நம் நாட்டின் மிகப்பெரிய சாபம், வாக்களிக்க பணம் கொடுப்பது. இன்று நேற்று அல்ல... 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிலை இருந்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் கமிஷன் புதுப்புது ரூல்ஸ்களை போட்டு என்னதான் இறுக்கிப் பிடித்தாலும் நம்ம அரசியல்வாதிகள் அதையெல்லாம் டபாய்த்து தங்களுடைய தில்லாலங்கடி வேலைகளை நடத்தி காட்டி விடுகிறார்கள்.
பார்ப்பதற்கு சாது மாதிரி இருக்கும் அரசியல்வாதிகள், தேர்தல் நேரத்தில் பல டெக்னிக்குகளை பயன்படுத்தி பணமோ, பொருட்களோ கொடுத்து வாக்குகளை வாங்கிவிடுகிறார்கள். பொலிடிக்கல் சயின்ஸ் படிக்கும் மாணவர்களுக்கு, திருமங்கலம் பார்முலாவை முக்கிய பாடமாக வைக்கும் அளவிற்கு நம் அரசியல்வாதிகள் முத்திரை பதித்துள்ளார்கள்.
சமகாலத்தில், வாக்காளர்களை கவனித்து வாக்குகளை வாங்குவதில் பல புதிய யுக்தியை கண்டு பிடித்தவர்களென்று மு.க. அழகிரியையும், ரித்தீஷையும் சொல்லலாம். இவர்கள் போட்ட ராஜபாதையில்தான் அதிமுகவினர் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
2006 சட்டமன்ற தேர்தலில், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தொகுதியில் போட்டியிட்ட சுப. தங்கவேலன் வெற்றி பெறுவது சந்தேகம் என்று எல்லோரும் நினைத்த நேரத்தில்தான், தங்கவேலன் பேரன் என்று சொல்லிக்கொண்டு, ஜிகினா டிரஸ் போட்டுக்கொண்டு கட்டையா குட்டையா, மூக்கு பொடைப்பா ஒருத்தர் களத்தில் இறங்கி ஒருவர் வேலை செய்தார். அவர்தான் ரித்தீஷ். அப்போது அவர் திமுகவில் உறுப்பினர் கூட இல்லை. ஆரத்தி தட்டுகளில் ஐநூறு ரூபாய் தாள்களை போட, மக்கள் இன்ப அதிர்ச்சியானார்கள். கிராமந்தோறும் மக்கள் ஆரத்தி தட்டுகளோடு காத்திருக்க ஆரம்பித்தார்கள். ஆரத்தி தட்டுகளுக்கு தட்டுப்பாடு வரும் அளவிற்கு நிலைமை போனது.
சின்ன பையன்கள் முதல் பெரியவர் வரைக்கும் ஐநூறு, ஆயிரம் என்று மைடியர் மார்த்தாண்டன் பிரபு ஸ்டைலில் அள்ளிவீச, தேர்தல் கமிஷனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கண்காணிப்புக்கு வரும் போலீஸ் அதிகாரிகளுக்கும் கவனிப்பை பெரிதாக நடத்த அவர்களும் வாயை மூடிக்கொண்டார்கள். இதைவிட ஒவ்வொரு கிராம வாக்குகளையும் பல்காக ( Bulk) வாங்க, ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று டீல் பேசி முன் கூட்டியே செக் வழங்கப்பட்டது. இந்த பார்முலாவையே, தான் எம்பிக்கு போட்டியிட்டபோது அப்படியே ஃபாலோ செய்து அமோக வெற்றி பெற்றார். பிரபலமான திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தியை எதிர்த்து எளிதாக வெற்றி பெற்றார் ரித்தீஷ்.

மதுரை மாவட்டத்தில் வீடுகளுக்கு சென்று பணம் கொடுக்க சிரமமாக இருந்தால், ஏரியாக்களில் திடீர் திடீரென்று காது குத்து, மஞ்சள் நீராட்டு விழாக்கள் நடக்க ஆரம்பித்துவிடும். இதில் யாரும் மொய் செய்ய வேண்டாம். செமத்தியான கறி சோறு போட்டு கவனிப்பார்கள். தாம்பூலக் கவரில் வெற்றிலையோடு ஆயிரம் ரூபாய் தாளும், ஓட்டுப்போட வேண்டிய சின்னமும் சுற்றப்பட்டிருக்கும். தப்பித்தவறி தேர்தல் அதிகாரிகள் வந்தாலும் கண்டுபிடிக்க முடியாது.
ஒரு தெருவில் நூறு வீடு இருந்தால், அதற்கு ஒரு பொறுப்பாளரை போட்டு பட்டுவாடா பண்ண சொல்லுவார்கள். அவர் நேரடியாக செல்ல மாட்டார். சின்ன பையன்களிடம் வீடு வீடாக கொடுக்க சொல்வார். இது சரியாக எல்லா வீட்டுக்கும் போய்விட்டதா என்பதை கிராஸ் செக்கும் பண்ணிவிடுவார். இதில் தங்கள் கட்சிக்கு எதிரானவர் வீடென்றால், ரெண்டு மூணு கவர் அதிகமாக அங்கு கொடுப்பார்கள். பணம் வந்து விட்டால் திருப்பி கொடுக்க யாருக்கும் மனம் வராது.
அதனால், தன் கட்சி எதிர்கட்சி என்ற பாகுபாடில்லாமல் பட்டுவாடா செய்வார்கள். பெரும்பாலும் பள்ளி விடுமுறை நாட்களில் தேர்தல் வருவதால், பசங்க எல்லோரும் அவுட் சோர்சிங்காக பணப்பட்டுவாடா செய்யும் வேலைக்கு சென்று விடுகிறார்கள். சில ஊர்களில் ஒவ்வொரு கட்சியினரும் சில ஹோட்டல்களை பிடித்து வைத்துக் கொள்வார்கள். என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம், பார்சல் வாங்கலாம், காசு கேட்க மாட்டார்கள். வேட்பாளரை மறந்து விடாதே என்று மட்டும் அவ்வப்போது நினைவுபடுத்துவார்கள்.

சமீபத்தில் மதுரையில் வாக்காளர் அட்டை வந்துவிட்டதா என்பதை சரி பார்க்கிறோம் என்று ஒரு குரூப் ஒவ்வொரு வீடாக கணக்கெடுத்தது. அரசு வழங்கிய இலவச பொருட்கள், தாலிக்கு தங்கம், லேப்டாப் உட்பட அரசு வழங்கும் 15 வகையான இலவசங்களில் எத்தனை வந்துள்ளது என்று ஒரு படிவத்தில் கணக்கெடுத்தார்கள். எந்த பொருளும் வராவிட்டால் சீக்கிரம் தருவோம் என்று செல் நம்பரை வாங்கி சென்றார்கள். இதை திமுகவினர் கண்டுபிடித்து, அதிமுகவினர் இப்படி செய்கிறார்கள் என்று ஆதாரத்துடன் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
உசிலம்பட்டி பக்கம் வாக்காளர்களுக்கு தினம் ஒரு குவார்ட்டர் கொடுத்து வளைத்து போடும் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஊருக்கு ஊர் தேர்தல் காரியாலயம் என்று திறந்து வைத்திருப்பார்கள். ரெண்டு செய்தித்தாள் கிடக்கும். பேப்பரும் படிக்கலாம், சரக்கும் அடிக்கலாம். மாலையில் அதையே ஓபன் பாராக்கி விடுவார்கள்.

பணப்பட்டுவாடாவுக்கு மகளிர் சுயஉதவிக்குழுக்கள்தான் அரசியல்வாதிகளுக்கு எப்போதும் உதவிக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட இக்குழுக்கள், சமீபகாலமாக அரசியல்வாதிகளின் மேம்பாட்டுக்காக பயன்பட்டு வருகிறது. இதன் தலைவிகள் கச்சிதமாக பணப்பட்டுவாடாவை நடத்திக்கொடுக்கிறார்கள். இதற்கு இவர்களுக்கு தனி கவனிப்பு உண்டு. இன்னும் சில மகளிர் குழுக்கள், குத்துவிளக்கு பூஜை என்று ஊருக்கு ஒதுக்குப்புறமான கோயிலில் நடத்துவார்கள். கலந்து கொள்கிற பெண்களிடம் குத்துவிளக்கு, சேலை, பொருட்கள் இலவசமாக வழங்குவார்கள். அப்படியே யாருக்கு ஓட்டு போட வேண்டுமென்பதையும் சொல்வார்கள்.
காசோ, பொருளோ இனாமாக வாங்கிவிட்டால், கொடுத்தவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள் நன்றியுள்ள நம் மக்கள். நம் மக்கள் மீதான இந்த நம்பிக்கைதான் அரசியல்வாதிகளை கவருக்குள் வைத்தும், செய்தித்தாளுக்குள்ளும், பால்பாக்கெட்டோடு சேர்த்தும் பணத்தை வைத்து வீடுகளுக்குள் தைரியமாக போட வைக்கிறது.
No comments:
Post a Comment