Monetize Your Website or Blog

Wednesday, 13 July 2016

சிறுவனை தூக்கி செல்ல முயன்ற கழுகு! -ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம்


சிறுவனை தூக்கி செல்ல முயன்ற கழுகால் ஆஸ்திரேலியாவில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவில் ஆலிஸ் ஸ்பரிங் பாலைவனப் பூங்காவில், வன விலங்குகள் கண்காட்சிநடைபெற்றது. அந்த கண்காட்சியை அங்கு கூடியிருந்த ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து கொண்டிருந்தனர்.



அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், அங்கு திடீரென அசுர வேகத்தில் பறந்து வந்த ஒரு கழுகு, தனது கால்களின் கூரிய நகங்களால் அங்கு தனது பெற்றோருடன் கண்காட்சியை கண்டுகளித்து கொண்டிருந்த ஒரு சிறுவனை தூக்கி  செல்ல முயன்றது.

அந்த சிறுவனின் தலையை தனது கால்களின் கூரிய நகங்களால், ஒரு சிறிய விலங்கை தூக்குவதுபோல் அந்த கழுகு பற்றி தூக்கியது ஆனால் அதனால் சிறுவனை தூக்க முடியவில்லை.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்து பயந்துபோன சிறுவன், ரத்த காயங்களுடன் கதறி அழுது துடித்திருக்கிறான். உடனே அங்கு கூடியிருந்த பொதுமக்கள், தூக்கிச் செல்ல முயன்று தாக்குதல் நடத்திய கழுகிடம் இருந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.



No comments:

Post a Comment