தமிழை தினம்தினம் கொன்று கொண்டிருக்கும் படித்தவர்களுக்கு இடையில் ’மை ஃபாதர் இஸ் வொர்க்கிங் இன் உரக்கடை’ என்று சொல்லி முதல் முறையாக ஆங்கிலத்தை கொலை செய்த மாணவி தேவிகாவுக்கு உடனடியாக பொன்னாடை போற்றி வாழ்த்தினேன் என்று சகாயம் கடந்த காலத்தை நினைவூட்டி பேசினார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் சுய முன்னேற்ற குழு சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவர் சகாயம் ஐ.ஏ.எஸ் பங்கேற்றார். நாலாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் முன்னிலையில் சிறப்புரையாற்றிய சகாயம், இந்திய குடிமைப்பணி தேர்வில் இறுதிகட்ட ஆளுமைத்திறன் சோதனையில் (personality test) என்னிடம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை சுட்டிக்காட்டி ஏன் தமிழர்கள் எப்போதும் இந்தியை எதிர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? எந்த மொழியை தேசிய அலுவலக மொழியாக வைக்க முடியும்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. 1965ல் நடந்த போரட்டத்தைப் பற்றி 1980ல் என்னிடம் கேள்வி கேட்டார்கள்.
அந்த தேர்வில் வெற்றி பெற்றால் நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி விடுவேன். ஆனால் சற்றும் யோசிக்காமல் உலகின் மிகத் தொன்மையானதும் மிகச் சிறந்த இலக்கிய, இலக்கணங்களைக் கொண்டதுமான தமிழை வையுங்கள் என்று சொல்லி வந்தேன். வெளியே வந்து என் நண்பரிடம் நடந்ததை விவரித்தபோது உன் கொள்கை முறுக்கை எல்லாம் காட்டுவதற்கான நேரமா இது என்று திட்டினார். நான் எப்போதும் தமிழன் என்பதில் பெருமை கொண்டவன்.
நான் மாவட்ட ஆட்சியராக இருந்த போது பள்ளிச் சிறுவர்களை சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். அவர்களை சந்திக்கும் போதெல்லாம் அவர்களிடம் ஆங்கில ஆற்றலை வளர்ப்பதற்காக ஆங்கிலத்திலேயே சில கேள்விகளைக் கேட்பேன். பல நேரங்களில் குழந்தைகள் பதில் சொல்லத் தெரியாமல் முழிப்பார்கள். ஊருக்கே உணவளிக்கும் விவசாயிகளின் குழந்தைகள் ஆங்கிலம் தெரியாமல் முழிப்பதை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கும். அவர்களிடம் ஆங்கில ஆற்றலை வளர்க்க அரசு பள்ளிகளில் சில சிறப்பு பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

அப்பயிற்சிகளுக்குபின் ஒருமுறை குழந்தைகளை சந்திக்கும்போது 'வாட்ஸ்யுவர்பாதர்’ என்று கேட்டேன். ஒருகுழந்தை ’மை ஃபாதர் இஸ் எ பார்மர்’ என்றது. இன்னொரு குழந்தை, ’மை ஃபாதர் இஸ் எ டெய்லர்’ என்றது. கடைசியாக தேவிகா என்ற மாணவியை பார்த்து கேட்டேன். அவள் சொன்ன பதில் என்னை மிகவும் மகிழச் செய்தது. ’மை ஃபாதர் இஸ் வொர்க்கிங் இன் உரக்கடை’ என்று சொன்னாள். இருபது வார்த்தைகளில் பதினைந்து ஆங்கில வார்த்தைகளை உபயோகித்து தமிழை தினம்தினம் கொன்று கொண்டிருக்கும் படித்தவர்களுக்கு இடையில் ’மை ஃபாதர் இஸ் வொர்க்கிங் இன் உரக்கடை’ என்று சொல்லி முதல் முறையாக ஆங்கிலத்தை கொலை செய்தாளே தேவிகா அவளுக்கு உடனடியாக பொன்னாடை போற்றி வாழ்த்தினேன். அரசுப்பள்ளியில் படிக்கும் தேவிகாவைப் போன்ற மாணவர்கள்தான் தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் தமிழ் எவ்வளவு சிறந்த மொழி என்பது புரியும்.
‘’கணிதமேதை ராமானுஜம் பூச்சியத்திற்கும் மதிப்புண்டு என அவரது ஆசிரியருக்கு புரிய வைத்த நிகழ்வைச் சொல்லி மாணவர்களாகிய நீங்கள் பூச்சியத்திலிருந்து உங்களது ராஜ்ஜியத்தை துவங்குங்கள். ஐன்ஸ்டீன், எடிசன் போன்றவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை எடுத்துக்காட்டாய் எடுத்துக் கொண்டு மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களை யாரும் உற்சாகப்படுத்த மாட்டார்கள். உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.
நெசவாளருக்கு ஒருநாள் ஊதியம் 80 ரூபாய். ஒரு நாளுக்கு ஒரு லட்சத்து அறுபத்தி ஆறாயிரம் முறை அவரது கை, கால்களை அசைக்கிறார்கள் நெசவாளர்கள். ஆனால் அவர்களை பாதுகாக்கும் கூட்டுறவுதுறை அதிகாரிக்கு 70 ஆயிரம் ரூபாய் சம்பளம். நமக்கு உணவளிக்கும் விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் வருடத்திற்கு ஒரு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்த பெரிய வேறுபாட்டிற்கு காரணத்தை தேட வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் விவசாயிகள், நெசவாளர்களின் நலனுக்காக எதாவது செய்ய வேண்டும். இனி மாணவர்களை அதிக அளவில் சந்திக்க போகிறேன். நிறைய எழுத போகிறேன்" என்று கூறினார்.

No comments:
Post a Comment