Monetize Your Website or Blog

Wednesday, 6 April 2016

நாட்டுக் கோழி வளர்ப்பு

பொங்கல் பண்டிகை என்றாலே கிராமங்களில் ஜல்லிக்கட்டுமஞ்சு விரட்டுசேவக்கட்டு (சேவல்சண்டைஎனப் பாரம்பரிய விளையாட்டுகள் களைகட்டும்சேவல் சண்டைபொங்கல் சமயம்மட்டுமல்லாமல் கோயில் விழாக்களின்போதும் தொன்றுதொட்டு நடந்து வருகிறதுதற்போதுதமிழ்நாட்டில் சேவல் சண்டைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும்... பெருமைக்காக அந்தஸ்துக்காகசண்டைச் சேவல்களை வளர்ப்பவர்களும் உண்டுபக்கத்து மாநிலங்களில் சண்டைச் சேவலுக்குத்தேவை இருப்பதால்சேவல்களைப் பயிற்றுவித்து விற்பனை செய்பவர்களும் உண்டு.


பெரும்பாலும்சேவல் சண்டைக்கு நம்நாட்டு இனமான அசில் வகை சேவல்களைத்தான் தேர்வுசெய்வார்கள்இது நன்கு பெருத்து வளரக்கூடியது என்பதுதான் முக்கிய காரணம்அசில் போலவேபெருத்து வளரக்கூடிய இன்னொரு இனம்... 'சிட்டகாங்’ எனும் நாட்டுரகச் சேவல்இந்த இரண்டுஇனங்களையும் கலப்புசெய்துபெருவட்டு இனக் கோழிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்,திண்டுக்கல் மாவட்டம்காப்பிளியப்பட்டிபாலமுருகன்.



கட்டுமானத்தொழிலில் இருந்து கால்நடை வளர்ப்புக்கு!
காலை வேளையொன்றில்... கோழிகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்த பாலமுருகனைச்சந்தித்தோம்.

''எங்களுக்கு ஊர்ல ரெண்டு ஏக்கர் நிலம் இருக்குவிவசாயம்தான் குடும்பத்தொழில்டிப்ளமோ சிவில்இன்ஜினீயரிங் முடிச்சுட்டுகோயம்புத்தூர்ல பத்து வருஷம் வேலை பாத்தேன்குடும்பத்தை விட்டுபிரிஞ்சே இருந்ததாலகுடும்பத்தோட இருக்கணும்னு நினைச்சேன்விவசாயம் பண்ணிபொழைச்சுக்கலாம்னு மூணு வருஷத்துக்கு முன்ன ஊருக்கு வந்துட்டேன்எங்க தோட்டத்துல தண்ணிவசதி இல்லாததாலதென்னம்பட்டியில இருக்கற இந்தத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்தேன்.கோ.எஃப்.எஸ்-29 தீவனச்சோளம்கோ-4 மாதிரியான பசுந்தீவனப் பயிர்களை விதைச்சு... 16 கலப்பினபால் மாடுகளை வாங்கிபால் உற்பத்தி பண்ண ஆரம்பிச்சேன்ஒரு நாளைக்கு 250 லிட்டர் பால்கிடைச்சுட்டு இருந்ததுஆனாகொஞ்ச நாள்லயே கிணத்துல தண்ணி வத்திடுச்சுஅதனாலதீவனம்உற்பத்தி பண்ண முடியாததால... பத்து மாடுகளை வித்துட்டேன்இப்போ ஆறு மாடு மட்டும் கையிலஇருக்குமாடுகளுக்கு போட்ட ஷெட்டுலகோழிகளை வளர்க்க லாம்னு தோணுச்சுஅதனால ஒன்றரைவருஷமா கோழிகளை வளர்த்திட்டிருக்கேன்'' என்று  முன்னுரை கொடுத்த பாலமுருகன்தொடர்ந்தார்.
  
நாட்டுக்கோழிக்குத் தேவை அதிகம்!
''ஆரம்பத்துல... 'அழகுக்கோழிகளை வளர்க்கலாம்... நாட்டுக்கோழிகளை வளர்க்கலாம்னு பலரும்ஆலோசனை சொன்னாங்கநான்நமக்கு பக்கமான ஒட்டன்சத்திரம்அய்யலூர் சந்தைகள்ல எந்தக்கோழிக்கு மார்க்கெட் நல்லாயிருக்குனு பார்த்துஅதைத்தான் வளர்க்கணும்னு முடிவு பண்ணி...சந்தைகளுக்கு அடிக்கடி போயிட்டு வந்தேன்அப்போநாட்டுக்கோழிகளுக்கு நல்ல மார்க்கெட்இருந்தாலும்பெருவட்டு சேவல்களையும்கோழிகளையும் எல்லாரும் விரும்பி வாங்கறதைப்பாத்தேன்குறிப்பாஅசில் சேவல்களுக்கு நல்ல கிராக்கி இருந்துச்சுவிலையும் நல்லா கிடைக்கறதைத்தெரிஞ்சுக்கிட்டேன்நாமக்கல் கே.வி.கே-யிலயும் விசாரிச்சுட்டு அசில்சிட்டகாங் வகைக் கோழிகளைவாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன்.

                               


பெரும்பாலும்அசில் சேவல்களைத்தான் சண்டைக்குப் பயன்படுத்துவாங்கஅதனாலஇதுக்கு நல்லதேவை இருக்குநான் ரெண்டு ரகங்களையும் கலந்து கோழிகளை உருவாக்குறப்போ... கோழி,சேவல்கள் நல்ல பெருவெட்டா வருதுஇப்போகையில அசில்சிட்டகாங் ரெண்டு ரகத்துலயும் சேர்த்து10 சேவல்கள், 100 கோழிகள்,
100 குஞ்சுகள் வெச்சுருக்கேன்நான் உற்பத்தி பண்ணுன குஞ்சுகளை முதல் தடவை விற்பனை செய்துகிடைச்ச வருமானத்துல... பொள்ளாச்சியில இருந்து நூறு கடக்நாத் வகை கோழிக் குஞ்சுகளைவாங்கிட்டு வந்தேன்அதெல்லாம் இப்போ பருவத்துக்கு வர்ற வயசுல இருக்குஇதுபழங்குடி மக்கள்வளர்க்கற ரக கோழிஇதோட கறிகருப்பு நிறத்துலதான் இருக்கும்ரொம்ப மருத்துவ குணம் வாய்ந்தகறிஇந்தக் கோழி நல்ல விலைக்குப் போகும்'' என்ற பாலமுருகன்கடக்நாத் கோழிகளைக்காட்டியபடியே தொடர்ந்தார்.

வளர்ப்புக்கு மட்டும் விற்பனை!
''அசில்சிட்டகாங் கோழிகள் ஒரே மாதிரி இருக்கறதால தானாவே சேர்ந்து இனப்பெருக்கம்செஞ்சுக்கும்ஆனாகடக்நாத் கோழிகள் அந்த இனத்தோட மட்டும்தான் சேரும்அதனாலஇனம்கலக்குறதுக்கு வாய்ப்பில்லைசராசரியாஇப்போ ஒரு நாளைக்கு பத்து முட்டைகள் கிடைச்சுட்டுஇருக்குஅதை இன்குபேட்டர்ல பொரிக்க வெக்கிறேன்ஊளை முட்டைகள் போகமாசத்துக்குசராசரியா 200 குஞ்சுகள் உற்பத்தி ஆகுதுநான் குஞ்சுகளா விக்கிறதில்லைஅம்பதுஅம்பத்தஞ்சு நாள்வரைக்கும் வளர்த்துத்தான் விக்கிறேன்அதேமாதிரிகறிக்காகவும் விக்கிறதில்லைவளர்ப்புக்காகதாய்க்கோழிகளா மட்டும்தான் விக்கிறேன்சேவக்கட்டுக்காக சேவல்களைத் தனியாவும்வாங்கிக்கிறாங்க'' என்ற பாலமுருகன்பராமரிப்பு முறைகளை விளக்கினார்.
''50 அடி நீளம் 10 அடி அகலத்துல கூரைக் கொட்டகை போட்டிருக்கேன்சுத்தி கம்பி வலை இருக்கு.கோழிகளுக்கு எப்பவும் தண்ணி கிடைக்கற மாதிரி நாசில் பைப் வசதி செஞ்சு வெச்சுருக்கேன்.ஷெட்டுக்கு மேல பிளாஸ்டிக் பால் கேனை வெச்சு... அதுல குழாய்களை இணைச்சுருக்கேன்இந்தகேனை தினமும் தண்ணி ஊத்தி நிரப்பி வெச்சுடுவோம்தேவைப்படும்போது கோழிகள் குடிச்சுக்கும்.தினமும் காலையில தீவனத்தை தொட்டியில நிரப்பி வெச்சுடுவோம்நாட்டுக்கோழிக்குனுபிரத்யேகமா கம்பெனித் தீவனம் கடைகள்ல கிடைக்குதுஅதைத்தான் கோழிகளுக்குக் கொடுக்குறோம்.தினமும் சேகரமாகற முட்டைகளை எடுத்து பத்திரப்படுத்திடுவோம்.

ஒவ்வொரு செட்டா இன்குபேட்டர்ல வெச்சு பொரிப்போம்இதுக்காவே தனியா இன்குபேட்டர் ரூம்இருக்குஇன்குபேட்டர் மூலமா 21 நாள்ல குஞ்சு பொரிஞ்சுடும்அப்பறம் சுத்தப்படுத்திட்டுஅடுத்த செட்முட்டைகளை வெச்சுடுவோம்குஞ்சு பொரிச்சவுடனே ஈரம் காயுற வரைக்கும் இன்குபேட்டருக்குள்ளேயே வெச்சுடுவோம்அதுக்கப்பறம்அதை புரூடருக்கு மாத்துவோம்தரையில்தவிட்டைப் பரப்பிஅதுக்கு மேல நியூஸ் பேப்பரை விரிச்சுநாலடி விட்டத்துக்கு வட்டமா அட்டைபாய்இல்லனா தகரத்தை சுத்தி வெச்சு... இதுல வெப்பத்துக்காக பல்புகளை எரிய விடணும்இதுதான் புரூடர்.கூண்டுக்குள்ளகூட இந்த மாதிரி வசதியைப் பண்ணிக்கலாம்இப்போ கரன்ட் அடிக்கடி கட் ஆகறதால,மண் பானைக்குள்ள மூட்டம் போட்டு வெச்சுடுறோம்இது குஞ்சுகளுக்கு கதகதப்பா இருக்கும்.

குஞ்சுகள் பொரிஞ்சு வந்த முதல் நாள்குளுக்கோஸ் தண்ணி மட்டும் கொடுப்போம்ரெண்டாவது,மூணாவது நாள்ல அரைச்ச மக்காச்சோளம் கொடுப்போம்அதுக்கப்பறம்கம்பெனி தீவனம்கொடுக்குறோம்ஒரு மாசம் கழிச்சு குஞ்சுகள கொட்டகைக்கு மாத்திடுவோம்அம்மைகழிசல்நோய்களுக்கான மருந்துகளை... பிறந்ததுல இருந்து ஏழாம் நாள்பதினஞ்சாம் நாள்இருபத்தோராம்நாள்முப்பத்தஞ்சாம் நாள்அம்பத்தஞ்சாம் நாள்னு முறையா கொடுத்துடுவோம்அதுக்கப்பறம்மாசத்துக்கு ஒரு தடவை மருந்து கொடுப்போம்இதெல்லாம் கட்டாயம் கொடுக்க வேண்டிய மருந்து''என்று பராமரிப்பு முறைகளை விளக்கிய பாலமுருகன்நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.

 

ஒரு ஜோடி 1,500 ரூபாய்!

''நல்லா செழிம்பா தீவனம் கொடுத்து வளர்க்கறதால கோழிகள் மூணு மாசத் துலேயே ரெண்டு கிலோவரைக்கும் எடை வந்துடும்அம்பதுஅம்பத்தஞ்சு நாள் வளர்த்துதான் விற்பனை செய்றேன்வளர்ப்புக்குமட்டுமே கொடுக்கறதால ஒரு ஜோடி 1,500 ரூபாய்னு விற்பனை செய்றேன்மாசத்துக்கு 50 ஜோடிவரைக்கும் விற்பனை செய்றேன்வீட்டுத்தேவைக்கும்ரொம்ப நெருங்கின நண்பர்களுக்கும்தான்கறிக்காக கோழியை எடுத்துக்குவோம்இதெல்லாம் போக மீதியை பண்ணையிலயேவளர்த்துடுவோம்மூக்கு வளைஞ்சுகிளி மூக்கு மாதிரி இருக்கற சேவல்களை சண்டைக்குப் பழக்கவாங்குவாங்கஇதுக்குக் கூடுதல் விலை கிடைக்கும்தீவனச் செலவுபராமரிப்புச் செலவு எல்லாம்போக நாட்டுக்கோழி மூலமா மாசத்துக்கு சராசரியா அம்பதாயிரம் ரூபாய் வரைக்கும் லாபம்கிடைக்குது'' என்று சந்தோஷமாகச் சொன்னார் பாலமுருகன்.



No comments:

Post a Comment