மேம்படுத்தப்பட்ட எப்- 16 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள போர் விமான மாடல்களில் அமெரிக்காவின் எப்.16தான் அனைத்து விதங்களிலும் புதிய தலைமுறை போர் விமானமாக கருதப்படுகிறது. உலகில் 25 நாடுகளின் விமானப்படையில் எப்-16 ரக போர் விமானங்கள் உள்ளன.
ஏற்கனவே பாகிஸ்தானுக்கு கடந்த 2012ம் ஆண்டு 13 எப்-16 ரக போர் விமானங்களை முற்றிலும் இலவசமாகவே அமெரிக்கா வழங்கியது. பின்னர் 2013ம் ஆண்டு ஜோர்டன் பயன்படுத்தி வந்த 13 எப்-16 ரக போர் விமானங்களை வாங்குவதற்கு பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்து கொண்டது. கடந்த ஆண்டு முதல் அந்த போர் விமானங்கள் ஒவ்வொன்றாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால் தற்போது அமெரிக்கா வழங்கவுள்ள எப் -16 பிளாக் சி/டி ரக போர் விமானம் இவை எல்லாவற்றையும் விட நவீனத்துவமாக மேம்படுத்தப்பட்டது. எல்லாவிதமான கால நிலையிலும் இயங்கக் கூடியது. அதாவது மத்திய ரக 'மல்டி ரோல் கொம்பத் ' ரக விமானம் ஆகும் லாக்கீட் மார்ட்டின் நிறுவனத்தின் தயாரிப்பு.
கடந்த 2006ம் ஆண்டு முதலே பாகிஸ்தான் அமெரிக்காவிடம் மேம்படுத்தப்பட்ட எப் -16 ரக போர் விமானங்களை பெற முயற்சித்துக் கொண்டுதான் இருந்தது. இதற்கிடையே இந்தியாவுக்கும் மேம்படுத்தப்பட்ட எப்-16 ரக போர் விமானங்களை விற்க முயற்சித்தது.

இதற்காக அப்போதை மன்மோகன் சிங் அரசின் போது ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் பாரதிய ஜனதா அரசு பொறுப்பேற்றதும் அதிகப்படியான விலையை காரணம் காட்டி, எப்- 16 ரக போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டது.
தற்போது இந்தியா பிரெஞ்சுத் தயாரிப்பான ரஃபேல் போர் விமானங்களை ரூ.60 ஆயிரம் கோடிக்கு வாங்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் 63 ரஃபேல் போர் விமானங்களை பிரான்சிடம் இருந்து இந்தியா வாங்கவுள்ளது. தனது தயாரிப்பை வாங்க இந்தியா மறுத்ததால்தான் தற்போது அமெரிக்கா மேம்படுத்தப்பட்ட ரக எப்-16 போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கி இந்தியாவை கட்டுக்குள் கொண்டு வர பார்க்கிறது .
இந்த எப் -16 பிளாக் சி/டி ரக போர் விமானங்கள், பாகிஸ்தான் விமானப்படையை இந்திய விமானப்படையின் பலத்துக்கு ஈடாக கொண்டு வந்து விடாது . எனினும் இந்த விமானங்கள் அந்த நாட்டு விமானப்படைக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் என்பதையும் மறுத்து விட முடியாது.

No comments:
Post a Comment