Monetize Your Website or Blog

Wednesday, 13 July 2016

விஜயகாந்த் மீது 500 கோடி ரூபாய் புகார் கிளப்பும் மாஜி எம்எல்ஏ!


தேமுதிக அறக்கட்டளை நிதியில் ரூ.500 கோடியை விஜயகாந்த் முறைகேடு செய்துள்ளதாக மாஜி எம்எல்ஏவும், மக்கள் தேமுதிக நிர்வாகியுமான எஸ்.ஆர்.பார்த்திபன் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 






நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணி வைத்ததால் அதிருப்தி அடைந்த எம்எல்ஏக்கள் சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை தொடங்கினர்.

பின்னர் திமுகவுடன் மக்கள் தேமுதிக கூட்டணி சேர்ந்து 3 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து திமுகவுடன் இணைவது என்று மக்கள் தேமுதிக நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதன் இணைப்பு விழா விரைவில் நடக்க உள்ளது.

தொடக்க முதலே விஜயகாந்த் மீது குற்றம்சாட்டி வரும் மக்கள் தேமுதிக நிர்வாகிகள், இன்று அவர் மீது முறைகேடு புகாரை கிளப்பியுள்ளார் மாஜி எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக அறக்கட்டளை நிதியில் ரூ.500 கோடியை விஜயகாந்த் முறைகேடு செய்துள்ளார்.

விஜயகாந்த் குடும்ப உறுப்பினர்களை தவிர மற்றவர்கள் அறக்கட்டளை நிர்வாகியாக நியமிக்கப்படவில்லை. ரூ.500 கோடி தொடர்பாக விஜயகாந்த் வெள்ளை அறிக்கை வெளியிடாவிட்டல் வழக்கு தொடரப்படும். வறுமையை ஒழிப்போம் என்ற விஜயகாந்த், வறுமையை மட்டுமே தொண்டர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார்" என்று குற்றம்சாட்டினார்.




No comments:

Post a Comment