Monetize Your Website or Blog

Monday, 4 July 2016

கொலை செய்தது எப்படி... ராம்குமாரை நடித்துக் காட்ட வைக்க போலீஸ் திட்டம்?

 நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை கொலை செய்தது எப்படி என, ராம்குமாரை நடித்துக் காட்ட வைக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த இளம்பெண் பொறியாளர் சுவாதி, கடந்த மாதம் 24–ம் தேதி காலை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டு நெல்லையில் கைது செய்யப்பட்ட ராம்குமார், தற்கொலை செய்ய முடிவு செய்து பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.

இதனால் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. உடனே போலீசார் பாய்ந்து சென்று, ராம்குமாரின் கழுத்தில் ஒரு துணியை சுற்றி, உடனடியாக அவரை செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராம்குமாருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.


அங்கு ராம்குமாருக்கு, டாக்டர்கள் குழுவினர் 18 தையல்கள் போட்டு 2 மணி நேரம் சிகிச்சை அளித்து காப்பாற்றினர். பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து ராம்குமார், பொது மருத்துவ பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில்,.108 ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று அதிகாலை சென்னை கொண்டு வரப்பட்டார் ராம்குமார்.

ராம்குமாருக்கு ராயப்பேட்டையில் சிகிச்சை...

ராம்குமார் தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் (கைதிகளுக்குரிய வார்டில்) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர் மயில்வாகனம் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து தற்போது தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சை முடிவுகள் காலை 9 மணி அளவில் போலீசாருக்கு அளிக்கப்பட உள்ளதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், கைதிகள் வார்ட் உட்பட, மருத்துவமனையைச் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



நடித்துக் காண்பிக்க வைக்கத் திட்டம்...


ராம்குமாரின் உடல்நிலை சரியான உடன், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை கொலை செய்தது எப்படி என, ராம்குமாரை நடித்துக் காட்ட வைக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, ராம்குமாரிடம் விசாரணை நடத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து, ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment