Monetize Your Website or Blog

Monday, 8 February 2016

கொடிய விஷமுள்ள பிளாக் மாம்பாவிடம் இருந்து தப்பிய உலகை மிரட்டிய வேகப்பந்துவீச்சாளர்!

தென்ஆப்ரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தோள் பட்டை வலி காரணமாக தற்போது கிரிக்கெட்டில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார். அண்மையில் தென்ஆப்ரிக்காவின் புகழ்பெற்ற க்ரகர் தேசிய பூங்காவுக்கு ஸ்டெயின் தனது நண்பருடன் காரில் சென்றுள்ளார். சாலையோரத்தில் கொடிய விஷம் கொண்ட, பிளாக் மாம்பா பாம்பு காரில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளது.

அதனை பார்த்த டேல் ஸ்டெயின் விஷமில்லாத பிரவுன் ஹவுஸ் பாம்பு என கருதி,அருகில் சென்று  அந்த பாம்பை கையால் தூக்கி சாலையோரத்தில் போடுவதற்கு முனைந்து அருகில் சென்றுள்ளார். பாம்பை தூக்க முனைந்த போதுதான், அது கொடிய விஷமுள்ள பிளாக் மாம்பா பாம்பு என்பதை கண்டு அலறிய டேல் ஸ்டெயின் தூர விலகியுள்ளார்.
இந்த பாம்புதான் ஆப்பிக்காவிலேயே கொடிய விஷமுள்ள பாம்பு ஆகும். அந்த கண்டத்தில் இந்த பாம்பு கடியால் அதிகம் பேர் இறந்து கொண்டிருக்கின்றனர். உலகிலேயே மிக வேகமாக போகக் கூடிய பாம்பும் இதுதான். கடைசி நேரத்தில் பிளாக் மாம்பா என்று தெரிந்து கொண்டதால், ஸ்டெயின் அதனை கையில் எடுக்கவில்லை. இல்லையென்றால் ஸ்டெயின் அந்த பாம்பிடம் கடி பட்டிருப்பார். 

அந்த பிளாக் மாம்பா பாம்பினை வீடியோ எடுத்து ஸ்டெயின் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 



No comments:

Post a Comment