வேலூர் சிறையில் கண்காணிப்பாளர் ஒருவரின் அதீத செயல்பாடுகளால் கொந்தளிப்பில் இருக்கின்றனர் கைதிகள். "இவரது டார்ச்சரால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறேன்' என ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் எழுதிய கடிதம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலூர் மத்திய சிறை வளாகத்தின் புதிய கண்காணிப்பாளராக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பதவிக்கு வந்தார் சண்முகசுந்தரம். இவர் வந்த நாட்களில் இருந்தே கைதிகளுக்கு நள்ளிரவில் தொல்லை கொடுக்கும் வேலைகள் அதிகரித்துவிட்டதாம். இவரால் பாதிக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்கிறார்கள் தண்டனை சிறைவாசிகள்.
இதுபற்றி நம்மிடம் வழக்கறிஞர் மூலம் நம்மிடம் பேசிய தண்டனைக் கைதி ஒருவர், " கைதிகளை எப்படியெல்லாம் சித்ரவதை செய்ய வேண்டும் என்பதை சண்முகசுந்தரத்திடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். சிறைக்குள் பிஸ்டலோடு சுற்றக் கூடாது என்பது விதி. பணியில் இருக்கும் நேரங்களில் பிஸ்டலோடுதான் குற்றவாளிகளை சந்திக்கிறார். தான் சொல்லும் வேலைகளைச் செய்யாத கைதியை கொடுமையாகச் சித்ரவதை செய்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கைதி ஒருவர், கடந்த வாரம் பிளேடால் கையை அறுத்துக் கொண்டுவிட்டார். ஆபத்தான நிலையில் அந்தக் கைதி சிகிச்சை பெற்று வருகிறார். இரவு ஒரு மணிக்கு திடீர் திடீரென்று துப்பாக்கியோடு கைதிகள் அறையில் சோதனை நடத்துகிறார்.

இவரது செயல்பாடுகளைக் கண்டித்து கடந்த ஒரு வாரமாக, ராஜீவ் படுகொலை வழக்கின் கைதி முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதை கேள்விப்பட்டு 'உண்ணாவிரதம் இருந்து செத்து தொலையட்டும்' என பகிரங்கமாக பேசினார் கண்காணிப்பாளர். கடந்த வாரம் தருமபுரி பஸ் எரிப்பு வழக்கின் குற்றவாளி நெடுஞ்செழியனிடம் நிர்வாண சோதனை நடத்தினார்.
இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தபோது, தகாத வார்த்தைகளால் திட்டினார் சண்முகசுந்தரம். இதுபற்றி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார் நெடுஞ்செழியன். நேற்று சிறைக்குள் இருந்த சலூன் கடையை மூடிவிட்டார்.
இவரது சகிக்க முடியாத செயல்பாடுகளால் இரண்டாயிரம் கைதிகளும் மனஉளைச்சலுக்கு ஆளாகி யுள்ளனர். சிறைக் கைதிகளுக்கான குறைந்தபட்ச உரிமையைக்கூட கண்காணிப்பாளர் மீறுகிறார். அடி, உதை, துப்பாக்கியைக் காட்டி மிரட்டுதல் என மனநோயாளியைப் போல செயல்படுகிறார் கண்காணிப்பாளர். இவரால் சிறைக்குள் கலவரம் வெடிக்கப் போகிறது" என அதிர வைத்தார்.
நிலைமை விபரீதம் ஆவதற்குள், சிறைத் துறைத் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் வேலூர் மத்திய சிறை குற்றவாளிகள்.

No comments:
Post a Comment