Monetize Your Website or Blog

Monday, 15 February 2016

இப்போலாம் எங்கப்பா ஹெலிகாப்டர் ஷாட் ஆட விடுறாங்க... தோனியின் ஜாலி பதில்!

ந்திய கேப்டன் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் அகில உலகமும் பேமஸ்.  தலைக்கு மேலே பேட்டை சுற்றி அவர் அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்டில் மைதானமே விக்கித்து போகும். 
இந்திய - இலங்கை அணிகளுக்கிடையேயான  3வது  டி20 போட்டியின் போது, விசாகப்பட்டினத்தில் தோனி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். 
                          
அப்போது, 'இப்போதெல்லாம் ஏன் நீங்கள் ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பதில்லையே '  என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தோனி, ஹெலிகாப்டர் எல்லா இடத்துலயும் பறக்க விட முடியுமா? ஹெலிகாப்டர் பறக்க வேண்டுமென்றால் அதற்கென்று இடம் தேவைப்படும். கடலுக்கடியில் ஹெலிகாப்டரை பறக்க வைக்க முடியுமா?

பவுன்சர் பந்தில் ஸ்டூல் இருந்தால்தான் ஹெலிகாப்டர் ஷாட் ஆட முடியும். சில பந்துகளில்தான் ஹெலிகாப்டர் ஷாட் ஆடலாம். இப்போலாம் பந்துவீச்சளார்கள் எங்க ஹெலிகாப்டர் ஷாட் ஆட விடுறாங்க'' என நகைச்சுவையாக பதில் அளித்தார். 


No comments:

Post a Comment