அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்து வந்த நாஞ்சில் சம்பத் அண்மையில் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த இரு தினங்களாக நாஞ்சில் சம்பத் தி.மு.க.வில் இணையக்கூடும் என்ற தகவல்கள் பரவிக் கொண்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக இன்று நாஞ்சில் சம்பத் வருகிற 6-ம் தேதி தி.மு.க.வில் இணைகிறார் என்று தேதியே குறிப்பிட்டு தகவல்கள் பரவ ஆரம்பித்தன.
இதுகுறித்து நாஞ்சில் சம்பத்தை தொடர்பு கொண்டு நாம் கேட்டோம். இதைப்பற்றி கேட்டதுமே வாய்விட்டு சிரித்த அவர் பேசத் தொடங்கினார்.
''யாராவது வாந்தி எடுக்கிற வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. நான் அ.தி.மு.க.வில்தான் நீடிக்கிறேன். தேர்தல் பிரசாரத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து, அதற்காக செய்திகளை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஆபத்தான காலக்கட்டத்தில் அரசியலில் அடைக்கலம் தந்து, மரணத்தோடு போராடிக் கொண்டிருந்தபோது என் உயிரை மீட்டு தந்த அம்மாவின் காலடி சுவட்டை ஒட்டி என் பயணம் தொடரும்.
நான் என்னுடைய கிராமத்து வீட்டில் இருந்து கொண்டு ஜெயகாந்தனின் சிறுகதைகள் இரண்டு தொகுப்பு, ஜெயகாந்தனின் முத்திரை கதைகள், குமரகுருபரரின் பிரபந்தங்கள் இரண்டு தொகுப்பு, விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதி கூறியது, பிள்ளைப் பெருமான் அய்யங்கார் எழுதிய அச்சபிரபந்தம் ஆகிய நூல்களை வாசித்து கொண்டிருக்கிறேன். எந்த சலனத்திற்கும் ஆட்படாமல் என் வீட்டில் உட்கார்ந்து நான் அமைதியாக படித்துக் கொண்டிருக்கிறேன்.
மோட்டார் விகடன் இதழுக்காக ஒரு சுற்றுலா, என் வாழ்க்கையின் மறுபக்கத்தை பதிவு செய்கிற ஒரு பயணமாக கேரளாவில் பயணத்தை தொடர இருக்கிறேன். வலைத்தளங்களில் வருகின்ற செய்திகளை நான் பார்ப்பதில்லை. ஆகவே, இதுபோன்ற வலைத்தளங்களில் வைரஸாக வரும் இந்த ஆபத்தான செய்திகளை கண்டு யாரும் ஏமாற வேண்டாம்'' என்றார்.

No comments:
Post a Comment