Monetize Your Website or Blog

Wednesday, 3 February 2016

விற்பனை இரு மடங்கு அதிகரிப்பு : ஆண்களின் 'கெத்து' வாகனத்துக்கு மவுசு குறையவில்லை!

ண்களின் கெத்து வாகனமாக கருதப்படும் என்ஃபீல்ட் ரக புல்லட்டுகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக ராயல் என்ஃபீல்ட் புல்லட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை என்றாலே கார் தொழிற்சாலைகள் மட்டுமல்ல, கூடவே ஒரு இரு சக்கர வாகனத்தின் பெயரும் நினைவுக்கு வரும். அதுதான் ராயல் என்ஃபீல்ட் புல்லட். இந்த புல்லட்டின் டப.. டப சத்தம் சாலையில் செல்வோருக்கு ஒரு வித கிறு கிறுப்பையே ஏற்படுத்துமென்றால், அதனை ஓட்டுபவருக்கு ஹெலிகாப்டரையே ஓட்டுவது போன்ற  பிரமிப்பையே ஏற்படுத்தும் .

ஆனால் நவீனத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் என்ஃபீல்ட் புல்லட் ரகங்களும் சரிவை சந்திக்கத் தொடங்கின.  இதனால் 1995-ம் ஆண்டுக்கு பிறகு என்ஃபீல்ட் புல்லட்டுகளுக்கு மவுசு குறையத் தொடங்கியது. தொடர்ந்து யமஹா 100 சி.சி. பைக்குகள் மக்களுக்கு புதிய ரசனையை கொடுத்தன.  சிறிய ரக இரு சக்கர வாகனகங்களும் புதிது புதிதாக சாலையில் ஓடத் தொடங்கி, என்ஃபீல்ட் புல்லட்களை ஓரம் கட்டத் தொடங்கின.
அதிக எடை, ஓட்டுவதில் உள்ள சில சிரமங்கள் என்ஃபீல்ட் புல்லட்களை  மக்களிடம் இருந்து விலக வைத்தன. இதனிடையே டீசல் புல்லட்டுகளையும் கூட என்ஃபீல்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தி பார்த்தது. ஆனால் அதற்கு அவ்வளவாக வரவேற்பில்லை.அத்துடன் எல்லா இரு சக்கர வாகனங்களிலும் பிரேக் வலது புறத்தில் இருந்தால், என்ஃபீல்டுக்கு மட்டும் பிரேக் இடது புறத்தில் இருந்தது. இப்படி எல்லாவிதத்திலும் என்ஃபீல்ட் ரக புல்லட்டுகள் சற்று வித்தியாசமாகவே இருந்தது. 

கால ஓட்டத்திற்கு ஏற்ப  என்ஃபீல்ட் நிறுவனம் தனது தயாரிப்புகளில் சில மாற்றங்களை செய்து சந்தையில் அறிமுகப்படுத்தியது. பட்டன் ஸ்டார்ட்டர், பிரேக்குகள் வலதுபுறத்திற்கு கொண்டு வரப்பட்டு, கியர்கள் இடது பக்கத்திற்கு மாற்றப்பட்டன. இந்த மாற்றங்களுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருந்தது. இப்படி கடந்த 2014-ம் ஆண்டு 500 சிசி மற்றும் 350 சிசி என இரு ரக என்பீல்ட் புல்லட்டுகள் சந்தைக்கு வந்தன. 

இதில் 500 சிசி புல்லட்டின் விலை ரூ. ஒரு லட்சத்து  67 ஆயிரம் ஆகும். 350 சி.சி. புல்லட்டின் விலை ரூ.  ஒரு லட்சத்து 29 ஆயிரமாகவும் இருந்தது. முதலில் இதன் விலை அதிகமாக இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் நாளைடைவில் இந்த புல்லட்டை ஓட்டியவர்கள் அதன் கம்பீரத்தில் மயங்கிப் போனார்கள். இதனால் மீண்டும் என்ஃபீல்ட் ரக புல்லட்டுக்கென்று தனி வாடிக்கையாளர்கள் உருவாகத் தொடங்கியுள்ளனர். 

அதற்கு அடையாளமாக இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 47 ஆயிரத்து 710  என்ஃபீல்ட் புல்லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த  நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவே கடந்த ஜனவரி மாதத்தில் 28 ஆயிரத்து 927  பைக்குகள்தான் விற்பனையாகியிருந்தன. அதாவது கிட்டத்தட்ட 65 சதவீத விற்பனை  அதிகம் ஆகும். 

இதில் 350 சி.சி. ரக மோட்டார்சைக்கிள்கள் 44 ஆயிரத்து 234 விற்பனையாகியுள்ளன.  கடந்த ஜனவரியில் 25 ஆயிரத்து 799 பைக்குகள்தான் விற்பனையாகியிருந்தன.
அந்த வகையில் இது 71 சதவீதம் அதிகமாகும். 

அத்துடன் 500 சிசி புல்லட்டுகள் விற்பனையும் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரியில் என்ஃபீல்ட் 500 சிசி ரக புல்லட்டுகள்  3,128  விற்பனையாகியிருந்தது.  இந்த ஜனவரியில் 3,476 ஆக அதிகரித்துள்ளது. இது 11 சதவீதம் அதிகம்.

அதே வேளையில் ஏற்றுமதி குறைந்துள்ளது. கடந்த ஜனவரியில் 770 புல்லட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. தற்போது அது 570 ஆக குறைந்துள்ளது. இது 26 சதவீதம் குறைவு என ராயல் என்ஃபீல்ட் புல்லட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment