வருடத்திற்கு இரண்டரை லட்சத்துக்கு அதிகமாக வருமானம் பெறுவோர் அனைவரும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். அப்படி வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாவிட்டால் அபாரதமும் தண்டனையும் அனுபவிக்க நேரிடும்.
அதே சமயம் சரியாக நம்முடைய வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தால், வரி சேமிப்பு திட்டங்கள் மூலம் நம்முடைய வருமான வரியைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் முடியும். ஆனால் பெரும்பாலும் நாம் செய்யும் தவறுகளால் வருமான வரியைத் திரும்பப் பெறுவது தாமதமாகலாம். விரைவில் நம்முடைய வருமான வரியைத் திரும்பப் பெற வேண்டுமென்றால்.....
1. ஈசி ஆன்லைன்
அதே சமயம் சரியாக நம்முடைய வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தால், வரி சேமிப்பு திட்டங்கள் மூலம் நம்முடைய வருமான வரியைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் முடியும். ஆனால் பெரும்பாலும் நாம் செய்யும் தவறுகளால் வருமான வரியைத் திரும்பப் பெறுவது தாமதமாகலாம். விரைவில் நம்முடைய வருமான வரியைத் திரும்பப் பெற வேண்டுமென்றால்.....
1. ஈசி ஆன்லைன்
ஆன்லைனில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்தால், தாக்கல் செய்த தேதியிலிருந்து மூன்று வாரங்களில் நம் கணக்குக்கு அந்த வருமான வரி வந்து விடும். அதுவே நேரடியாக கணக்குத் தாக்கல் செய்தால் மேலும் அதிக நாட்கள் தாமதமாகும்.
2. பான் மற்றும் ஆதார் எண்
வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது மறக்காமல் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைத்தால் வருமான வரிக் கணக்குத் தாக்கல் நடைமுறைகள் மிக வேகமாக நடைபெறும். ஏனெனில் உங்களுடைய வரிக் கணக்குத் தாக்கல் ஆவணங்களை பரிசோதனைக்காக பெங்களூரு மைய அலுவலகத்துக்கு நீங்கள் அனுப்பி வைக்க வேண்டிய அவசியம் இருக்காது. உங்களுடைய ஆதார் எண்ணே உங்களுடைய விவரங்களைப் பரிசோதிக்க போதுமானது.
3. காசோலை வேண்டாம் ஈசிஎஸ் போதும்
நீங்கள் உங்கள் வரிக் கட்டணத்தைத் திரும்பப் பெற காசோலை வசதியை தேர்தெடுத்தால், உங்களுக்கான பணம் கிடைப்பது தாமதமாகும். இதுவே ஈசிஎஸ் வசதியை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால் உங்களுடைய வங்கிக் கணக்குக்கே நேரடியாக வந்துவிடும். உங்கள் முகவரியில் காசோலையை வாங்கி, நீங்கள் இல்லையென்றால் மீண்டும் அது வருமான வரித் துறைக்கே சென்றுவிடும். இதனால் மேலும் அந்தப் பணத்தை வாங்க கால தாமதமாகும்.
4. சரியான தகவல்கள்
4. சரியான தகவல்கள்
நீங்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்யும் போது கொடுக்கும் அனைத்து தகவல்களையும் மிகச் சரியாக தர வேண்டும். உங்கள் கணக்குத் தாக்கலில் ஏதேனும் தவறு இருந்தால் வருமான வரித்துறையிலிருந்து உங்களை அழைத்து அதற்கான விளக்கம் கேட்பார்கள். இது மேலும் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதில் தாமதத்தை ஏற்படுத்தும்.
5. கெடு தேதிக்கு முன்பே
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய உள்ள கடைசி கெடு தேதி ஜூலை 31 வரை காத்திராமல், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு முன்கூட்டியே தாக்கல் செய்து விடுவது நல்லது. இதனால் மேலும் விரைவில் உங்களுக்குத் திரும்பப் பெற நினைக்கும் வரிப் பணத்தைப் பெற முடியும். மேலும் ஏதேனும் தவறுகள் இருந்தால் அவற்றைத் திருத்திக் கொள்ளவும் கால அவகாசம் இருக்கும்.
இந்த ஐந்து விஷயங்களைக் கடைபிடித்தாலே உங்களுடைய வரிப் பணத்தை விரைவில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment