கின்னஸ் உலக சாதனை முயற்சியாகவும் மாநிலத்தின் வனப்பகுதியை விஸ்தரிக்கும் வகையிலும் இன்று ஒரே நாளில் 5 கோடி மரக்கன்றுகளை நட உத்தரபிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.
உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ‘பசுமை உத்தரபிரதேசம்' என்ற திட்டத்தை இன்று துவக்கி வைத்தார். இத்திட்டத்தின்படி 6500 இடங்களில் ஒரே நாளில் ஐந்து கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்பட உள்ளன. நாட்டின் மற்ற மாநிலங்களைபோல், உ.பியிலும் தற்போது மழைக்காலம் துவங்கி உள்ளது. எனினும், நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உ.பி.யில் முரண்பட்ட சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனால் இந்த மாநிலம் போதிய மழைபெறாமல் உள்ளது.
தேசிய வனக்கொள்கையின்படி நாடு முழுவதிலும் 33 சதவிகிதம் வனப்பகுதி அமைந்திருக்க வேண்டும். இதேபோல், ஒவ்வொரு மாநிலங்களிலும் அதன் நிலப்பரப்பில் 33 சதவிகிதம் வனப்பகுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கும் என்கிறது தேசிய வனக்கொள்கை.
ஆனால் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், உ.பி.யின் மொத்த பரப்பளவில் 8 சதவிகித அளவிலான இடம் மட்டுமே வனப்பகுதியாக உள்ளன. 2000 ம் ஆண்டில் உத்தராகண்ட் பிரிந்தபோது, இது இன்னும் சுருங்கிவிட்டது. எனவே, மீண்டும் வனப்பகுதியை அதிகரிக்கும் வகையில், உ.பி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக 'பசுமை உத்தரபிரதேசம்' திட்டத்தினை தற்போது அறிவித்து, இன்று அதை செயல்படுத்தியிருக்கிறது உ.பி அரசு.

இன்று காலை 10.00 மணிக்கு துவங்கிய இந்த திட்டத்தின் முதல் மரக்கன்றை, உத்தரபிரதேச முதல் அமைச்சர் அகிலேஷ் சிங் யாதவ் நட்டு, திட்டத்தினை துவக்கி வைத்தார். மாநிலத்தின் அந்தந்த சூழலுக்கு ஏற்ற விதவிதமான மரங்கள் வனப்பகுதிகள், கிராம சபாக்களின் இடங்கள், சாலை, நதி, மற்றும் கால்வாய் ஓரங்கள் ஆகிய இடங்களில் நடப்பட உள்ளன. இதற்காக, உ.பி மாநில அரசின் வனம் மற்றும் உயிரிகள் துறை சார்பில் 5 கோடி மரக்கன்றுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதுவரை எந்த நாட்டிலும் இத்தனை எண்ணிக்கையில் மரங்கள் நடப்பட்டதில்லை என்பதால், கின்னஸ் சாதனைக்கும் இந்த முயற்சி பதிவு செய்யப்படுகிறது. இதற்காக, சுமார் 5 லட்சம் பணியாளர்கள் மாநில முழுவதுமானப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மரங்கள் நடப்படவிருக்கும் இடம், மரங்களின் எண்ணிக்கை மற்றும் நம்பகத்தன்மையை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மரம் நடும் பணியின் அத்தனை நடவடிக்கைகளும் இவர்களால் புகைப்படம் மற்றும் வீடியோப் பதிவுகள் செய்யப்பட்டு, அதன் அறிக்கையை உலக கின்னஸ் சாதனை அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
தமிழகம் உட்பட பல மாநிலங்களில், 1988 ம் ஆண்டின் தேசிய வனக்கொள்கை அறிவுறுத்தலின்படி 33 சதவிகித வனப்பகுதி இல்லை.

இயற்கை வளங்களை பூமியில் நிலைநிறுத்தும் காரணிகளில், வனப்பகுதியின் பங்கு முக்கியமானது என்பதால் உ.பியை பின்பற்றி தமிழகமும் எதிர்காலத்தில் மாநிலத்தின் வனப்பகுதியை பெருக்கும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment