"தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வருகிற 5-ம்தேதி டெல்லி செல்கிறார், அங்கே பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவை சந்தித்து பா.ஜ.க. கூட்டணி ஜோதியில் மீண்டும் ஐக்கியமாகிறார்...!"- இதுதான் இப்போது தமிழக அரசியல் வட்டாரத்தை கலக்கிக் கொண்டிருக்கிற தகவல்.
வழக்கம் போல இதுவும் அலிபாபா கதைதானா? அல்லது உண்மையிலேயே பயணமும், கூட்டணியும் உறுதியாகி விட்டதா? என்ற சந்தேகமும் இந்த செய்தியின் கூடவே சேர்ந்து பயணிக்கிறது.
தமிழக பா.ஜ.க. ஏரியாவில் இது குறித்து விசாரித்தபோது அவர்களில் பலரும், " இதுவரையில் அப்படி ஒரு பேச்சு எங்கள் மட்டத்தில் எழவேயில்லை. விஜயகாந்தைப் பொறுத்தவரை அதே பழைய நிலைதான் நீடிக்கிறது.
அவரிடமிருந்து ஏதாவது ஒரு சிக்னல் கிடைக்கிறது என்றால் அதுபற்றி ஒரு முடிவுக்கு வரலாம். டெல்லிக்குப் போகிறவர், தலைவர் அமித்ஷாவை சந்திக்கிறாரா, இல்லையா என்பதைக் கூட எங்களால் உறுதியாக சொல்ல முடியாது. அப்படியே சந்தித்தாலும் அது கூட்டணிக்கான சந்திப்பா என்பதையும் உறுதிப்படுத்த முடியாது. இதுதான் உண்மையான நிலவரம். விஜயகாந்த் மட்டுமல்ல, யார் வந்தாலும் நாங்கள் வரவேற்க தயாராகத்தான் இருக்கிறோம்" என்கின்றனர்.
இவர்கள் இப்படி... தே.மு.தி.க. எப்படி? கட்சியின் நிர்வாகிகள், அடிமட்டத் தொண்டர்கள், சில எம்.எல்.ஏ.க்களிடம் பேசினோம்.

" தேர்தல் கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்கலாம் என்று பொதுக்குழுவில் நாங்கள்தான் கேப்டனுக்கு அதிகாரம் வழங்கினோம். அவரும் அதே பொதுக்குழுவில், 'உரிய நேரத்தில் சரியான முடிவை எடுப்பேன்' என்றார். தொடர்ந்து அந்தப் பொதுக்குழுவில் 'தொகுதியில் என்ன மக்கள் பணி செய்திருக்கிறீர்கள், எம்.எல்.ஏ. வுக்கான தொகுதி மேம்பாட்டுத் தொகையை முழுமையாக செலவிட்டீர்களா, வெற்றிக்கான வாய்ப்பு எப்படி இருக்கிறது?' என்பது போன்ற கேள்விகளைதான் கேட்டார். வேறெதுவும் கேட்கவில்லை.
அ.தி.மு.க. கூட்டணியிலேயே மீண்டும் தொடரலாம் என்று நாங்களே சொன்னாலும் கேப்டன் அதைக் கேட்க மாட்டார். நாங்களும் அப்படிச் சொல்ல வாய்ப்பில்லை. கடந்த நாலரை ஆண்டுகளில் எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், ஒருவர் கூட தொகுதிப் பணியை செய்ய முடியாமல், அவர்களை தொகுதிக்குள் தலைகாட்ட முடியாமல் கட்டிப் போட்டது அ.தி.மு.க. அக்கட்சியினரால் நாங்கள் பட்ட அவமானங்கள் கொஞ்சமல்ல. தேர்தலில் எங்களுக்கு இன்னொரு மாற்று தேவை என்றால் அந்த மாற்று பா.ஜ.க.வாக இருக்க முடியாது.
கட்சியில் யாரிடமும் கையில் காசு இல்லை. எல்லோருமே வறட்சி நிலையில்தான் இருக்கிறோம். பா.ஜ.க-வோடு கூட்டணி சேர்ந்தால், கைக்காசு முதல் உடல் உழைப்பு வரை நாம்தான் செலவழிக்க வேண்டும். கேப்டனைப் பொறுத்தவரை பா.ஜ.க. வோடு கூட்டணி வைத்தால் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து விடுவார்கள். ஆனால், அதனால் கட்சிக்கு என்ன லாபம்?’’ என்று குமுறுகின்றனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, விஜயகாந்துக்கு ஆசியும் வழிகாட்டலும் வழங்குவது சென்னைக்கு அருகாமை மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிரசித்தியும் சர்ச்சையும் ஒருங்கே பெற்ற மடம். அந்த மடத்தினர், ''எல்லாம் சரியா வரும்... டெல்லிக்கு போயிட்டு வெற்றியோடு வாங்கோ'' என்று வாழ்த்தியுள்ளனர்.
அறிவாலயம் ஏரியாவிலோ, " துணை முதல்வர் பதவிக்காக தி.மு.க.வை இறங்கி வர வைப்பதற்காக இந்த பயணம், கேப்டனே பார்க்கும் வேலையாகத்தான் இருக்குமோ?" என்ற சந்தேகமும் சுழன்றுகொண்டிருக்கிறது.
ஆக, 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமில்ல...!' என்று சொல்லுமளவுக்கு பல வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது!
ஆக, 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமில்ல...!' என்று சொல்லுமளவுக்கு பல வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது!
No comments:
Post a Comment