள் இந்திய ரயில்பெட்டிகளை விரும்ப முக்கிய காரணம் உற்பத்தி செலவு குறைவு என்பதுதான். இந்தியாவில் ஒரு ரயில் பெட்டியை ரூ.8 கோடி செலவில் தயாரித்து விடலாம். இதுவே வான் கூவரில் என்றால் ரூ.16 கோடி. சான்பிரான்சிஸ்கோ என்றால் ரூ.15 கோடி ஆகிறது.
இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் 2 ஆயிரம் மெட்ரோ ரயில்கள் ஓடப் போகின்றன. இதனால் ரயில்வே பெட்டி தயாரிப்பு இன்னும் வேகமெடுக்கும் என்று நம்பப்படுகிறது.

No comments:
Post a Comment