அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, அதிமுக பிரமுகர் ஒருவரை போனில் மிரட்டி கொலைமிரட்டல் விடுக்கும் ஆடியோ, வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக இருப்பவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.
தமிழகத்தின் செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக இருப்பவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.
இவர் அதிமுக பிரமுகர் பைபாஸ் ராமசாமி என்பவர் குறித்து, அவருக்கு நெருக்கமான சிவகுமார் என்பவரிடம் போனில் பேசியுள்ளார்.
அதில், 'சிவா...இந்த பைபாஸ் ராமசாமிய கொஞ்சம் ஒழுங்கா இருக்க சொல்லுங்க. நடுரோட்டில வச்சு தலைய தனியா எடுத்துடுவேன். நான் சொன்னா வெட்டறதுக்கு என்கிட்ட நூறு பேரு இருக்கான். அந்த நாய் பயலுக்கு வெட்றதுக்கு ஒரு பய கிடையாது. தெருவுல கிடக்கான். என்கிட்டே இருக்குற ஆளு பூரா உனக்கு தெரியும்.
இனிமேல் என்னை பத்தி பேசினான்னா வீட்டுக்குள்ள விட்டு வெட்ட விட்டுடுவேன். நான் சொன்னேன்னு சொல்லுங்க. அந்த **** பையனுக்கு போன் போட்டால் எடுக்க மாட்டேன்றான். அந்த ***** மகன் எனக்கு ஒண்ணும் வேலை செய்ய வேண்டாம். திமுகவுக்கே வேலை செய்யட்டும். இவனால நான் ஒண்ணும் ஜெயிக்கல.இவன் என்ன ***** பையன் செஞ்டுவான் அங்க. இந்த ஜாதியைக் காட்டி மிரட்டுறது, ஆளைக் காட்டி மிரட்டுறது எல்லாம் என்கிட்டே காட்டக் கூடாது. பாலகிருஷ்ணன் கிட்ட வச்சுக்க சொல்லு. என்கிட்டே காட்டினான் என்றால் நடு ரோட்டுல நானே வெட்டிப்புடுவேன். என்ன விளையாடுறானா....கமிஷனர் ஆபிஸ்ல போய் என்ன என்ன பேசியிருக்கான்... கூப்பிட்டு சொல்லுங்க சிவா..." என்று ராஜேந்திர பாலாஜி பேசி இருப்பது பகீர் கிளப்புவதாக உள்ளது.
ஏற்கெனவே எம்.எல்.ஏ. சீட் வாங்கித் தருகிறோம் என்று அதிமுக பிரமுகர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக புகார் எழுந்துள்ள விவகாரத்தில், இந்த உரையாடலில் உள்ள சிவா என்பவர் மீது அதிமுக தலைமை நவடிக்கை எடுத்தது. மேலும் அவர் கைதும் செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த ஆடியோ வெளியாகி அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
அண்மையில், அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா தனது ஆண் நண்பருடன் போனில் பேசிய உரையாடலின் ஆடியோ பகுதி வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை உண்டாக்கியிருந்தது.

பரபரப்பு ஏற்படுத்தியிருக்கும் ஆடியோ விவகாரம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்டபோது, "இது நான் ஒரு ஆண்டுக்கு முன்பு பேசியது. என் வீட்டு பெண்களை ஆபாசமாக பேசியதால் ஆத்திரத்தில் பைபாஸ் ராமசாமிக்கு நெருக்கமான சிவக்குமாரை கூப்பிட்டு சத்தம் போட்டு வைக்கும்படி பேசினேன். தற்போது தேர்தல் வருவதால் அரசியல் உள் நோக்கத்தோடு இதை வெளியிட்டுள்ளனர். ஆனால் அம்மாவுக்கு எல்லாம் தெரியும்' என்று கூறினார்.
No comments:
Post a Comment