Monetize Your Website or Blog

Friday, 12 February 2016

அமைச்சர் வீட்டு கல்யாணம்னா சும்மாவா...? இடித்துத் தள்ளப்பட்ட அரசு கல்லூரிச் சுவர்!

ஞ்சாவூரில் நாளை நடக்க உள்ள தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக,  அமைச்சர் வைத்திலிங்கம் அரசு கல்லூரியின் சுவரை மூன்று இடங்களில் இடித்து,  விழாவுக்கான ஏற்பாட்டை செய்திருப்பதாக அப்பகுதி மக்கள் கொந்தளிக்கிறார்கள்.
அமைச்சர் வைத்திலிங்கம் மகள், ஆர்.காமராஜ் மகன் உட்பட அதிமுக நிர்வாகிகள் 14 பேர் இல்ல திருமண விழாவை நேற்று சென்னை ராயபேட்டை ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஜெயலலிதா நடத்தி வைத்தார். அதன் வரவேற்பு நிகழ்சியை வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு அமைச்சர் வைத்திலிங்கம் தஞ்சாவூரிலும், ஆர்.காமராஜ் திருவாரூரிலும் ஏற்பாடு செய்துவருகின்றனர். நால்வர் அணியில் முக்கியமானவரும் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான அமைச்சர் வைத்திலிங்கம்,  இந்த வரவேற்பு நிகழ்ச்சியை ஒரு மாநாடு போல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறார். 
இதற்காக புதியபேருந்து நிலையம் பின்புறம் உள்ள அரசுக்கு சொந்தமான மாநகராட்சி திடலில்,  பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தஞ்சை நகரின் முக்கிய இடங்களில் பிரமாண்ட அலங்கார நுழைவு வாயிலும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திருமண வரவேற்புக்கு வாழ்த்து தெரிவித்து,  முக்கிய கட்சி நிர்வாகிகள் மாநகர் முழுவதும் வைத்திலிங்கத்துக்கு பிளக்ஸ் வைத்துள்ளனர்.

இந்த விழா ஏற்பாட்டுக்காக,  மாநகராட்சி திடல் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியின் சுவரை இடித்து ஏற்பாடு செய்யப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசியபோது, “அமைச்சர் வைத்திலிங்கம் மகள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு தமிழகம் முழுக்க உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர். 

அவர்கள் வரும் கார்களை நிறுத்துவதற்காக,  அருகே உள்ள அரசு கல்லூரியின் சுவரை மூன்று இடங்களில் இடித்து,  கார் உள்ளே சென்று வெளியே வருமாறு கார் பார்க்கிங் வசதி செய்யபட்டுள்ளது. அரசு விழா கூட இல்லை, அமைச்சரோட சொந்த நிகழ்ச்சிக்கு இப்படி கல்லூரி சுவரை இடிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
மேலும்  சில வருடங்களுக்கு முன் கட்டபட்ட அந்த சுவர் இடிக்கப்பட்டதால் அரசு பணம்தான் விரயமாகிறது. மாநகராட்சி திடலே பெரிய இடம்தான். அந்த இடத்தில்தான் ஜெயலலிதா நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தை நடத்தினார். அந்த இடம் போதாமல் அமைச்சர், கல்லுாரியின் சுவரை இடித்துள்ளது வேதனை தருகிறது. 

நிர்வாகிகள் வைத்துள்ள பிளக்ஸ் போர்டில்,  சிறிய அளவில் கூட வைத்திலிங்கம் படம் இல்லை.  அப்படி இருந்தால் அவர் பதவி பறிக்கபட்டுவிடும் என முன்னெச்சரிக்கையாக அவர் படம் இல்லாமல் அம்மா படம் மட்டும் இருக்கும்படி பார்த்து கொள்கிறார். ஒரு அமைச்சருக்கு கல்வி கற்கும் இடம் என்பது கோவில் போன்றது என்பதும்,  அதன் சுவரை இடிப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதும் கூடத் தெரியாமல் போனது வேதனையின் உச்சம்” என்றார்கள்.


No comments:

Post a Comment