Monetize Your Website or Blog

Tuesday, 19 July 2016

விஜேந்திர சிங் மோதலை பார்க்கபோன ராகுலுக்கு நேர்ந்த கதி!

விஜேந்திர சிங், கேரி ஹோப் குத்துச் சண்டை மோதலை பார்க்க சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ரசிகர்கள் கலாய்த்த சம்பவம் நடந்துள்ளது.


டெல்லியில் நேற்று ஆசிய பசிபிக் தொழில்முறை குத்துச்சண்டை சாம்பியனுக்கான போட்டிநடைபெற்றது. தியாகராஜ் உள்ளரங்கில் நடந்த மோதலை காண இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் வந்திருந்தார்.
ராகுல்காந்தி அரங்கத்திற்கு வருவதை கண்டதும் குழுமியிருந்த ரசிகர்கள், அவரை கலாட்டா செய்தனர். அவரை பார்த்ததும் ''மோடி... மோடி..." என சுச்சலிட்டனர்.
'எவ்வளவோ பார்த்துட்டேன் இதெல்லாம் சாதாரணம்பா'ன்னு ஒரு புன்னகையுடன் ராகுல் காந்தி  உள்ளே சென்று  ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா அருகில் அமர்ந்து போட்டியை ரசித்தார். போட்டி முடிந்து ராகுல் காந்தி மைதானத்தைவிட்டு வெளியேறியபோதும், ராகுலை ரசிகர்ள் இதே போன்று ரசிகர்கள் கலாய்த்தனர். 

இந்த போட்டியை காண இந்திய குந்துச் சண்டை வீராங்கனை மேரிகோம், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், கிரிக்கெட்டர்கள் வீரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் உள்ளிட்ட பிரபலங்கள் வந்திருந்தனர்.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் கெர்ரி கோப்பரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் விஜேந்திர சிங். தொழில்முறை குத்துச் சண்டையில் விஜேந்திர சிங் தொடர்ச்சியாக பெறும் 7வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment