Monetize Your Website or Blog

Friday, 1 April 2016

உலகை அச்சுறுத்தி வரும் ஐஎஸ் தலைவரின் ஆச்சர்ய மறுபக்கம்!

உலகை அச்சுறுத்தும் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் தலைவர் அல் பக்தாதி வெறும் ஒரு சாதாரண குடும்பஸ்தராகவே இருந்தார் என அவரது முன்னாள் மனைவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அல் பக்தாதியின் முன்னாள் மனைவி சாஜா அல் துல்மைமி கூறுகையில், பல்கலைக்கழகத்தில் மதம் மற்றும் ஷாரியா சட்டங்கள் குறித்து வகுப்புகள் நடத்தி வந்த ஹிஷாம் முகமது என்பவர்தான் பின்னாளில் அல் பக்தாதி என்ற பெயரில் ஐ.எஸ். தலைவராக உருமாறினார்.

பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்த காலத்தில்தான் தமக்கு அவருடன் திருமணம் நடைபெற்றது. குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்ட மனிதராகவே அல் பாக்தாதி அந்த காலகட்டத்தில் வாழ்ந்து வந்தார். ஆசிரியர் பணி முடித்து நேரம் தவறாமல் வீடு வந்து சேரும் அவர், அரசியல் எதிர்ப்பு இயக்கங்களில் கூட கலந்து கொண்டதில்லை. ஆனால் மிகவும் ஆபத்தானதும் கொடூரமானதுமான ஒரு அமைப்புக்கு அவர் எப்படி தலைவரானார் என்பது இன்றளவும் புரியாத புதிராகவே இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அல் பாக்தாதிடம் இருந்து ஒருவழியாக தப்பித்து வந்த பின்னர் தமது மூன்றாவது கணவருடன் வாழ்ந்துவரும் சாஜா, தமது மகளை பாக்தாதி எந்த நேரத்தில் கடத்திச் செல்ல வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் மற்றும் பிரசெல்ஸ் தாக்குதல்களை கொலைகாரர்களின் மிருகத்தனம் என கூறும் சாஜா, ஆயுதங்களால் அப்பாவி மக்களை கொலை செய்வது பயங்கரவாதம் அல்ல, கொலை என்றார்.



No comments:

Post a Comment