Monetize Your Website or Blog

Monday, 8 February 2016

இந்த படம் எதையோ நினைவு படுத்துகிறதே..!

பிரதமர் நரேந்திர மோடி  ஒரிசா மாநிலத்திற்கு இரு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இரு நிகழ்ச்சிகளில் இன்று அவர் பங்கேற்கிறார். பூரியில்  அவர் தரையிறங்கிய ஹெலிபேட் அருகே ஆயிரக்கணக்கான மக்கள் அவரை காண கூடியிருந்தனர். 

பிரதமர்  மோடி எப்போதுமே தன்னை காண வரும் கூட்டத்தினரை ஏமாற்ற விரும்ப மாட்டார். எனவே மக்கள் தன்னை பார்க்கும் வகையில், வாகனத்தின் மேல் பகுதியில் இருக்கும் கம்பியை பிடித்துக் கொண்டு, பாதுகாப்பாளர்கள் தொங்கிக் கொண்டு வருவதுபோல் தொங்கியபடியே மக்களை பார்த்து கை அசைத்து கொண்டு வந்தார்.
அந்த படத்தை தனது ட்விட்டர் தளத்திலும் பதிவு செய்துள்ளார் .மோடி இப்படி வலம் வந்தது, தமிழக முன்னாள் அமைச்சர் ஒருவர், ஒருமுறை ஜெயலிலதா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, பிரசார வாகனத்தில் தொங்கிக் கொண்டு போனதை நினைவு படுத்தியது.



No comments:

Post a Comment