Monetize Your Website or Blog

Saturday, 6 February 2016

32 பதக்கங்களை அள்ளிய மாணவி; இளநிலை கால்நடை அறிவியல் படிப்பில் அபாரம்!

சென்னை, வேப்பேரி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழாவில் இளநிலை கால்நடை அறிவியல் பட்டம் பெற்றவர்களில்,  லாவண்யா என்ற மாணவி 32 பதக்கங்களை பெற்று முதல் இடம் பெற்றார்.
பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ரோசய்யா,   மாணவர்களை வாழ்த்தி விருதுகளை வழங்கினார்.
வரவேற்புரை ஆற்றிய துணைவேந்தர் திலகர், " 'பட்டம் பெறும் பட்டதாரிகள் அனைவருக்கும் பல்கலைக்கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவர்கள் இன்னும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன். பட்டம் பெறும் மாணவர்கள் வெற்றிகரமான கால்நடை மருத்துவர்களாகவும், விவசாயிகளின் நலன் கருதி பணியாற்றக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். இந்தியப் பொருளாதாரம் வேளாண்மையை அடிப்படையாக கொண்டது. வேளாண்மையில் ஏற்படும் சில மாற்றங்கள்தான் நாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. வேளாண்மைத்துறையின் பிரச்னையை களைவதற்கு நீங்கள் அனைவரும் தங்கள் பணியை சரியாக செய்து சேவையாற்ற வேண்டும்" என்றார்.


இளநிலை கால்நடை அறிவியல் பட்டம் பெற்றவர்களில் லாவண்யா என்ற மாணவி 32 பதக்கங்களை பெற்று முதல் இடம் பெற்றார்.
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த லாவண்யா பேசும்போது, "நான் 32 பதக்கங்களை வாங்கி முதலாவதாக வர காரணமாக இருந்த என்னுடைய அம்மா, என்னுடைய பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். முதல் மாணவியாக வந்த என்னையும் சேர்த்து ஐந்து பேரை பல்கலைக்கழகம் இங்கேயே வேலைக்கு அனுமதித்துள்ளது. அப்படியே பகுதி நேரமாக மேல்படிப்பை தொடரவும் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்திற்கு நன்றி சொல்ல மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய இப்போதைய தேவை படிப்புடன் கூடிய வேலை, அதனை அளித்த தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகத்திற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

மொத்தம் 513 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment