நிமிடத்துக்கு ஒரு லட்சத்து 68 ஆயிரம் கியூபிக் தண்ணீரை கொட்டும் நயகரா நீர்வீழ்ச்சி தண்ணீரே விழாமல் சில நாட்கள் காய்ந்து கிடக்கப் போகிறது. என்ன நயகராவில் தண்ணீர் விழாதா? என்று யாரும் யோசிக்க வேண்டாம். செய்து காட்டத்தான் போகிறது அமெரிக்கத் தொழில் நுட்பம்.
நயகரா நீர்வீழ்ச்சியில் இருந்து அருகில் உள்ள ஸ்டேட் பார்க் தீவு பகுதியையும் இணைக்கும் 115 ஆண்டு கால பாலத்தில் பராமரிப்பு பணிகளை செய்வதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நயகராவில் நீர்வீழ்ச்சி பகுதியை நோக்கி செல்லும் தண்ணீரை சில நாட்கள் வேறு பகுதிக்கு திருப்பி விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை என்ஜீனியர்கள் இந்த பணியை செய்யவுள்ளனர். நயகராவில் தண்ணீரை திசை திருப்புவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 1969ஆம் ஆண்டு இதே போன்று என்ஜீனியர்கள் செய்து காட்டியுள்ளனர். அந்த சமயத்தில் கனடா பகுதியில் உள்ள ஹார்சஸ்ஹோ நீர்வீழ்ச்சிக்கு தண்ணீரை திசை திருப்பியுள்ளனர்.
அப்போது பாறைகள் நிறைந்த நயகராவை லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கண்டுகளித்துள்ளனர். அமெரிக்க- கனடா நாட்டு எல்லையோரத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி உலகப் புகழ்பெற்றது. அமெரிக்கா செல்லும் எந்த ஒரு சுற்றுலாபயணியும் இந்த நீர் வீழ்ச்சியை பார்க்காமல் வரமாட்டார்.
No comments:
Post a Comment