"டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாட, அணி வீரர்களுக்கு சீருடை வாங்க நான்தான் கடன் கொடுத்தேன்" என்று சாம்பியன் பட்டத்தை வென்ற மேற்கிந்திய தீவு அணி கேப்டன் டேரன் சமி வேதனை தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவு அணி, இங்கிலாந்தை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த நிலையில், தனது அணியின் வெற்றி குறித்து மேற்கிந்திய தீவு அணி கேப்டன் டேரன் சமி கூறுகையில், "எங்கள் அணிக்கு ரவ்லே லீவிஸ் என்பவர் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு எந்த அணியிலும் அவர் மேலாளராக இருந்து அனுபவமே இல்லாதவர். எங்களுக்கு சீருடையோ, சீருடை மீதான பிரிண்டிங்கோ கூட செய்யப்படவில்லை.
நாங்கள் இப்போது அணிந்துள்ள அணிக்கான சீருடை வாங்கி தருவதில் நிர்வாகம் குளறுபடி செய்தது. இதனால் ஒட்டு மொத்த அணி சீருடை வாங்கவும் நான்தான் கடன் கொடுத்து உதவினேன்.
20 ஓவர் உலக கோப்பையை மேற்கிந்திய தீவு அணி வெல்ல வேண்டும் என்று கிரனெடா பிரதமர் கெயித் மிட்சேல், காலையில் வாழ்த்து அனுப்பியிருந்தார். அந்த வாழ்த்து செய்தி எங்களுக்கு உத்வேகம் தந்தது. ஆனால் எங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியம் அதைக்கூட செய்யவில்லை" என்று வேதனை தெரிவித்தார்.
இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வாரிய தலைவர் வைக்ளிப் தாவே கேமரூன், "கடைசியாக உங்களுக்கான கட்டணத்தை எந்த விமர்சகர் செலுத்தினார்?" என்று கேட்டுள்ளார்.
இதனிடையே, சமியின் பேச்சு பற்றி விரைவில் விசாரணை நடைபெற வாய்ப்புள்ளதாக மேற்கிந்திய தீவு அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment