தென்னக ரயில்வேயின் பல்வேறு திட்டப் பணிகளுக்கான துவக்க விழா, சென்னை தாம்பரம் ரயில் நிலையம் எதிரே நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணியளவில் நாம் அங்கே ஆஜரானோம். ரயில் நிலையத்தின் எதிரே மந்திரி சுரேஷ் பிரபாகர் பிரபுவை வரவேற்பதாக பா.ஜ.க.வினர் போஸ்டர்களை பிரமாண்டமாக ஒட்டி வைத்திருந்தனர்.
ஆனால், விழா மேடை எங்கே? என்று விழா முடிந்த பின்னரும் பலர் 'மேடை' யைத் தேடிக் கொண்டிருந்தனர். ரயில் நிலையத்தின் எதிரே விழா என்று சொல்லி விட்டு அங்கிருந்து பல கிலோ மீட்டர் கடந்து, ஊருக்கு ஒதுக்குப்புறமான ஃபாரஸ்ட் ஏரியா போன்ற இடத்தில் மேடை போட்டிருந்ததுதான் இதற்குக் காரணம்.
மேடையில் ரயில்வே அதிகாரிகள், பாதுகாப்புப் போலீசார் பத்து பேர் சூழ்ந்திருக்க, மேடைக்கு முன்பாக இருநூறு ரயில்வே போலீசாரும், ரயில்வே போலீஸ் அதிகாரிகளும் அமர வைக்கப்பட்டிருந்தனர். 'பொதுமக்கள் அமர' என்று குறிப்பிட்டிருந்த இடத்தில் பாஜக, அதிமுக கொடிகளுடன் அதிகபட்சமாக ஐம்பது பேர் இருந்தனர். இப்படியாக தொடங்கியது ரயில்வே விழா.
விழா மேடையில் ரயில்வே மந்திரி சுரேஷ் பிரபாகர் பிரபுவுக்கும் , தமிழக மந்திரி சின்னையாவுக்கும் நடுவில் போட்டிருந்த இருக்கையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவை உட்கார வைத்தபோதே மேடை களை கட்ட ஆரம்பித்து விட்டது. இவர்களுக்கு அடுத்து தமிழக மந்திரி தங்கமணி, அ.தி.மு.க. எம்.பி.கள் கே.என். ராமச்சந்திரன், மரகதம் குமரவேல் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மேடையில் இருந்தனர்.

தென்னக ரயில்வேயின் பொதுமேலாளர் வசிஷ்டஜோரி விருந்தினர்களை வரவேற்று அமர்ந்ததுமே முதல் ஆளாக பேச வந்தார் தி.மு.க.வின் திருச்சி சிவா.
"ஈரோட்டில் ஒரு கல்லூரி வேண்டும் என்று தந்தை பெரியார் ஆசைப்பட்டார். ஆனால், அதற்கான நிதிவசதி அரசின் கையில் இல்லை என்று அப்போது சொல்லப்பட்டது. தன்னுடைய 20 ஏக்கர் நிலத்தையும், 5 லட்ச ரூபாய் பணத்தையும் பெரியார் வழங்கிய பின்னர் அங்கே கல்லூரி கொண்டு வரப்பட்டது. என்னைப் போன்றவர்கள் அங்குதான் படித்தோம். அந்த கல்லூரி தொடக்க விழாவில், தந்தை பெரியார் மேடைக்கு எதிரேதான் உட்கார வைக்கப்பட்டார் இது வரலாறு.
வள்ளுவர் கோட்டத்தை கட்டி முடித்த கலைஞரை அதன் 13-ம் ஆண்டு விழாவின் போது எதிர்வரிசையில் உட்கார வைத்ததும் வரலாறு. இங்கேயும் அதுதான் நடந்திருக்கிறது. என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்துதான் திருச்சி ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அமைந்தது என்பதை இங்கே யாரும் குறிப்பிடவில்லை.
ரயில்வே நிர்வாகம் கொடுத்திருந்த எந்த விளம்பரத்திலும் என்னுடைய பெயர் இடம் பெறவில்லை..." என்று சொல்ல, குழுமியிருந்த ரயில்வே துறையினரும், பொதுமக்களில் சிலரும் அதற்கு விசிலடித்து கைதட்ட ஆரம்பித்தனர். ரயில்வே மந்திரி 'மொழி' பிரச்னையால் நடக்கும் நிகழ்வை புரியாமல் அருகிலிருந்தவர்களிடம் கேட்கவே, திருச்சி சிவா, ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்து விட்டார்.

அதிலிருந்து கொஞ்சம்...
"என் மதிப்பிற்குரிய நண்பர் மாண்புமிகு சுரேஷ்பிரபாகர் பிரபு அவர்களே... என்னுடைய பேச்சு கண்டிப்பாக உங்களுக்குத்தான் கேட்க வேண்டும்" என்று ஆரம்பித்து, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை புறக்கணிக்கணிப்பு, தமிழகத்துக்கு தேவையான ரயில்வே திட்டப் பணிகள் குறித்த அத்தனை தேவைகளையும் பட்டியலிட ஆரம்பித்தார்.
"இது எவ்வளவு சிறப்பாக நடந்திருக்க வேண்டிய கூட்டம் தெரியுமா ? மக்கள் நடமாட்டமே இல்லாத ஒரு இடத்தில் இப்படியொரு விழாவை தொடங்கி வைத்து அதில் நீங்கள் ( ரயில்வே மந்திரி) பேசவிருப்பதில் உளப்பூர்வமாகவே எனக்கு திருப்தியில்லை. என்ன சிறப்பான ஏற்பாட்டை ரயில்வே நிர்வாகம் செய்திருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. மிக சிறப்பான முறையில் நடக்கின்ற விழா என்று ரயில்வே அதிகாரிகள் இதில் வியந்துகொள்ள என்ன இருக்கிறது?
இது திருச்சியில் மக்கள் கூட்டத்தின் மத்தியில் நடந்திருக்க வேண்டிய விழா. திருச்சியில் இந்த விழாவை வைத்தால் தி.மு.க.வுக்கு எங்கே நல்ல பெயர் வந்து விடுமோ என்று அதிகாரிகள் ரொம்பவும் பாடுபட்டு அதை இங்கே மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள்.
மத்திய அமைச்சரவை மற்றும் ரயில்வேயின் பிற துறை சார்பில் செய்யப்பட்ட எந்த விளம்பரத்திலும் தி.மு.க.வின் எம்.பி.யான என் பெயரை ஒதுக்கி வைத்துவிட்டு செயல்பட்டிருக்கிறார்கள். உங்களுக்குத் (ரயில்வே மந்திரி) தெரியாமல்தான் இப்படியெல்லாம் நடந்திருக்கிறது என்று சொன்னால் என்னால் அதை ஏற்க முடியாது" - இப்படியாக தொடர்ந்து பன்ச் மேல் பன்ச் ஆக வைத்துக் கொண்டே போனார் திருச்சி சிவா.

திருச்சி சிவாவைத் தொடர்ந்து பேச வந்த அதிமுக எம்.பி. மரகதம் குமரவேல், மந்திரி சின்னையாவை அண்ணன் என்றும், எம்.பி. கே.என்.ராமச்சந்திரனை அப்பா என்றும் உறவுமுறை வைத்து 'அவர்களே' உரையாற்றினார்.
அதிமுகவின் எம்.பி.யான கே.என். ராமச்சந்திரன், "இந்த மேடையிலே இருக்க எனக்கு வாய்ப்பு அளித்த அம்மா அவர்களுக்கு நன்றி" என்று தொடங்கி, ஒவ்வொரு மூன்று வரி பேச்சையும் அவரே மேஜர் சுந்தரராஜன் போல ஏற்ற இறக்கத்தோடு தமிழில் ஒப்பித்தார்.
மந்திரி சின்னையா, 'அம்மாவின் உத்தரவுப்படி... அம்மா அவர்களின் ஆணைப்படி...' என்று அம்மா குறித்த வாழ்த்துகளாக குவித்துக் கொண்டே போனார். பேச்சை முடிக்கும்போது திருச்சி சிவாவுக்கு கவுன்ட்டர் கொடுப்பது போல "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்றார்.
நிறைவுரையாற்றிய மத்திய ரயில்வே மந்திரி சுரேஷ் பிரபாகர் பிரபு, ஓப்பன் ஸ்டேஜில் திருச்சி சிவாவிடம் நடந்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார். பேச்சை முடிக்கும் போது அவரும் 'மாண்புமிகு அம்மா' வுக்கும் என் நன்றி என்றார்.
தமிழக மந்திரி சின்னையா பேச்சை முடித்துக் கொண்டு அவர் சீட்டுக்கு வந்ததும், மத்திய ரயில்வே மந்திரி பேசுவதற்கு எழுந்திருக்கவே அவர் அமர்ந்திருந்த இடம் 'நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' என்பது போல காலியாய்க் கிடக்கவே திருச்சி சிவாவுக்கும், மந்திரி சின்னையாவுக்கும் வாக்குவாதம் ஆரம்பித்தது...

திருச்சி சிவா : நாங்க எப்போது புரோட்டாகால் மீறி செயல்பட்டிருக்கிறோம் உங்களால் சொல்ல முடியுமா?
சின்னையா : ஒன்றா, இரண்டா ?
திருச்சி சிவா: ஏதோ முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்னு புதுசா ஏதோ சொல்ல வந்தீங்களே அதற்கென்ன அர்த்தம். ஆதாரத்துடன் ஏதாவது வரிசைப்படுத்தி சொல்வீர்களா...?
-இப்படியே இருவரும் ஸ்டேஜில் காரசாரமாக வாதிட்டுக் கொண்டே இருந்தனர்.
விழா முடிந்தது. விழா மேடையில் ஏறும்போது இருந்த வேகத்தைவிட இறங்கும்போது கூடுதல் வேகத்தைக் கையிலெடுத்த மத்திய மந்திரி சுரேஷ்பிரபாகர் பிரபு, அதே வேகத்தில் காரில் ஏறிக் கொண்டார். அவருடைய நோக்கத்தை அறிந்துகொண்ட போலீசார், மீடியாக்களையும், சால்வை போட வந்தவர்களையும் சாதாரணமாக கீழே பிடித்துத் தள்ளி விட்டு போய்க் கொண்டே இருந்தனர்.
ரயில்வே பி.ஆர்.ஓ., தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆகியோரின் அழைப்பின் பேரில் அங்கே சென்றிருந்த ஊடகத்தினர், 'பிரஸ் மீட்'டுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அந்த பிரத்யேக அறையை முறைத்தபடி வெளியேறினர்.
சிங்கிளாக வந்து ஆளுங்கட்சியின் இரண்டு மந்திரிகள், எம்.பி.கள், கட்சியினர் என்று அனைவரையும் தன்னுடைய 'வெடி' பேச்சால் ஆட்டம் காண வைத்து விட்டுப் போயிருக்கிறார், தி.மு.க. எம்பி.திருச்சி சிவா.

No comments:
Post a Comment