சியாச்சின் பனிமலையில் இருந்து மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பா, தற்போது டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராணுவத் தளபதி ஜெனரல் தப்லீர் சிங் சுஹாக் கண்காணிப்பில், 4 பேர் கொண்ட மருத்துவக்குழு ஹனுமந்தப்பாவின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஹனுமந்தாப்பாவுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. இதற்காக பெண் ஒருவர், தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த அந்த பெண், டெல்லி ராணுவ மருத்துவமனையில் தனது சிறுநீரகத்தை தானம் செய்தார். நிதி பாண்டே என்ற 35 வயது பெண், அதனை வழங்கியதாக ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை தெரிவித்துள்ளது. நிமோனியா தாக்குதல் காரணமாக அவரது சிறுநீரகங்கள், கல்லீரல் போன்றவை செயல் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹனுமந்தப்பா உயிர் பிழைக்க வேண்டுமென மும்பை டப்பாவாலாக்கள் முதல் காஷ்மீர் பள்ளி குழந்தைகள் வரை பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். சியாச்சினை பொறுத்தவரை, இந்திய ராணுவ வீரர்கள் எதிரிகளுடன் போராடுவதை காட்டிலும் குளிருடன் போராடுவதுதான் பெரும் பிரச்னையாக இருக்கும். பனிப்புயல் வீசினால் தொடந்து 3 வாரங்களுக்கு வீசும்.
அப்போது காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும். இதனால் அங்கு பணிபுரியும் வீரர்களுக்கு தலைவலி, பேச்சுக் குளறல், தூங்குவதில் பிரச்னை, பசியின்மை என இப்படி பல பிரச்னைகள் ஏற்படும். இதையெல்லாம் சமாளித்து பணியில் ஈடுபட்டாலும் பனிச்சரிவு பெரும் பிரச்னையாகவே இருக்கிறது.
சியாச்சினில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி பனிச்சரிவு ஏற்பட்டு, ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு பனி மூடியுள்ளது. அதில் 25 அடி ஆழத்தில் ஹனுமந்தப்பா சிக்கியுள்ளார். அவருடன் சிக்கிய 10 பேர் பலியாகி விட்ட நிலையில், 6 நாட்களாக ஹனுமந்தப்பா உயிருடன் இருந்தது நிஜமாகவே அதிசயம் என்றே கூறப்படுகிறது
சியாச்சினில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி பனிச்சரிவு ஏற்பட்டு, ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு பனி மூடியுள்ளது. அதில் 25 அடி ஆழத்தில் ஹனுமந்தப்பா சிக்கியுள்ளார். அவருடன் சிக்கிய 10 பேர் பலியாகி விட்ட நிலையில், 6 நாட்களாக ஹனுமந்தப்பா உயிருடன் இருந்தது நிஜமாகவே அதிசயம் என்றே கூறப்படுகிறது
ஹனுமந்தப்பாவின் மனஉறுதிதான் அவரை உயிருடன் வைத்திருந்தாகவும் சொல்லப்படுகிறது. சியாச்சினில் பணியாற்றுவதற்கு உடல் தீரம் மட்டுமல்ல, மிகுந்த மன உறுதியும் தேவைப்படும். பல தேர்வுகள் வைக்கப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களே அங்கு பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். ஹனுமந்தப்பாவும் மன உறுதிமிக்கவராக இருந்துள்ளார். அதன் காரணமாகவே அவர் சியாச்சினில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
தற்போது 33 வயதான ஹனுமந்தப்பாவுக்கு மகாதேவி என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். ஹனுமந்தப்பா உயிருடன் மீட்கப்பட்டதும் 'உங்கள் மகன் உயிருடன் இருக்கிறார்' என்று அவரது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அப்போது அந்த குடும்பத்தினர் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
அந்த சந்தோஷம் நிலைக்க வேண்டுமென்பதுதான் இந்தியாவின் ஆசை!
No comments:
Post a Comment