Monetize Your Website or Blog

Wednesday, 3 February 2016

எரிவாயு குழாய் பதிப்பு விவகாரம் : தமிழக ஆட்சியாளர்களை தோலுரித்து காட்டிய உச்சநீதிமன்றம்!

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெங்களுருக்கு தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக எரி வாயு கொண்டு செல்ல கடந்த 2012ஆம் ஆண்டு மத்திய அரசின் கெயில் நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு இந்த திட்டத்துக்கு கடந்த 2014ஆம் ஆண்டு தடை விதித்தது. இதனை எதிர்த்து கெயில் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

அந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் தமிழக விவசாயிகள் நிலத்துக்கு 40 சதவீத இழப்பீடு வழங்கவும், கெயில் நிறுவனம் எரி வாயு கொண்டு செல்ல விவசாய நிலங்களில் குழாய் பதிக்க எந்த தடையும் இல்லையென்றும் தீர்ப்பளித்து விட்டது. விவசாயிகளுக்கு பாதகமாக இந்த தீர்ப்பு இருக்கிறது என விவசாய அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன. அதே வேளையில் இந்த தீர்ப்பின் போது உச்சநீதிமன்றம் தமிழக ஆட்சியாளர்களை கடுமையாக சாடி சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளது. அவற்றை இங்கே பார்க்கலாம்.

''மத்திய அரசு திட்டத்தை முடக்கினால், அரசியல் அமைப்பு சட்டம் முடங்கும் நிலை ஏற்படும். ஓட்டு அரசியலுக்காகவே விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறது. விவசாயிகளின் போராட்டத்துக்கும் ஆதரவளிக்கிறது. இந்த திட்டத்தில் மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மத்திய அரசைதான் மாநில அரசு அனுகியிருக்க வேண்டும். திட்டத்தை தொடங்கும் போது, விட்டு விட்டு அப்போது விவசாயிகளின் நலன் கருதாமல் இருந்து விட்டு இப்போது தடை விதிப்பது சரியானதாக அமையாது ''என தெரிவித்துள்ளனர்.

மேலும் '' தேசிய நெடுஞ்சாலை அருகே திட்டத்தை கொண்டு செல்வது  குறித்து அறிவுரை வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. முதலில் இந்த திட்டத்துக்கு ஆதரவளித்த தமிழக அரசு, தற்போது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது. அந்த 7 மாவட்டங்களில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பை மாற்றியமைத்து அந்த மதிப்பில் 10 சதவீதம் இழப்பீடாகவும் 30 சதவீதம் கூடுதல் மதிப்பாவும் வழங்கப்படும்'' என தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
 

இதற்கிடையே கெயில் தரப்பில்  ஆஜரான, மூத்த வழக்கறிஞர் துருவ் மேத்தா, ''மொத்தம், 310 கி.மீ., குழாய் பதிக்கும் திட்டத்தில், 200 கி.மீ.,க்கு வேலை முடிந்துவிட்டது. இதற்காக ரூ 685 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு கூடுதல் தொகை வழங்கவும் தயார்'' என தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment