Monetize Your Website or Blog

Thursday, 21 July 2016

சல்மானும், தோனியும் கிரிமினல்களா..!? - கூகுள் அதிர்ச்சி


கூகுள் தேடுதல் பொறியில், இந்தியாவின் டாப் டென் கிரிமினல்கள் என தேடினால் பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் சல்மான்கான், இந்திய கிரிக்கெட் வீரர் தோனி படங்கள் வருகின்றன.இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என்று, கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கூகுளின் தேடுதல் பொறியில், இந்தியாவின் 'டாப் டென் கிரிமினல்கள்' என தேடினால் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போன்ற அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள் வருகின்றன. ஆனால், கூகுள் நிறுவனத்தின் தேடுதல் பொறி என்பது, அதில் இருக்கும் வலைத் தளங்களை அடிப்படையாகக் கொண்டது. அது கூகுளின் அங்கீகரிக்கப்பட்ட தேடுதல் கிடையாது.

கடந்த நவம்பர் மாதம், சுஷில் குமார் மிஸ்ரா என்பவர் இது குறித்து தலைமை நீதிபதியிடம் (chief judicial magistrate) மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். ஆனால், அது தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து மீண்டும் தலைமை நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார் மிஸ்ரா. அவரது வழக்கு தற்போது ஏற்கப்பட்டு இருக்கிறது


.
இது போன்ற சிக்கல்களில் இருந்து தப்பிக்க, சர்ச்சைக்குரிய சில விஷயங்களைத் தேடும்போது, இது கூகுளின் தகவலோ, நம்பிக்கையோ இல்லை. பல்வேறு வலைத்தளங்களில் இருக்கும் புகைப்படங்களின் அடிப்படையில் வரும் பதில்கள் என்ற டிஸ்கிளைமருடன் வெளியிடுகிறது கூகுள்.

இந்தியாவின் டாப் 10 கிரிமினல்கள் பட்டியலில் சல்மானும், சக்திமானும் இருக்கிறார்கள். கிரிக்கெட் வீரர் தோனி, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் நடிகை ஆஞ்சலினா ஜூலி படங்களும் இருக்கின்றன. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருகின்ற ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.




No comments:

Post a Comment