படிப்பதற்கு முன்னர் ஒரு சிறிய முன்குறிப்பு: இப்போதெல்லாம் சமூகவலைத் தளங்களில், ஒவ்வொரு உணவுவகையையும் குறிப்பிட்டு, இது உடலுக்கும், குறிப்பிட்ட நோய்க்கும் சிறந்தது என்று அதிகப் பதிவுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. தினமும் பத்துக்கு மேற்பட்ட பதிவுகள் இப்படி வெளிவருகின்றன. அதனால், அவற்றைப் படிக்கும்போது ஒருவிதச் சலிப்பும் ஏற்படுகிறது. இந்தப் பதிவும் அவை போல ஒரு பதிவுதான். ஆனால் மிகவும் முக்கியமானதொரு தகவலை இது தாங்கியிருக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளாலும், அதிகார முதலைகளான வல்லரசு நாடுகளாலும், நாம் உண்மைகள் மறைக்கப்பட்டு ஏமாற்றப்படுகிறோம் என்பதையு இந்தத் தகவல் வெளிப்படுத்தும். நான் சொல்லப்போகும் தகவலை மறுப்பதற்கென்றே, உலகமெங்கும் பணம் கொடுத்துப் பலர் ஏற்பாடுசெய்யப்பட்டிர்ருக்கிறார்கள். அவர்கள் போலிப் பிரச்சாரங்களிலும், விளம்பரங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நமக்குத் தேவை விழிப்புணர்வு.
இனிப் பதிவுக்குப் போகலாம்.
‘அல்ஷ்ஹைமர்’ (Alzheimer) என்னும் நோயைப்பறிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தியாவில் இந்த நோயை ‘அல்ஷீமர்’ என்று உச்சரிப்பார்கள். இந்த நோயைப்பற்றி ஜேர்மன் நாட்டின் நரம்பியல் நிபுணரான ‘அலோய்ஸ் அல்ஷ்ஹைமர்’ (Alois Alsheimer) என்பவர் முதன்முதலில் வெளிப்படுத்தியதால், ‘அல்ஷ்ஹைமர்’ என்ற பெயர் இடப்பட்டது. ‘அல்ஷ்ஹைமர்’ நோய்போல இருக்கும் இன்னொரு நோய், ‘பார்கின்ஸன்’ (Parkinson). இந்த நோய்பற்றியும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த இரண்டு நோய்களைப்பற்றி நான் எழுதும்போது, ‘கேள்விப்பட்டிருக்கலாம்’ என்னும் சந்தேகமான தொனியுடனே எழுதுகிறேன். காரணம் நம் நாட்டு மக்களுக்கு இந்த இரண்டு நோய்களும் மிகவும் அந்நியமான்வை. கடந்த காலங்களில் நம் நாட்டு மக்கள் இப்படிப்பட்ட நோய்களையோ, நோய்களின் அறிகுறிகளையோ அறியாதவர்கள். ஆனால் இப்போது இந்த நோய்கள் நம்நாட்டிலும் இருப்பதாகச் செய்திகள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த கணக்கெடுப்புகளின்படி, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில். இந்த இரண்டு நோய்களும் 50 சதவீதத்துக்கு அதிகமான மக்களுக்குக் காணப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் நம்நாட்டு மக்களிடம் இந்த நோய்கள் 0.3 சதவீதத்துக்கும் குறைவாகவே காணப்பட்டிருக்கிறது. இப்போது இந்த வீதம் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பெரும்பான்மையாக இருக்கும் இந்த நோய்கள், நம்நாட்டில் வெகுவாகக் குறைந்த அளவு இருந்ததற்கு என்ன காரணம் தெரியுமா?
‘தேங்காயெண்ணெய்’
சுத்தமாக எடுக்கப்படும் தேங்காயெண்ணெயும், தேங்காய்ப் பாலும் உலகிலேயே சிறந்த உணவாக இப்போது அனைத்து உணவு ஆராய்ய்சியாளர்களாலும் கொண்டாடப்படுகிறது. தேங்காய்ப்பாலையும், தேங்காயெண்ணெய்யையும் பயன்படுத்தினால், கொலஸ்ட்ரால் உருவாகும், இரத்த அழுத்தம் அதிகப்படும், இயதநோய் அதிகரிக்கும் என்ற பொய்ப் புரட்டுவாதங்கள், கார்ப்பரேட் முதலாளிகளாலும், அவர்களால் தயார்படுத்தப்பட்ட மருத்துவத் துறையினராலும் திட்டமிட்டு நம்நாடுகளில் இதுவரை பரப்பப்பட்டு வந்திருக்கின்றது. சூரியகாந்தி எண்ணெய், தாவர எண்ணெய் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை விற்பனைக்கு கொண்டுவந்து நம் சுகாதாரத்தை அழித்துக் கோடிக்கணக்கான பணத்தைக் கொள்ளையடிக்கும் பெருமுதலாளிகளின் விற்பனைத் தந்திரம் இது. அத்துடன் ‘மாஜரீன்’ என்னும் தாவர வெண்ணெய் வகைகளையும் விற்பனைக்குக் கொண்டுவந்த தந்திரம்.
தேங்காய்ப் பாலினாலும்,. தேங்காயெண்ணெயினாலும் நமக்குத் தீங்கு வரவே வராது. காரணம் தேங்காய்ப்பாலிலும், தேங்காயெண்ணெயிலும் இருப்பது நல்ல கொழுப்பு. உடலுக்கு மிகவும் தேவையான கொழுப்பு. இது உடலுக்குத் தீங்குகள் செய்யாமல் பல வகைகளில் நமக்கு நன்மைகளையே செய்கின்றது. அந்த அளவுக்கு நல்ல கொழுப்பு அது.
’அது என்ன நல்ல கொழுப்பு?’
நம் உடலுக்குச் செல்லும் கொழுப்பில் மூன்று வகைகள் உண்டு. அவற்றை LDL (Low Density Lipoprotein), MDL (Medium Density Lipoprotein), HDL (High Density Lipoprotein) என்பார்கள். கொழுப்பு என்பது கார்பன் (C) மூலகம் சங்கிலிபோல இணைந்து உருவாகிய ஒரு மூலக்கூறு. LDL கொழுப்பு வகைகளில், 1 முதல் 5 கார்பன்கள் இணைந்து இருக்கும். MDL கொழுப்பு வகைகளில், 6 முதல் 12 கார்பன்கள் இணைந்திருக்கும். HDL வகைக் கொழுப்புகளில், 12 க்கும் அதிகமான கான்பன்கள் இணைந்திருக்கும். இந்தக் கொழுப்புகளில் LDL என்னும் கொழுப்புத்தான் மிகவும் ஆபத்தான கொழுப்பு. தங்கத்தின் நிறத்தில் ஜொலிக்கும் வர்ணங்களில் அழகாகக் காணப்படும் ’ரீஃபைன்’ எண்ணெய்கள் என்று விற்பனை செய்யப்படும் எண்ணெய்கள் அனைத்தும் இந்த LDL கொழுப்புகள்தான். HDL என்பது மனித உடலுக்கு அவ்வளவு ஆபத்தானது அல்ல. உடலில் சேரும் LDL கொழுப்புகளை நீக்கி அகற்றும் பணியை இந்த HDL வகைக் கொழுப்புகள் செய்கின்றன. அசுத்தத்தை அகற்றும் தொழிலாளிபோலத் தொழிற்படும். ஆனால் MDL கொழுப்புகள்தான் மனிதனுக்கு மிகவும் நன்மை செய்யும் கொழுப்பாகும். இந்தக் கொழுப்பின் மூலம் கேட்டோன் (Ketone) உருவாகி, அவை மூளையெங்கும் பயணம் செய்து 'அல்ஷ்ஹைமர்’, ‘பார்க்கின்சன்’ போன்ற நோய்கள் உருவாகாமல் தடுக்கின்றன. தேங்காயெண்ணெயில் MDL கொழுப்புத்தான் இருக்கிறது. மேற்படி நோய்கள் யாருக்கும் வந்தாலும், தேங்காயெண்ணெயை தினம் மூன்றுவேளை ஒரு கரண்டியளவு உட்கொண்டு வந்தால், அந்த நோய்கள் இரண்டொரு மாதங்களில் நீங்கிவிடுகின்றன.
தேங்காயெண்ணெயினால், அல்ஷ்ஹைமர், பார்க்கின்சன் நோய்கள் மட்டுமில்லாமல், ‘ஆட்டிசம், ALS போன்ற நோய்களும் வெகுவாகக் குறைகின்றன. தேங்காயெண்ணெய் ஒரு சஞ்சீவி மருந்து. நம்மையறியாமலே அதை நாம் உணவுகளில் பயன்படுத்தி வந்திருக்கிறோம். ஆனால் இப்போது சிலரால் ஏமாற்றப்பட்டு தவிர்க்க ஆரம்பித்திருக்கிறோம்.
'நல்லதைத் தடுத்துக் கெட்டதை கொடுப்பதுதான் கார்ப்பரேட் கொள்கை'
No comments:
Post a Comment