Monetize Your Website or Blog

Friday, 15 July 2016

சுவாதியை பார்த்தது முதல் கொலை வரை..! ராம்குமாரிடம் போலீஸ் அடுக்கிய கேள்விகள்


சுவாதி கொலை வழக்கு பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ஒவ்வொரு அசைவுகளையும் பொது மக்கள் கவனித்து வருகின்றனர். ராம்குமார் மட்டுமா குற்றவாளி, இல்லை வேறு யாரும் இருக்கிறார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கு எல்லாம் விடையளிக்கும் வகையில் போலீஸார், ராம்குமாரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

ராம்குமாரை போலீஸார் கைது செய்ய முயன்ற போது அவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் அப்போது எந்த விசாரணையும் போலீஸாரால் மேற்கொள்ள முடியவில்லை. இதனால் மூன்று நாள் போலீஸ் காவலில் முழு விவரங்களையும் பெற போலீஸார் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். நாட்கள் குறைவாக இருப்பதால் ராம்குமாரிடம் எந்த கேள்விகளை கேட்க வேண்டும் என்று போலீஸார் ஏற்கெனவே முடிவு செய்து அதை தயாராகவும் வைத்துள்ளனர். ராம்குமாரிடம் நேற்று இரவே விசாரணையை போலீஸார் தொடங்கி விட்டனர். விசாரணை விவரங்கள் யாருக்கும் குறிப்பாக மீடியாக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதில் போலீஸார் அதிக கவனம் செலுத்துகின்றனர். இதற்கு, நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு போலீஸார் ஆளாகியதே காரணம்.



போலீஸ் கமிஷனர், கூடுதல் கமிஷனர், இணை கமிஷனர்கள் ஆகியோர் மட்டுமே ராம்குமாரிடம் விசாரித்து வருகின்றனர். ராம்குமாரின் விசாரணை விவரங்களை வெளியில் தெரிவிக்க கூடாது என்று போலீஸ் உயரதிகாரிகளுக்கு வாய்மொழியாக உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் அமைதி காக்கின்றனர்.


ராம்குமாரிடம் விசாரணை நடத்திய போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ராம்குமாரிடம் சில கேள்விகளை கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில்கள் எங்களுக்கு திருப்தியாகவும், விசாரணைக்கு உதவியாகவும் இருந்தது" என்று மட்டுமே சொன்னார்.

இன்னும் சில அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள் கூறுகையில், "கமிஷனர் விசாரணை நடத்திய பிறகு ராம்குமார் சோர்வடைந்து விட்டார். இதனால் அடுத்து ஒருசில கேள்விகளை மட்டும் கேட்டு விட்டு நாங்களும் அங்கிருந்து சென்று விட்டோம். இன்று காலை பிலால், ராம்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இருவர் சொன்ன தகவலில் சில பதில்கள் ஒரே மாதிரியாகவே உள்ளன. ராம்குமாரிடம் தனியாக சில கேள்விகளை கேட்டோம். 'சுவாதியை முதல் முதலில் எப்போது பார்த்தீர்கள்? என்று கேட்ட போது மேன்சனில் இருந்த சமயத்தில் அவ்வழியாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு செல்லும் போது பார்த்தாகவும், அப்போது அவரது பெயர் சுவாதி என்று எனக்குத் தெரியாது என்றும் பதிலளித்தார். மேலும் அவரைப் பார்த்தவுடன் சுவாதியின் மீது தனக்கு ஒருவித இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அவரிடம் பேச பல நாட்கள் முயற்சி செய்ததாகவும் தெரிவித்தார். அதற்காக அவரை பின்தொடர்ந்தேன்.
எங்கள் ஊரில் அழகான பெண்கள் இப்படி யாரிடமும் பேசமாட்டார்கள். ஆனால் சுவாதி என்னிடம் பேசியதால் அவரை காதலிக்கத் தொடங்கினேன். ஆனால் என் காதலை அவர் நிராகரித்து விட்டார். அதோடு அவர் வேறு ஒருவரை காதலிப்பதாகவும் கூறினார். இருப்பினும் அவரை என்னால் மறக்க முடியவில்லை. அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் எனக்கு கிடையாது. அவரை மிரட்டவே அரிவாளால் வெட்டினேன். ஆனால் அவர் இறந்து விட்டார்' என்று அப்பாவியாக ராம்குமார் சொன்னார்.

சுவாதியை எதற்காக கொலை செய்தீர்கள்? என்று கேட்டதற்கு, 'சுவாதி மீது ஆத்திரம் ஏற்படுவதற்கு ஒரே காரணம் அவர் என்னை திட்டிய அசிங்கமான வார்த்தை தான். என் காதலை அவரிடம் சொன்ன போது அதை ஏற்று கொள்ளவில்லை என்று அமைதியாக சொல்லி இருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக அவர் என்னை அசிங்கமாக திட்டினார். குறிப்பாக என்னைப் பார்த்து தேவாங்கு என்று சொன்னார். இதுபோல என் வாழ்நாளில் யாரும் பேசியது இல்லை. பொதுவாகவே நான் யாரிடமும் பேச மாட்டேன். அமைதியாகவே இருப்பேன். புத்தகங்களைப் படிப்பேன். என்னை அவர் அவ்வாறு பேசியதால் அதை நினைத்து மனசுக்குள் வருந்தினேன். யாரிடமும் அதை பகிர்ந்து கொள்ள முடியாததால் பல இரவுகள் தூங்காமல் இருந்தேன். அவரது பேச்சு எனக்குள் ஆத்திரத்தை ஏற்படுத்தியது' என்று தெரிவித்துள்ளார்.

சுவாதி உங்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி இருக்கிறாரா? என்ற கேள்விக்கு 'ஆமாம்' என்று பதில் அளித்துள்ளார் ராம்குமார். 'ஃபேஸ்புக் மூலம் நிறைய பேசி இருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார். சுவாதி கொலை செய்த பிறகு யாரிடம் பேசினீர்கள்? என்ற கேள்விக்கு, 'மேன்சனில் தங்கி இருந்த என்னுடைய அத்தை மகன் மதனை பார்த்தேன். ஆனால் அவரிடம் எதையும் சொல்லவில்லை. ஊருக்கு செல்வதாக மட்டும் சொன்னேன். ஊருக்கு சென்ற பிறகு என்னுடைய கவனம் முழுவதும் சுவாதி தொடர்பான செய்திகளிலேயே இருந்தது. மேன்சனில் அவசரத்தில் ரத்தம் படிந்த சட்டையை வைத்து விட்டு வந்ததால் என்னை கண்டுபிடித்து விட்டனர்' என தெரிவித்தார் ராம்குமார்" என்றனர் போலீஸ் வட்டாரத்தினர்.



ராம்குமாரிடம் நடந்த விசாரணை முழுவதையும் போலீஸார் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். சுவாதியை எப்படி கொலை செய்தார் என்பதை நடித்து காட்டவும் போலீஸார் ராம்குமாரை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கும் மேன்சனுக்கும் ராம்குமாரை அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர்.

பிலாலை பார்த்த ராம்குமார்


இன்று நடந்த விசாரணையில் ராம்குமாரும், பிலாலும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். அப்போது ராம்குமாரிடம் பிலால் குறித்து போலீஸார் கேட்டுள்ளனர். அதற்கு ராம்குமார், பிலாலை சுவாதியுடன் தான் ஏற்கெனவே  பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.





No comments:

Post a Comment