முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும், 161வது விதி மூலம் தன்னை விடுவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனுவிற்கு தமிழக உள்துறை துணைச் செயலாளர் டேனியல் தேவஆசீர்வாதம் அளித்த பதில் மனுவில், ' 20 வருடங்கள் சிறையில் உள்ளவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு நளினி வழக்கில் பொருந்தாது. இது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழக அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், நளினி மனு மீது தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்து நளினி மனுவை முடித்து வைத்தது.
No comments:
Post a Comment