நட்சரத்திரத்திற்குள் பயணித்த ரோஹித் வெமுலாவை நமக்கு நன்கு தெரியும், நவீன அரக்கனால் கொல்லப்பட்ட அய்யாறுவை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...? ரோஹித்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு சற்றும் குறைவானது இல்லை அய்யாறுவுக்கு இழைக்கப்பட்டவை. ஆனால், ஹாஷ் டேக், டிரெண்டிங்கிற்குள் வராமலேயே காணாமல் போய்விட்டான்.
சரி. யார் இந்த அய்யாறு...? ஏன் அவன் ரோஹித்துடன் ஒப்பிடப்படவேண்டும். நிச்சயம்
இவர்கள் இருவரும் கடிதம் எழுதிவிட்டு தன்னை மாய்த்துக் கொண்டவர்கள் என்பது மட்டும் அவர்களை ஒப்பிட காரணமில்லை. அதை தாண்டிய பல காரணங்கள் இருக்கிறது. இந்த கட்டுரையின் முடிவில் ஒரு வேளை அதை நீங்களே புரிந்து கொள்ளக் கூடும்.
சத்தியமா அவன் அரக்க இனத்தை சேர்ந்தவன்
அய்யாறு, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அசனூர் கிராமத்தை சேர்ந்த ஒரு துப்புரவு தொழிலாளி. கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி தன் வீட்டில் தூக்கிட்டு தன்னை மாய்த்துக் கொண்டான். அவன் எழுதிய தற்கொலை கடிதத்தில், அதற்கான காரணத்தையும் தெளிவாக கூறியுள்ளான். ஊராட்சி தலைவர் சாந்தியின் கணவர் செல்வராஜ் கொடுத்த மன அழுத்தமே தன் தற்கொலைக்கு காரணமென்று.
அவனது வரிகளில், “சத்தியமா அவன் அரக்க இனத்தை சேர்ந்தவன். நான் தாழ்த்தப்பட்ட கீழ்சாதி என்பதால், என்னை வீட்டில் வேலை செய்யவும், வீட்டில் உள்ள கழிவறையை சுத்தம் செய்யவும், அப்படி நான் செய்யாவிட்டால் என்னை திட்டுவதிலும் கொள்கை உள்ளவன். நான் எதிர்த்து கேட்டால் நீ தாழ்த்தப்பட்ட சாதி என்று சொல்வான். அப்படி இருக்கும்போது நான் உலகத்திற்கு வாழ்வதற்கு தகுதி இல்லாதவனாய் கருதப்படுகிறேன்....” - இப்படியாக இருக்கிறது அவனது கடிதம். ஆனால் துரதிருஷ்டவசமாக ரோஹித்தின் கடிதம் சமூக ஊடகங்களில் பரவிய அளவிற்கு, அய்யாறுவின் கடிதம் பரவவில்லை.
இன்னொரு ஒற்றுமையும் இருவருக்கும் இருக்கிறது. எப்படி ரோஹித்திற்கு பல மாதங்களாக கல்வி உதவித் தொகை நிறுத்திவைக்கப்பட்டு இருந்ததோ, அது போல பல மாதங்களாக அய்யாறுவிற்கும் சம்பளம் தரப்படவில்லை.
“அவனுக்கு சம்பளம் இரண்டாயிரத்திற்கும் சொச்சம். அதைக் கூட பல மாதங்களாக தரவில்லை” என்கிறார் அய்யாறுவின் அண்ணன் ஹரி கிருஷ்ணன். மேலும், “பல மாதங்களாக, என் தம்பியை சாதி ரீதியாக மோசமாக பேசியுள்ளார் ஊராட்சி தலைவர் சாந்தியின் கணவர் செல்வராஜ். என் தம்பியை, அதே ஊரை சேர்ந்த மணியையும், சக்திவேலையும் கொலை செய்ய தூண்டி இருக்கிறார். அதற்கு என் தம்பி மறுத்து உள்ளான். மறுத்ததோடு மட்டுமல்லாமல், இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடமும் கூறி இருக்கிறான். இதனால் கோபமுற்ற செல்வராஜ், என் தம்பி மீது பொய் வழக்கு கொடுத்துள்ளார். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலே என் தம்பி தற்கொலை செய்து கொள்ள காரணம். இதை என் தம்பி தெளிவாக தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான். ஆனால் காவல்துறை, குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கிறது. எங்கள் மீதே வழக்கு பதிந்துள்ளது. கைது செய்வேன் என மிரட்டுகிறது” என்கிறார்.
“அய்யாறு இறந்தவுடன் அவர் அண்ணன் ஹரிகிரிஷ்ணன், செல்வராஜ் வீட்டிற்கு நியாயம் கேட்க போயுள்ளார். அப்போது அங்கு செல்வராஜ் இல்லாததால் கோபத்தில் கற்களை கொண்டு அவர் வீட்டில் இருந்த வாகனத்தை தாக்கியுள்ளார். ஆனால், காவல்துறை அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்துள்ளது” என்கிறார் அவர்களது வழக்கறிஞர்.
ஏன் அய்யாறுக்களின் நியாயங்கள் பொது சமூகத்தின் மன்சாட்சியை உலுக்கவில்லை?
ரோஹித்தின் கடிதம் போல் அல்லாமல், அய்யாறுவின் கடிதம் நேரடியாக, தான் இறந்ததற்கு சாதிய பாகுபாடு காரணம் என்கிறது. ஏன் இது பொது மக்களின் மனசாட்சியை உலுக்கவில்லை...?
“ஊடகங்களும், இனப்பாகுபாடும்தான் காரணம்” என்கிறார் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொது செயலாளர் சாமுவேல்ராஜ்.
அவர் மேலும், "தமிழ்நாட்டின் வெகு மக்களுக்கு அய்யாறுவுக்கு இழைக்கப்பட்ட அநீதியே தெரியாது. மாநகரங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது தேசிய ஊடகங்கள் கவனிக்கின்றன. ஏனெனில் அங்குதான் அவர்களது பார்வையாளர்கள் அதிகம். வெகு மக்களுக்களுக்கும் அந்த செய்தி சென்றடைகிறது. துரதிருஷ்டவசமாக கிராமத்தில் வாழும் அய்யாறுகளுக்கு நடக்கும் அநீதிகளுக்கு அது போன்ற கவனம் இறுதி வரை கிடைக்காமலேயே போய்விடுகிறது" என்கிறார் வேதனையுடன்.
செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிரும் இதனையே வழிமொழிகிறார்.
“இது வெறும் தலித்துகளுக்கான சிக்கல் மட்டுமல்ல. நிர்பயாவுக்கு இந்த சமூகம் கொந்தளித்தது. அதை விட கொடூரமாக வைகுண்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி புனிதா கொல்லப்பட்டாள். ஆனால் அது இந்த சமூகத்தின் கூட்டு மனசாட்சியை உலுக்கவில்லை. ஏன் என்றால் அப்படி ஒரு சம்பவம் நடந்ததே பல பேருக்கு தெரியாது? சிறு கிராமங்களில் நடக்கும் அக்கிரமங்கள் இருவருக்கிடையான தனிப்பட்ட பிரச்னையாக பார்க்கப்பட்டு பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கி, உள்ளூர் பஞ்சாயத்து அளவிலேயே முடித்து விடுகிறார்கள்.
ரோஹித் வெமுலாவுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்கள் என கேட்கவில்லை...? நிச்சயம், அவருக்கு நிகழ்ந்தது மிக பெரிய அநீதி. அனைவரும் குரல் கொடுக்கத்தான் வேண்டும். ஆனால், மற்ற மாநிலங்களில் நடந்தால் மட்டும்தான் குரல் கொடுப்பேன், இங்கு நடந்தால் மெளனமாக இருப்பேன் என பேராபத்தானது,” என்கிறார் கதிர்.
ரோஹித் வெமுலாவிற்கும், அய்யாறுவுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இல்லை. இருவரும் விளிம்பு நிலை சமூகத்தின் பிரதிநிதிகள். இருவரும் ஒரே மாதிரியான சாதிய பாகுபாட்டை சந்தித்துள்ளார்கள்.
"ஏன் அரக்கனால் கொல்லப்பட்ட என் இறப்பிற்கு, எந்த பெரிய போராட்டங்களும் இல்லை, எந்த தேசிய தலைவர்களும் வரவில்லை, இது குறித்து ஏன் பெரிய ட்வீட்க்கள் இல்லை...?" என ஒரு வேளை நட்சத்திரத்திற்குள் ரோஹித்தை சந்தித்தால், அய்யாறு கேட்க கூடும்.
இறந்துபோனபின்னும் ரோஹித்தை நாம்தான் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குகிறோம்.
சரி. யார் இந்த அய்யாறு...? ஏன் அவன் ரோஹித்துடன் ஒப்பிடப்படவேண்டும். நிச்சயம்
சத்தியமா அவன் அரக்க இனத்தை சேர்ந்தவன்
அய்யாறு, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அசனூர் கிராமத்தை சேர்ந்த ஒரு துப்புரவு தொழிலாளி. கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி தன் வீட்டில் தூக்கிட்டு தன்னை மாய்த்துக் கொண்டான். அவன் எழுதிய தற்கொலை கடிதத்தில், அதற்கான காரணத்தையும் தெளிவாக கூறியுள்ளான். ஊராட்சி தலைவர் சாந்தியின் கணவர் செல்வராஜ் கொடுத்த மன அழுத்தமே தன் தற்கொலைக்கு காரணமென்று.
இன்னொரு ஒற்றுமையும் இருவருக்கும் இருக்கிறது. எப்படி ரோஹித்திற்கு பல மாதங்களாக கல்வி உதவித் தொகை நிறுத்திவைக்கப்பட்டு இருந்ததோ, அது போல பல மாதங்களாக அய்யாறுவிற்கும் சம்பளம் தரப்படவில்லை.
“அவனுக்கு சம்பளம் இரண்டாயிரத்திற்கும் சொச்சம். அதைக் கூட பல மாதங்களாக தரவில்லை” என்கிறார் அய்யாறுவின் அண்ணன் ஹரி கிருஷ்ணன். மேலும், “பல மாதங்களாக, என் தம்பியை சாதி ரீதியாக மோசமாக பேசியுள்ளார் ஊராட்சி தலைவர் சாந்தியின் கணவர் செல்வராஜ். என் தம்பியை, அதே ஊரை சேர்ந்த மணியையும், சக்திவேலையும் கொலை செய்ய தூண்டி இருக்கிறார். அதற்கு என் தம்பி மறுத்து உள்ளான். மறுத்ததோடு மட்டுமல்லாமல், இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடமும் கூறி இருக்கிறான். இதனால் கோபமுற்ற செல்வராஜ், என் தம்பி மீது பொய் வழக்கு கொடுத்துள்ளார். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலே என் தம்பி தற்கொலை செய்து கொள்ள காரணம். இதை என் தம்பி தெளிவாக தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான். ஆனால் காவல்துறை, குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கிறது. எங்கள் மீதே வழக்கு பதிந்துள்ளது. கைது செய்வேன் என மிரட்டுகிறது” என்கிறார்.
“அய்யாறு இறந்தவுடன் அவர் அண்ணன் ஹரிகிரிஷ்ணன், செல்வராஜ் வீட்டிற்கு நியாயம் கேட்க போயுள்ளார். அப்போது அங்கு செல்வராஜ் இல்லாததால் கோபத்தில் கற்களை கொண்டு அவர் வீட்டில் இருந்த வாகனத்தை தாக்கியுள்ளார். ஆனால், காவல்துறை அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்துள்ளது” என்கிறார் அவர்களது வழக்கறிஞர்.
ஏன் அய்யாறுக்களின் நியாயங்கள் பொது சமூகத்தின் மன்சாட்சியை உலுக்கவில்லை?
ரோஹித்தின் கடிதம் போல் அல்லாமல், அய்யாறுவின் கடிதம் நேரடியாக, தான் இறந்ததற்கு சாதிய பாகுபாடு காரணம் என்கிறது. ஏன் இது பொது மக்களின் மனசாட்சியை உலுக்கவில்லை...?
செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிரும் இதனையே வழிமொழிகிறார்.
ரோஹித் வெமுலாவிற்கும், அய்யாறுவுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இல்லை. இருவரும் விளிம்பு நிலை சமூகத்தின் பிரதிநிதிகள். இருவரும் ஒரே மாதிரியான சாதிய பாகுபாட்டை சந்தித்துள்ளார்கள்.
"ஏன் அரக்கனால் கொல்லப்பட்ட என் இறப்பிற்கு, எந்த பெரிய போராட்டங்களும் இல்லை, எந்த தேசிய தலைவர்களும் வரவில்லை, இது குறித்து ஏன் பெரிய ட்வீட்க்கள் இல்லை...?" என ஒரு வேளை நட்சத்திரத்திற்குள் ரோஹித்தை சந்தித்தால், அய்யாறு கேட்க கூடும்.
இறந்துபோனபின்னும் ரோஹித்தை நாம்தான் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குகிறோம்.
No comments:
Post a Comment