'நெல்லை இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு', 'நல்லமுத்து இயற்கை வேளாண் ஆய்வு மையம்' மற்றும் 'புளியங்குடி தங்கம்மாள் அறக்கட்டளை' ஆகியவை இணைந்து அண்மையில், ‘பாரம்பர்ய இயற்கை விவசாயமும் மருந்தில்லா மக்கள் நல் வாழ்க்கையும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கத்தை திருநெல்வேலியில் நடத்தின.
கருத்தரங்கில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி நாகரத்தின நாயுடு, தென் மண்டல காவல்துறைத் தலைவர் முருகன், மாவட்ட ஆட்சித்தலைவர் கருணாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் பேசிய காவல்துறைத் தலைவர் முருகன், ‘‘இப்போ யாருமே பாரம்பர்ய நெல் ரகங்களை அதிகம் சாகுபடி செய்யுறதில்லை. அந்த அரிசியில இயற்கையாவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். ‘பாரம்பரிய நெல் ரகங்களோட கதிரே கத்தி மாதிரி கூர்மையா இருக்குறதுனால பூச்சித்தாக்குதல் வராது’னு ‘பசுமை விகடன்’ல வந்த ‘பூச்சிகளும் நண்பர்களே’ தொடர்ல நீ.செல்வம் எழுதியிருக்கார்.

‘நன்மை செய்யுற பூச்சி, தீமை செய்யுற பூச்சி, எந்த பூச்சியை எப்படிக் கட்டுப்படுத்தணும்’னு ரொம்ப விரிவா எழுதியிருக்கார்.
இருபது, இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி... தை மாதம் நெல் அறுவடை முடிஞ்சதும் களத்துலேயே விதை நெல்லை விதை உறக்கத்துல வெச்சு, மாசி மகம் விதைநெல்லை கோட்டை கட்டுவாங்க. ஆடி மாதம் கோட்டையை குட்டையில போட்டு ஊற விட்டு எடுத்து அது மேல தண்ணீர் ஊத்துவாங்க. அப்போ சாணி கரைஞ்சு விதை நெல்லில் இறங்கும்போதே ‘விதை நேர்த்தி’ முடிஞ்சுடும். அடுத்த ரெண்டாம் நாள் முளைப்பு எடுத்த உடனே விதைப்பாங்க. பழுதில்லாம விளைஞ்சுடும். இப்போலாம் இதை விவசாயிகள் கடைபிடிக்கிறதேயில்லை’’ என்று வருத்தப்பட்டார்.
தொடர்ந்து பேசிய நாகரத்தின நாயுடு, ‘‘நல்ல உணவைக் கொடுத்து மக்களோட ஆரோக்கியத்தைக் காப்பாத்துற புனிதமான பணி விவசாயிகள்ட்ட ஒப்படைக்கப்பட்டிருக்கு. அதனால, நிலத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் சீரழிக்கிற ரசாயன உரத்தைப் பயன்படுத்தாம இயற்கை முறையில விவசாயம் செய்யணும். எலிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துற கதைதான் பூச்சிக்கொல்லி தெளிக்கிறது.

கொஞ்சமா ரசாயனத்தைக் குறைச்சு இயற்கை இடுபொருட்களை அதிகரிச்சுட்டே வந்தாலே போதும், சீக்கிரம் முழு இயற்கைக்கு மாறிட முடியும். எப்பவுமே கலப்பு பயிர் சாகுபடிதான் நல்லது. விளைபொருட்களை மதிப்புக் கூட்டி நேரடி விற்பனை செய்தா கண்டிப்பா லாபம் சம்பாதிக்க முடியும்’’ என்றவர், இயற்கை விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்ய திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு இடம் ஒதுக்கி தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை வைத்தார்.
நிறைவாகப் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் கருணாகரன், ‘‘மழை காலத்தில் 25 அங்குலத்துக்கு மேல மழை விழுகிற நிலத்துல நன்செய் பயிர்களை பயிர் செய். அதுக்கு குறைவா மழை விழுகிற நிலத்துல புன்செய் பயிர்களை பயிர் செய்’னு பல வருஷங்களுக்கு முன்னாலயே அர்த்தசாஸ்திரத்துல சொல்லிருக்காங்க. ‘பருவத்தே பயிர் செய்’ங்கிறதும் முன்னோர் சொன்னதுதான். ஆனா, இப்போ வீரிய ரகங்கள்ல பட்டமே இல்லாமப் போச்சு. இனிமேலும் ரசாயன விவசாயம் தொடர்ந்தா அதிக நாள் உயிர் வாழுறது கடினம்தான்’’ என்றவர், நாகரத்தின நாயுடுவின் கோரிக்கையை ஏற்று பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார்.
No comments:
Post a Comment