பங்குச் சந்தை என்றால் ஏதோ ஒரு சூதாட்டம் ஆடுவதாக நம்மில் பலரும் நினைக்கின்றனர். சரியான முறையில் அணுகி பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதைவிட அதிக வருமானத்தைத் தரக்கூடியது.
பங்குச் சந்தையில் முதலீடு செய்து பணத்தை பெருக்க 8 வழிகள்:-
#1 – எதிர்காலத்தை உங்கள் கண்ட்ரோலில் இயங்க வையுங்கள்:
உங்களது வளத்தையும் ரிடையர்மென்டையும் பிறரது பிடிக்குள் விழ வைத்து விடாதீர்கள். அனைத்து ஊழல்களும் ஊழல் நிறுவனங்களும் ஷேர்மார்க்கெட்டை சிதைத்து கொண்டிருக்கும் இந்த சூழலில் உங்களின் இன்வெஸ்ட்மென்ட்கள் உங்களது சுய கட்டுப்பாட்டின் கீழ் இயங்குதல் அவசியம்.
#2 – விலைக்கும் மதிப்பிற்குமான வித்தியாசத்தை உணருங்கள்:
இதற்கான வித்தியாசத்தை இரண்டு ஜாம்பவான்களின் மேற்கோள்கள் மூலம் எளிதாக உணரலாம். அமெரிக்காவின் சிறந்த பிசினஸ் மேக்னேட்டும், முதலீட்டாளருமான வாரன் பஃப்பெட்டின் கூற்றுப்படி “விலை என்பது நீங்கள் கொடுப்பது . மதிப்பு என்பது நீங்கள் வாங்குவது". சிறந்த பங்குச்சந்தை முதலீட்டாளரான ஃபிலிப் ஃபிஷரின் மேற்கோள் சற்று ஆழமானது. “விலையைப் பற்றி முழுமையாக தெரிந்தவர்களும் மதிப்பினை பற்றி ஒன்றுமே தெரியாதவர்களும் நிறைந்து காணப்படும் இடமே பங்குச்சந்தை” என்கிறார் இவர்.
#3 – அடிப்படையான இன்வெஸ்ட்மென்ட் கான்செப்ட்களில் நுண்ணிய அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்:
பங்குச்சந்தையில் ஜாம்பவான்களாக திகழும் பலராலும் இது அனுபவத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. மிகவும் அடிப்படையான கான்செப்ட்களின் விளக்கத்தை அறிவதற்கு சற்று அதிகமான நேரத்தை செலவிடுங்கள்.
#4 – உங்களின் அவசரகால நிர்வாக திட்டத்தை எப்பொழுதும் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள் :
உங்களின் ஒட்டுமொத்த முதலீட்டு தொகுப்பையும் (investment portfolio ) எப்பொழுதும் கைவசம் வைத்திருப்பது நீங்கள் எதிர்நோக்கவிருக்கும் ஆபத்துகளிலிருந்து மீளவும் எதிர்கால நிகழ்வுகளுக்காக பொறுப்பேற்கவும் இன்றே உங்களை தயார்படுத்திக்கொள்ள உதவுகிறது.
#5 – செலவுகளில் சிக்கனம் தேவை:
செலவுகளை குறைப்பதற்கும் செலவுகளில் சிக்கனமாக இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அதனை உணர்ந்து செயல்படுங்கள். நீங்கள் எதற்காக முதலீடு செய்கிறீர்களோ அதன் நிலைத்தன்மை குறித்து அறிதல் அவசியம்.
#6 – உங்களின் சொத்து ஒதுக்கீடுகளை முதல் பிரியாரிட்டி ஆக்குங்கள்:
பெரும்பாலும் முதலீட்டாளர்கள் அசெட் அலகேஷனில் செலவிடும் நேரத்தை விட எந்த ஷேரை வாங்குவது என்பதிலேயே அதிக நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால் உங்களின் லாப நஷ்டங்களை முடிவு செய்வதில் 90 சதவிகித பங்களிப்பைத் தருவது அசெட் அலகேஷன் எனப்படும் சொத்தின் ஒதுக்கீடுகளே என பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சொத்து ஒதுக்கீடுகள் என்பது உங்களின் முதலீட்டுகளுக்கேற்ப உங்களின் சொத்துகளை பிரித்து ஆள்தல்.
#7 – உதவி பெறுங்கள் :
தனிமரமாக முதலீடு எனப்படும் கடலில் குதிக்காதீர்கள். உங்களின் தவறுகளை திருத்தவும் உங்களின் சிறந்த வழிகாட்டியாக இருக்கவும் கூடிய சிறந்த சேவைகளும் நிறுவனங்களும் இருக்கவே செய்கின்றன என்பதை மறந்து விடாதீர்கள்.
#8 – உங்களுக்கென ஒரு யுக்தியை வளர்த்துக்கொள்ளுங்கள்; அதிலிருந்து விலகாதிருங்கள்:
நீங்கள் முதலீட்டுச்சந்தைக்கு புதியவராக இருந்தால் சந்தையில் ஏற்படும் சின்னஞ்சிறு ஏற்ற இறக்கங்களுக்கு கூட உங்கள் மனம் பதைபதைக்கும். துவண்டு விடும். அது அறவே கூடாது. இதைப் போக்க உங்களுக்கான ஒரு தந்திரமான யுக்தியை வளர்த்துக்கொள்ளுங்கள். என்ன நிகழ்ந்தாலும் அதிலிருந்து சற்றும் விலகாதிருங்கள். ஏனெனில் இதுவே மிகப்பெரிய இன்வெஸ்ட்மென்ட் குருக்களின் தாரக மந்திரம்.

No comments:
Post a Comment