மதுரையில் நேற்று நடந்த கோரவிபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில், தங்களது உயிர்போகும் நிலையில், மகனை காப்பாற்றி இருக்கின்றனர் ஒரு பெற்றோர்.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள சுப்புலாபுரம் கோபால்சாமி மலை அருகே நடந்த கோர விபத்தில், ஒரு சிறுவன், ஒரு சிறுமி, 12 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ள சம்பவம் மதுரை மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கரூரில் இருந்து சிமெண்ட் மூடைகளை ஏற்றி வந்த லாரியும், நெல்லையில் இருந்து கம்பத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் நேற்று மதியம் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழக்க 35க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், விபத்து நடந்த இடத்தை நேற்று இரவு போக்குவரத்து துறை அமைச்சர் பார்வையிட்டார். இன்று காலை ஏழு மணிக்கு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவும் பார்வையிட்டனர்.
அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் விபத்து குறித்து கூறும்போது, ''இந்த விபத்தில் இறந்தவர்களின் அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களுக்கு தகவல் அனுப்ப பட்டுள்ளது. திருமங்கலத்தில் 12 உடல்கள் வைக்கப்பட்டுள்ளது. போஸ்ட் மார்டம் செய்ய அங்கு மருத்துவ குழுவை அனுப்பி வைக்கப்பட்டு, விரைவில் உடல்களை உறவினர்களிடம் கொடுக்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.
இறந்த உடல்களை அவர்கள் எடுத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இறந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக முதல்வர் அறிவித்து இருக்கிறார். ஏதாவது உதவி என்றால் உதவி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
உயிர்போகும் நிலையில் மகனை காப்பாற்றிய பெற்றோர்...
விபத்து நடந்த இடத்தில் பொதுமக்களும், போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு கணவன், மனைவி கைகளை அனைத்து கட்டிப்பிடித்தபடி இறந்து கிடந்துள்ளனர். அப்போது, மீட்புக்குழுவினர் அவர்கள் இருவரின் உடல்களை பிரித்தபோது, அந்த தம்பதியினருக்கு இடையில் அவர்களின் நான்கு வயது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தான்.
உயிர்போகும் நிலையில் மகனை காப்பாற்றிய பெற்றோர்...
விபத்து நடந்த இடத்தில் பொதுமக்களும், போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு கணவன், மனைவி கைகளை அனைத்து கட்டிப்பிடித்தபடி இறந்து கிடந்துள்ளனர். அப்போது, மீட்புக்குழுவினர் அவர்கள் இருவரின் உடல்களை பிரித்தபோது, அந்த தம்பதியினருக்கு இடையில் அவர்களின் நான்கு வயது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தான்.
அந்த சிறுவனின் உயிரை காப்பாற்ற, அவனது தாய், தந்தை இருவரும் அவனை பந்து போல சுருட்டி அடிபடாமல் பாதுகாப்பாக இருவரின் நெஞ்சுக்குள் அனைத்து பத்திரமாக காப்பாற்றி வைத்திருந்த காட்சியை கண்ட அனைவரின் கண்களும் குளம் ஆனது. உடனே சிறிதும் தாமதிக்காமல் அந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் பத்திரமாக மீட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்து உள்ளனர். தற்போது, அந்த சிறுவன் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையில் உள்ளான்.
தங்களது உயிர் போனாலும், மகனை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று தங்களது மார்புக்குள் மகனை அனைத்துக் கொண்டு உயிரை விட்டிருக்கும் அந்த பெற்றோரின் நெஞ்சை உருக்கும் தியாகத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் உருகிவிட்டனர்.
No comments:
Post a Comment