தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நிரோஷா, ஆந்திரா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம் சோமலா மண்டல் பகுதியை சேர்ந்தவர் நிரோஷா. இவர், செகந்திராபாத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இவரது காதலன் கனடாவில் உள்ளார்.
இந்த நிலையில், செகந்திராபாத்தில் உள்ள தனியார் விடுதியில் நிரோஷா இன்று அதிகாலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விடுதி உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிரோஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நிரோஷா தற்கொலை செய்வதற்கு முன்பாக செல்போனில் பேசியதாகவும், அதன் பின்னரே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காதல் விவகாரத்தில் இந்த முடிவை அவர் எடுத்தாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் அண்மையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் தூக்குக் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment